தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, March 31, 2014

சத்தியமங்கலம் வந்த நடிகர் சரவணன் உடன் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.ஆறுமுகம் சந்திப்பு










Sunday, March 30, 2014

அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகர் சரவணன் பிரச்சாரம்

 
சத்தி, மார்ச்.31.

நீலகிரி மக்களவை தொகுதி  அதிமுக வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணனை ஆதரித்து சத்தியை அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் நடிகர் சரவணன் பிரச்சாரம் மேற்கொண்டார். சரவணன் பேசியதாவது. திமுக ஆட்சிக்காலத்தில் மின்வெட்டு பிரச்சினை ஏற்பட்டது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் மது அருந்திவிட்டு பிரச்சாரம் செய்கிறார். முதல்வர் ஜெயலலிதா பிரதமரானால் தமி£கத்தின் தேவையான திட்டங்களை நாமே நிறைவேற்றிக் கொள்ளலாம். அதிமுக கட்சி வேட்பாளர்கள் தலைமைக்கு கட்டுப்பட்டவர்கள்.

தலைமை என்ன சொல்கிறதோ அதன்படி மக்களுக்கு உடனடியாக செயல்படுவார்கள். இத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் உரிமையுடன் மத்திய அரசிடம் மின்தேவைகளை கேட்டுப் பெறமுடியும். அதிமுக வாக்களித்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என்றார். இப்பிரச்சாரத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம், சத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் சி.என்.மாரப்பன், பவானிசாகர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வி.ஏ.பழனிச்சாமி, பவானிசாகர் ஒன்றிய ஜெ.பேரவை செயலாளர் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Saturday, March 29, 2014

வோட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் - கமல்ஹாசன் வேண்டுகோள் வீடியோ 








அரசியல் வேண்டாம் நடிப்பே போதும்: ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின்

 
நடிகர் உதயநிதி ஸ்டாலின்
 சத்தியமங்கலம்,மார்ச் 29:
அரசியலில் வேண்டாம் என்றும் நடிகனாக இருக்க விரும்புவதாக தயாரிப்பாளரும் நடிருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.


மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக பொருளாளர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார்.இதன் ஒருபகுதியாக, நீலகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து சத்தியமங்கலத்தில் ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது, அவருடன் மனைவி துர்கா, மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் உடன் வந்தனர். முன்னதாக ஸ்டாலின் சத்தியமங்கலம் முன்னாள் எம்எல்ஏ எல்.பி.தர்மலிங்கம் வீட்டிற்கு வந்த போது எல்.பி.தர்மலிங்கம் குடும்பத்தினர் அவரை வரவேற்றனர். 

 
ஸ்டாலினை வரவேற்கிறார் சத்தி முன்னாள் எம்எல்ஏ எல்.பி.தர்மலிங்கம்.
 
 
உதயநிதி ஸ்டாலினை வரவேற்கிறார் நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக தேர்தல் பொறுப்பாளர் அருண்குமார்
 
அப்போது, உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியது: வேட்பாளர்களை ஆதரித்து அப்பா தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும்போது நானும் உடல் செல்வது வழக்கம். நான்  11 வயது சிறுவனாக இருந்த காலம் முதல் அவருடன் பிரசாரத்திற்கு சென்றுள்ளேன்.ஆனால் எனக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை.

தற்போது, நண்பேன்டா என்ற படத்தில் சந்தானத்துடன் நடித்து வருகிறேன். திரைப்பட நடிகனாக உயர்ந்து வரும் இந்த வேளையில் எனக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். என்னுடையை ரசிகர்களிடம் அரசியலுக்கு பயன்படுத்துவதில்லை. எனக்கு அரசியல் வேண்டாம்.  நல்ல நடிகனாக வர வேண்டும் என விரும்புகிறேன்.

சண்டை படத்தில் நடிப்பது எனக்கு பொருந்தமாக இருக்காது. காமெடி கதாநாயகனாகவே நடிக்க விரும்புகிறேன். எனக்கும் சந்தானத்திற்கும் நல்ல காம்பினேசன் உள்ளது. இதை பிரிக்க வேண்டாம். மூன்றாவது படமும் என்னுடைய தயாரிப்பில் உருவாகி வருகிறது. 10 நாள்கள் சூட்டிங் இல்லை என்பதால் அப்பாவுக்கு உறுதுணையாக வெள்ளிக்கிழமை முதல் உடன் வந்துள்ளேன். ஞாயிற்றுக்கிழமை சென்னை திரும்புகிறேன். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்தபோது ஏற்பட்ட சிறு குறைகளை கதிர்வேலன் காதல் படித்தில் அதை நிறைவு செய்தேன். கதிர்வேலன் காதல் படத்தில் நல்ல நடித்துள்ளதாக என்னை பாராட்டினார்கள். அடுத்த படத்தில் நடிப்பில் மேலும் கவனம் செலுத்துவேன்.

இந்தியாவை வழிநடத்தும் வல்லமை உள்ள தலைவி ஜெயலலிதா

மேட்டுப்பாளையம் தேர்தல் பிரசாரத்தில் நாஞ்சில் சம்பத் பேச்சு.

 

 

மேட்டுப்பாளையம்.மார்ச்.30.நீலகிரி பாராளுமன்ற தொகுதி அண்ணா தி.மு.க.வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணனை ஆதரித்து,அண்ணா தி.மு.க.கொள்கைபரப்பு துணைசெயலாளர் நாஞ்சில் சம்பத் ,மேட்டுப்பாளையம் நகரில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.நிகழ்ச்சிக்கு நீலகிரி தொகுதி தேர்தல் பொறுப்பாளர் அமைப்பு செயலாளர் ஏ.,கே.செல்வராஜ் தலைமை தாங்கினார்.ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ,மேட்டுப்பாளையம் தொகுதி செயலாளர் எம்.எஸ்.ராஜகுமார்,  காரமடை ஒன்றிய செயலாளர் பி.டி.கந்தசாமி,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேட்டுப்பாளையம் நகர செயலாளர் ஏ.வான்மதி சேட்,வரவேற்று பேசினார்.கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசியதாவது; அண்ணா தி.மு.க.வின் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் முதல்வர் ஜெயலலிதா.ஆனால்.தி.மு.க.வின் பிரதமர் யார் என்று சொல்லமுடியுமா.?காங்கிரஸ் பிடியில் இருந்து இந்தியாவை மீட்கவேண்டியது நமது அனைவரின் கடமை.இந்தியாவில் ஒரு வரலாற்று மாற்றம் வரப்போகிறது.இந்தியாவை ஆளும் வல்லமை உள்ள ஒரே தலைவி ஜெயலலிதா. இந்தியாவின் பிரதமர் மகுடம் தமிழகதிற்கு கிடைக்க அண்ணா தி.மு.க.வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யவேண்டும்.40 தொகுதிகளிலும் அமோக வெற்றிபெற்று முதல்வர் அம்மாவை பிரதமர் ஆக்கவேண்டும்.
கடந்த தி.மு.க.ஆட்சியில்புதிய  மின்திட்டங்களுக்கு எந்த முயற்சிகளும் எடுக்காததால்,தற்போது மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.தி.மு.க.ஆட்சியில் மின்வாரியம் ரூ.56 ஆயிரம் கோடி கடனில் இருந்தது.அதனை அடைத்து தற்போது மின்விநியோகம் சீராக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துவருகிறார்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என மு.க.ஸ்டாலின் நேற்று இங்கு பிரச்சாரம் செய்துள்ளார்.வடமாநிலங்களில், தெலுங்கானா, பிரச்சனை  உள்ளது போல் தமிழ்நாட்டில் கலவரம் நடக்கிறதா?.சட்டம் ஒழுங்கு நன்றாக உள்ளது. மக்கள் அமைதியாக உள்ளனர்.இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இந்தியா  அமைதியாக திகழ அண்ணா தி.மு.க.வின் முதல்வர் ஜெயலலிதா பாரத பிரதமராக அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற  செய்யவேண்டும்.இவ்வாறு நாஞ்சில் சம்பத் பேசினார்.பின்னர் காரமடை,சிறுமுகை,உட்பட பகுதிகளில் நீலகிரி தொகுதி அண்ணா தி.மு.க.வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணனை ஆதரித்து  பிரச்சாரம் செய்தார்.


தொட்டம்பாளையம் கிராமத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்  பிரசாரம்





தொட்டம்பாளையம் : நீலகிரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொட்டம்பாளையம் கிராமத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:

இந்த கிராமத்துக்கு நான் முதன்முறையாக பிரசாரத்துக்கு வந்துள்ளேன்.
தேர்தலில் ராசா வெற்றி பெற்று வெற்றி விழாவிற்கு நான் மீண்டும் இங்கு
வருவேன். திமுக ஆட்சியில் தமிழக காவல்துறை உலக புகழ்பெற்ற ஸ்காட்லாண்ட் யார்டு போலீசுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் இருந்தது. தற்போதைய அதிமுக ஆட்சியில் காவல்துறையினருக்கு முதல்வருக்கு பாதுகாப்பு அளிக்கவே நேரம் சரியாக உள்ளது. இதனால் கொலை, கொள்ளை, பாலியியல் பலாத்காரம் அதிகரித்து தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
 அதிமுக அமைச்சர்கள் முதல்வர் ஹெலிகாப்டரில் வரும் போது ஹெலிகாப்டரை பார்த்து கும்பிடுகின்றனர். கீழே இறங்கி நடந்தால் நெடுஞ்சாண் கிடையாக படுத்து மரியாதை செலுத்துகின்றனர். பிறருக்கு வணக்கம் செலுத்துவதே தமிழர் பண்பாடு. இப்படி படுத்துக் கொண்டு வணக்கம் செய்வது கேவலமான செயல்பாடாகும்.
கடந்த திமுக ஆட்சியில் 2 மணி நேரம் மின்வெட்டு இருந்தது. அதற்கு மக்கள் அளித்த தண்டனை ஆட்சி மாற்றம். தற்போது 10 மணி நேரம் மின்வெட்டு உள்ளது.  இதனால் பல தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டு தொழிலாளர்கள் குடும்பத்துடன் நடுத்தெருவிற்கு வந்து விட்டனர்.
இக்கிராமத்தில் நெசவாளர்கள் அதிகம் உள்ளனர் என கேள்விப்பட்டேன். திமுக ஆட்சியில் நெசவாளர்களுக்கு விதிக்கப்பட்ட சென்வாட் வரியை மத்தியஅரசுடன் பேசி திமுக நீக்கியது. நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் தந்தது திமுக ஆட்சி. இலவச வேட்டி சேலை திட்டத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு பாவு நூல் கொடுத்து அதன் மூலம் நெசவாளர்கள் திமுக ஆட்சியில் பயனடைந்தனர். ஆனால் தற்போது இலவச வேட்டி சேலைகள் ஆந்திராவில் ஆர்டர் கொடுத்து
தயாரிக்கப்பட்டு வருகிறது.
இக்கிராமத்தில் நெடுஞ்சாலைத்துறை மூலம் 4.5 கோடி ரூபாயில் பவானி ஆற்றுப் பாலம் கட்டியது திமுக ஆட்சியில் தான். ஏழரை கோடி ரூபாயில் பவானி சாகர் அணை புதுப்பிக்கப்பட்டது. தார்ச்சாலை, 5 கோடியில் மேம்படுத்தப்பட்டது.
புன்செய்புளியம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.1 கோடியில்
புதியகட்டிடம் கட்டப்பட்டது. தற்போது அதிமுக ஆட்சியில் குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. மலைப்பகுதியில் சாலை வசதி சரியாக செய்யப்படவில்லை.
எனவே உதயசூரியனுக்கு வாக்களித்து மீண்டும் ராசாவை வெற்றி
பெறச்செய்யுங்கள். இவ்வாறு மு.க.ஸ்டா லின் பேசினார்.
பிரசாரத்தில் மாவட்ட திமுக செயலாளர் என்.கே.கே.பி.ராஜா, நீலகிரி தொகுதி தேர்தல் பொறுப்பாளர் அருண்குமார், பவானிசாகர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் எல்.பி.தர்மலிங்கம், பவானிசாகர் ஒன்றிய செயலாளர் ஓ.சுப்பிரமணியம், பொதுக்குழு உறுப்பினர் முத்துசாமி, ஊராட்சி தலைவர் நாகராஜ், முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மேகலா, புஸ்பா, ஊராட்சி துணைத் தலைவர் ஜெயராஜ், உத்தண்டியூர் ஊராட்சி தலைவர் ரமேஷ், திமுக பிரமுகர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஆறுச்சாமி, கலையரசி, தங்கராஜ், சிவகுமார், சிவா, செந்தில், சுரேஷ், கணேஷ், கோபால், மொழிக்காவலர் சுப்பிரமணியம், முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மு.க.ஸ்டாலின் பேச்சை ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்து கேட்டனர்.
சத்தியமங்கலத்தில் வெள்ளிக்கிழமை நடந்த திமுக பிரசாரத்தின்போது நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து பேசுகிறார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்




புன்செய் புளியம்பட்டியில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் ஆ.ராசா வை ஆதரித்து  மு.க. ஸ்டாலின் பிரச்சாரம்




இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் என்.கே.கே.பி ராஜா தலைமை தாங்கினார்.  புன்செய் புளியம்பட்டி நகரமன்ற தலைவர் பி.எஸ்.அன்பு, நகர தி.மு.க செயலாளர் பி .ஏ. சிதம்பரம் மற்றும் தி.மு.க பிரமுகர்கள் மோகன்ராஜ், பார்த்தசாரதி, பரமேஷ், நாகராஜ், மரக்கடை ஜெகா உள்ளிட்ட எராளமான தி.மு,க வினர் கலந்து கொண்டனர்.

Friday, March 28, 2014

தமிழக வேட்புமனு தாக்கல் இன்று துவக்கம்



சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்குகிறது. ஏப்ரல் 5ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும். காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பாளர்கள் தங்களின் மனுக்களை தாக்கல் செய்யலாம். ஏப்ரல் 7 ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும். மனுக்களை திரும்பப் பெற ஏப்ரல் 9ம் தேதி கடைசி நாள் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. 
20 ஓவர் கிரிக்கெட்: வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா
 


மிர்பூர்: 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி. வங்கதேசத்தின் மிர்பூரில் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி வங்கதேசத்தை முதலில் பேட்டிங் செய்ய கேட்டுக் கொண்டது.
இதனையடுத்து களமிறங்கிய வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது. 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணி 18.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்திய அணியின் ரோஹித் ஷர்மா, விராத் கோஹ்லி அரைசதம் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் 6 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணி அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதி செய்தது.

குடும்ப ஆட்சிக்கும், ஊழல் ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஜெயலலிதா

 

மதுரையில் அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் செய்த முதல்வர் ஜெயலலிதா பேசும்போது, மத்தியில் பதவியில் உள்ள ஊழல் ஆட்சிக்கு மக்கள் முற்று புள்ளி வைக்கவேண்டும்.தமிழர்களின் நலனை பாதுகாக்கும் அரசு மத்தியில் அமைய வேண்டும். மத்தியில் மக்கள் ஆட்சி அமைந்தால் மட்டும் போதாது.அதில் அதிமுக அங்கம் வகிக்கும் ஆட்சியாக இருக்கவேண்டும். குடும்ப ஆட்சிக்கும், ஊழல் ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழகத்தில் மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தந்தது அதிமுக அரசு என்று பேசினார்.

10-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய தந்தை - மகன், தாய் - மகள் 

 

கோபியில் தந்தையும், மகனும் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே, பாரியூர், வெள்ளாளபாளையம் பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் வி.குணசேகரன் (50). சாலைப் பணியாளர். இவருக்கு, பெரியார் செல்வம், தமிழீழம் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில், பெரியார் செல்வம் சென்னிமலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

தமிழீழம், கோபி அருகே உள்ள பொலவக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது, தந்தை குணசேகரனும், மகன் தமிழீழமும் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதி வருகின்றனர். 

குணசேகரன், குடும்பச் சூழ்நிலை காரணமாக 7-ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டார். பின் தையல் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இதையடுத்து, 1997-ஆம் ஆண்டு சாலைப் பணியாளராக பணியில் சேர்ந்தார். இவர் கடந்த ஆண்டு 8-ஆம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். இந்த ஆண்டு 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை தனித் தேர்வராக எழுதுகிறார்.
10-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய தாய், மகள்: இதேபோல கோபியில், 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை மலைக் கிராமத்தைச் சேர்ந்த தாயும், மகளும் ஒரே பள்ளியில் தேர்வு எழுதினர்.

ஈரோடு மாவட்டம் ஆசனூரைச் சேர்ந்தவர் ஜெடசாமி (40). விவசாயி. இவரது மனைவி மகேஸ்வரி (36). இவர்களுக்கு ரூபா (15) என்ற மகளும், சூர்யா (11) என்ற மகனும் உள்ளனர்.

ரூபா, கோபியில் உள்ள அரசு மகளிர் விடுதியில் தங்கி பழனியம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்துவருகிறார்.

இவரது தாய் மகேஸ்வரி 8-ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். அவரது பெற்றோர் மேற்கொண்டு அவரை பள்ளிக்கு அனுப்பாத காரணத்தால் படிப்பைத் தொடர முடியவில்லை. அவருக்கு படிப்பதற்கு விருப்பம் இருந்தாலும் மலைக் கிராமங்களில் மேல்படிப்புக்கு வாய்ப்பு இல்லை. 

இதனால் கடந்த ஆண்டு தனித் தேர்வராக 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதினார். இதில் 3 பாடங்களில் வெற்றி பெற்றார். இந்த ஆண்டு தமிழ், அறிவியல் ஆகிய 2 பாடங்களுக்கான தேர்வுகளை எழுதுகிறார். 

அரசு ஊழியராக பணியாற்ற வேண்டும் என்ற ஆசையால்தான் மலைக்
கிராமத்தில் இருந்தாலும் விடாமுயற்சியுடன் சிரமப்பட்டு படித்துவருகிறேன் என்றார்.

 

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலராக மோகன் வர்கீஸ் நியமனம்!

 
 
 
சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன் பணியிலிருந்து ஓய்வு பெறுவதையொட்டி, புதிய தலைமைச் செயலராக மோகன் வர்கீஸ் சுங்கத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

ஷீலா பாலகிருஷ்ணன் வருகிற 31 ஆம் தேதியுடன் பணியிலிருந்து ஓய்வுபெறுகிறது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறையின் கூடுதல் தலைமைச் செயலராக பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரியான மோகன் வர்கீஸ் சுங்கத் அப்பதவிக்கு நியமிக்கப்படுகிறார். மேலும் ஷீலா பாலகிருஷ்ணன் வகித்த நிர்வாக சீர்திருத்தத்திற்கான கண்காணிப்பு ஆணையர் மற்றும் ஆணையர் பதவியையும் கூடுதலாக கவனிப்பார் எனவும் தமிழக அரசின் செய்தி குறிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரி ஷீலாராணி சுங்கத்தின் கணவர் தான் மோகன் வர்கீஸ் சுங்கத் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு எதிரான தீர்மானம்: மத்திய அரசுக்கு தமிழருவி மணியன்- சீமான் கண்டனம்!

சென்னை: இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்காத மத்திய அரசுக்கு காந்தீய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் மற்றும் சீமான் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இலங்கையில் நடந்த போர்க்குற்ற விசாரணை தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானம் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 23 நாடுகளின் ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. மத்திய அரசின் இந்த அணுகுமுறைக்கு தமிழக அரசியல் கட்சிகளும், தமிழர் ஆலுவலர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 
 
 காந்திய மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் கூறுகையில், ''தமிழகர்களுக்கு துரோகம் செய்வதையே மத்திய அரசு கொள்கையாக கொண்டுள்ளது. இதற்கு முன்னர் தமிழகத்தில் ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சியின் காரணமாகவே ஐ.நா.வில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை இந்தியா ஆதரித்தது. எப்போதும் போல இப்போதும் தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்து விட்டது'' என்று கூறியுள்ளார். 
 
 
 
 
மத்திய அரசின் முடிவு குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றுதான் நீண்ட நாட்களாக போராடிக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில், ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளையின் அறிக்கைக்கு பின் பன்னாட்டு விசாரணைக்கு உத்தரவிட கோரிய அமெரிக்க தீர்மானம் ஐ.நா.வில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. நமக்கு சம்பந்தமே இல்லாத அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் இந்த தீர்மானத்தை ஆதரித்த நிலையில், இந்தியா புறக்கணித்தது கண்டிக்கத்தக்கது. இதன் மூலம் தமிழர்களுக்கு இந்தியா மீண்டும் ஒரு மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளது. போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணையை நடத்தினால் இந்தியா செய்த உதவிகளும் வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்று பயந்தே மத்திய அரசு அதனை புறக்கணித்துள்ளது. அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியிருப்பதன் காரணமாக, இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச விசாரணைக்கு பிறகு தனி ஈழம் உருவாக வழிபிறக்கும்'' என்று கூறியுள்ளார்.

Thursday, March 27, 2014

என்.ஆர்.,காங்கிரசுக்கு பாடம் புகட்டுங்கள் : ஜெ., பிரசாரம்

 

புதுச்சேரி: என்.ஆர்.,காங்கிரசால் புதுச்சேரி மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை என அ.தி.மு.,க பொதுசெயலர் ஜெ., இன்று ( 27 ம் தேதி வியாழக்கிழமை ) பிரசாரம் செய்தார். அவர் அங்கு வேட்பாளர் ஓமலிங்கத்திற்கு ஆதரவு கேட்டு பேசுகையில், இங்குள்ள என்.ஆர்.காங்கிரஸ் கடந்த தேர்தலில் எங்களுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றது. ஆனால் இந்த கட்சி சுயேச்சைகள் மூலம் ஆட்சி அமைத்தது. இதன் மூலம் இங்குள்ள ஆளும் கட்சி, புதுச்சேரி மக்களுக்கும், அ.தி.மு.க,வுக்கும் துரோகம் செய்துவிட்டது. இங்குள்ள முதல்வர் செயல் இழந்தவராக உள்ளார். இவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும். இது போல் காங்., எம்.பி., நாராயணசாமியால் எவ்வித முன்னேற்றமும் கிடைக்கவில்லை. பஞ்சாலைகள் திறக்க, வேலை வாய்ப்புகள் பெருக்கிட நாராயணசாமி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனி மாநில அந்தஸ்து பெற முயற்சி செய்தாரா? புதிய தொழிற்சாலை துவக்கினாரா ? துறைமுக அபிவிருத்தி செய்தாரா ? இது போன்று மாநில வளர்ச்சிக்கு எதுவும் செய்யவில்லை. இவ்வாறு ஜெ., பேசினார். 

 
சென்னை: தி.மு.க.,விலிருந்து வெளியேற்றப்பட்ட அக்கட்சியின் முன்னாள் தென்மண்டல அமைப்பாளர் அழகிரி, சென்னையில் தனது தங்கையும், ராஜ்யசபா எம்.பி.,யுமான கனிமொழியை சந்தித்து பேசினார். சென்னை சி.ஐ.டி., காலனியில் சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின் போது என்ன பேசப்பட்டது மற்றும் எதற்காக இந்த சந்திப்பு என்பது குறித்து தி.மு.க., சார்பில் எவ்வித பதிலும் தெரிவிக்கப்படவில்லை.
தொகுதிக்கு ராசா என்ன செய்தார்? மேடையில் பேச தயாரா? 
அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாசலம் கேள்வி 

வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணனை ஆதரித்து சத்தி கோணமூலை காந்திநகரில் வியாழக்கிழமை வாக்கு சேகரிக்கிறார் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம். உடன், மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம், மேலவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், சத்தி ஒன்றிய செயலாளர் வி.சி.வரதராஜ், கோணமூலை ஊராட்சித் தலைவர் பத்மினிசண்முகம்.



 
சத்தியமங்கலம்,மார்ச் 27:
நீலகிரி மக்களைத் தொகுதிக்கு ராசா என்ன செய்தார்? மேடையில் பேச தயாரா? என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீலகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணனை ஆதரித்து தமிழக சுற்றுச்சுழல் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் சத்தியமங்கலம் ஒன்றியம் மங்களபுரம், அரசூர், தாசநாயக்கனூர், இண்டியம்பாளையம், கரட்டூர், பெரியார்நகர்,சாணார்பாளையம், குப்பந்துறை, வேடசின்னானூர்,செண்பகபுதூர், கோணமூலை,மாரனூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வியாழக்கிழமை பிரசாரம் செய்தார். 

கோணமூலை கிராமத்தில் திறந்த வேனில் அவர் பேசியது: ஈரோடு மாவட்டத்திலேயே பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியி்ல தான் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.கடம்பூர் மலைக்கிராமத்தில் 60 ஆண்டுகளாக மலைவாழ் மக்களுக்கு எஸ்.டி சான்றிதழ் வழங்கப்படவில்லை. வருவாய்த்துறை அமைச்சராக இருந்த போது இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகளுக்கு எஸ்.டி.சான்றிதழ் வழங்கப்பட்டது.

கடம்பூர்-குன்றி இடையே தார்சாலை வசதி, ஆசனூர்,கடம்பூர் பகுதியில் ஆரம்ப சுகாதரா நிலையம், சத்தியில் பசுமைஅங்காடி, ரூ.20 கோடி செலவில் பவானிசாகர் மீன்குஞ்சு உற்பத்தி பண்ணை, ரூ.35 கோடி செலவில் அரசு அலுவலர் பயிற்சி நிலையம், சத்தியில் போக்குவரத்து காவல்நிலையம், சத்தியில் நகர்ப்புற சுகாதாரநிலையம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. 

நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் மத்திய அமைச்சராகவும் இருந்த ஆ.ராசா தொகுதிக்கு என்ன செய்தார். பவானிசாகர் தொகுதி மக்களை அடிக்கடி சந்தித்து அவர்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றியுள்ளோம்.  ஆனால் திமுக வேட்பாளர் ஆ.ராசா தொகுதிக்கு எத்தனை முறை வந்துள்ளார்? என்ன திட்டங்களை செயல்படுத்தினார். மேடை போட்டு பேசத் தயாரா? நாங்கள் மக்கள் பலத்தை நம்பி வாக்கு கேட்கிறோம். திமுகவினர் பணம் பலத்தை நம்பி வாக்கு கேட்கின்றனர். 

மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்த திமுகவினர் பெட்ரேல் டீசல் விலை உயர்வுக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.உணவு பாதுகாப்பு மசோதா மற்றும் சில்லறை வணிகம் போன்றவற்றுக்கு ஏன் அனுமதி அளிக்கப்பட்டது. டிஜிடல் டிவி ஒளிப்பரப்பு அனுமதி மறுப்பு மற்றும் கச்சத்தீவு பிரச்னையில் திமுக நிலைபாடு என்ன?  இதற்கு திமுக வேட்பாளர் ராசா மேடை போட்டு பதில் சொல்ல தயாரா?  என கேள்வி எழுப்பினார். 

இதில் ஈரோடு மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம், மேலவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ்,சத்தி ஒன்றிய செயலாளர் வி.சி.வரதராஜ், பவானிசாகர் ஊராட்சித் தலைவர் வி.ஏ.பழனிச்சாமி, சத்தி யூனியன் சேர்மன் கே.ஏ.சுப்புலட்சுமிஅய்யாசாமி,கோணமூலை ஊராட்சித் தலைவி பத்மின்சண்முகம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
பவானிசாகர் அருகே வாழைகளை சேதப்படுத்திய காட்டுயானைகள்


காட்டுயானைகளால் சேதமடைந்த  குலைதள்ளிய வாழைகள்
சத்தியமங்கலம்,மார்ச் 27:
பவானிசாகர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து வாழைகளை சேதப்படுத்திய யானைகளை வனத்துறையினர் விரட்டியடித்தனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த தொப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி கண்ணையன்(30).  பவானிசாகர் விளாமுண்டி வனப்பகுதியை ஒட்டி உள்ள இவரது தோட்டத்தில் கதலி ரக வாழைகள் சாகுபடி செய்துள்ளார். வியாழக்கிழமை அதிகாலை இவரது தோட்டத்துக்குள் புகுந்த 2 காட்டுயானைகள் வாழைகளை தின்றும் மிதித்தும் நாசப்படுத்தின. இதனால் குலைதள்ளிய 100 க்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன. 

யானைகள் நடமாட்டம் குறித்த வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்தும் தீ்ப்பந்தம் ஏந்தியும் யானைகளை விரட்டியடித்தனர்.

விளாமுண்டி வனத்தில் இருந்து யானைகள் வெளியேறுவதை தடுக்க வனத்துறை சார்பில் அகழிகள் வெட்டப்பட்டுள்ளன. ஆனால் குறைந்தளவே ஆழமுள்ள அகழிகளை யானைகள் தாண்டி செல்கின்றன. இதனை ஆழப்படுத்தினால் யானைகள் கிராமத்துக்குள் புகுவதை தடுக்க இயலும் என கிராமமக்கள் தெரிவித்தனர்.

 

கோவை அன்னூரில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி வந்துகொண்டிருந்த செங்கல்லாரி வேடசின்னானூர் என்ற இடத்தில் எதிரே வந்த கார் மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்தில் அனைவரும் காயமின்றி உயிர்தப்பினர்.
தமிழ்நாடு அரசு வனத்துறை சார்பில் சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில்  பண்ணாரி கோவில் பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டன. தற்போது மரக்கன்றுகள் நன்கு வளர்ந்து பசுமையாக காட்சி அளிக்கிறது. 



புன்செய்புளியம்பட்டியில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம்; வருவாய் துறை சார்பில் நடைபெற்றது.

 
 
புன்செய் புளியம்பட்டி;மார்ச்;27;

புன்செய் புளியம்பட்டி பேருந்து நிலையம் அருகில் வாக்களர்களுக்கு வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி பொதுமக்களுக்கு வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக, சத்தியமங்கலம் வருவாய் வட்டாட்சியர் உத்தரவின் பேரில்,வருவாய் துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம்,கோவை-சத்தி சாலையில்  புன்செய் புளியம்பட்டி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
 இந்நிகழ்ச்சிக்கு,கிராம நிர்வாக அலுவலர் ஜி.கே.கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினர்.வருவாய் ஆய்வாளர் எஸ்.தங்கவேல், கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணி,தங்கமணி,  லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கிராம நிர்வாக அலுவலர் ஜி.கே.கோபாலகிருஷ்ணன் பேசும்போது;வாக்களிப்பது ஜனநாயக கடமை,பொதுமக்களாகிய நாம் அனைவரும் நமது வாக்குகளை தவறாமல் பதிவு செய்யவேண்டும்.என தெரிவித்தார்.   மேலும்,நோட்டுக்கு வேண்டாம் ஓட்டு,ஜனநாயகம் காத்திட அனைவரும் வாக்களிப்போம், மனதில் உறுதி வேண்டும்,மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் போன்ற விழிப்புணர்வு வாசகங்களை ஒலிபெருக்கியில் அறிவித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்சியில்,கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட  வருவாய் துறையினர் மற்றும் சமுகநல அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகளும் ,பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர்.   
நீலகிரி பாராளுமன்ற தொகுதி அண்ணா தி.மு.க.வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணனை  ஆதரித்து மேட்டுப்பாளையம் தொகுதியில் ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ,கிராமம்,கிராமமாக பிரச்சாரம்.




மேட்டுப்பாளையம்.மார்ச்.27.
நீலகிரி பாராளுமன்ற தொகுதி அண்ணா தி.மு.க.வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணனை  ஆதரித்து மேட்டுப்பாளையம் தொகுதியில் ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ,கிராமம்,கிராமமாக பிரச்சாரம் செய்தார்.ஓடந்துறை ஊராட்சி,ஊமப் பாளையத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் ஓ.கே.சின்னராஜ் எம்,.எல்.ஏ, இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு அவர் பேசியதாவது;அவினாசி அத்திக்கடவு நிலத்தடி நீர் மேம்பாட்டு திட்டம் நிறைவேற அண்ணா.தி,மு,க.அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தி.மு.க வேட்பாளர் ஆ.ராசா பொய்யான பிரச்சாரம் செய்துவருகிறார்.. பில்லூர் அணையின் உபரிநீரை வாய்க்கால் அமைத்து குளம் குட்டைகளுக்கு நீர் நிரப்பும் அத்திக்கடவு  அவினாசி திட்டம்  கடந்த 1995 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா ரூ.200 கோடி மதிப்பில் திட்டம் தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தார்.2001 ல் ஆட்சி மாற்றம் தி.மு.க.ஆட்சிக்கு வந்ததும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.5 ஆண்டுகளுக்கு பிறகு  அண்ணா தி.மு.க.மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அத்திக்கடவு அவினாசி திட்டத்தை ரூ.500 கோடி திட்ட மதிப்பீடு செய்து அனுப்பியது.காவேரி நதிநீர் ஆணையம் இறுதி தீர்ப்பு வராத சூழ்நிலையில் காவேரியின் உபநதியான பவானி ஆற்றுக்கு வரும் எந்த நீரையும் பயன்படுத்தக்கூடாது என ஆணையிட்டது.அந்த திட்டத்தை  மத்திய அரசு கிடப்பில் போட்டது.2006 ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க.அரசு திட்டம் பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.2007 ல் காவேரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு வந்த பிறகும் எந்த முன்னேற்றமும்,இல்லை.2011 ல் மீண்டும் அண்ணா தி.மு.க.ஆட்சிக்கு வந்ததும் இத்திட்டத்தை முழுமையாக ஆய்வு செய்திட ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கினார்.அதன்பேரில் ரூ.1862 கோடி மதிப்பில் திட்டமதிப்பீடு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.இத்திட்டத்திற்கு மத்திய அரசு நிதியான 50 சதவீத நிதியை ஒதுக்க வேண்டும் ஆனால் மத்திய அரசு அந்த நிதியை ஒதுக்கவில்லை.காவேரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு சரித்திர சாதனை படைத்தவர் முதல்வர் ஜெயலலிதா.
இந்த உண்மை கூட தெரியாமல் முன்னாள் அமைச்சர் ராசா உளறுகிறார்.மக்களை ஏமாற்ற பொய்பிரசாரம் செய்யும் தி.மு.க.வேட்பாளருக்கு வாக்காளர்களாகிய நீங்கள் தக்க பாடம் புகட்டவேண்டும்.அண்ணா தி.மு.க.வேட்பாளர் சி.கோபால கிருஷ்ணனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யவேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.பிரசாரத்தில்காரமடை ஒன்றிய செயலாளர் பி.டி.கந்தசாமி, ஓடந்துறை ஊராட்சி செயலாளர் நடராஜ்,உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Wednesday, March 26, 2014

சத்தியில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்
 
 
 
 

சத்தியமங்கலம், மார்ச்.27. நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பவானிசாகர் சட்டமன்ற தொகுதி ஜனநாயக முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் சத்தியமங்கலம் அத்தாணி சாலையில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சத்தி முன்னாள் எம்எல்ஏவும், பவானிசாகர் சட்டமன்றதொகுதி தேர்தல் பொறுப்பாளருமான எல்.பி.தர்மலிங்கம் தலைமை தாங்கினார். சத்தி நகர செயலாளர் வரவேற்றார். மாவட்ட செயலாளர் என்.கே.கே.பி.ராஜா, நீலகிரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீலகிரி மக்களவை தொகுதி வேட்பாளர் ஆ.ராசா பேசியதாவது.  திமுக தலைவர் கருணாநிதியிடம் நான் எந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தாலும் கொடுத்திருப்பார். ஆனால் நான் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட விரும்பியதால் வாய்ப்பளித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சாலை மேம்பாடு, புதிய அங்கன்வாடி கட்டிடங்கள், பள்ளி சுற்றுச்சுவர், குடிநீர்த்திட்டங்கள், மின்மயானம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்யப்பட்டுள்ளது. இந்திய தொலைத் தொடர்பு துறையில் நான் புரட்சியை ஏற்படுத்த நினைத்தேன். நாட்டு மக்கள் அனைவரும் செல்போன் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். இந்தியாவில் செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 3 கோடியிலிருந்து 90 கோடியாக உயர்ந்தது. அதற்காக அரசு எனக்கு தண்டனை கொடுத்தது ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி நஷ்டம், 33 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்திருக்கலாம் என்றெல்லாம் கூறுகிறார்கள். அப்படி நான் மோசடியில் ஈடுபட்டிருந்தால், என் வீட்டில் சிபிஐ மற்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். என் பெயரில் ஏதாவது சொத்து இருந்ததாக கண்டு பிடித்துள்ளனரா, ஒன்றுமில்லையே. நான் குற்றமற்றவன் என நிருபிக்க எனக்கு கிடைத்துள்ள வாய்ப்பு இது. எனவே, நீலகிரி மக்களவை தொகுதியை சேர்ந்த நீங்கள் என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை தகர்த்தெரிய எனக்கு வாக்களிக்க வேண்டும். மீண்டும் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக என்னை தேர்வு செய்ய வேண்டும் என்று பேசினார். .
சிக்ஸ் பேஷ் ஆ.அண்ணாதுரைக்கு ஆ.ராசா பிறந்த நாள் வாழ்த்து

 


 
திருப்பூர் பகுதியில் திமுக தொண்டர் மத்தியில் அன்பாக சிக்ஸ் பேஷ் என்று அழைக்கப்படும் ஆ.அண்ணாதுரை திமுகவின் விசுவாசி.முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் அன்புக்கு பாத்திரமான சிக்ஸ் பேஷ் பிறந்தநாளை ஆ.ராசா முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினார். இவருக்கு ராசா பொன்னாடை போர்த்தி வாழத்துத் தெரிவித்துக்கொண்டார்.பின்னர். ஆ.ராசா அவரை வாழ்த்திபேசும்போது, கழகத்தில் கண்ணியத்துடன் கடமை உணர்வுடன் பணியாற்றக்கூடியவர்களில் சிக்ஸ் பேஷ் முக்கியமானவர். திருப்பூரில் திமுக வளர அரும்பாடுபட்டு வருகிறார். கழக கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்வார். சட்டப்பேரவை தேர்ததலில் மேட்டுப்பாளையம் தொகுதியில் கழக வேட்பாளர் அருண்குமாரை வெற்றி பெற செய்ய அங்கேயே முகாமிட்டு ஆதரவு திரட்டினார். தில்லி சிறையில் இருந்து தினமும் நீதிமன்றத்திற்கு செல்லும்போது எனக்கு ஆறுதலாக இருந்தவர் இந்த சாரதி. சோர்ந்துபோன காலங்களில் நான இருக்கிறேன் என தைரியம் கொடுத்து என்னை உற்சாகப்படுத்திய திமுகவின் இரும்பு கோட்டை உடன்பிறப்பான சிக்ஸ் பேஷ் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கிறேன். இதில் முன்னாள் எம்எல்ஏ எல்.பி.தர்மலிங்கம்,  நீலகிரி தேர்தல் பொறுப்பாளர் அருண்குமார், மாவட்ட மகளிரணி செயலாளர் ஆர்.ஜானகி, நகர செயலாளர் எஸ்.ஆர்.வேலுச்சாமி உள்ளிட்ட பலர் வாழ்த்துத் தெரிவித்தனர்.
சத்தியமங்கலத்தில் நடைபெற்ற் செயல்வீரர்கள் கூட்டத்தில் ஆ.ராசா பங்கேற்றது குறித்து தினமணியில் வெளியான செய்தி