தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, March 17, 2014

100 ஆண்டு பழமை வாய்ந்த மேட்டுப்பாளையம் ஸ்ரீ  மைதானம் மாரியம்மன் குண்டம் திருவிழா .கைக்குழந்தையுடன் ஆண்கள்,.பெண்கள்,தீ மித்தனர்.
 
 

மேட்டுப்பாளையம்.மார்ச்.17.

மேட்டுப்பாளையம் ஊட்டி மெயின் ரோட்டில் காந்தி மைதானத்தில் 100 ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ மைதானம் மாரியம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலின் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த 4 ந்தேதி பூசாட்டுடன் துவங்கி நடந்துவருகிறது.11 ந்தேதி கம்பம் நட்டு பக்தர்கள் அதனை சுற்றி தாரை தப்பட்டை முழங்க ஆடிவந்தனர்.13 ந்தேதி சிம்மவாகன கொடி ஏற்றப்பட்டது.இன்று 17 ந்தேதி தேர்கலச பூஜை செய்யப்பட்டு தேரில் கலசங்கள் வைக்கப்பட்டன.



விழாவின் முக்கிய நாளான இன்று காலை 6 மணிக்கு பவானி ஆற்றில் இருந்து அம்மன் அழைத்துவரப்பட்டது.காலை 9.10 மணிக்கு குண்டம் இருந்கும் நிகழ்ச்சி துவங்கியது.கோவில் தலைமை பூசாரி மோகன்குமார்குண்டத்தை வலம்வந்து பூஜை செய்தார். குண்டத்தில் எலுமிச்சம்பழம்,மல்லிகை பூச்செண்டு ஆகியவற்றை வீசிஎறிந்தார்.பின்னர் கையில் சூலாயுதம் எடுத்துக்கொண்டு அம்மா மாரியம்மா என்று முழங்கியவாறு குண்டத்தில் இறங்கி நடந்துவந்தார், அவரைத்தொடர்ந்து, உதவிப்பூசாரிகள், கரகம், எடுத்து க்கொண்டு குண்டம் இறங்கினர்.பின்னர் நூற்றுக்கணக்கான  ஆண்களும், பெண்களும் கையில் குழந்தைகளை எடுத்துக் கொண்டு தீ மிதித்தனர். விழாவில் ஓ.கே.சின்னராஜ். அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணைச்செயலாளர் மைதானம் சந்தானம்,நகர தொழிற்சங்க செயலாளர் மைதானம் ஆறுமுகம், ஆட்டோ பாலன், எல்.எஸ்.புரம் ரவி, தமிழகம் சேட், நகர மன்ற உறுப்பினர் சூரியபிரகாஷ், உட்பட பலர் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் சி.சி.சரவணபவன், செயல் அலுவலர் ராதாகிருட்டிணன், மேலாளர் ராமராஜ், உட்பட விழாக்குழுவினர் சிறப்பாக செய்தனர். நாளை மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

0 comments:

Post a Comment