தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, September 8, 2014

புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழாவை முன்னிட்டு
புளியம்பட்டி வாசிக்கிறது நிகழ்ச்சி  - 1500 மாணவிகள் புத்தகம் வாசித்தனர்.











புன்செய் புளியம்பட்டி செப்டம்பர் 9:

புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் சார்பில் நடைபெற உள்ள 3 ஆம் ஆண்டு புத்தக திருவிழாவை முன்னிட்டு கெ.ஒ.ம.அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் புளியம்பட்டி வாசிக்கிறது நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 1500 இகும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு புத்தகம் வாசித்தனர்.

புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் சார்பில் ஆண்டுதோறும் புத்தக திருவிழா நடைபெறுகிறது. 3 ஆம்  ஆண்டு புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழா வருகின்ற அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை ஐந்து நாட்கள்  நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இளைய தலைமுறையினரிடம்  புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு நடைபெற உள்ள புத்தக திருவிழா குறித்த விழிப்புணர்வை மாணவிகளிடம் ஏற்படுத்தும் வகையில் புளியம்பட்டி கெ.ஒ.ம.அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்  புளியம்பட்டி வாசிக்கிறது என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கே.ஓதியப்பன் தலைமை தாங்கினார். புளியம்பட்டி கிளை நூலகர் ந.பழனிசாமி முன்னிலை வகித்தார்.

விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் பேசும்போது, இன்று உலக எழுத்தறிவு தினம்.  உலகில் இனம், மொழி, வயது, சமூக பாகுபாடின்றி அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு செப்டம்பர் 8 ஆம் தேதி உலக எழுத்தறிவு தினமாக கடைபிடிக்க படுகிறது. எழுத்தறிவு என்பது கல்வியின் இருதயம். எழுத்தறிவு பெறுவதன் மூலம் வறுமை, குழந்தை திருமணம், மக்கள் தொகை பெருக்கம், வேலை வாய்ப்பின்மை, பாலின வித்தியாசம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளை தடுக்க முடியும். அமைதி மற்றும் ஜனநாயகத்தை நிலை நிறுத்த முடியும். எனவே நாம் அனைவரும் கல்வி கற்பது அவசியம். பாட புத்தகங்களை படிப்பதோடு பிற புத்தகங்களையும் படிக்க வேண்டும். ஏனெனில் புத்தகங்கள் மகத்தான மனிதர்களையும், அறிஞர்களையும், கவிஞர்களையும், சாதனையாளர்களையும் உருவாக்கி உள்ளது. அக்டோபர் மாதம் நடைபெற உள்ள புத்தக திருவிழாவில் 25 இகும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. தமிழகத்தின் பிரபலமான பதிப்பகங்கள் பங்குபெற உள்ளனர். இலட்சகணக்கான புத்தகங்கள் ஒரே இடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.10% சிறப்பு தள்ளுபடியில் புத்தகங்கள் வழங்கபடும். இந்த அரிய வாய்ப்பினை மாணவ மாணவியர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

பின்னர் கெ.ஒ.ம.அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும்  மாணவிகள் சுமார் அரைமணிநேரம் புத்தகங்களை வாசித்தனர். இந்நிகழ்ச்சியில் அனைத்து ஆசிரியர்கள்,மாணவிகள் உள்பட 1500 இகும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

1 comment:

  1. மரியாதைக்குரிய ஐயா, வணக்கம். புத்தக வாசிப்பை ஊக்குவித்து சமூகப்பணி ஆற்றும் தங்களுக்கு வாழ்த்துக்கள் பல......
    என
    அன்பன்,
    பரமேஸ்வரன்.சி.
    சத்தியமங்கலம்.

    ReplyDelete