தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, March 16, 2014

மக்கள் விரும்பினால் மோடியை எதிர்த்து போட்டி' : கெஜ்ரிவால் அறிவிப்பு

 

 

பெங்களூரு:""மக்கள் விரும்பினால், வாரணாசி தொகுதியில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடியை எதிர்த்து, போட்டியிடத் தயார்,'' என, "ஆம் ஆத்மி' கட்சித் தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

பிரசாரம்:

ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டில்லி முன்னாள் முதல்வருமான, அரவிந்த் கெஜ்ரிவால், நேற்று, பெங்களூரில், பிரசாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக, அவரிடம், "லோக்சபா தேர்தலில், உ.பி., மாநிலம் வாரணாசியில் போட்டியிடும், நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிடுவீர்களா?' என, பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், ""இதுகுறித்து, இன்னும் ஒரு வாரம் கழித்து முடிவு செய்வேன்,'' என, கூறினார்.சிறிது நேரம் கழித்து, சமூக வலைதளமான, "ட்விட்டர்'ல், "இன்று மாலை, பெங்களூரில் நடக்கும் பொதுக் கூட்டத்தில், மோடியை எதிர்த்து போட்டியிடுவது குறித்த அறிவிப்பை வெளியிடுவேன்' என, கூறியிருந்தார். அவரின் இந்த கருத்து, அரசியல் வட்டாரத்தில், பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, நேற்று மாலை, பெங்களூருவில் நடந்த கூட்டத்தில், அவர் பேசியதாவது:நரேந்திர மோடியை எதிர்த்து, வாரணாசி தொகுதியில் போட்டியிடுவீர்களா என, அனைவரும் கேட்கின்றனர். மக்கள் விரும்பினால், மோடியை எதிர்த்து போட்டியிடத் தயார். வரும், 23ம் தேதி, வாரணாசிக்குச் செல்கிறேன். அங்கு, மக்களின் கருத்தை அறிந்து, அதற்கு பின், தேர்தலில் போட்டியிடுவது குறித்த அறிவிப்பை வெளியிடுவேன்.
டில்லி மக்கள்:

வாரணாசி மக்கள், "மோடியை எதிர்த்து போட்டியிட வேண்டும்' என, கருத்து தெரிவித்தால், கண்டிப்பாக, அவர்களின் கருத்துக்களை ஏற்பேன். பெங்களூருவில் வசிப்பவர்கள், டில்லி சென்று, அங்குள்ள மக்களிடம் கருத்து கேட்க வேண்டும். "இன்னும் எத்தனை தேர்தல்கள் வந்தாலும், ஆம் ஆத்மிக்குத் தான், ஓட்டளிப்போம்' என, டில்லி மக்கள் கூறுவர்.அந்த அளவுக்கு, எங்களின், 49 நாள் ஆட்சியில், பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான, எடியூரப்பா, ஸ்ரீராமுலு போன்றவர்களை எல்லாம், பா.ஜ.,வில், மீண்டும் சேர்த்துள்ளனர். இதற்கான அவசியம் என்ன வந்தது என்பதை, பா.ஜ., தலைவர்கள் விளக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

 

0 comments:

Post a Comment