தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, March 20, 2014

சத்தியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்;தேர்தல் அலுவலகம் திறப்பு விழா 

 
சத்தியில் வியாழக்கிழமை நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசுகிறார் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம்.

அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசுகிறார் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்
 
சத்தியமங்கலம், மார்ச் 20:
சத்தியங்கலத்தில் நீலகிரி மக்களவைத் தொகுதி அதிமுக தேர்தல் அலுவலகத் திறப்பு விழா மற்றும் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. 

நீலகிரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சத்தியமங்கலத்தில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா  மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. தேர்தல் அலுவலகத்தை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், வனத்துறை அமைச்சர் எம்எஸ்எம் ஆனந்தன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாசலம்,மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர். அதைத் தொடர்ந்து, அவர்கள் நீலகிரி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணனை ஆதரித்து மைசூர் டிரங் ரோடு, புதிய பஸ்நிலையம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தனர்.

பின்னர், கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் வேட்பாளர் சி.கோபால்கிருஷ்ணனை அறிமுகப்படுத்தி அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாசலம் பேசியது:
பவானிசாகர் தொகுதி அதிமுகவின் கோட்டையாக உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் முதல்வர் நிறைவேற்றியுள்ளார். பவானிசாகர் சட்டப்பேரவை தொகுதியில் மட்டுமே 25 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித் தொகையும்  20 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. பசுமை வீடுகள், விலையில்லா மிக்ஸி, மின்விசிறி,கிரைண்டர், மடிக்கணினி போன்ற அதிமுக அரசின் சாதனைகளாகும். முதல்வரின் சாதனைகளைச் எடுத்துக்கூறி மக்களிடம்  வாக்குச்சேகரிக்க வேண்டும் என்றார்

0 comments:

Post a Comment