தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, April 30, 2014

மேட்டுப்பாளையம் நகர கூட்டுறவு வங்கி மேலாளருக்கு பிரிவு உபச்சார விழா.
 

மேட்டுப்பாளையம் நகர கூட்டுறவு வங்கியின் ஜோதிபுரம் கிளையின் மேலாளர் ஆர்.ஆறுமுகம் கடந்த 1978 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து 36 வருடம் பணியாற்றி நேற்று பணி ஓய்வு பெற்றார்.அவருக்கு  பிரிவு உபச்சார விழா.மேட்டுப்பாளையம் நகர கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் நடந்தது.விழாவிற்கு சங்க தலைவர் கே.ஆர்.எஸ்.கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார்.துணைத்தலைவர் சங்கர் நகர் ராஜன் [எ]எஸ்.பழனிசாமி முன்னிலை வகித்தார்.மேலாண்மை இயக்குனர் கே.மகேந்திரன் வரவேற்று பேசினார்.நிகழ்ச்சியில் வங்கி இயக்குனர்கள் பி.ஆறுமுகம்,எஸ்.ஏ.வாஹித்,எம்.எஸ்.மாணிக்கம்,என்.பாலன்,கே.பி.தண்டபாணி,நபீஸா,தனலட்சுமி,வி.மாதவன்,லட்சுமி,முன்னாள் இயக்குனர் ராமச்சந்திரன்,மேட்டுப்பாளையம் வேளாண்மைத்துறை பணியாளர்கள் சிக்கன கடன் சங்க செயலாளர் குணவதி,வங்கி மேலாளர்கள் விஜயராகவன்,என்.விஜயகுமார்,மற்றும் மூர்த்தி,உட்பட பணியாளர்கள் வாழ்த்தி பேசினார்கள்.பின்னர் பணி ஓய்வு பெறும் மேலாளர் ஆர்.ஆறுமுகம் ஏற்புரை ஆற்றினார்.முடிவில் வங்கியின் பொதுமேலாளர் கே.ராமதாஸ் நன்றி கூறினார்.
விபத்துக்களை தடுக்க புதிய யுக்தி: சாலையோர எல்லைக் கோட்டிற்குள் வாகனங்களை நிறுத்த நகராட்சி ஏற்பாடு




போக்குவரத்து இடையூறாகவும் சாலையோரங்களில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களை வரிசைப் படுத்தி நிறுத்துக் கொள்வதற்கு வசதியாக சத்தி நகராட்சி சார்பில் மஞ்சள் கயிறு மூலம் எல்லைக் கோடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சத்தி நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர். 

சத்தியமங்கலம் நகராட்சிக்குட்பட்ட புதிய பஸ்நிலையம்,  மைசூர் சாலை, கோபி சாலை மற்றும்  கோவை சாலை ஆகியவை போக்குவரத்து நெரிச்சல் மிகுந்த பகுதியாக உள்ளன.  இங்கு மிகவும் பரபரப்பாக காணப்படும் காலை மற்றும் மாலை நேரங்களில்  சாலைகளின்  இருபுறமும் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் தங்களது பைக்குகளை ரோட்டில் தாறுமாறுமாக நிறுத்துகின்றனர்.

இதனால், பள்ளி, கல்லூரி மாணவ,மாணவியர்கள், அலுவலர்கள் சாலையோரம் ஒதுங்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தில் இருந்து நிமிடத்துக்கு நிமிடம்  வெளியேறும் பேருந்துகள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடபடி சாலையோரத்தில் இரு சக்கர வாகனங்கள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் நெரிச்சல் மிகுந்த பகுதிகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.

இதனை தடுக்க, சத்தி காவல் துறை மற்றும் சத்தி நகராட்சி ஆகியவை இணைந்து இரு சக்கர வாகனங்களை நிறுத்த எல்லைக் கோடு நிர்ணயம் செய்துள்ளன.  சாலையோரத்தில் பைக்குள் நிறுத்திக்கொள்ள வசதியாக அரை கி.மீ தூரம் வரை மஞ்சள்கயிறு கொண்டு எல்லைக்கோடு அமைத்துள்ளன. இது பிற பகுதிகளுக்கும்  நீடிக்கும். இந்த கோட்டிற்குள் மட்டுமே வாகனங்கள் நிறுத்த வேண்டும் என்றும் அதனை தாண்டி நிறுத்தும் வாகன ஓட்டிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சத்தி நகராட்சி ஆணையாளர் கே.சரவணக்குமார் புதன்கிழமை தெரிவித்தார். நகராட்சியின் இந்த அதிரடி நடவடிக்கையால் பஸ்நிலையம் எதிர்புறம் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை வரிசையாக நிறுத்த தயாராகி விட்டனர்.
சத்தி புலிகள் காப்பகத்தில் புலிகள் இனப்பெருக்கம் அதிகரிப்பு

5 குட்டிகளுடன் தாய்புலி உலா



சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பெண்புலி தனது 5 குட்டிகளுடன் உலா வரும் காட்சி வனத்துறையினரின் தானியங்கி கேமராவில் பதிவாகியுள்ளது. இதன் மூலம் சத்தி புலிகள் காப்பகத்தில் புலிகள் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.


தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் முதுமலை, கோவை மாவட்டம் ஆனைமலை, நெல்லை மாவட்டம் களக்காடு-முண்டந்துறை ஆகிய இடங்களில் புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது. 1 லட்சத்து 4 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கிய சத்தியமங்கலம் வன உயிரினச்சரணாலயம் நான்காவது புலிகள் காப்பகமாகும். இது  2013 ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி இந்தியாவின் 42வது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புலிகள் காப்பக கள இயக்குநர் இ.அன்வர்தீன், துணை இயக்குநர்கள் கே.ராஜ்குமார், சி.ஹெச்.பத்மா ஆகியோர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:


சத்தி புலிகள் காப்பகம் மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளை உள்ளடக்கிய பல்லுயிர் பெருக்கம் கொண்ட வாழ்விடமாகவும் பல்வேறு வன உயிரினங்களை கொண்டதாகவும் உள்ளது. இங்கு புலிகள் மட்டுமின்றி யானைகள், சிறுத்தை புலிகள், கரடிகள், காட்டுமாடுகள், கழுதைப்புலிகள், வெளிமான்கள், நான்கு கிளை கொம்பு மான்கள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளுடன் பறவை, ஊர்வன உயிரினங்களும் வாழ்கின்றன.
புலிகள் மற்றும் புலிகளுக்கு இரையாகும் வனவிலங்குகள் குறித்து கணக்கெடுக்க தமிழக வனத்துறை,உலக வனஉயிரின காப்பகம் என்ற  தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து புலிகள் காப்பகத்தில் தானியங்கி கேரமா வைத்து கண்காணிக்கப்பட்டது,தானியங்கி கேமராவில் பதிவான புலிகள் நடமாட்டம் குறித்த காட்சிகளின் படி இங்கு புலிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு வனத்துறையினர்  மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பே முக்கிய காரணமாகும்.

இதனைத் தொடர்ந்து, 150 மலைவாழ் மக்களை உள்ளடக்கிய வேட்டை தடுப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டனர்.சத்தியமங்கலம் புலிகள் காப்பகப்  பகுதியில் பாதுகாப்பு பணிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதால் நீராதாரங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இதனால் தண்ணீர் பற்றாக்குறை தீர்க்கப்படுகிறது. புலிகள் காப்பகத்தில் பல்வேறு சூழல் மேம்பாட்டுக் குழுக்கள் செயல்படுத்த உள்ளதால் மலைவாழ்மக்களின் வாழ்க்கை தரம் உயரும்.
 
சத்தியமங்கலம் புலிகள் காப்பகமானது புலிகள் மற்றும் மனிதர்களை தன்னகத்தே கொண்டு வாழ்விடமாக அமைந்துள்ளதே இதன் சிறப்பாகும். இந்த வனப்பகுதிக்குள் 9 பழங்குடியின குக்கிராமங்களும் 18 வருவாய் கிராமங்களும் அமைந்துள்ளன. தானியங்கி கேமரா மூலம் தற்போது கிடைத்துள்ள புலிகள் நடமாட்ட காட்சி மூலம் கட்டுப்பாட்டுடன் பாதுகாக்கப்பட்டு புலிகள் காப்பகத்தில் புலிகள் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.பொதுமக்கள் மேலும் ஒத்துழைத்தால் இங்குள்ள புலிகள் வாழ்வாதாரம் பற்றி உலகளவில் பேசப்படும் என்றனர்.
சில்லறை வர்த்தக கடைகளில் துணிப்பை பயன்பாடு: சத்தி நகராட்சி ஆய்வு

 

 
சில்லறை வர்த்தக கடைகளில் துணி்ப்பை  பயன்பாட்டை சத்தியமங்கலம் நகராட்சி சுகாதார அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.

சத்தியமங்கலம் நகராட்சிப் பகுதியில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் ஒழிப்பதற்கு சத்தி நகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சத்தியில் உள்ள வணிகர்களை அழைத்து, பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து விரிவாக எடுத்துக்கூறப்பட்டது. இது தொடர்பாக மேலும் ஒரு வணிகர்கள் விழிப்புணர்வு கூட்டமும் நடத்தப்பட்டது. இதைதொடர்ந்து, சத்தி பகுதியில் சில்லறை வர்த்தகத்திற்கு துணிப்பையை பயன்படுத்துவதாக வணிகர்கள் உறுதியளித்தனர்.

இதற்கிடையில், சத்தி வடக்குப்பேட்டை, திப்புசுல்தான் சாலை, பெரிய பள்ளிவாசல் வீதி, கடைவீதி, கோட்டுவீராம்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள மளிகை, இறைச்சிக் கடைகள், உணவகங்களில் சத்தி நகராட்சி ஆணையாளர் கே.சரவணக்குமார், சுகாதார அலுவலர் கே.சக்திவேல், சுகாதார ஆய்வாளர் மாரிச்சாமி ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.வியாபாரிகள்  துணைப்பையை தொடர்ந்து உபயோகிக்குமாறு அவர்கள் வலியுறுத்தினர்.

பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பை பயன்படுத்துவதால் சுகாதாரகேடு தவிர்க்கப்படுவதுடன் கழிவுகள் எளிதாக மட்கி குப்பையாகும் என்றும் ஊட்டியை போனறு பிளாஸ்டிக் இல்லாத நகர்ப்பகுதியாக சத்தி நகராட்சி மாறும் என்றார் சத்தி சத்தி நகராட்சி ஆணையாளர் கே.சரவணக்குமார்





பவானிசாகர் வனச்சரகத்திற்குட்பட்ட விளாமுண்டி வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த யானைகள் தினமும் இரவில் வனத்தை விட்டு வெளியேறி வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கோடேபாளையம், அம்மாபாளையம், வெள்ளாளபாளையம், நால்ரோடு, அண்ணாநகர், சொலவனூர், தொப்பம்பாளையம், கரிதொட்டம்பாளையம், புதுரோடு, விண்ணப்பள்ளி கிராமங்களுக்கு செல்கின்றன. பவானிசாகர் அண்ணாநகர் நால்ரோடு அருகே வனத்திலிருந்து  யானைகள் வெளியேறி ரோட்டை கடந்து சென்றது.  இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.




மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மழை வேண்டி வருணபகவானுக்கு சிறப்பு யாகம் நடந்தது.கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வசந்தா,தலைமைதாங்கி யாகத்தை துவங்கிவைத்தார்.குருந்தமலை குழந்தைவேலாயுத சுவாமி கோவில் அர்ச்சகர் ஜெயபாலசுப்பிரமனியன் தலைமையில் அர்ச்சகர்கள் வருண ஜெப மந்திரம் சொல்லி பவானி ஆற்றில் சிறப்பு பூஜைகள் செய்தனர். கோவில் செயல் அலுவலர் பழனிகுமார்,கண்காணிப்பாளர் செல்வராஜ்,மற்றும் கோவில் பணியாளர்கள் பக்தர்கள் கலந்துகொண்டனர்.



சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரிமாரியம்மன் கோவிலில் மாதாந்திர உண்டியல் திறப்பு இணை ஆணையாளர் என்.நடராஜ் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து உண்டியல்கள் ஒரே இடத்தில் திறக்கப்பட்டு  பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணும் பணியில் அலுவலர்கள், கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டனர். சித்திரை, கோடை விடுமுறைகளில் போன்ற விஷேசங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளதால் உண்டியல் காணிக்கை ரூ.50 லட்சத்தை தாண்டும் என எதிர்ப்பார்க்கபடுகிறது 
தாளவாடி கோடைமழை: குட்டையில் நீர் அருந்தும் காட்டுயானைகள்  



 
தாளவாடி மலைப்பகுதியில் கோடை மழை பெய்ததால் அங்குள்ள குட்டைகளில் ஓரளவு நீர் நிரம்பியுள்ளன.வனவிலங்குகளுக்கு தாக்கம தீர்க்க இந்த கோடைமழைநீர்  பெரிதும் உதவியுள்ளது. தற்போது அந்த குட்டையில் காட்டுயானைகள் நீர் அருந்தி வருகின்றன.

தாளவாடி மலைப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 3 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளதால் நீலகிரி போல இங்கு குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுகிறது. இதனால் மலைப்பகுதி விவசாயிகள் அனைத்து ரக மலைக்காய்கறி பயிர்களை சாகுபடி செய்கின்றனர்.  தாளவாடி, ஆசனூர், தலமலை, கேர்மாளம் ஆகிய  வனச்சரகங்களில் மழை பொய்த்ததால் அங்கு வறட்சி நிலவுகிறது. வனக்குட்டைகளில் வறண்டுவிட்டன.  மரம், செடி,கொடிகள் காய்ந்து இலைகள் உதிர்ந்து வெறும் மரமாக காணப்படுகின்றன. 

வறட்சி காரணமாக வனவிலங்குகள் குடிக்க நீரின்றி தவிக்கின்றன. தண்ணீர் தேடி பக்கத்து கிராமத்துக்குள் அவை புகுந்து விவசாயப்பயிர்களை சேதப்படுத்தும் வாடிக்கையாகிவிட்டது.  கடந்த 10 நாள்களாக வனப்பகுதிகளில் கோடை மழை பெயது வருவதால் வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் மீண்டும் துளிர்விட்டன. இதனால் யானைகளுக்கு தீவனப்பிரச்னை சற்று குறைந்துள்ளது. 

கோடை மழை காரணமாக சிறு குட்டைகளில் நீர் தேங்கியுள்ளதால் யானை, புலி, சிறுத்தை,  காட்டெருமை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு தாக்கம் தீர்க்கும் இடமாக மாறிவிட்டன.  விவசாயிகளும் கோடைமழையை பயன்படுத்தி மானாவாரி சாகுபடி செய்ய துவக்கி விட்டனர். வெயிலில் காய்ந்து போன மலைப்பகுதி சில நாள்களாக ஜில்லென குளிர்ந்த காற்று வீசுவதால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மழை வேண்டி பண்ணாரி கோவிலில் சிறப்பு யாகம்

 
 
மழை வேண்டி சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரிஅம்மன் கோவிலில் வருண ஜெபம் மற்றும் சிறப்பு யாக பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.


கோடை வெயிலின் தாக்கம் அதிகமானதால் கடும்வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. இதற்கிடையே, இந்து அறநிலையத்துறை சார்பில் பிரசித்தி பெற்ற கோயில்களில் மழை வேண்டி சிறப்பு யாகபூஜை நடத்துமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரிஅம்மன் கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை கணபதி ஹோமத்துடன் சிறப்பு யாக பூஜை தொடங்கியது. சிவாச்சாரியார்கள் மழை வேண்டி பஜனை பாடல்களை பாடினர். வேதவிற்பனர்கள் நடத்திய இந்த சிறப்பு யாக பூஜையில் இணை ஆணையர் என்.நடராஜன், அறநிலையத்துறை அலுவலர்கள், கோயில் பரம்பரை அறங்காவலர்கள், சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். 


சித்திரை அமாவாசையையொட்டி, பண்ணாரி கோவிலில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு பூஜைகள் நடைபெற்றன. சந்தனகாப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்னை தரிசனம் செய்தனர்.
மரவள்ளி சாகுபடிக்கு மாறிய கரும்பு விவசாயிகள்




 
கரும்பு மாற்றுப்பயிராக மரவள்ளி சாகுபடி செய்ய சத்தியமங்கலம் வட்டார பகுதி விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 

சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில்  சமவெளிப் பகுதிகளான ஆலத்துக்கோம்பை, சிவியார்பாளையம், கே.என்.பாளையம், செண்பகபுதூர், சிக்கரசம்பாளையம், பெரியகுளம், ராமபைலூர், பவானிசாகர், எரங்காட்டூர், மாரனூர், நஞ்சப்பகவுண்டர் புதூர், ஜல்லியூர், பெரியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளிக்கிழங்கு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்குள்ள கரும்பு விவசாயிகள் கிணற்று மற்றும் ஆற்று நீர் மூலம் பாசனம் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்ய துவங்கி விட்டனர் . 

 10 மாதகால பயிரான மரவள்ளிக்கிழங்கு நடவு செய்யப்பட்டு 3 மாதங்கள் வரை 10 நாட்களுக்கு ஒரு முறையும், அதன்பிறகு 15 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சப்படுகிறது. உழவுக்கூலி, களைவெட்டுதல், உரமிடுதல் உள்ளிட்ட செலவினங்கள் உட்பட ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம்  வரை செலவாகிறது. இங்கு பயிடப்படும் முள்வாடி ரக மரவள்ளிக்கிழங்கு தின்பண்டம்(சிப்ஸ்) தயாரிக்க பயன்படுத்துக்கின்றனர். இந்த ரகம் தடிமனமாக இருப்பதால்  ஏக்கர் ஒன்றுக்கு 11 டன் வரை மகசூல் கிடைக்கும். தற்போது, மரவள்ளி ஒரு டன் ரூ.10 ஆயிரம் 500 வரை விற்கப்படுகிறது. 


நெகமம் புதூரைச் சேர்ந்த விவசாயி பழனிச்சாமி திங்கள்கிழமை கூறியது: கடம்பூர்  மலைப்பகுதியில் சாகுபடி செய்யப்படும் ரோஸ் ரக மரவள்ளியைக் கொண்டு  ஜவ்வரிசி, மைதா போன்ற உணவு பொருள்களை தயாரிக்கின்றனர். . மானாவாரி சாகுபடியை விட 2 டன் கூடுதல் மகசூல் கிடைப்பதால்  மரவள்ளிக்கிழங்கு தற்போது சத்தி பகுதியிலும் பயிரிடப்பட்டுள்ளது. கரும்பை விட உற்பத்தி செலவு குறைவு மட்டுமின்றி  50 சதம் கூடுதல் வருவாயும் கிடைக்கிறது.  .  கரும்புக்கு மாற்றுப்பயிராக மரவள்ளிக்கிழங்கு சாகுபடி இருப்பதால் கரும்பு விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்றார்.

Tuesday, April 29, 2014

இந்தியாவில உங்க செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம். எப்படியும் அது உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். அதுக்கு நீங்க செய்ய வேண்டியவை :

 


1. உங்கள் செல்போனிலிருந்துக்கு*#06# டயல் செய்யுங்க
2. உங்க மொபைல்ல ஒரு 15 டிஜிட் நம்பர் வரும்
3, இதுதான் உங்க போனின் IMEI No (அப்படின்னா?) அதனை உடனே பத்திரமா நோட் பண்ணி வைச்சுக்குங்க..
4. செல்போன் தொலைஞ்சு போச்சுன்னா உடனே இந்த நம்பரை cop@vsnl.netக்குமெயில் பண்னுங்க!
5. போலீஸூக்கெல்லாம் போக வேண்டாம்.
6. உங்க மொபைல் போனை 24 மணி நேரத்தில் GPRS மற்றும் internet மூலம் கண்டுபிடிச்சுடுவாங்க.
7. உங்க மொபைல் போன் நம்பரை மாத்தினால் கூட போன் எங்கிருந்து ஒர்க் ஆகுதுன்னு ஈஸியா தெரிஞ்சுக்கலாம்

 

அமோக விளைச்சல்: மல்லி விலை கிலோ ரூ.200 ஆக சரிவு





கோடை வெப்பம் காரணமாக மல்லிகை மகசூல் 20 டன்னாக அதிகரித்துள்ளதால் அதன் விலை கிலோ ரூ.200 ஆக சரிந்துவிட்டது.
   
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாண்டாம்பாளையம், சிக்கரசம்பாளையம்,கெஞ்சனூர், தொட்டம்பாளையம்,வடவள்ளி, கொத்தமங்கலம்,பட்டரமங்கலம், குய்யனூர், கணுவக்கரை, காரணூர், இரும்பொறை மற்றும் செங்கம்பள்ளி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட கிராமங்களில் மல்லி, முல்லை,கனகாம்பரம்,சம்பங்கி, செவ்ந்தி,பட்டுப்பூ, செண்டுமல்லி மற்றும் ஜாதிமுல்லை உட்பட பல்வேறு வகையான பூக்கள் சுமார் 85 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் சுமார் 20 லட்சம் மல்லி,முல்லைப்பூ நாற்றுகள் நடவு செய்யப்படுகின்றன.

நவம்பர்,டிசம்பர்,ஜனவரி மாதங்களில் பூக்களின் உற்பத்தி ஒரு டன்னாகவும் பிற மாதங்களில் அதிகபட்சமாக 20 டன்னாகவும் இருக்கும். வறட்சியை தாக்கும் பூக்கள் சாகுபடியால் ஆயிரக்கணக்கான கிராமப்புற பெண்கள்  வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.

தற்போது, கோடை வெயிலில் பூக்கள் உற்பத்தி நாள்தோறும் 20 டன்னை தாண்டுவதால் மல்லிகை விலை ரூ.200 ஆக சரிந்துவிட்டது. சத்தியில் செயல்படும் தமிழ்நாடு மலர்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் சனிக்கிழமை நிர்ணயிக்கப்பட்ட பூக்கள் விலை விபரம்: மல்லி கிலோ ரூ.200, முல்லை கிலோ ரூ.350 மற்றும் கனகாம்பரம் ரூ.500

பிப்ரவரி மாதத்தில் மல்லிகை உற்பத்தி 1 டன்னாக இருந்ததால் கிலோ ரூ.1000க்கு விற்கப்பட்டது. தற்போது, அதன் உற்பத்தி 20 டன்னாக அதிகரித்துள்ளதால் மல்லி கிலோ ரூ.200 ஆக சரிந்துவிட்டது. கேரளாவில் திருவிழா நடைபெறுவதால் கனகாம்பரத்தின் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சத்தியில் கொள்முதல் செய்யப்பட்ட பூக்கள் மைசூர், பெங்களூரு,  பாலக்காடு, கோவை போன்ற நகரங்களுக்கு வேன், கார், பிக்-அப் வேன் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. திருவணந்தபுரம், கொச்சி, ஐதராபாத், மும்பை மற்றும் சார்ஜா போன்ற அரபு நாடுகளுக்கு விமானம் மூலம் பூக்கள் அனுப்பப்படுகின்றன.
பவானிசாகர் அணை நீர்மட்டம் 42 அடி



 
அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் 42 அடியாக சரிந்தது.

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. இதன் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீர் மட்ட கொள்ளளவு 120 அடி. இதில் 15  அடி சேறும் சகதியுமாக உள்ளது. அணையில் இருந்து பவானிஆற்றுக்கு 150 கனஅடியும் கால்வாய்க்கு 5 கனஅடி நீரும் திறந்துவிடப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து 623 கனஅடியாக குறைந்துவிட்டது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 42 அடியாக உள்ளது. அணையில் நீர்மட்டம் குறைந்து குட்டைபோல காட்சியளிக்கிறது. நீர்ப்பிடிப்பு பகுதி அணையில் தேங்கு நிற்கும் தண்ணீரில் அழுக்கும் பாசியும் நிறைந்து பச்சை நிறத்தில் காணப்படுகிறது.
வாலிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் வாக்களிக்கும் ஈரோடு மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம்

பனையம்பள்ளி ஊராட்சி துவக்கப்பள்ளியில் வாக்களிக்கும் பவானிசாகர் எம்எல்ஏ பி.எல்.சுந்தரம்


காவிலிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்களிக்கும் பவானிசாகர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் வி.ஏ.பழனிச்சாமி

சத்தி ரமணி துவக்கப்பள்ளியில் வாக்களிக்கும் சத்தி நகர்மனறத் தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம்

Monday, April 28, 2014

சத்தியமங்கலம் பகுதியில் ஆர்வத்துடன் வாக்களித்த வாக்காளர்கள்



16வது மக்களைத் தேர்தலையொட்டி வியாழக்கிழமை நடந்த வாக்குப்பதிவில் சத்தியமங்கலம் பகுதி மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

16வது மக்களவைத் தேர்தல்  நாடுமுழுவதும் 9 கட்டங்களாக நடைபெறுகிறது. 6வது கட்டத் தேர்தல் தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வியாழக்கிழமை நடைபெற்றது. நீலகிரி மக்களவைக்குட்பட்ட பவானிசாகர் சட்டப்பேரவையில் உள்ள 263 வாக்குசாவடிகளில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கியது. இதில் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட காவிலிபாளையம் ஊராட்சி துவக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஒரு மணிநேரம் தாமதமாக வாக்குப்பதிவு துவங்கியது. அதனைத் தொடர்ந்து, கிராமமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்.
 
 
சத்தி வட்டாரத்தில் பனையம்பள்ளி, சாணார்பதி, வாலிபாளையம், புங்கம்பள்ளி, குப்பந்துறை, பவானிசாகர் உள்ளிட்ட கிராமங்களில் கிராமமக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்குசாவடியில் காத்திருந்தனர். நண்பகல் 12 மணியளவில்
50 சதவீத மக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.சத்தி ஜான் டி பிரிட்டோ பள்ளி வாக்குசாவடியில் வாக்காளர்கள் 1 மணி நேரம் காத்திருந்து வாக்குஅளித்தனர்.  பவானிசாகர் எம்எல்ஏ பி.எல்.சுந்தரம் பனையம்பள்ளி அரசு துவக்கப்பள்ளியிலும் ஈரோடு மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம் வாலிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளிலும் பவானிசாகர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் வி.ஏ.பழனிச்சாமி காவிலிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் சத்தி நகர்மன்றத் தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம் சத்தி ரமணி துவக்கப்பள்ளியிலும் வாக்களித்தனர். 

பெரும்பான்மையான வாக்குசாவடிகளில் கல்லூரி மாணவ,மாணவியர்கள் இளைஞர்கள் வரிசையாக நின்று தங்களது முதல் வாக்கினை பதிவு செய்தனர்.நடந்துசென்று வாக்களிக்க இயலாத  முதியோர்களை உறவினர்கள் தனி ஆட்டோவில் அழைத்துச் சென்று ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். மலைப்பகுதி வாக்குசாவடிகளில் மலைவாழ்மக்கள் குடும்பம் சகிதமாக வந்து வாக்களித்தனர். அனைத்து பகுதிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. பவானிசாகர் சட்டப்பேரவைக்குட்பட்ட வாக்குசாவடிகளில்  மாலை 3 மணி நிலவரப்படி 63 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

 வாக்குசாவடிகளில் துணை ராணுவப்படையினர், உள்ளூர் போலீஸார் மற்றும் காவல் இளைஞர் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
புன்செய் புளியம்பட்டியில் வாக்குபதிவு நாளில் பெரும்பாலான கடைகள் அடைப்பு.




புன்செய் புளியம்பட்டியில் பெரும்பாலான வணிக, வர்த்தக நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக ஹோட்டல், பேக்கரி, துணிக்கடைகள், செல்போன் கடைகள், நெட் சென்டர்கள், பழ அங்காடி என பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. இதன் காரணமாக எப்போதும் பிஸியாக இயங்கி வரும் கோவை மெயின் ரோடு, சுல்தான் ரோடு, மாதம் பாளையம் ரோடு ,பஸ் ஸ்டாண்டு பகுதி என அனைத்து பகுதியிலும் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி கிடந்தது. போதாக்குறைக்கு வெயிலின் தாக்கமும் அதிகமாக இருந்ததால் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது.

பஸ்ஸ்டாண்டை சுற்றியுள்ள ஹோட்டல் கடைகள் கூட அடைக்கப்பட்டிருந்ததால் வெளியூரை சேர்ந்த பயணிகள் உணவு கிடைக்காமல் அலைமோதினர். இதன் காரணமாக திறந்திருந்த ஒருசில கையேந்தி பவன்கள், ரோட்டோர கடை களில் கூட கூட்டம் அலைமோதியது. டீக்கடை கள் கூட மூடியிருந்ததால் மக்கள் பெரிதும் அவதியடைந்தனர். ஒரு சில கட்சியினர் தங்களது பூத் ஏஜண்டுகளுக்கு மதியம் பொட்டல சாப்பாடு கூட விநியோகம் செய்ய முடியாத அளவிற்கு கடைகள் இல்லாமல் இருந்தது. தேர்தலில் வாக்களிக்க வசதியாக பணிபுரியும் ஊழியர்களுக்கு கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் என ஏற்கனவே தேர்தல் ஆணை யம் மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆணையம் தெரிவித்திருந்ததாலேயே பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்ததாக தெரிவித்தனர்.

Thursday, April 24, 2014



நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புன்செய் புளியம்பட்டியில் உள்ள  ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் காலை 7 மணி முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். வாக்குபதிவு அமைதியான முறையில் நடைபெற்றது.
 

நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புன்செய் புளியம்பட்டியில் உள்ள  ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் பெற்றோர்கள் ஆர்வமுடன் வாக்களிக்க வரிசையில் காத்திருக்க அவர்களின் குழந்தைகள் அங்குள்ள சறுக்கு விளையாட்டு  மற்றும் ஊஞ்சல் ஆடி மகிழ்ந்தனர்.
மேட்டுப்பாளையம் தொகுதியில் 70 திருநங்கைகள் வாக்களித்தனர்.


மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி வனபத்திரகாளியம்மன் கோவில் ,அம்மன்  நகர் பகுதியில் வசித்துவரும் திருநங்கைகள் இன்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்தனர்.
 
மூன்றாம் பாலினமாக அறிவிக்க வேண்டும்,வாக்களிக்க தனிவரிசை வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.


தள்ளாத வயதிலும் உடல்நலம் சரியில்லாத நிலையிலும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றவரும் வயதான தம்பதிகள்.இடம்.ஆலாங் கொம்பு.
 

நீலகிரி பாராளுமன்ற தேர்தலில் ஜடையம்பாளையம் ஊராட்சி ,வீராசாமி நகரில் வாக்களிக்க வரிசையில் நிற்கும் பெண்கள்
263 வாக்குசாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்ட 
வாக்குப்பதிவு எந்திரங்கள்
 

பவானிசாகர் தொகுதிக்குட்பட்ட 263 வாக்குசாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் அதனைச் சார்ந்த எழுது பொருள்கள், உபகரணங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தனிவாகனங்களில் புதன்கிழமை அனுப்பப்பட்டன.

மக்களவை தேர்தல் வியாழக்கிழமை நடைபெறுவதையொட்டி, பவானிசாகர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட 263 வாக்குசாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் அனுப்பும் பணி சத்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை காலை துவங்கியது. 

தேர்தல் நடத்தும் துணை அலுவலர்கள் த.முத்துமாணிக்கம்,அப்பாச்சியப்பன் மற்றும் தேர்தல் பணியாளர்கள் ஆகியோர்  வாக்குப்பதிவுக்கான அனைத்தும் பொருள்களையும் ஆய்வு செய்த பின்னரே அந்தந்த வாக்குசாவடிக்கு அனுப்பி வைத்தனர். தாளவாடி, கடம்பூர், தலமலை மலைப்பகுதியில் உள்ள 73  வாக்குசாவடி மையங்கள் உட்பட 263 மையங்களுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள்  சென்றடைந்துவிட்டன என்பதை தேர்தல் அதிகாரிகள் புதன்கிழமை மாலை உறுதி செய்தனர். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு பணியாளர்கள் சம்பந்தப்பட்ட வாக்குசாவடிக்கு செல்லுமாறு அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பவானிசாகர் சட்டப்பேரவையில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 763 வாக்காளர்கள் உள்ளனர்.  மொத்தமுள்ள 263 வாக்குசாவடிகளில் 17 வாக்குசாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்தலையொட்டி, துணை ராணுவபடையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்..  .

Wednesday, April 23, 2014

ஓட்டு போடுவது எப்படி?

 
சென்னை : ஓட்டு போடுவது எப்படி என, மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம், செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.அதன் விவரம்:

*தேர்தல் அலுவலகத்தில் இருந்து வழங்கப்படும், 'பூத் சிலிப்'பில், வேட்பாளரின் ஓட்டுச் சாவடி எண், ஓட்டு போடும் மையம் குறிப்பிடப்பட்டிருக்கும். இதை, தேர்தல் கமிஷன், இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.

*ஓட்டு போடும் மையத்திற்கு செல்லும் போது, ஏதாவது ஒரு அடையாள அட்டையையும், பூத் சிலிப்பையும் கொண்டு செல்ல மறக்கக் கூடாது.
*ஓட்டுச் சாவடிகளுக்கு, மொபைல் போன் எடுத்து செல்வதை தவிர்க்க வேண்டும்.

*தனியார் வாகனங்கள், ஓட்டுச்சாவடிக்கு, 200 மீட்டர் தூரத்தில் நிறுத்த வேண்டும்.

*முதல் தேர்தல் அலுவலர், வாக்காளரின் அடையாள அட்டையை சரி பார்த்து, உரத்த குரலில் படிப்பார். அதை ஓட்டுச் சாவடிக்குள் உள்ள அனைத்து கட்சி ஏஜன்ட்களும் உறுதி செய்வர்.

*இரண்டாவது அலுவலர், வாக்காளரின் இடது ஆள் காட்டி விரலில், அடையாள மையிட்டு, ஓட்டளிக்கும் சிலிப் வழங்கி, வாக்காளர் எண்ணைப் பதிவு செய்வார். இதில் வாக்காளரும் கையெழுத்திட வேண்டும்.

*அடுத்ததாக, வாக்காளர் மூன்றாம் அலுவலரிடம், ஓட்டு பதிவிற்கான சிலிப்பை காண்பிக்க வேண்டும். அவர் ஓட்டளிக்கும் இயந்திரத்தின் கண்ட்ரோல் யூனிட்டில் உள்ள, 'பேலட் பட்டனை' அழுத்துவார். பின் வாக்காளர், ஓட்டு போடும் மறைவிடத்திற்கு சென்று, ஓட்டை இயந்திரத்தில் பதிவு செய்ய வேண்டும்.

*ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஒவ்வொரு வேட்பாளருக்கும் சின்னம் மற்றும் பெயருக்கு எதிரே நீல நிறத்தில் பொத்தான் கொடுக்கப்பட்டிருக்கும். யாருக்கும் ஓட்டுப்போட விருப்பம் இல்லாவிட்டால், நோட்டா' என்ற பட்டனை அழுத்தலாம்.

*வாக்காளர் ஏதாவது ஒரு பொத்தான் மட்டும் பயன்படுத்தி, ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும்.

*நீல பட்டன் பயன்படுத்தும்போது, நீங்கள் ஓட்டளித்த வேட்பாளரின் பெயருக்கு எதிரே, சிகப்பு விளக்கு எரியும்; ஓட்டுப்பதிவு செய்யப்பட்ட பிறகு, 'பீப்' ஒலி கேட்கும். இயந்திரத்தின் கண்ட்ரோல் யூனிட்டில் உள்ள விளக்கு, அணைந்து விடும். ஓட்டளிக்கும் முறை, இத்துடன் முடிவடையும்.
இவ்வாறு, செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேட்டுப்பாளையம் பிளாக் தண்டர் தீம் பார்க்கில் புதியதாக துவங்கப்பட்டுள்ள செயற்கை நீர்வீழ்ச்சியை பிளாக் தண்டர் பார்க் செயல் இயக்குனர் வின்சென்ட் அடைக்கலராஜ் தலைமையில் எல்.ஏ.குரூப்  நிர்வாக இயக்குனர் ஏ.ஜோசப் லூயிஸ் துவக்கிவைத்தார்.பூங்கா மேலாளர் கிருஷ்ணமூர்த்தி,பொறியாளர் கணேசன்,ரிசார்ட் மேலாளர் டேனியல் ராஜ் ,உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tuesday, April 22, 2014

 
புன்செய் புளியம்பட்டியில் நீலகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை ஆதரித்து இறுதிகட்ட பிரச்சாரத்தை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி  நிறைவு செய்யும் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.கே.சின்னசாமி, பவானிசாகர் ஒன்றிய குழு தலைவர் வி.ஏ.பழனிசாமி, நகர செயலாளர் எம்.கே.ராஜேந்திரன்.
புன்செய் புளியம்பட்டியில் நீலகிரி தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து தீவிர இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரம்


புன்செய் புளியம்பட்டியில் நீலகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை  ஆதரித்து தீவிர இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரம், இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பவானிசாகர் தொகுதி செயலாளரும், மாவட்ட ஊராட்சி குழு தலைவருமான எஸ்.ஆர். செல்வம் தலைமை தாங்கினார். பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வி.ஏ. பழனிசாமி, நகர செயலாளர் எம்.கே.ராஜேந்திரன், நகரமன்ற துணை தலைவர் டி.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.கே.சின்னசாமி வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர் பூவை செழியன் கலந்து கொண்டு பேசும் போது கடந்த தி.மு.க ஆட்சியில் கருணாநிதியும், ஸ்டாலின்னும் கஜானாவை காலி செய்ததுதான் அவர்கள் செய்த சாதனை. முதல்வர் ஜெயலலிதா அளித்த 177 வாக்குறுதிகளில் 150 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார். விலையில்லா ஆடு, மாடுகளை வழங்கி வெண்மை புரட்சிக்கு வித்திட்டவர் நமது முதல்வர். இவ்வாறு பல்வேறு நல திட்டங்கள் தொடர இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்றார்.

 பவானிசாகர் தொகுதி செயலாளரும், மாவட்ட ஊராட்சி குழு தலைவருமான எஸ்.ஆர். செல்வம் பேசும் போது பெண்களுக்கு திருமண நிதிஉதவி தொகை திட்டம், முதியோருக்கு உதவி தொகை திட்டம், பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நல திட்டங்கள் தந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கரத்தை வலுபடுத்த இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள். 2 ஜி ஊழலில்  1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்து திகார் சிறை சென்ற  ராசாவை டெபாசிட் இழக்க செய்யுங்கள் என்றார்.


முன்னதாக நேரு நகரில் இருசக்கர வாகன பேரணியை  மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எஸ்.ஆர். செல்வம் துவக்கி வைத்தார். தொடர்ந்து பேரணி, சுல்தான் ரோடு, மாதம்பாளையம் ரோடு, சௌடேஸ்வரி அம்மன் கோவில் வீதி, கோவை மெயின் ரோடு, டானாபுதூர் நால்ரோடு, காந்தி நகர், மாரியம்மன் கோவில் வீதி வழியாக சென்று எம்.ஜி.ஆர் சிலையை வந்து அடைந்தனர். இரு சக்கர வாகன பேரணியில் திரளான அதிமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கு கொண்டனர்.
சத்தியில் அதிமுகவினர் மோட்டார் சைக்கிள் பிரசாரம்



சத்தியமங்கலத்தில் அதிமுகவினர் இறுதிக் கட்டமாக பிரசாரமாக மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தி செவ்வாய்க்கிழமை வாக்குசேகரித்தனர்.
 
நீலகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணனை ஆதரித்து அதிமுகவினர் சத்தி பகுதியில் ஆதரவு திரட்டி வருகின்றனர்.மக்களவைத் தேர்த்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை ஓய்ந்தது.

சத்தி, பவானிசகார்,தாளவாடி ஒன்றியத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் இறுதிக்கட்ட பிரசாரமாக  மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினர். முன்னதாக, எஸ்.ஆர்.டி. கார்னரிலிருந்து  புறப்பட்ட மோட்டார் சைக்கிள் பேரணியை ஈரோடு மாவட்ட ஊராட்சி தலைவர் எஸ்.ஆர்.செல்வம் துவக்கி வைத்தார்.

இந்த பேரணி மைசூர் சாலை, செண்பகபுதூர், புங்கம்பள்ளி, நல்லூர் வழியாக புன்செய் புளியம்பட்டியை சென்றடைந்தது. இதில் பவானிசாகர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் வி.ஏ.பழனிச்சாமி, சத்தி நகர்மன்றத் தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம், அதிமுக சத்தி ஒன்றிய செயலாளர் வி.சி.வரதராஜ், சத்தி நகர செயலாளர் எஸ்.வி.கிருஷ்ணராஜ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எஸ்.கே.பழனிச்சாமி,  எம்ஜிஆர் மன்ற புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் என்.ஆர்.கருப்புச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
 

மேட்டுப்பாளையம் போட்டோ மற்றும் வீடியோகிராபர்ஸ் சங்கம் சார்பில் சங்க தலைவர் எம்.மீனாட்சிசுந்தரம் தலைமையில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.செயலாளர் ஆல்வின் லியோ,பொருளாளர் கே.கதிர்வேல்,நிர்வாகிகள் சந்தோஷ் ராஜா,நாகராஜன்,சரவணன்,நற்கருணை நாதன்,சுரேஷ், யுவராஜ் உட்பட உறுப்பினர்கள் பேருந்து நிலையம்,ஊட்டி ரோடு,கோவை ரோடு,உட்பட பல்வேறு இடங்களில் உனக்கு நீ உண்மையாக இருப்பின்,வாக்களிப்பதிலும் உண்மையாக இரு,நாட்டின் வளர்ச்சியை வெறும் பேச்சு முடிவு செய்யாது.ஆள்காட்டி விரலில் பதியும் அச்சு தான் முடிவு செய்யும்.வாக்களிப்போம்,நமது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவோம் ஆகிய வாசககங்கள் அடங்கிய சுமார் 10 ஆயிரம் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்..
சிறுமுகை அருகே 75 ஆண்டு பழமை வாய்ந்த மகா மாரியம்மன் கோவில் திருவிழா.





சிறுமுகை அருகே உள்ள நால்ரோடு , எலகம் பாளையம் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் 5 ஆம் ஆண்டு திருவிழா கடந்த 14 ந்தேதி பூச்சாட்டுடன் துவங்கி சிறப்பாக நடந்துவருகிறது.15 ந்தேதி கோவில் முன்பு கம்பம் நட்டு அதனை சுற்றி பக்தர்கள் ஆடிவருகின்றனர்.20 ந்தேதி ஊர்கவுடர்,மற்றும் ஊர் பட்டக்காரர் வீட்டு சீர் கொண்டுவரும் நிகழ்ச்சி நடந்தது.அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக அழைத்துவரும் நிகழ்ச்சி நடந்தது.பின்னர் 21 ந்தேதி சக்தி கரகம் எடுத்தல்,பூச்சட்டி எடுத்தல்,உச்சி பூஜை,மாவிளக்கு எடுதுவருதல் ஆகிவை நடந்தன.முக்கிய நாளான நேற்று இரவு நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மேளதாளங்கள் முழங்க  கம்பத்தை சுற்றி ஆடிவந்து அம்மனை தரிசித்தனர்.இரவு 12 மணிக்கு கம்பம் பிடுங்கப்பட்டு ஆற்றில் விடப்பட்டது.இன்று சாமி ஊர்வலம்,மஞ்சள் நீராடுதல் ஆகியவை நடந்தன.நாளை மறுபூஜை நடக்கிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை எலகம்பாளையம்,நால்ரோடு,சேரன்நகர்,ஊர்கவுடர் ,ஊர் பட்டக்காரர்.மற்றும் கோவில் கமிட்டியினர்,பொதுமக்கள்,இளைஞர் நற்பணி மன்றத்தினர்,மகளிர் சுய உதவிக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Monday, April 21, 2014

 
மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே நகர அண்ணா தி.மு.க.செயலாளர் ஏ.வான்மதி சேட் தலைமையில் திரைப்பட நடிகை வாசுகி,,திரைப்பட  இயக்குனர் பாலு ஆனந்த் ஆகியோர் நீலகிரி தொகுதி அண்ணா தி.மு.க.வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணனை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர்.ஓ.கே.சின்னராஜ்,எம்.எல்.ஏ, விவசாய அணி மாவட்ட செயலாளர் கே,ஆர்.எஸ்.கிருஷ்ணசாமி, தலைமை கழக பேச்சாளர் பி.எஸ்.கார்த்திகேயன், மகளிரணி செயலாளர் நபீஸா, இணை செயலாளர்  அமராவதி, காளியம்மாள், ஹபிபுர் ரஹிமான்,உட்பட பலர் உடன் உள்ளனர்.