தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, June 27, 2014

மேட்டுப்பாளையம் அரிமா சங்க புதிய தலைவராக எஸ்.ஜெயக்குமார் பதவி ஏற்பு.
 
ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை நிறுவனர் பங்கேற்பு.
 
 
மேட்டுப்பாளையம்.ஜூன்.26.மேட்டுப்பாளையம் அரிமா சங்க புதிய தலைவராக எல்.ஐ.சி.ஜெயக்குமார் பதவியேற்றார்.மேட்டுப்பாளையம் அரிமா சங்கத்தின் 2014-2015 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா மேட்டுப்பாளையம் ராமு கவுடர் மண்டபத்தில் நேற்று நடந்தது.தலைவர் ஆர்.சீனிவாசன் வரவேற்று பேசினார்.செயலாளர் பி.எஸ்.யு.ஞானமூர்த்தி ஆண்டறிக்கை வாசித்தார்.அரிமா சங்க முதல் துணை ஆளுநர் ஆர்.தங்கப்பழம் புதிய உறுப்பினர்களை அறிமுகம் செய்துவைத்தார்.முன்னாள் மாவட்ட ஆளுநர் எஸ்.நாகின் ,இந்த ஆண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார்.புதிய தலைவராக எஸ்.ஜெயக்குமார், செயலாளராக தீன் முகமது,பொருளாளராக டி.ரோஜர் ,மற்றும் துணைத் தலைவர்களாக ஆர்.கிருஷ்ணன்,அப்துல்கரீம்,எஸ்.ஆனந்தன், துனைசெயலாளராக கே.செல்வக்குமார்,மற்றும் நிர்வாகிகளாக ராஜரத்தினம், எம்.தர்மராஜ்,அப்பாஸ் அலி,அபூபக்கர்,ஆரியநாதன் காத்தான், சித்திரவேலு,பிஷப் தங்கப்பன்,எஸ்.ஆர்.சி.தங்கவேலு,எம்.ஆர்.உதயகுமார், கமிட்டி உறுப்பினர்கள் பி.என்.ஆர்.ராஜேந்திரன், எம்.ரஹமதுல்லா, எஸ்.ஆர்.சுப்பையன் ஆகியோருக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார்.
 
விழாவில் கோவை ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை நிறுவனரும்,செந்தில் குரூப் நிறுவனங்களின் தலைவருமான ஓ.ஆறுமுகசாமி கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார்.அப்போது அவர் கூறியதாவது; புதியதாக பதவியேற்ற தலைவர் ஜெயக்குமார் மற்றும்  நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அரிமா சங்க புதிய நிர்வாகிகளில் தலைவர் இந்து,செயலாளர் முஸ்லீம்,பொருளாளர் கிறிஸ்தவர் .இதுவே மத நல்லினக்கதிற்கு எடுத்துக்காட்டு.அணைத்து மதத்தினரும் நண்பர்கள் சகோதரர்கள்.மத ஒற்றுமைக்கு இது ஒரு உதாரணம்.சேவை செய்வதில் ஜாதி மதம் இல்லை.அதை அரிமா சங்கத்தில் காணமுடிகிறது.அதற்க்கு எனது வாழ்த்துக்கள்.இதுபோன்ற சமுதாய அக்கறை உள்ள அமைப்புகள் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது பாராட்டுக்குரியது.,கோவை அரசு மருத்துவமனையை ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை ஏற்று சுமார் ரூ.ஒருகோடி செலவில் சுகாதாரம்,மற்றும் மருத்துவமனை உபகரணங்கள் வழங்கியுள்ளோம்.அதேபோல் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையை தனியார் மருத்துவமனைக்கு இணையாக சுத்தம் சுகாதாரம் மற்றும் சிகிச்சை கருவிகள் வழங்கி  சிறப்பாக சேவை செய்ய அரிமா சங்கத்தை கேட்டுக்கொள்கிறேன்.அதற்க்கு  எங்களது ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை முழு ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் ஓய்வுபெற்ற சி.பி.ஐ.போலீஸ் டி.எஸ்.பி.ஆர்.வெள்ளிங்கிரி, இரண்டாவது துணை ஆளுநர்  விஜயகுமார்,ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.விழாவில் ரூ.ஒரு லட்சம்மதிப்பில்  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் நடத்துனர் சங்கத்திற்கு சாலைவிதிகள் ,விபத்துகள் தடுப்பது குறித்து எல்.சி.டி புரஜெக்டர், பாலமலை ஆதிவாசிகளுக்கு கம்பளி,பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டுப்புதககங்கள் ஆகிய நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.விழா நிகழ்சிகளை முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் பி.நவ்ரத்தன் மல்,எம்.வின்சென்ட் வேதராஜ், ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.. முடிவில் பொருளாளர் ரோஜர் நன்றிகூறினார்.
மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்க தலைவராக டாக்டர் மு.இஸ்மாயில் பதவியேற்பு.

 

மேட்டுப்பாளையம்.ஜூன்.26.மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்கத்தின் 2014-2015 ஆண்டின் புதிய தலைவராக டாக்டர் ஹாஜி.மு.இஸ்மாயில் பதவியேற்றார்.ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா,மெட்ரோ மெட்ரிக்குலேசன் பள்ளி குரு மிஸ்திரி ஹாலில் நடந்தது.சங்க தலைவர் எம்.கே.எஸ்.விஜயகுமாரன் தலைமை தாங்கினார்.செயலாளர் சுந்தரகணேஷ் ஆண்டறிக்கை வாசித்தார்.விழாவில் ரோட்டரி ஆளுநர் [தேர்வு]டாக்டர் ஜார்ஜ் சுந்தராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார்.தலைவராக ஸ்மையில் மருத்துவமனை தலைமை மருத்துவர் ஹாஜி.மு.இஸ்மாயில் ,செயலாளராக மதனகோபால்,பொருளாளராக பூமிநாதன்,துணைதலைவராக எல்.நாகராஜ், இணை செயலாளராக சுரேஷ் சந்த் நகார்,மற்றும் உறுப்பினர் சேர்க்கை குழு பாலகோபால், சங்கநிர்வாக குழு சிதுராம் பாபு,சேவை திட்டங்கள் ஸ்ரீராம்,சங்க அறக்கட்டளை ஜே.ஸ்டீபன், பொதுமக்கள் தொடர்பு சோமசுந்தரம், வீரபத்திரன், ஆகியோர் உட்பட 25 உறுப்பினர்கள் பதவியேற்றனர்.
 
விழாவில்,கோவை ஸ்ரீ விஜயலட்சுமி,பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ஓ.ஆறுமுகசாமி, மேட்டுப்பாளையம் நகரமன்ற தலைவர் டி.சதீஷ்குமார், மகாஜன பள்ளி செயலாளர் என்.கிருஷ்ணசாமி,அரிமா சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் பி.நவ்ரத்தன்மல்,மேட்டுப்பாளையம் அனைத்து இந்து சமுதாய சங்க தலைவர் சி.பி.எஸ்.பொன்னுசாமி,மின்வாரிய செயற்பொறியாளர் முகமது முபாரக்,இயற்க்கை ஆர்வலர் ஜலால், என்.எல்.பி.கல்லூரி செயலாளர் முத்துசாமி,முதல்வர் சண்முகம், உட்பட ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள்,நிர்வாகிகள்,உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
 
விழாவில் மேட்டுப்பாளையம் பகுதியில் 10.மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
புதிய தலைவராக பதவியேற்ற டாக்டர் மு.இஸ்மாயில் கூறியதாவது;இந்த ஆண்டு வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் தேர்வு செய்து ரோட்டரி உறுப்பினர்கள் மாணவரின் கல்வி,மற்றும் உடல் நலம் பராமரிப்பில் அக்கறை கொண்டு சிறந்த ஒழுக்கமுள்ள மாணவனாக உருவாக்குவது.[EACH ONE,REACH ONE,TEACH ONE],கேன்சர் போன்ற நோய்களில் இருந்து காப்பாற்றிக்கொள்ள இயற்கை முறையில் பயிரிடப்பட்ட ரசாயனமற்ற வீட்டு காய்கறி தோட்டங்கள் அமைக்க கூட்டு முயற்சி,செய்வது, பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பெண் குழந்தைகளை காப்பாற்றுவதர்க்காக விழிப்புணர்வு தற்காப்பு முறைகள் போதிக்க பள்ளிகளில் சிறப்பு பயிற்சி வழங்குவது,மேட்டுப்பாளையம் அரசு மருத்துவ மனை  சுகாதார மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்த அரசு,மற்றும் பொதுநல அமைப்புகள் இணைந்து செயல்படுவது  உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுதப்படுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். முடிவில் செயலாளர் மதன்குமார் நன்றி கூறினார்.
ரூ.4 கோடி செலவில் கட்டாஞ்சி மலையை குடைந்து புறவழிச்சாலை.
30 கிராமமக்கள் மகிழ்ச்சி - தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி.
ஏ.கே.செல்வராஜ் எம்.பி,ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ.ஆய்வு.
 
 

 
மேட்டுப்பாளையம்.ஜூன்.25.கோவை மாவட்டம்,காரமடை ஊராட்சி ஒன்றியம் மேற்கு பகுதியில் காளம் பாளையம் ஊராட்சி தாயனூர் முதல் கட்டாஞ்சி மலை,தண்டிபெருமாள் கோவில் வழியாக பெரிய நாயக்கன் பாளையம் வரை சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.4 கோடி செலவில் தார்சாலை அமைக்கும் பனி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.இதன் மூலம் 5 ஊராட்சிகளை சேர்ந்த 30 கிராமமக்களின் 20 ஆண்டு கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றியது.இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.காரமடை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த தோலம்பாளையம்.வெள்ளியங்காடு,கெம்மாரம் பாளையம்,காளம் பாளையம் ,மருதூர் ஆகிய 5 ஊராட்சிகளை சேர்ந்த பொது மக்கள் மற்றும் ஆதிவாசி,மலைவாழ் மக்கள் வசித்துவரும் இப்பகுதி மக்கள் கோவை செல்லவேண்டுமானால் காரமடை ,பெரிய நாயக்கன் பாளையம் வழியாக கோவை சென்று வந்தனர்.இவர்கள் கோவை செல்ல அதிக தூரம் மற்றும் நேரம் அதிகமாகிறது.இதை கருத்தில் கொண்டு தாயனூரில் இருந்து கட்டாஞ்சி மலை வழியே புதிய தார் சாலை மற்றும் புறவழிச்சாலை அமைத்துத்தர கோரி நீண்டநாளாக அரசுக்கு கோரிக்கை விடுத்துவந்தனர்.மேட்டுப்பாளையம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் ஓ.கே.சின்னராஜிடம் கோரிக்கை மனுவையும் அளித்தனர்.அதனை தமிழக் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்ற எம்.எல்.ஏ.புதிய தார்சாலை அமைக்க தீவிர முயற்சி எடுத்தார்.அதனை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா,நபார்டு திட்டத்தின் கீழ் புதிய தார்சாலை அமைக்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கினார்.அதன்படி கடந்த 8 மாதங்களாக பணிகள் நடந்துவருகிறது.
 
கட்டஞ்சி மலையை குடைந்து தார்சாலைகள்,16 சிறு பாலங்கள்,கான்கிரீட் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.இந்த பணிகளை மாநிலங்களவை எம்.பி.ஏ.கே.செல்வராஜ்,ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ.ஆகியோர் நேற்று அதிகாரிகளுடன் சென்று  பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.கல்லூரி பேருந்துகளை சோதனை முறையில் மலைப்பகுதியில் இயக்கி சோதித்தனர்.பின்னர் அதிகாரிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சா.ஞானசேகரன்,காரமடை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் எம்.எஸ்.ராஜகுமார்,துணைத்தலைவர் ஆர்.செல்வராஜ்,காரமடை ஒன்றிய அண்ணா தி.மு.க.செயலாளர் பி.டி,கந்தசாமி,மாநில வேளாண் திட்டக்குழு உறுப்பினர் டி.கே.துரைசாமி,ஊராட்சி தலைவர்கள் பூபதி[பெள்ளாதி],வெள்ளிங்கிரி[கெம்மாரம் பாளையம்], ஜீவானந்தம்[வெள்ளியங்காடு], லட்சுமிபிரியா கருப்புசாமி[காளம் பாளையம்] ,பி.ஆர்.ரங்கராஜன்[மருதூர்],ஒன்றிய கவுன்சிலர் வெள்ளிங்கிரி,மற்றும் சேனாதிபதி,கிருஷ்ணமூர்த்தி, தண்டிபெருமாள் கோவில் திருப்பணிக்குழு தலைவர் சுந்தரமூர்த்தி,காரமடை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராணி,வட்டார வளர்ச்சி அலுவலர்[ஊராட்சி]லலிதா,ஒன்றிய பொறியாளர் தங்கவேலு,உட்பட பலர் கலந்துகொண்டனர்.தங்களது 20 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Thursday, June 26, 2014

சிறுத்தை நடமாடும் பகுதியில் பொருத்தப்பட்ட நவீன தானியங்கி கேமராக்கள் - வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு





சிறுத்தை நடமாட்டத்தை துல்லியமாக அறிய திம்பம் மலைப்பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சி பகுதியில்  6 நவீன  தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கடந்த மாதம்,  சத்தியமங்கலம் அடுத்த திம்பம் 27வது மலைப்பாதையில் தாளவாடியைச் சேர்ந்த முகமது இலியாஸ்(25) என்பவரை சிறுத்தை கடித்துக் கொன்றது.அதன்பிறகு, அதே இடத்தில் கடமானை தாக்கி கொன்றது. அதே இடத்தில் வேட்டையாடி பழகிய சிறுத்தை அங்கேயே நடமாடி வருகிறது. தமிழக கர்நாடக இடையே முக்கிய வழித்தடமாக  திம்பம் மலைப்பாதை உள்ளதால் சிறுத்தை பயத்தால் வாகன ஓட்டிகள் பீதியடைந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு மலைப்பாதை தடுப்புசுவரின் மறைவில் பதுக்கியபடி வாகன ஓட்டிகளை பயமுறுத்தியது.இதனால், பைக்கில் செல்லுவம் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இரவு நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

வாகன ஓட்டிகளை பயமுறுத்தும் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க திம்பம் வனத்தில் உள்ள நீரோடைகள், நீர்வீழ்ச்சிகள் போன்ற 6 இடங்களில் நவீன தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் வீடியோ மற்றும் புகைப்படங்களும் பதிவு செய்யப்பட்டும். மேலும் 24க்கும் மேற்பட்ட வேட்டைத் தடுப்பு காவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இப்பகுதியில் உள்ள புலி, தனக்கென ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொண்டாதால் அந்த எல்லைக்குள் சிறுத்தைகள் நுழைவதில்லை. அந்த வட்டத்திற்கு வெளியே சிறுத்தைகள் தங்களது வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொண்டன. இதில் திம்பம் பகுதியும் அடங்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்
புன்செய் புளியம்பட்டியில் இரத்த தான முகாம்



புன்செய் புளியம்பட்டி ஜூன் 27:

இந்திய மருத்துவ சங்கம் சத்தியமங்கலம் கிளை மற்றும் மேட்டுபாளையம் அரசு மருத்துவமனை இரத்த வங்கி சார்பில் இரத்த தான முகாம் வருகின்ற 29-06-2014 ஞாயற்றுகிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை புன்செய் புளியம்பட்டி சௌடேஸ்வரி மகாலில் நடைபெறுகிறது.

இது குறித்து புன்செய் புளியம்பட்டி மக்கள் நல சங்கத்தின் தலைவர் டாக்டர் சுப்பிரமணியம் கூறியதாவது,
இன்றைய அவசர உலகில் பல்வேறு வகையான நிகழ்வுகள் தினம்தினம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நாம் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு விபத்துக்களைச் சந்திக்கின்றோம்.ஒருவர் விபத்தினாலேயோ அல்லது வேறு ஏதாவது நோயினாலேயோ பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கப்படும் போது, அங்கு தேவைப்படுவது இரத்தம். அந்த இரத்தத்தினை நாம் பிறர்க்கு வழங்கும் பொழுது அவர்களின் உயிரினைக் காக்கும் பொருட்டு உயரிய சேவையினைச் செய்வதற்குச் சமம். 

இரத்ததானம்  அல்லது குருதிக் கொடை என்பது ஒருவர் தனது இரத்தத்தைப் பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும். ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 200, 300 மி.லி. இரத்தம் வரை கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு 24 மணி நேரத்தில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும்.

இரத்த தானம் செய்வதற்கு  5, 10 நிமிடங்கள் போதும். உடலில் உள்ள ஒவ்வொரு இரத்த அணுவும் (செல்கள்) மூன்று மாத காலத்தில் தானாகவே அழிந்து மீண்டும் உற்பத்தியாகிறது. இரத்த அணு உற்பத்தி என்பது உடலில் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் பணி. எனவே இரத்த தானம் செய்வதால் உடலுக்குப் பாதிப்போ, பலவீனமோ ஏற்பட வாய்ப்பில்லை. 


இரத்த தானம் செய்வதற்குத் தேவையான தகுதிகள்:
* இரத்த தானம் செய்பவரின் வயது 18 லிருந்து 60 வயதிற்குள் இருத்தல் அவசியம்.
* இரத்த ஹிமோகுளோபின் அளவு 12 - 16 கிராமிற்குள் இருக்க வேண்டும்.
* இரத்த தானம் செய்வபரின் எடை 50 கிலோவிற்குக் குறையாமல் இருக்க வேண்டும்.
* ஆண், பெண் இருபாலரும் இரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள்.
எனவே அனைவரும் எவ்வித அச்சமும் இன்றி ஞாயற்றுகிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை புன்செய் புளியம்பட்டி சௌடேஸ்வரி மகாலில் நடைபெற உள்ள ரத்த தானம் செய்யும் நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் இந்திய மருத்துவ சங்க உறுப்பினர்கள், பிற சேவை அமைப்புகளின் பொறுப்பாளர்கள் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

Tuesday, June 24, 2014

திம்பம் மலைப்பாதை 27 வது வளைவில் சாலைக்கு வந்த சிறுத்தை



சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதை 27 வது கொண்டைஊசி வளைவில்
நேற்று அதிகாலை 4 மணிக்கு ஒரு சிறுத்தை தடுப்புச்சுவரை ஒட்டி நின்று
கொண்டிருந்தது.



சத்தியமங்கலம், ஜூன்.25. திம்பம் மலைப்பாதையில் நேற்று அதிகாலையில்
சிறுத்தை நடமாடியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதை அடர்ந்த வனப்பகுதியில் திண்டுக்கல் & பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இம்மலைப்பாதை 27 அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இதனால் இப்பாதையில் வாகனங்கள் 30 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல முடியும். இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு தாளவாடியை சேர்ந்த வேன் டிரைவர் முகமது இலியாஸை 27 வது கொண்டை ஊசிவளைவு அருகே வனப்பகுதியில் கடித்துக் கொன்றது. அதன்பின் சிறுத்தைகள் மலைப்பாதையை ஒட்டிய வனப்பகுதியில் நடமாடி வருகின்றன. இதனால் மாலை 6 மணி முதல் காலை  6 மணி வரை இருசக்கர வாகனங்கள் மலைப்பாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று அதிகாலை 4 மணிக்கு 24 வது கொண்டை
ஊசிவளைவு அருகே சாலையோர தடுப்புச்சுவரின் மறைவில் நின்று சாலையில் செல்லும் வாகனங்களை எட்டிப்பார்த்த வண்ணம் நின்றுகொண்டே இருந்தது. சிறுத்தையைக்கண்ட வாகன ஓட்டிகள் பக்கவாட்டு கண்ணாடிகளை மூடியவாறு ஒருவித அச்சத்துடனே வாகனங்களை இயக்கினர்
சத்தியமங்கலம் வனப்பகுதியில் வாலிபர் கழுத்தறுத்து கொலை.



சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்ட பண்ணாரி வனப்பகுதியில்
புதுக்குய்யனூர் பிரிவு அருகே கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட அடையாளம்
தெரியாத வாலிபர்.



சத்தியமங்கலம், ஜூன்.25. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி வனப்பகுதியில் புதுக்குய்யனூர் பிரிவு அருகே சத்தியமங்கலம் & மைசூர் சாலையிலிருந்து 100 அடி தொலைவில் வனப்பகுதியில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொடுரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த சத்தியமங்கலம் வனச்சரகர் ஆனந்தன் சத்தியமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் சத்தியமங்கலம் டிஎஸ்பி மோகன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார். கொலையான நபர் கறுப்புநிற பேண்டும், மங்கிய வெள்ளை நிற சட்டையும் அணிந்திருந்தார்.  பிரேதத்திற்கு அருகே 2 அடி சுற்றளவிற்கு ரத்தக்கறை படிந்திருந்தது. ஈரோட்டிலிருந்து தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்கள் ஏதும் உள்ளதா என ஆய்வு செய்தனர். ஈரோடு ஏடிஎஸ்பி பாலாஜிசரவணன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். கொலை செய்யப்பட்ட நபர் யார் என்பது குறித்து சத்தியமங்கலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட நபரின் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்தது  குறிப்பிடத் தக்கது.  சடலத்தை பிரேதப்பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இயக்குனர் மணிவண்ணனின் மணித்துளிகள் நூல் வெளியீடு விழா
-நடிகர்கள் சத்யராஜ், இளவரசு, டிராட்ஸ்கி மருது, பாமரன் பங்கேற்பு









திம்பம் வனத்தில் சிறுத்தை உலாவுவதால் பயணிகள் பீதி
25வது திம்பம் வளைவில் கடமானை கடித்துக் கொன்றது
கூண்டு வைத்து பிடிக்க கிராமமக்கள் வலியுறுத்தல்



பவானிசாகர் வனத்தில் இருந்து திம்பம் பகுதிக்கு இடம்பெயர்ந்த சிறுத்தை              (அண்மையில் எடுக்கப்பட்ட கோப்புப்படம்)

சத்தியமங்கலம், ஜூன் 17:
திம்பம் மலைப்பாதை 25வது வளைவில் கடமானை சிறுத்தை கடித்துக் கொன்றதால் மலைக்கிராமமக்கள் பீதியடைந்துள்ளனர்.சிறுத்தையின் அட்டகாசம் தொடருவதால் அதனை  கூண்டு  வைத்து பிடிக்க வேண்டும் என கிராமமக்கள்  வலியுறுத்தியுள்ளனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த திம்பம் 27வது மலைப்பாதையில் சிதறிக்கிடந்த இரும்பு தகடுகளை சேகரிப்பதற்காக தாளவாடியைச் சேர்ந்த முகமது இலியாஸ்(25) என்பவர் புதர்மறைவில் சென்றார். அப்போது, அங்கு பதுங்கியிருந்த சிறுத்தை தாக்கி அவர் கொல்லப்பட்டார். இந்த துயரச் சம்பவம் ஜூன் 11ம் தேதி நடந்துள்ளது.அதன்பிறகு,அந்த சிறுத்தை திம்பம் மலைப்பகுதியில் தென்படுவது அதிகமாகிவிட்டது.

இதையடுத்து, பண்ணாரி சோதனைச்சாவடியில்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள  போலீஸார் மற்றும் வனத்துறையினர், வாகன ஓட்டிகளிடம் மலைப்பாதையில் பயணிக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தினர். இதனால், திம்பம் மலைப்பாதையில் செல்வோர் பாதுகாப்புடன் சென்றனர்.

சில தினங்களாகவே திம்பம் பகுதியில் உலாவும் சிறுத்தையின் அட்டகாசம் அதிகமாகி வருகிறது. தாளவாடிகாவல் ஆய்வாளர் பழனியப்பன் சத்தி நோக்கி சென்று கொண்டிருந்தபோது 27வது  திம்பம் பாதையில் சிறுத்தையை பார்த்து வனத்துறையினக்கு தகவல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து,காய்கறி வாகன ஓட்டுநர்கள் திம்பம் பாதையில் சிறுத்தையின் நடமாட்டத்தை பார்த்து அருகில் இருந்த போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  திம்பம் மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை தென்பட்டுள்ளதால் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை போலீஸார் தடைவிதித்துள்ளனர்.

இதற்கிடையே, திம்பம் பகுதியி்ல் பதுங்கியிருக்கும் சிறுத்தை கண்காணிக்கும் பணியி்ல் வனத்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, 25வது வளைவு பாதையில் உள்ள மரத்தடியில் பாதி உடலுடன் கடமானின் கால்கள் கிடப்பதை பார்த்தனர். அங்கு வந்த வனத்துறையினர் கால்தடம் மற்றும் எச்சத்தை சேகரித்து ஆய்வுசெய்தபோது கடமானை சிறுத்தை
கடித்துக் கொன்றது தெரியவந்துள்ளது. மீதமுள்ள கடமானின் உடலை வனகால்நடை மருத்துவர் ஆய்வு செய்து வருகிறார்.

தாளவாடி வேன்டிரைவர் முகமது இலியாஸை கொல்லப்பட்ட நாள்முதல் சிறுத்தை அதே பகுதியில் உலாவுவது தற்போது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறுத்தையின் அட்டகாசம் தொடருவதால் திம்பம் மலைப்பாதை பயணத்தை சுற்றுலா பயணிகள் தவிர்த்து வருகின்றனர். காளிதிம்பம் கிராமமக்கள் காட்டுக்குள் சென்று வனப்பொருகள்கள் சேகரிப்பு மற்றும் கால்நடை மேய்ச்சல் போன்ற அன்றாட பணிகளை செய்யமுடியாமல் தவிக்கின்றனர்.

அட்டகாசம் செய்யும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கிராமமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 

Monday, June 23, 2014



சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதையில் 4 வது கொண்டை ஊசிவளைவின் பின்னணியில் பச்சைப்பசேலென காட்சியளிக்கும் வனம்
மற்றும் திம்பம் மலைப்பகுதி




பவானிசாகர் அருகே தொப்பம்பாளையம் ஊராட்சி சார்பில் ஊராட்சித் தலைவர் நாகராஜ் தலைமையில் நடைபெற்ற மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியில் தொட்டம்பாளையம் அரசு மேனிலைப்பள்ளி மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
ஈரோடு மாவட்ட ஒக்கலிக கவுடர் மகாஜன சங்க துவக்க விழா மற்றும் நிர்வாகிகள் அறிமுக விழா



சத்தியமங்கலம் ஜேகேபி மஹாலில் நடைபெற்ற ஈரோடு மாவட்ட ஒக்கலிக கவுடர்
மகாஜன சங்க துவக்க விழாவில் மாநில ஒக்கலிக கவுடர் மகாஜன சங்கத்தின் கவுரவ
தலைவர் ஓ.ஆறுமுகசாமி பேசினார். உடன் மாநிலத்தலைவர் வெள்ளிங்கிரி,
மாநிலசெயலாளர் ஜனகரன், இளைஞரணி தலைவர் ஜோதிமணி, மாவட்டத்தலைவர்
குப்புராஜ் உள்ளிட்டோர்.

சத்தியமங்கலம், ஜூன்.24. ஈரோடு மாவட்ட ஒக்கலிக கவுடர் மகாஜன சங்க துவக்க விழா மற்றும் நிர்வாகிகள் அறிமுக விழா சத்தியமங்கலம் ஜேகேபி மஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு கோவை விஜயலட்சுமி அறக்கட்டளை நிறுவனரும் மாநில ஒக்கலிக கவுடர் மகாஜன சங்கத்தின் கவுரவ தலைவருமான ஓ.ஆறுமுகசாமி தலைமை தாங்கினார். மாநிலத்தலைவர் வெள்ளிங்கிரி, மாநில பொதுச்செயலாளர் ஜனகரன், மாநில இளைஞரணித்தலைவர் ஜோதிமணி, மாவட்ட சீரமைப்புக்குழு தலைவர் தங்கவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் ஈரோடு மாவட்ட ஒக்கலிக கவுடர் மகாஜன சங்கத்தின் தலைவராக டி.என்.பாளையம் குப்புராஜ், துணைத்தலைவர்களாக துறையம்பாளையம் ஜெயப்பிரகாஷ், சத்தியமங்கலம் சக்தி, செயலாளராக புஞ்சைபுளியம்பட்டி சண்முகசுந்தரம், துணைச்செயலாளர்களாக நஞ்சப்பகவுண்டன்புதூர் கோவிந்தராஜ், பனையம்பள்ளி பழனிச்சாமி, பொருளாளராக பகுத்தம்பாளையம் தங்கவேலு மற்றும் செயற்குழு உறுப்பினர்களை மாநிலத்தலைவர் வெள்ளிங்கிரி அறிமுகப்படுத்தினார். பின்னர் அனைவரும் பொறுப்பேற்றுக்கொண்டனர். சங்க வளர்ச்சி நிதியாக ரூ. 1 இலட்சத்திற்கான காசோலையை மாவட்ட தலைவர் குப்புராஜ் வழங்கினார். இவ்விழாவில் கோபி தாசப்பகவுடர் அறநிலைய டிரஸ்டி செந்தில்குமார், டாக்டர் மூர்த்தி, வழக்கறிஞர்கள் மாசிலாமணி, கனகராஜ், தொழிலதிபர் தங்கவேல் உள்ளிட்டோர்
கலந்து கொண்டனர். முன்னதாக கோவிந்தராஜ் வரவேற்றார். ராஜமாணிக்கம் நன்றி கூறினார்.
புன்செய் புளியம்பட்டியில் தீ விபத்து - குடிசை நாசம்



புன்செய் புளியம்பட்டி, ஜூன்.24. புஞ்சைபுளியம்பட்டி காந்திநகர் பகுதியை
சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி பொன்னி(42). கணவரை விட்டு தனியாக பிரிந்து காந்திநகர் பகுதியில் உள்ள குடிசைவீட்டில் வசித்து வருகிறார். நேற்று
முன்தினம் மாலை இவர் அருகே உள்ள மகள் வீட்டிற்கு சென்று இரவு அங்கேயே தங்கிக்கொண்டார். இதற்கிடையே நேற்று அதிகாலை 3 மணியளவில் இவரது குடிசை தீப்பிடித்து எரிந்துள்ளது. அருகே உள்ளவர்கள் உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவலை தொவித்துவிட்டு தீயை அணைக்க போராடினர்.

தீயணைப்பு வீரர்களும் பொதுமக்களும் சேர்ந்து தீயை அணைப்பதற்குள் அருகே உள்ள சண்முகம் என்பவரது குடிசையின் ஒருபகுதியும், அருகே
நிறுத்தப்பட்டிருந்த காரின் பக்கவாட்டு கதவும் சேதமடைந்தது. பொன்னி
வீட்டில் இருந்த டிவி, மின்விசிறி, பீரோ, துணிமணிகள்,
சமையல்பாத்திரங்கள், மளிகைசாமான்கள், வங்கி பாஸ் புத்தகம், சமையல்
எரிவாயு புத்தகம் உள்ளிட்ட ரு.25000 மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி
சேதமடைந்தன. தீ விபத்த குறித்து விஏஓ கோபாலகிருஷ்ணன் மற்றுமு
புஞ்சைபுளியம்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.





பவானிசாகர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு


 நீலகிரி மற்றும் சுற்றுபுரங்களில் பெய்த கனமழையை தொடர்ந்து பவானிசாகர் அணையின்  நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 47.6 அடியாக உள்ளது.அணைக்கு 2000 கன அடி வீதம் தண்ணீர் வரத்து இருந்தது.பாசனத்திற்காக 800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப் பட்டிருந்தது என பொதுப்பணி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.கோவிலைச்சுற்றி  தங்கத்தேர் பவனி வந்தது.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தங்கத்தேர் இழுத்தனர்.
தாளவாடியில் கோஸ் சாகுபடி பரப்பளவு குறைந்தது

கிலோ ரூ.10 ஆக உயர்வு 
 


 
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலை கிராமங்களில் கோஸ் சாகுபடி பரப்பளவு குறைந்துவிட்டதால் கடந்த ஆண்டு கிலோ ரூ.4-க்கு விற்கப்பட்ட கோஸூக்கு தற்போது ரூ.10 வரை விலை கிடைத்துள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடியை அடுத்துள்ள எரணஹள்ளி, திகினாரை, ஜீரஹள்ளி, கல்மண்டிபுரம், அருள்வாடி, கெட்டவாடி, தமிழ்புரம், நெய்தாளபுரம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர்  ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் நீலகிரி,சேன்டேஸ்,கணேஸ், போன்ற பல்வேறு ரக கோஸ் சாகுபடி செய்து வந்தனர்.  பெரும்பாலான விவசாயிகள் கோஸ் சாகுபடிக்கு மாறியதால் அதன் உற்பத்தி பன்மடங்காக அதிகரித்தால் ஒரு கிலோ ரூ.2ஆக சரிந்தது. போதிய விலை கிடைக்காததால் கோஸ் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர்.

நடப்பாண்டு பருவமழை பொயத்துவிட்டதால், சாகுபடி செய்யப்பட்ட நிலப்பரப்பில் 20 சதவீதம் மட்டுமே கோஸ் சாகுபடி செய்யப்பட்டது. பாசன வசதியுள்ள சூசைபுரம், திகினாரை, மல்லன்குழி ஆகிய பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கோஸ் பயிட்டுள்ளனர். 

சொட்டுநீர் பாசனம் மூலம் கோஸ் உற்பத்தி செய்யப்படுவதால் குறைந்தளவே தண்ணீர் தேவைப்படுகிறது.  இதன் பருவகாலம் 80 முதல் 90 நாள்கள் ஆகும். ஏக்கர் ஒன்றுக்கு 20 டன் வரை மகசூல் கிடைப்பதால் இங்கு  நீலகிரி ரக கோஸூக்கு முக்கியத்துவம் அளித்துள்ளனர்.  தற்போது கிலோ ரூ.10க்கு விற்கப்படுவதால் ஈரோடு, மேட்டுபாளையம் கோஸ் மண்டி வியாபாரிகள் கிராமத்துக்கு வந்து நேரடி கொள்முதல் செய்கின்றனர். 

தாளவாடி விவசாயி மயில்சாமி கூறியது: கடந்த ஆண்டு கோஸூக்கு சரியான விலை கிடைக்காததால் இந்தாண்டு அதன் சாகுபடி பரப்பளவு குறைந்துவிட்டது. இதன் காரணமாக, கோஸ் வரத்து குறைந்து விட்டதால் தற்போது கிலோ ரூ.10க்கு விற்கப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு ரூ.45 ஆயிரம் வரை உற்பத்தி செலவாகிறது. ஏக்கர் கோஸ் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் கோஸ் உற்பத்தி குறைந்துள்ளதால் கோஸ் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்றார்.
வறட்சி: கடம்பூர் மலைக்கிராமங்களில் பலா சாகுபடி பாதிப்பு

கடம்பூர் மலைகிராம தோட்டத்து மரத்தில் காய்த்துள்ள பலா
 வறட்சி காரணமாக கடம்பூர் மலைப்பகுதியில் பலா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

பலா மரங்கள் வளர்வதற்கேற்ற சீரான தட்பவெப்பநிலை தாளவாடி, கடம்பூர் வனத்தில் மட்டுமே நிலவுவதால் இங்குள்ள விவசாயிகள் தங்களது தோட்டத்த்தில் பலா மரங்களை வளர்த்து வருகின்றனர். பலா மரங்கள் வளர்க்க உற்பத்தி செலவு இல்லாததால் ஆணடுதோறும் பலா விற்பனையால் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது.

அத்தியூர், பவளக்குட்டை,மூலக்கடம்பூர்,சாலட்டி, நடூர் மற்றும் மல்லியம்துர்க்கம் மலைகிராமங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பலா மரங்கள் உள்ளன.இயற்கையான முறையில் பலா மரங்கள் வளர்வதால் இதற்கு சுவை அதிகம்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நல்ல மழை பெய்ததால்  ஒரு மரத்தில் சுமார் 300 பழங்கள் வரை வரத்து வந்துள்ளது. வறட்சியில் குளம், குட்டைகள் மற்றும் பள்ளங்கள் வறண்டு காணப்படுவதால் பலா மரங்களுக்கு போதிய நீர் கிடைக்காமல் அதன் உற்பத்தி பாதித்துள்ளது. தற்போது, பெரும்பாலன மரங்களில் குறைந்தபட்சமாக 20 பழங்களும் அதிகபட்சமாக 60 பலாப்பழங்களும் வரத்து வந்துள்ளன. பலா ஒன்றுக்கு ரூ.75 முதல் ரூ.200 வரை விலை கிடைத்துள்ளது.பலாப்பழங்களை வியாபாரிகள் நேரடியாக வந்து கொள்முதல் செய்கின்றனர்.
பயிர்ச்சேதம் ஏற்படுத்தும் வனவிலங்குகளை சுட்டுக்கொல்ல அனுமதி வழங்கக்கோரி போராட்டம்: டாக்டர் எம்.ஆர்.சிவசாமி



சத்தியமங்கலம், ஜூன் 22:
பயிர்ச்சேதம் ஏற்படுத்தும் வனவிலங்குகளை சுட்டுக்கொல்ல அனுமதி வழங்கக்கோரி போராட்டம் நடத்தப்படும் என தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் டாக்டர் எம்.ஆர்.சிவசாமி சத்தியில்  தெரிவித்தார்.
:
இது குறித்து மேலும் அவர் கூறியது: சத்தி, கோபி வட்டங்களில் உள்ள விவசாயிகள் பவானி ஆற்று நீரை பம்ப் செட் மூலம் எடுத்து குழாய் வழியாக தோட்டங்களுக்கு கொண்டு சென்று ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்து வருகின்றனர். நீர்ப்பாசனப் பகுதியில் ஒரு ஏக்கருக்கு உபயோகிக்கும் நீரைவிட பம்ப் செட் பாசனத்தில் மிகக்குறைவாக தண்ணீர் எடுத்து அதிகமான உற்பத்தி செய்கின்றனர்.

பம்ப்செட் மூலம் தண்ணீர் எடுப்பதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது. கேரளா,கர்நாடக மாநிலங்களில் ஆற்றில் இருந்து பம்ப் செட் மூலம் தண்ணீர் எடுத்து விவசாயம் செய்ய அரசு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளித்துள்ளதை போல தமிழகத்திலும் சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும்.

சத்தி, கோபி வட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் வனவிலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது அதிகரித்து வருகிறது. பயிர்ச்சேதம் ஏற்படுத்தும் விலங்குகளை சுட்டுக்கொல்ல விவசாயிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்.இது போன்ற பிரச்னைகளை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல விவாசயிகள் போராட்டம் நடத்துவதும் என்றும் இதற்கான சத்தி, கோபி, அந்தியூர் வட்ட விவசாயிகள் ஆலோசனைக்கூட்டம் சத்தியில் ஜூன் 27ம் தேதி மீனாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் நடைபெறும் என்றும் தெரிவித்தார்

Friday, June 20, 2014

சத்தி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு இலவச கண்சிகிச்சை முகாம்



 
 
சத்தியமங்கலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இலவச கண்சிகிச்சை முகாமில் துப்புரவு பணியாளர்கள் 87 பேருக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டது.

சத்தியமங்கலம் நகர்ப்புற சுகாதார நிலையம் மற்றும் ஈரோடு அகர்வால் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து வியாழக்கிழமை நடத்திய இலவச கண்சிகிச்சை  முகாமுக்கு நகர்மன்றத் தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம் தலைமை வகித்தார். முகாமில், ஈரோடு அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் துப்புரவு பணியாளர் 87 பேருக்கு கண்பரிசோதனை மேற்கொண்டனர். இதில் 20க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்து ,மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. நகராட்சி ஆணையாளர் கே.சரவணக்குமார், சுகாதார அலுவலர் எம்.சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
 

Tuesday, June 17, 2014

திம்பம் மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை உலா - பீதியில் பயணிகள்

 
 
சத்தியமங்கலம், ஜூன் 17:
திம்பம் மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை தென்பட்டுள்ளதால் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை போலீஸார் தடைவிதித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த திம்பம் 27வது மலைப்பாதையில் சிதறிக்கிடந்த இரும்பு தகடுகளை சேகரிப்பதற்காக தாளவாடியைச் சேர்ந்த முகமது இலியாஸ்(25) என்பவர் புதர்மறைவில் சென்றுபோது அங்கு பதுங்கியிருந்த சிறுத்தையால் கொல்லப்பட்டார். இந்த துயரச் சம்பவம் ஜூன் 11ம் தேதி நடந்துள்ளது. 

இதையடுத்து, பண்ணாரி சோதனைச்சாவடியில்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள  போலீஸார் மற்றும் வனத்துறையினர், வாகன ஓட்டிகளிடம் மலைப்பாதையில் பயணிக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தினர். இதனால், திம்பம் மலைப்பாதையில் செல்வோர் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.

துப்பாக்கி ஏந்திய வனத்துறையினர் திம்பம் அடிவாரத்தில் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.  இதற்கிடையே, தாளவாடியில் இருந்து சத்தி டிஎஸ்பி அலுவலகம் நோக்கி ஜீப்பில் சென்று கொண்டிருந்த தாளவாடி காவல் ஆய்வாளர் பழனியப்பன். திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு திம்பம் வந்துள்ளார்.  ஜீப்பை காவலர் கண்ணன் ஓட்டினார். அப்போது, திம்பம் மலைப்பாதை 27வது வளைவில் ஜீப் திரும்பும்போது மரக்கிளையில்  சிறுத்தை பதுங்கியிருப்பதை பார்த்து இருவரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். மனிதர்களை கொன்று பழகிய சிறுத்தை மீண்டும் அப்பகுதிக்கு வரும் என்பதை தெரிந்து கொண்ட போலீஸார் செய்வதறியாது நின்றனர்.
அப்போது எதிரே தொடர்ந்து வந்துகொண்டிருந்த லாரிகளை பார்த்ததும் சிறுத்தை தாவி குதித்து காட்டுக்குள் சென்றுவிட்டது.

சிறுத்தை நேரில் பார்த்த காவல் ஆய்வாளர் பழனியப்பன், அருகில் உள்ள ஆசனூர் காவல்நிலையம் மற்றும் பண்ணாரி சோதனைச்சாவடிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, பண்ணாரி சோதனையில் வாகனங்களை தடுத்து நிறுத்தி சிறுத்தை நடமாட்டம் குறித்து உஷார் படுத்தினர். திறந்த நிலையில் உள்ள சரக்குவாகனங்களில் எவரும் பயணிக்ககூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
 
பைக்கில் செல்லும் வாகனஓட்டிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பைக்குகளை சோதனைசாவடியில் நிறுத்திவிட்டு  பேருந்து மற்றும் வாகனங்களில் அவர்களை ஏற்றி போலீஸார் அனுப்பி வைத்தனர். பகல்நேரத்தில் மட்டுமே இருசக்கர வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு பலகைகளையும் சோதனைச்சாவடியில் போலீஸார் வைத்துள்ளனர். சிறுத்தை மீண்டும் தென்பட்டதால் காளிதிம்பம், ராமரணை மற்றும் தலமலை மலைவாழ்மக்கள் 10 பேர் கொண்ட குழுவாக நடந்து செல்கின்றனர்.



Monday, June 16, 2014

பவானிசாகர் கீழ்பவானி வாய்க்காலில் கொப்புவாய்க்கால் மதகு கட்டும் பணி தீவிரம்

பவானிசாகர் கீழ்பவானி வாய்க்காலில் ரூ.9.75 இலட்சம் செலவில் புதிய கொப்பு வாய்க்கால் மதகு கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.



சத்தியமங்கலம், ஜூன்.17. பவானிசாகர் கீழ்பவானி வாய்க்காலில் கொப்புவாய்க்கால் மதகு கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கருர் மாவட்டங்களில் மொத்தம் 2 இலட்சத்து 14 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மெயின் வாய்க்காலிலிருந்து கிளை வாய்க்கால்களுக்கு மதகுகள் மூலம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதில் ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை மதகுகள் உள்ளன. கொப்பு வாய்க்காலுக்கு திறக்கப்படும் மதகுகள் கட்டப்பட்டு 60 ஆண்டுகள் ஆகிவிட்டதினால் காரைகள் பெயர்ந்து சிதிலமடைந்த நிலையில் உள்ளன. பழுது ஏற்பட்டுள்ள மதகுகளுக்கு பதிலாக புதியதாக கொப்புவாய்க்கால் கட்டும்பணி கீழ்பவானி வாய்க்காலின் முதல் கொப்பு வாய்க்காலான மேட்டுப்பாளையம் சாலை வாய்க்கால்பாலம் அருகே நடைபெற்று வருகிறது. இக்கிளை வாய்க்காலில் ஆண்டு முழுவதும் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இதில் திறந்து விடப்படும் தண்ணீர் தமிழ்நாடு வேளாண்பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு வேளாண்மை ஆராய்ச்சிநிலைய பண்ணைக்கும், மாநில எண்ணெய்வித்து பண்ணைக்கும், மண்டல ஊரக வளர்ச்சி நிறுவனத்திற்கு சொந்தமான பண்ணைக்கும் என மொத்தம் 500 க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. சிறப்பு பழுது பார்த்தல் திட்டத்தின் கீழ் ரூ.9.75 இலட்சம் செலவில் புதிய கொப்பு வாய்க்கால் மதகு கட்டும் பணி நடைபெறுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடம்பூர் அருகே கடத்தல் கும்பல் தாக்கியதில் வனக்காவலர் உட்பட 4 பேர் காயம்
 
சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகி்ச்சை பெற்று வரும்  வனக்காவலர் ராஜசேகர்(52) மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் திருமுருகன்(25),சாமிநாதன்(48),பசுவராஜ்(42) உள்ளிட்டோர் 


கடம்பூர் மலைப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட வனஊழியர்களை கடத்தல் கும்பல் தாக்கியதில் வனக்காவலர் உட்பட 4 பேர் சத்தி அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பெரிய சாலட்டிப்பகுதியில் செம்புளிஞ்சான் மரக்கள் கடத்தப்படுவதாக ஞாயிற்றுக்கிழமை கிடைத்த  தகவலையடுத்து தூக்கநாயக்கன் பாளையம் வனச்சரக அலுவலர் பொ.திம்மநாயக்கர் மற்றும் வனத்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சின்னசாலட்டி, கடம்பூர் கிழக்குகாப்புக்காட்டு பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த பெருமாள் மகன் சுப்பிரமணியத்தை பிடித்து விசாரித்தபோது செம்புளிஞ்சான் மரக்கட்டைகளை கடத்துவது தெரியவந்தது.அவரிடமிருந்து சாலட்டி காப்புக்காட்டில் பதுக்கி வைத்திருந்த 83 மரக்கட்டளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த கடத்தலில் அதே பகுதியைச் சேர்ந்த அரை.பழனிச்சாமி, நா.பொன்னுச்சாமி மற்றும் கு.சுப்பிரமணியம்  ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது பற்றி விசாரிப்பதற்காக சுப்பிரமணியத்தை வனத்துறையினர் டிஎன் பாளையம் வனச்சரக அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். 

இந்நிலையில், கடம்பூர் வனப்பகுதியில் மரங்கள் கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு மேலும் ஒரு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடம்பூர் வனக்காவலர் ராஜசேகர்(52), வேட்டைத் தடுப்பு காவலர்கள் திருமுருகன்(25),சாமிநாதன்(48) மற்றும் பசுவராஜ்(42) ஆகியோர்  ஞாயிற்றுக்கிழமை இரவு சின்னசாலட்டி வனச்சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த வேனை வனத்துறையினர் சோதனையிட்டதில் கடத்தல் பொருள்கள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்தனர். அதன்பிறகு, அந்த வேனை வனப்பகுதிக்கு செல்ல அனுமதி அளித்தனர். 

சிறிது நேரத்துக்குபிறகு அந்த வேனில் வந்த கடத்தல் கும்பல், வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்த வனக்காவலர் ராஜசேகர்(52), வேட்டைத் தடுப்பு காவலர்கள் திருமுருகன்(25),சாமிநாதன்(48) மற்றும் பசுவராஜ்(42) ஆகியோரை வேனில் கடத்திச்சென்று பெரியசாலட்டிக்கு மாரியம்மன் கோவில் வளாகத்தில் வைத்து பூட்டினர். அங்கு 20க்கும் மேற்பட்டோர் வனஊழியர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சாமிநாதன் என்பவரின் கண்ணில் காயம் ஏற்பட்டது. இது பற்றி தகவலறிந்த கம்யூ.பிரமுகர் துரை மற்றும் கிராமவாசிகள் வனஊழியர்களை மீட்டு கடம்பூர் வனஅலுவலகத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபுரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக, வனக்காவலர் திருமுருகன்(25)கடம்பூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வேன் ஓட்டுநர் மு.தங்கவேலு, முத்து, சுப்பிரமணியம் மனைவி ஈஸ்வரி(24), கூச்சப்பன் மகன் துரைசாமி(23)  செய்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவான கடத்தல் கும்பலை பிடிக்க, போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். 

கடத்தல் கும்பலால் தாக்கப்பட்டு சத்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வனஊழியர்களை மாவட்ட வனஅலுவலர் கே.ராஜ்குமார் பார்த்து ஆறுதல் கூறினார்.  

அரசு பஸ் & டேங்கர் லாரி மோதி 17 பேர் படுகாயம்


புஞ்சைபுளியம்பட்டி  அருகே சத்தி & கோவை சாலையில் புங்கம்பள்ளி
தனியார்மில் அருகே அரசுபஸ் & டேங்கர்லாரி மோதியதில் 17 பேர்
படுகாயமடைந்தனர். நொறுங்கி கிடக்கும் லாரி



சத்தியமங்கலம், ஜூன் 15. கோவையில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி
நேற்றிரவு 1 மணி அளவில் சத்தியமங்கலம் அரசு போக்குவரத்துக் கழக கிளையை
சேர்ந்த பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. பஸ்சை, கோபியை சேர்ந்த ஈஸ்வரன்
(35) ஓட்டி வந்தார். செண்பகபுதூர் பழனிசாமி (48) கண்டக்டராக இருந்தார்.
பஸ், புளியம்பட்டி அருகே புங்கம்பள்ளி நவீன் காட்டன்மில் அருகேயுள்ள
வளைவில் வந்துகொண்டிருந்தபோது மைசூரில் பர்னஸ் ஆயில் லோடு இறக்கிவிட்டு
கேரளாவிற்கு செல்வதற்காக இருந்து கோவை நோக்கி சென்ற  காலி டேங்கர் லாரி
கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ் மீது மோதியது. லாரியை திருப்பத்தூரை
சேர்ந்த வேலு(42) ஓட்டினார். கிருஷ்ணகிரியை சேர்ந்த கிளீனர் சதீஷ்(27)
உடனிருந்தார். இதில், பஸ் மற்றும் லாரியின் டிரைவர்கள், பஸ் கண்டக்டர்,
பஸ்சில் பயணம் செய்த புங்கம்பள்ளி ராமச்சந்திரன் (46), சந்திரமோகன் (35),
விண்ணப்பள்ளி தங்கராஜ் (32), மகேந்திரன் (39), சிக்கரசம்பாளையம்
வெள்ளிங்கிரி (40), பூதிகுப்பம் வெங்கடேசன் (25), இருகூர் அருண்குமார்
(38), இண்டியம்பாளையம் வெங்கடாசலம் (33), சத்தியமங்கலம் ஏசுதாஸ்
சந்திரகுமார் (64), பாலசுப்பிரமணியம் (45), ஆலத்துக்கோம்பை சிவராஜ் (35),
செண்பகபுதூர் சத்தியமூர்த்தி (30), பெரியூர் ரங்கசாமி (39),
கிளிமங்கலத்தை சேர்ந்த பாலமுருகன் (21), முருகன் (27) உள்பட 17 பேர்
படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் சத்தியமங்கலம் அரசு
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு
மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து
புளியம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Saturday, June 14, 2014

திம்பம் மலைப்பாதையில் செல்வோருக்கு எச்சரிக்கை. வனத்துறை மற்றும் காவல்துறை அதிரடி நடவடிக்கை




சத்தியமங்கலம், ஜூன்.14. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 வது கொண்டை ஊசிவளைவு அருகே மலைச்சரிவில் இருதினங்களுக்கு முன்பு இரும்பு தகடுகளை பொறுக்குவதற்காக இறங்கிய தாளவாடியை சேர்ந்த வேன்டிரைவர் முகமது இலியாஸ்(25) சிறுத்தைகளால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதையடுத்து பண்ணாரி சோதனைச்சாவடியில் உள்ள காவல்துறை மற்றும் வனத்துறையினர் மலைப்பாதையில் பயணிப்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, செந்நாய், கரடி, மான், காட்டுப்பன்றி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறுவகை விலங்கினங்கள் அதிக அளவில் உள்ளன. இதில் பவானிசாகர், சத்தியமங்கலம், ஆசனூர், தாளவாடி, கேர்மாளம், தலமலை வனச்சரகங்களில் உள்ள வனப்பகுதிகள் வழியாக செல்லும் முக்கிய சாலைகளை வனவிலங்குகள் பகல்நேரங்களில் சர்வசாதாரணமாக சாலையை கடப்பது வழக்கம். இதிலும் குறிப்பாக சத்தியமங்கலம் & மைசூர் சாலையில் பண்ணாரி மற்றும் ஆசனூர் வனப்பகுதிகளில் யானை மற்றும் சிறுத்தைகள் அடிக்கடி சாலையை கடப்பதை வாகன ஓட்டிகள் பார்த்துள்ளனர். ஆனால் ஒருமுறை கூட வனவிலங்குகள் சாலைக்கு வந்து மனிதர்களை தாக்கியதில்லை. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு புதுக்குய்யனூர், பட்டரமங்கலம், புதுபீர்கடவு கிராமங்களில் வனப்பகுதியை ஒட்டி உள்ள தோட்டங்களில் புகுந்து ஆடுகள் மற்றும் பசுமாட்டுக்கன்றுகளை சிறுத்தைகள் தாக்கி கடித்துக்குதறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மலைப்பாதையில் சிறுத்தை தாக்கி முகமது இலியாஸ் இறந்ததற்கு காரணம் அவர் மலைச்சரிவில் இறங்கியதால்தான் என வனத்துறையினர் கூறுகின்றனர். இதற்கிடையே தற்போது பண்ணாரி சோதனைச்சாவடியில் வாகனங்கள் வாகனங்கள் மலைப்பாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற வாசகம் எழுதிய பேனர் சாலையில் செல்வோர் பார்வை படும்படி வைக்கப்பட்டுள்ளது. பைக், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில்  செல்வோரை சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தி மலைப்பாதையில் சிறுநீர் கழிப்பதற்காகவோ, குரங்குகளுக்கு தின்பண்டங்களை கொடுப்பதற்காகவோ வாகனங்களை நிறுத்தி கீழே இறங்கக்கூடாது என அறிவுறுத்துகின்றனர். மேலும் வனவிலங்குகள் அடிக்கடி சாலையை கடப்பதால் வாகனத்தை குறைந்தபட்ச வேகத்தில் இயக்குமாறும், அவ்வாறு வனவிலங்குகள் சாலையை கடந்தால் அமைதியாக நின்றுகொள்ள வேண்டுமெனவும், செல்போன் மற்றும் கேமராக்களில் புகைப்படம் எடுக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குனர் ராஜ்குமார்
கூறியதாவது. மலைப்பாதையில் செல்வோர் வனப்பகுதிக்குள் செல்ல அனுமதி இல்லை. வேன் டிரைவர் முகமது இலியாஸ் வனப்பகுதியில் நுழைந்ததால்தான் சிறுத்தை தாக்கி கொன்றுள்ளது. மலைப்பாதையை ஒட்டி உள்ள  வனப்பகுதிகளில் நடமாடும் சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவைகள் அங்கேயே நிரந்தரமாக தங்குவதில்லை. வனப்பகுதியில் இடம் மாறி சென்று கொண்டே
இருக்கும் என்று கூறினார்.
தலமலை அருகே ராமர்பாதம் கோயில் கும்பாபிஷேகம்




 

 
சத்தியமங்கலம், ஜூன்.14. தாளவாடி அருகே உள்ள தலமலை தொட்டபுரம்
கிராமத்தில் ராமர்பாதம் சீதா லட்சுமண அனுமன் சமேத ஸ்ரீராமர் கோயில்
வனப்பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலின் பின்புறமுள்ள பாறையில் ராமர் பாதமும், ராமர் மண்டியிட்டு அமர்ந்து அம்பு எய்தபோது பாறையில் முழங்கால் அழுந்திய குழியும் உள்ளது. கடந்த ஓராண்டு காலமாக இக்கோயில் புனரமைப்பு பணி நடைபெற்றது. புதியதாக ஆஞ்சநேயர் பீடம் அமைக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாக சாலைகளில்
அக்னிகுண்டத்தில் வேதவிற்பன்னர்கள் சிறப்பு பூஜைகள் செய்து விமான
கலசத்திற்கு புனித நீர் ஊற்றினர். பின்னர் ஸ்ரீராமர், சீதை, அனுமனுக்கு
சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இவ்விழாவில் தொட்டபுரம், தலமலை,
கோடிபுரம், நெய்தாளபுரம், காந்திநகர், சிக்கஹள்ளி உள்ளிட்ட கிராமங்களை
சேர்ந்த 1000 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கஞ்சா விற்பனை செய்ய முயன்றவர் கைது



சத்தியமங்கலம், ஜூன்.14. பவானிசாகர் அருகே உள்ள நால்ரோடு அண்ணாநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக பவானிசாகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் தேடுதல் வேட்டை மேற்கொண்டபோது அருகே உள்ள முட்புதர்காட்டில் கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த குமார்(30) என்பவரை கையும் களவுமாக பிடித்தனர். 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. குமார் மீது வழக்கு பதிந்து கைது செய்து சிறையிலடைத்தனர்.

Friday, June 13, 2014

பண்ணாரி சோதனை சாவடி ரூபாய் 24 லட்சத்தில் நவீன மயமாக்க படுகிறது


சத்தியமங்கலம், ஜூன்.14.

சத்தியமங்கலம் அருகே உள்ளது பண்ணாரி சோதனை சாவடியை ரூபாய் 24 லட்சம் செலவில் நவீன மயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக கர்நாடக மாநில எல்லையின் முக்கிய சோதனை சாவடியாக பண்ணாரி சோதனை சாவடி செயல்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களும், தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும்  வாகனங்களும் இந்த சோதனை சாவடியில் சோதனை நடத்திய பிறகு மலைபகுதிகுள் அனுமதிக்க படுகின்றன.

வனபகுதிக்குள் அமைந்துள்ள இந்த சோதனை சாவடியில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. ஒவ்வொரு வாகனத்தின் பதிவு எண், ஓட்டுனர் பெயர், வாகனம் எங்கு செல்கின்றது என்பது போன்ற விபரங்களை பதிவேட்டில் பதிவு செய்தபின் வாகனங்கள் அனுப்ப படுகின்றன. இதே போல் ஒவ்வொரு வாகனத்துக்கும் இந்த முறை கடைபிடிக்க படுவதால் காலவிரயம் ஏற்பட்டு நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்பது வாடிக்கையாகி விட்டது.

இதனை அடுத்து பண்ணாரி சோதனை சாவடியை நவீனமயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ரூபாய் 24 லட்சம் செலவில் சோதனை சாவடி நவீனமயமாக்க படுகிறது. அனைத்து விபரங்களும் கணினியில் பதிவாகும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள பட உள்ளது. சோதனை சாவடியின் முகப்பில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு வாகனத்தின் எண், ஓட்டுனரின் போட்டோ உள்ளிட்ட விபரங்கள் அனைத்தும் தானாகவே பதிவாகும் வகையில் வடிவமைக்க படுகிறது. சுங்க சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் போல அனைத்து நடவடிக்கைகளும் கணினி மூலம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட உள்ளதாகவும், சோதனை சாவடி நவீன படுத்தும் பணி 6 மாதங்களில் முடிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 தொடர் மழையால் சத்தி வனப்பகுதி பசுமையானது

 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையான இப்பகுதி மிகவும் அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதாலும் மேலும் பல வகை மான்கள் பெருவாரியாக வசிப்பதாலும் இங்கு தற்போது புலிகள் மற்றும் சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வனப்பகுதி மக்களும் சுற்றுலா பயணிகளும் பகல் நேரத்திலும் பல பகுதிகளில் புலிகள் மற்றும் சிறுத்தைகள் நடமாட்டத்தை நேரில் பார்த்து உள்ளனர்.

கடந்த மாதம் வெயிலின் கோர பிடியில் சிக்கிய சத்தியமங்கலம் வனப்பகுதி முழுவதும் காய்ந்து போய் கிடந்தது. வனப்பகுதியில் உள்ள நீரோடைகளும் வறண்டு போய் கிடந்தன.

சுட்டெரித்த வெயிலுக்கிடையே தொடர்ந்து சில நாட்களாக கோடை மழை கொட்டியது. இந்த தொடர் மழையால் வனப்பகுதி மீண்டும் பசுமையானது.
கருகி காய்ந்து போய் கிடந்த வனப்பகுதி தற்போது பச்சை போர்வைகளை போர்த்தி இருப்பது போல் பசுமையாக இருப்பதை கண்டு வன ஆர்வலர்களும், இயற்கை ஆர்வலர்களும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

மேலும் வனப்பகுதியில் உள்ள குட்டைகளிலும் தண்ணீர் சேர்ந்துள்ளது. வன ஓடைகளிலும் ஓரளவு தண்ணீர் சல..சல..வென ஒடிக்கொண்டிருக்கிறது. இதனால் தற்போதைக்கு வன விலங்குகளின் தண்ணீர் பஞ்சமும் தீர்ந்துள்ளது.
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி





புன்செய் புளியம்பட்டி நேரு நகர் நடுநிலைப்பள்ளி சார்பில் மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாலசுப்ரமணியன், நல்லூர் ஊராட்சி கவுன்சிலர் சொக்கலிங்கம், தலைமை ஆசிரியர் ஜான் பாஸ்கோ, ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
சிறுத்தைக்கூட்டம் தாக்கி வாலிபர் பலி. சத்தி அருகே பயங்கரம்



சத்தியமங்கலம், ஜூன்.13. சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில்
வாலிபரை சிறுத்தை அடித்துக் கொன்றுள்ளது இப்பகுதியில் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து திம்பம்
மலைப்பாதை வழியாக கர்நாடக மாநிலம் மைசூர், பெங்களுரு மற்றும்
வடமாநிலங்களுக்கு 24 மணி நேரமும் இடைவிடாது போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த மலைப்பாதை 27 அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட இப்பகுதியில் கடந்த சில
நாட்களாக இந்த பாதை வழியாக சிறுத்தை மற்றும் புலிகள் கடந்து சென்றதை வாகன ஓட்டிகளும் அந்த வழியாக ரோந்து சென்ற வன ஊழியர்களும் பார்த்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தாளவாடி பகுதியை சேர்ந்த சிவா (எ) முகமது இலியாஸ் (5) டிரைவர் ரூபவ் இவரது நண்பர் மூர்த்தி (24) இருவரும் தாளவாடியிலிருந்து திருப்பூருக்கு வேனில் காய்கறிகள் ஏற்றிக் கொண்டு வந்தனர். இரவு 7.30 மணியளவில் திம்பம் மலைப்பாதை 27 வது வளைவு பாதை அருகே வந்த நின்றனர். அப்போது கடந்த 4 தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானிலிருந்து இரும்புதகடு லோடு ஏற்றிய லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டபோது மலைச்சரிவில் இரும்புதகடுகள் கொட்டி கிடப்பதாக வந்த தகவலை அறிந்த இரும்பு தகடுகளை பொறுக்குவதற்காக முகமது இலியாஸ் மலைச்சரிவில் கீழே இறங்கினார்.

அப்போது புதரில் 3 சிறுத்தைகள் இருந்ததை இவர் கவனிக்கவில்லை. இலியாஸை கண்ட சிறுத்தைகள் பாய்ந்து வந்த கடித்துக்குதறியபோது அய்யோ அம்மா என்ற அலறல் சத்தம் கேட்டது. டிரைவர் ருபவ், நண்பர் முர்த்தி ஆகியோர் டார்ச் அடித்து பாத்தபோது சிறுத்தைகள் இலியாஸை குதறியதைக்கண்டு அஞ்சி நடுங்கியபடி வேனில் ஏறி தப்பினர். உயிர்தப்பிய மூர்த்தி உடனடியாக இதுகுறித்து  மற்றும் வனத்துறையினருக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு போலீசார் மற்றும் வனத் துறையினலும் விரைந்தனர். வனப்பகுதி உள்ளே கிடந்த முகமது இலியாஸ் உடலை கண்டனர். அவரது உடலின் பாதி பகுதியை சிறுத்தைகள் கடித்து தின்றிருந்தது. இந்த சம்பவம் குறித்து  ஆசனூர் போலீசாரும், சத்தியமங்கலம் வனத்துறையினரும் விசாரணை செய்து வருகின்றனர். முகமது இலியாசின் உடல் பிரேதப்பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் சிறுத்தை மனிதரை அடித்துக் கொன்றுள்ளது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. மலைப்பாதையில் இரவு நேரத்தில் பைக்கில் பயணம் செய்வதை தவிர்க்குமாறு சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் வேண்டுகொள் விடுத்துள்ளார்.

Thursday, June 12, 2014

சின்னக்கள்ளிப்பட்டி ஸ்ரீ நாச்சியார் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்;பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம். 



சின்னக்கள்ளிப்பட்டி, ஸ்ரீ நாச்சியார் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

புன்செய் புளியம்பட்டி அருகே உள்ள ,சின்னக்கள்ளிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது விஸ்வகர்ம மக்களின் குல தெய்வமாக விளங்குகின்ற  ஸ்ரீ நாச்சியார் அம்மன் கோவில்.இங்கு,சித்தி புத்தி விநாயகர், அய்யனார்,கன்னிமார் தெய்வங்களுக்கு கோவில் அமைக்கப்பட்டுள்ளன.
 
கடந்த 3 1/2 வருடங்களாக கோவில் திருப்பணிகள் நடந்தது. ராஜகோபுரம் உள்பட அனைத்து கோபுரங்களும் புதிய வண்ணங்கள் தீட்டப்பட்டன. பல்வேறு புதிய பணிகள் செய்யப்பட்டு கோவில், கும்பாபிஷேகத்துக்கு தயாரானது. 


விழாவை முன்னிட்டு, கடந்த 10–ம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன்  பூஜைகள் தொடங்கின.தொடர்ந்து,18 புண்ணிய ஸ்தலங்களிருந்து புனித நீர்,திருமஞ்சனம் கொண்டு வருதலும்,முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது.பின்னர்,முதற்கால யாகபூஜை, தொடர்ந்து,பரிகார தெய்வங்களுக்கு யந்திர ஸ்தாபனம்,அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும் நடந்தது.

11 ஆம் தேதி,தேவார இசையுடன் இரண்டாம் கால யாக பூஜையுடன்,விசேஷ திரவிய ஹோமம்,மூன்றாம் கால யாக பூஜை மற்றும் மூலஸ்தான தாயாருக்கு  யந்திர ஸ்தாபனம்,அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. 
  
12 ஆம் தேதி அதிகாலை, நான்காம் கால யாக பூஜை மற்றும்,நாடி சந்தனம்  நிகழ்ச்சி நடைபெற்றது.அதன்பின்னர்  திருக்குடங்கள் புறப்பாடு  நடந்தது. 

காலை 7 மணிக்கு யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பட்டன. முத்துக்குடைகள் பிடிக்கப்பட்டு மேள–தாளங்கள் முழங்க ராஜகோபுரம் உள்பட அனைத்து கோபுரங்களுக்கும் கலசங்கள் சென்று சேர்ந்தன. அதைப்பார்த்து பக்தர்கள் பக்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.   
ராஜகோபுரம், விமானங்கள்,சித்தி புத்தி விநாயகர்,அய்யனார்,கன்னிமார்கோவில் கோபுர கலசங்களுக்கும் வரதராஜ குருக்கள் தலைமையில் அர்ச்சகர்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். அப்போது, கூடியிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர்.

புனித நீர் அனைத்து பக்தர்களின் தலையிலும் விழுமாறு தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, ஸ்ரீ நாச்சியார் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை காட்டப்பட்டது. 

விழாவையொட்டி கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சுமார் 10 ஆயிரம் பேர் நேற்று அன்னதானத்தில் கலந்து கொண்டனர். விழாவில்,மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ .ஓ.கே.சின்ராஜ்,கனரா வங்கி பொதுமேலாளர் சுரேஷ்குமார்,கனரா வங்கி உயரதிகாரிகள்,மற்றும் சினக்கள்ளிபட்டி கிராம பொதுமக்கள்,முக்கிய பிரமுகர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில், கோவை மாவட்டம் மட்டுமல்லாமல் ஈரோடு,திருப்பூர், சேலம், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து,விஸ்வகர்ம குல மக்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

விழாவிற்கு,மேட்டுப்பாளையம் தீயணைப்புத்துறை அதிகாரி பழனிச்சாமி தலைமையில், தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை, ஸ்ரீ நாச்சியார் அறக்கட்டளை அறங்காவலர்கள்,யோக துரைசாமி,ஒ.பி.சண்முகம்,பி.ஏ.சண்முகம். ஆர்.சுந்தரமூர்த்தி, மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.