தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, September 26, 2014

அதிமுக நன்றி அறிவிப்புக் கூட்டம்


சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் வியாழக்கிழமை இரவு நடைபுெற்ற அதிமுக நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் பேசுகிறார் ஈரோடு மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம். உடன்,தலைமை கழக சிறப்பு பேச்சாளர் சிவா, சத்தி ஒன்றிய அதி்முக(வடக்கு) செயலாளர் சி.என்.மாரப்பன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பி.பி.அண்ணாதுரை,மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.எஸ்.ஆறுமுகம் உள்ளிட்டோர்.

தாளவாடியில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவி
 
 
தாளவாடியில் நடைபெற்ற விழாவில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கனரா வங்கி மேலாளர் வெங்கட்ராமன் ரூ.16 இலட்சம் கடன் வழங்கினார்.

தாளவாடி கனரா வங்கி மேலாளர் வெங்கட்ராமன் பேசினார்.
 
விழாவில் பங்கேற்ற மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள்
தாளவாடியில்  மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா நடைபெற்றது. தாளவாடியில் செயல்பட்டு வரும் மைராடா வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் காமதேனு வள ஆதார சேவை மையத்தின் கீழ் 160 மகளிர் மற்றும் ஆடவர் சுயஉதவிக்குழுக்கள் இயங்கி வருகின்றன. நேற்று நடைபெற்ற ஆண்டு பொதுக்குழு கூட்டத்திற்கு கேவிகே திட்ட ஒருங்கிணைப்பாளர் அழகேசன் தலைமை தாங்கினார். அலுவலர் திருமதி சிவா முன்னிலை வகித்தார். ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பிரகாஷ், தாளவாடி ஊராட்சித்தலைவர் நஞ்சுண்டநாயக்கர், கனரா வங்கி கிளை மேலாளர் வெங்கட்ராமன், உதவி வேளாண் அலுவலர் முகுந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கடந்த நிதியாண்டில் மட்டும் கனரா வங்கி, நபார்டு மற்றும் சங்கமித்ரா நிதி நிறுவனங்கள் மூலம் மகளிர் மற்றும் ஆடவர் குழுக்களுக்கு ரூ.4 கோடியே 16 இலட்சம் கடனாக வழங்கப்பட்டுள்ளது. நேற்று 4 குழுக்களுக்கு ரு.16 இலட்சம் கடனாக வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஊராட்சி துணைத்தலைவர் முருகன், நபார்டு அலுவலர் கோபால்ராஜ், சங்கமித்ரா அலுவலர் மகேஷ் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், சமுதாய வள ஊக்குனர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் 600 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் காமதேனு வள ஆதார மைய மேலாளர் பசவராஜ் நன்றி கூறினார்.

Tuesday, September 23, 2014

வரலாறு படைத்தது இந்தியா... செவ்வாய் சுற்றுப்பாதையில் நுழைந்தது மங்கள்யான்



பெங்களூர்: மங்கள்யான் விண்கலம் செவ்வாயின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நுழைந்துள்ளது. இதன் மூலம் விண்வெளி வரலாற்றில் இந்தியா புதிய வரலாறு படைத்துள்ளது. புதிய சகாப்தத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளது. இன்று காலை 8 மணியளவில் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் மங்கள்யான் நுழைந்ததை உறுதிப்படுத்தும் செய்தி இஸ்ரோவை வந்தடைந்தது. திட்டமிட்டபடி அனைத்தும் நடந்து மங்கள்யான் செவ்வாயின் நிழலை எட்டிப் பிடித்துள்ளது இந்திய மக்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இன்று காலை நாலே கால் மணியிலிருந்து மங்கள்யானை செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் செலுத்தும் பணிகள் பெங்களூர் அருகே உள்ள புவிக்கட்டுப்பாட்டு மையத்தில் தொடங்கின. காலை ஏழேகால் மணியளவில் விண்கலத்தின் அனைத்து என்ஜின்களும் வெற்றிகரமாக இயக்கப்பட்டன. இந்த வேலைகள் எழே முக்கால் மணியளவில் முடிவடைந்து வெற்றிகரமாக செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் நுழைந்தது மங்கள்யான். இது எட்டு மணியளவில் உறுதிப்படுத்தப்பட்டது. உறுதிப்படுத்தும் செய்தி வந்ததும் இஸ்ரோ விஞ்ஞானிகள் உற்சாகத்தில் கைதட்டிட வரவேற்று மகிழ்ந்தனர். இந்த நிகழ்வை பிரதமர் மோடி நேரில் பார்த்து மகிழ்ந்தார். முதல் ஆசிய நாடு செவ்வாய் கிரகத்தை எட்டிப் பிடித்த முதல் ஆசிய நாடு என்ற பெருமயை இந்தியா பெற்றுள்ளது. மேலும் செவ்வாய் கிரக சுற்றுப்பாதைக்குள் நுழைந்த 4வது நாடும் இந்தியா. இதற்கு முன்பு அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய வி்ண்வெளி அமைப்புகள் மட்டுமே செவ்வாயை எட்டிப் பிடித்தவையாகும். அந்த வரிசையில் தற்போது இந்தியா இணைந்துள்ளது.

உலகின் நான்கு இடங்களில் மங்கள்யானின் செயல்பாடுகளை அமெரிக்கா உள்ளிட்ட நான்கு இடங்களில் இருந்து கட்டுப்பாட்டு மையங்கள் மூலம் இஸ்ரோ கண்காணித்தது. மேலும் அமெரிக்காவின் நாசா அமைப்பும் மங்கள்யான் நிகழ்வுகளை கூர்ந்து கவனித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

திம்பம்-தலமலைக்கு சிறுத்தையால் தாக்கி பலியான கிருஷ்ணன் பெயர் வைப்பு 




புன்செய் புளியம்பட்டி, செப் 24: சிறுத்தை தாக்கி உயிரிழந்த வனக்காப்பாளர் நினைவாக திம்பம்-தலமலை வனச்சாலைக்கு கிருஷ்ணன் சாலை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான சிறுத்தை, புலிகள் உள்ளன. சிறுத்தை நடமாட்டம் அதிகமுள்ள திம்பம் மலைப்பகுதியில் ஜுன் 11-ஆம் தேதி சிறுத்தையால் வேன் டிரைவர் முகமது இலியாஸ் கொல்லப்பட்டார்.இந்த சம்பவத்தையடுத்து,ஜுலை 17-ஆம் தேதி இரவு திம்பம் வனச்சோதனை சாவடியில் பணியில் இருந்த  வனக்காப்பாளர் கிருஷ்ணனை சிறுத்தை தாக்கி கொன்றது.

இதையடுத்து, தலமலை சாலையில் வைக்கப்பட்ட கூண்டில் ஜூலை 24-ஆம் தேதி ஆள்கொல்லி சிறுத்தை பிடிபட்டது.பின்னர், அந்த சிறுத்தை வண்டலூர் உயிரியல் காப்பகத்தில் விடப்பட்டது.

சிறுத்தை தாக்கி உயிரிழந்த வனக்காப்பாளர் கிருஷ்ணன் நினைவாக 22 கிலோமீட்டர் நீளமுள்ள திம்பம்-தலமலை வனச்சாலைக்கு கிருஷ்ணன் சாலை என வனத்துறையினர் பெயர் வைத்து மரியாதை செலுத்தியுள்ளனர்.இந்த பெயர் பலகை அண்மையில் திறக்கப்பட்டு திம்பம் பேருந்து நிறுத்தத்தில் வைக்கப்பட்டுள்ளது. வனக்காப்பாளர் நினைவாக வைக்கப்பட்ட பெயர் பலகை, என்றும் நினைவில் நிற்கக்கூடிய செயல் என  பொதுமக்கள் தெரிவித்தனர்.
சத்தியமங்கலத்தில் ரூ.1 கோடி மதிப்பில் நகராட்சி அலுவலகம்
காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதல்வர்

காணொளி காட்சி மூலம் முதல்வரால் திறந்துவைக்கப்பட்ட சத்தி நகராட்சி அலுவலகத்தில் குத்துவிளக்கேற்றுகிறார் ஈரோடு மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம்.உடன்,நகர்மன்றத் தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம், கே.சரவணக்குமார், துணைத்தலைவி என்.திலகவதி நடராஜ் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள்

சத்தியமங்கலத்தில் ரூ.1 கோடி செலவில் புதிய கட்டப்பட்ட நகராட்சி அலுலகத்தை தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.

சத்தியமங்கலம் நகராட்சியில் மிகவும் பழமையான அலுவலகத்தை இடித்துவிட்டு நவீன வசதிகளுடன் கூடிய புதிய நகராட்சி அலுவலகம் ரூ.1 கோடி செலவில் அண்மையில் கட்டி முடிக்கப்பட்டது.இதன் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெறுவதையொட்டி  சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இந்த நகராட்சி அலுவலகத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.முதல்வர் திறக்கும் நேரத்தில் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம் குத்துவிளக்கேற்றினார்.அப்போது, நகர்மன்ற உறுப்பினர்கள் இனிப்பு வழங்கி  கொண்டாடினார்கள்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம், பவானிசாகர் சட்டப்பேரவை உறுப்பினர் பி.எல்.சுந்தரம்,நகராட்சி ஆணையாளர் கே.சரவணக்குமார்,நகர்மன்றத் துணைத்தலைவி என்.திலகவதி நடராஜ் மற்றும் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.


போக்குவரத்து விதிமுறை மீறல்: காந்தி கல்லூரி பேருந்து மீது வழக்கு


சத்தியமங்கலம், செப் 22:

போக்குவரத்து விதிமுறையை மீறியதாக காந்தி கல்லூரி பேருந்து மீது கோபி வட்டார போக்குவரத்து அலுவலர் கே.பி.ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்தார்.

சத்தியமங்கலம் பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளில் அதிக அளவில் கல்லூரி மாணவர்கள் ஏற்றிச் செல்வதாக வட்டார போக்குவரத்து அலுவலருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கோபி வட்டார போக்குவரத்து அலுவலர் கே.பி.ஜெயக்குமார், சத்தி மோட்டார் ஆய்வாளர் என்.சரவணக்குமார் ஆகியோர் சத்தி கோவை சாலையில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர்.

அவ்வழியாக சென்ற சரக்கு வாகனங்கள் மற்றும் பேருந்துகளை நிறுத்தி ஆய்வு செய்தனர்.அப்போது, அதிக பாரம் ஏற்றிய சரக்கு வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தாற்காலிக அனுமதி பெறாமல், தமிழகத்தில் இயங்கிய கர்நாடக மாநில லாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

அதிக இரைச்சலுடன் சினிமா பாடல்களை ஒலிபரப்பிய தனியார் பேருந்துகள் நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்களிடம் பேருந்துகளில் நோயுற்ற பயணிகள் பயணிப்பதால் அவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் இயக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து, கல்லூரி பேருந்துகளை நிறுத்தி சோதனையிட்டதில் விண்ணப்பள்ளி காந்தி பாலிடெக்னிக் பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான மாணவ,மாணவிகளை ஏற்றிச்செல்வது தெரியவந்தது. விதிமுறைகளை மீறியதாக காந்தி கல்லூரி பேருந்துகள் மீது வழங்குப்பதிவு செய்யப்பட்டது.

ஓட்டுநர் உரிமம் இன்றி ஓட்டுதல், அதிகபாரம், காற்று ஓலிப்பான் பயன்பாடு, உரிமம் புதுப்பித்தல் இன்றி இயக்குதல் போன்ற பல்வேறு விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டன.

Monday, September 22, 2014

ஜாக்கிசான், சிரஞ்சீவி கலந்து கொள்ளும் 'ஐ' தெலுங்கு இசை வெளியீடு...!


 தமிழுக்கு ஆர்னால்ட், தெலுங்குக்கு ஜாக்கிசான்...என்ற பேச்சு சில வாரங்களுக்கு முன்பாகவே 'ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழாவின் செய்தியாக வலம் வந்தது. அதன் பின் ஆர்னால்ட்டே வீடியோவில் தோன்றி நான் சென்னைக்கு வருகிறேன் என்று சொன்ன போதுதான் அனைவருமே நம்ப ஆரம்பித்தார்கள். அப்படியே ஆர்னால்ட்டும் வந்தார், சென்றார்...அடுத்து தெலுங்கு 'ஐ' யின் 'மனோகரடு' படத்தின் இசை வெளியீடு அக்டோபர் 2ம் தேதி நடக்க உள்ளது.

இந்த விழாவிற்கு ஜாக்கி சான் வந்து கலந்து கொள்வார் என்றும் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னையில் நடந்த 'ஐ' இசை விழாவில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் கலந்து கொண்டு சிறப்பித்தார். அதே போன்று 'மனோகரடு' இசை வெளியீட்டு விழாவில் தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி கலந்து கொள்ள இருக்கிறாராம். அவரோடு வேறு முன்னணி நட்சத்திரங்களும் கலந்து கொள்வார்களா என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஏனெனில், சென்னையில் நடைபெற்ற 'ஐ' இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்தைத் தவிர வேறு எந்த முன்னணி தமிழ் நட்சத்திரங்களும் கலந்து கொள்ளவில்லை. ஆனால், தெலுங்கில் அப்படி இல்லாமல் வேறு சில முன்னணி நட்சத்திரங்களையும் அழைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கிலும் படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால் அந்த எதிர்பார்ப்பை இசை விழா மூலமும் இன்னும் அதிகப்படுத்தவே நினைப்பார்கள் என்றே தெரிகிறது. 'மனோகரடு' இசை விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகலாம் என்கிறார்கள்
கங்கையை தூய்மையாக்க 18 ஆண்டு ஆகும்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு அறிக்கை


புதுடில்லி:கங்கை நதியை தூய்மைப்படுத்தும் பணி நிறைவடைய, 18 ஆண்டுகள் ஆகும்' என, மத்திய அரசு தரப்பில், சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மத்திய அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: கங்கையை தூய்மைப்படுத்தும் பணியை, பல கட்டங்களாக மேற்கொள்ள வேண்டியுள்ளது; இது ஒரு நீண்ட கால நடவடிக்கை. முதல் கட்டமாக, கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள, 118 நகரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தூய்மைப்படுத்தும் பணி, இங்கு முதலில் முடிக்கப்படும். ஒட்டு மொத்தமாக, இந்த பணியை முடிக்க, 18 ஆண்டுகள் ஆகும். மேலும், ஏராளமான முதலீடும் தேவைப்படும். இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஊராட்சி உறுப்பினர் 3-வது வார்டு: அதிமுக வெற்றி



சத்தியமங்கலம், செப் 22.

ஈரோடு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் 3-வது வார்டு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் பி.பி.அண்ணாதுரை வெற்றி பெற்றார்.

சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்திற்குபட்ட மாவட்ட ஊராட்சி உறுப்பினர் 3-வது வார்டு பதவிக்கான இடைத்தேர்தல் 18-ஆம் தேதி நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை சத்தி மற்றும் பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.  தேர்தல் நடத்தும் அலுவலர் கே.செல்வராஜ் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டன.இதில் அதிமுக வேட்பாளர் பி.பி.அண்ணாதுரை 18,598  வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வாக்குகள் விபரம்: மொத்த வாக்குகள்:41064, பதிவானவை:23907, பி.பி.அண்ணாதுரை(அதிமுக):18598,சி.சங்கர்(காங்):4735, செல்லாதவை:574

சத்தி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் 15-வது வார்டு இடைத்தேர்தலில் சின்னரங்கசாமி(அதிமுக) 2188 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக, என்.ரங்கசாமி(பாஜக):994 மற்றும் முருகேசன்(சுயே):298 வாக்குகள் பெற்றனர்.

ராஜன்நகர் ஊராட்சித் தலைவர் தேர்தலில் அதிமுக ஆதரவு வேட்பாளர் சுப்பிரமணி 1966 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கதிர்வேல்(சுயே) 1143 வாக்குகள் பெற்றார்.  வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கே.செல்வராஜ், ராஜேந்திர பிரசாத் மற்றும் கே.மூர்த்தி ஆகியோர் தகுதி சான்றிதழ் வழங்கினர். போட்டியிட்ட 3 இடங்களிலும் அதிமுக மீண்டும் வெற்றிபெற்றதையடுத்து மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் எஸ்.ஆர்.செல்வம் தலைமையில்  அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். பின்னர், வெற்றி பெற்ற வேட்பாளர்கள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்

Sunday, September 21, 2014

சத்தியமங்கலம் புத்தக திருவிழா - சத்தியமங்கலம் வாசிக்கிறது பத்திரிகை செய்திகள்







சத்தி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் சாகம்பரீ சகஸ்ரநாம யாகம்





சத்தியமங்கலம், செப் 22:
சத்தியமங்கலம் கொமாரபாளையம் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஸ்ரீ சாகம்பரீ சகஸ்ரநாம யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

சத்தியமங்கலம் அடுத்துள்ள கொமாரபாளையத்தில் ஆர்ய வைஸ்ய சமூகத்தினரின் குலதெய்வமான ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 15-ஆவது ஆண்டு ஸ்ரீ சாகம்பரீ சகஸ்வரநாம மகா யாகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை மங்கல இசையுடன் ஆவாஹன பூர்வாங்க பூஜை, ஜபம் மற்றும் ஹோம வழிபாடுகள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து,  மலர்களால் அலங்கரிக்கப்பட்ட  சப்பரத்தில் உற்சவரை வைத்து  ஊர்வலமாக பவானிஆற்றுக்கு பக்தர்கள் எடுத்துச் சென்றனர்.

பவானிஆற்றில் உற்வசருக்கு  புனிதநீராட்டுடன் சந்தனம்,அரிசிமாவு,திருமஞ்சனம், இளநீர் உள்ளிட்ட தீர்த்தவாரி அபிசேக ஆராதனைகள் நடைபெற்றன. அப்போது, பக்தர்களுக்கு மிளகுசாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது.அதன்பிறகு,பக்தர்கள் ஆரவாரத்துடன் உற்சவர் கோவிலுக்கு அழைத்துவரப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, மூலவர் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர், உலக நன்மை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் ஸ்ரீ சாகம்பரீ சகஸ்ரநாமம் மகாயாகம் நடைபெற்றது. யாகத்தில் காய்கனிகள் கிழங்கு தானியங்கள் வைத்து பூஜை செய்யப்பட்டது. இந்த யாகத்தில் ஆர்ய வைஸ்ய சமூக மக்கள் திரளாக கலந்து கொண்டு அங்காபரமேஸ்வரி அம்மனை வழிபட்டனர். விழாவையொட்டி, ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்ட்டது. விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர் பி.ஜெனார்த்தனன் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.


சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே கரட்டூர் சாலையில் தமிழக அரசின் கோ-ஆப்டெக்ஸ் சத்தி கிளை திறப்பு விழாவில் முதல் விற்பனையை துவக்கி வைக்கிறார் சத்தி உதவி தொடக்க கல்வி அலுவலர் கார்த்திக். உடன், வழக்கறிஞர் கோகிலா அஜீத்குமார், கிளை மேலாளர் கலைச்செல்வி உள்ளிட்டோர்.


Saturday, September 20, 2014

புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழா பத்திரிகை செய்திகள்













Thursday, September 18, 2014

சத்தியமங்கலம் புத்தக திருவிழா 2014
****************************************
 சத்தியமங்கலம் வாசிக்கிறது - 1000 மாணவ மாணவியர்கள் புத்தகங்களை வாசித்தனர்

 


சத்தியமங்கலம் செப்டம்பர் 18:

விடியல் சமூகநல இயக்கம் மற்றும் சத்தியமங்கலம் கொங்கு நண்பர்கள் சங்க அறக்கட்டளை சார்பில் சத்தியமங்கலத்தில் முதல்முறையாக புத்தக திருவிழா அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை 5 நாட்கள் கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

சத்தியமங்கலத்தில் முதல்முறையாக நடைபெற உள்ள புத்தக திருவிழா குறித்தும், புத்தகம் வாசிப்பதன் அவசியத்தை வலியுறித்தியும் ரங்கசமுத்திரம் நகராட்சி உயர்நிலை-துவக்க பள்ளியில் சத்தியமங்கலம் வாசிக்கிறது என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கே.ஜோசப் சகாயராஜ் தலைமை தாங்கினார். நகராட்சி துவக்க பள்ளி தலைமை ஆசிரியர் எம்.செல்வி, கல்வி மேலாண்மை குழு தலைவர் கே.லோகநாதன், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்க தலைவர் ராமசாமி, சி.பரமேஸ்வரன், விடியல் உறுப்பினர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் பேசும்போது ஒவ்வொரு புத்தகமும் ஒரு நல்ல துணைவன். மனித மனதின் கோணலை நேர்படுத்துவது புத்தகங்கள் தான். ஒரே வாழ்கையில் நூறு வாழ்கை வாழ்ந்த அனுபவத்தை புத்தகம் தரும். ஒரு புத்தகம் ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றும். ஒவ்வொரு பிறவியிலும் ஒரு மனிதனோடு வாழ்ந்த அனுபவத்தை புத்தகம் தரும். நாம் தனிமையில் இருந்தாலும் புத்தகங்களோடு இருந்தால் தனிமையை தவுடு பொடியாக்கும் வல்லமை புத்தகங்களுக்கு உண்டு. புத்தகங்களை தொடும் போது நாம் அனுபவத்தை தொடுகிறோம். உட்கார்ந்த இடத்தில் இருந்தே புத்தகத்தின் மூலம் நாம் உலகத்தை அறிந்து கொள்ளலாம்.மாணவ மாணவியர்கள் பாட புத்தகங்களை படிப்பதோடு பிற புத்தகங்களையும் படிக்க வேண்டும். ஏனெனில் புத்தகங்கள் மகத்தான மனிதர்களையும், அறிஞர்களையும், கவிஞர்களையும், சாதனையாளர்களையும் உருவாக்கி உள்ளது. அக்டோபர் மாதம் நடைபெற உள்ள புத்தக திருவிழாவில் 25 இகும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. தமிழகத்தின் பிரபலமான பதிப்பகங்கள் பங்குபெற உள்ளனர். இலட்சகணக்கான புத்தகங்கள் ஒரே இடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.10% சிறப்பு தள்ளுபடியில் புத்தகங்கள் வழங்கபடும். இந்த அரிய வாய்ப்பினை மாணவ மாணவியர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.





பின்னர் நகராட்சி உயர்நிலை மற்றும் துவக்க பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்கள் ஒரு மணிநேரம் புத்தகங்களை வாசித்தனர். இந்நிகழ்ச்சியில் அனைத்து ஆசிரியர்கள்,மாணவிகள் உள்பட 1000 இகும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Wednesday, September 17, 2014

மேஜர் முகுந்த் குடும்பத்தினரை ஜெய்ஹிந்த் 2 விழா மேடையில் கவுரவப்படுத்திய அர்ஜுன்!

 


ஜெய்ஹிந்த் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில், எல்லையில் வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த்தின் குடும்பத்தினரை அழைத்து மரியாதை செய்தார் நடிகரும் இயக்குநருமான அர்ஜூன். ஸ்ரீராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக அர்ஜுன் எழுதி, இயக்கி, தயாரித்து நடிக்கும் படம் அர்ஜுனின் ஜெய்ஹிந்த் -2 . கதாநாயகியாக சுர்வீன் சாவ்லா நடிக்கிறார் . புதுமுகமாக சிம்ரன் கபூர் என்ற முன்பை நடிகை ஒருவரும் அறிமுகமாகிறார். மற்றும் ராகுல்தேவ் , பிரம்மானந்தம், ரவிகாளே, அதுல் மாதூர், மயில்சாமி ,மனோபாலா, வினய்பிரசாத், நரசிம்ம ராஜு, கெளதம் சுந்தர்ராஜன், பரத்குமார், அமீத்திவாரி, பேபி யுனிதா ஆகியோர் நடிக்கிறார்கள்.

அர்ஜுன் ஜெனியா இசையமைக்க, வைரமுத்து, பா விஜய் பாடல்கள் எழுதியுள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழா மேடையில்தான் மேஜர் முகுந்த் வரதராஜன் குடும்பத்தினர் கவுரவிக்கப்பட்டனர்.

காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகளுடனான மோதலில் 2 தீவிரவாதிகளைச் சுட்டுக் கொன்று, வீர மரணம் அடைந்தவர் மேஜர் முகுந்த். அவரது தந்தை, மனைவி, மகள் ஆகியோரை மேடைக்கு அழைத்து கவுரவித்தார் அர்ஜுன்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அர்ஜுன் பேசுகையில், "இந்த இசை வெளியீட்டு விழாவை ஜெய்ஹிந்த் படத்தின் தலைப்பிற்கு ஏற்றாற்போல் நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டேன். எங்களுக்கு ரியல் ஹீரோவான மேஜர் முகுந்த் அவர்களின் ஞாபகம் தான் வந்தது.

தேசத்திற்காக உயிர் துறந்த அந்த மேஜரின் குடும்பத்தை அழைத்து அவர்கள் முன்னிலையில் இந்த விழாவை நடத்த விரும்பினேன். முதலில் தயங்கிய அவர்கள் பிறகு ஒத்துக்கொண்டார்கள். அவர்களை மேடைக்கு அழைத்ததன் மூலம் இந்த விழா சிறப்பு பெற்றுள்ளது," என்றார்.

விழா மேடையில் பேசிய மேஜர் முகுந்தனின் தந்தை வரதராஜன், "ஜென்டில் மேன் படத்தை பார்த்து அர்ஜுனின் தீவிர ரசிகரான முகுந்த் ஆக்ஷன் படங்களை விரும்பி பார்ப்பான். இந்த ஜெய்ஹிந்த் படத்தை பார்க்க அவன் இல்லை. இருந்தாலும் இந்த விழாவில் நாங்கள்கலந்து கொண்டதே எங்களுக்கு மகிழ்ச்சி," என்றார்.

தயாரிப்பாளர் கலைபுலி எஸ்.தாணு பேசுகையில், "இது அர்ஜுன் இயக்கத்தில் வரும் எட்டாவது படம் என்றார்கள். அர்ஜுன் இயக்கத்தில் வெளியான எல்லாப் படங்களும் வெற்றிப் பெற்றுள்ளன. இந்த படமும் வெற்றிபெறும்," என்றார். விழாவில் ஐஸ்வர்யா அர்ஜுன், மனோபாலா, கானாபாலா, மயில்சாமி, ஆகியோரும் பேசினார்கள்.

இயக்குனர் பாலா இசைத் தட்டை வெளியிட மேஜர்முகுந்தின் மகள் பேபி ஆர்ஷியா மற்றும் படத்தில் நடித்துள்ள பேபி யுவினா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.





பெரியார் பிறந்தநாளையொட்டி, புதுவடவள்ளி சமுத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மாவட்ட அமைப்பாளர் பெ.பொன்னுசாமி தலைமையில் மரியாதை செலுத்தும் தலித் விடுதலை கட்சியினர்.(வலது) பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் ஆதித்தமிழர் விடுதலை முன்னணி அமைப்பு பிரதிநிதிகள்.