தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, March 20, 2014

பண்ணாரி குண்டம் விழா: மொத்த வருவாய் ரூ.1 கோடி  


பக்தர்கள் உண்டியல் திறக்கப்பட்டு கோவில் இணை ஆணையர் நா.நடராஜ் முன்னிலையில் காணிக்கைகள் எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள கோவில் பணியாளர்கள்
சத்தியமங்கலம், மார்ச் 20:
பண்ணாரி்அம்மன் குண்டம் திருவிழாவில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை, கட்டணச்சீட்டு, தாற்காலிக கடைகள் ஏலம் உள்ளிட்ட வருவாய் இனங்களை வியாழக்கிழமை எண்ணியபோது அதன் மொத்த வருவாய் ரூ.1 கோடியாக உயர்ந்துள்ளது.

சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரிஅம்மன் கோவிலில் மார்ச் 3ஆம் தேதி துவங்கிய குண்டம் விழா 18ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் லட்சணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ரொக்கம்,தங்கம், வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தினர். 

விழா நாள்களில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய  காணிக்கைகள் எண்ணும் பணி இணை ஆணையாளர் நா.நடராஜ் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கோவிலில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் ரொக்கம் ரூ.63 லட்சம், வெள்ளி 1610 கிராம்,தங்கம் 246 மில்லிகிராம், செம்புவேல் 650 கிராம், தாற்காலிக கடைகள் வருவாய் ரூ.28.40 லட்சம் மற்றும் திருவுருப்படங்கள் ரூ.97 ஆயிரம் என மொத்த வருவாய் ரூ.1 கோடியே 3 லட்சம் கிடைத்துள்ளது.  இது கடந்த ஆண்டை விட ரூ.19.54 லட்சம் கூடுதலாக கிடைத்துள்ளது. காணிக்கைகள் எண்ணும் பணியில் பள்ளி, கல்லூரி மாணவ,மாணவியர்கள் ஈடுபட்டனர்.

0 comments:

Post a Comment