தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, July 25, 2015

சத்தி அருகே மரத்தில் பறித்து  நாவல்பழம் விற்பனை அமோகம்

 
 
சத்தியமங்கலம்,ஜூலை 25:
நாவல் பழம் சீசன் துவங்கியுள்ளதால் சத்தி பகுதியில் நாவல்பழம் விற்பனை அமோகமாக உள்ளது. மரத்தில் இருந்து பழங்களை பறித்து விற்கப்படுவதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

சத்தியமங்கலம் வட்டாரத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. விவசாயிகள் தங்களது தோட்டங்களில் மா, கொய்யா, பலா,வேம்பு,புளியன் உள்ளிட்ட பல்வேறு மரங்களை வளர்க்கின்றனர். அதில் குறிப்பிட்ட விவசாயிகள் நாவல் பழமரங்களை வளர்க்கின்றனர். சத்தி,பவானிசாகர், கெஞ்சனூர் ஆகிய இடங்களில் நாவல் மரங்கள் அதிகம் உள்ளன. இதன் பருவ காலம் மே முதல் ஜூலை வரை ஆகும். 

வர்த்தகத்தில் மதிப்பு மிக்க பழம் நாவம் பழ மரத்தின் உயரம் 35 அடி வரை இருக்கும். மரம் நடவு செய்த காலத்தில் இருந்து 10 ஆவது ஆண்டு காய்பிடிக்க துவங்கும். வெப்ப மண்டல பகுதியில் அனைத்து மண் வளங்களிலும் வளருக்கூடிய நாவல் மரம் தோட்டங்களில் மர நிழலுக்காவும் காற்றை தாங்கிபிடிக்கும் தடுப்பாகவும் விவசாயிகள் வளர்க்கின்றனர்.

 பூ மற்றும் காய் பிடித்து வளர்ச்சியடைய 60 நாள்கள் தேவைப்படும்.  அறுவடை செய்யும்போது மழை பொழிவு இருப்பதால் காய் நல்ல ஊதா  நிறத்தில் சுவையுடன் கிடைக்கும்.  சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த மருந்தான நாவல் பழமரத்தில் தினந்தோறும் 5 கிலோ பழம் மகசூல் கிடைக்கிறது. சத்தியில் உள்ள விவசாயி தோட்டத்தில் நாவல் மரத்தில் இருந்து பறித்து உடனே விற்பனை செய்வதால் பழம் அமோக விற்பனையாகிறது. இது கிலோ ரூ.150-க்கு விற்கப்படுகிறது.

பறிக்கும்போது பழங்கள் கீழே விழந்து மண்ணில் சேதமடையாமல் இருக்கு பிளாஸ்டிக் விரிப்பு மூலம் அதனை பாதுகாக்கின்றனர்.
 இரசாயண கலவையின்றி இயற்கையான முறையில் சுவைமிக்க இந்த நாவல் பழம் கிடைப்பதால் வெளியூர் சுற்றுலாபயணிகள் இங்கு வந்து வாங்கிச் செல்கின்றனர். 
மருத்துவகுணம் கொண்ட சுண்டைக்காய் வற்றல் வரத்து அதிகரிப்பு




 
 
 
சத்தியமங்கலம்,ஜூலை 25:
நடப்பாண்டு மருத்துவ குணம் கொண்ட சுண்டைக்காய் வற்றல் வரத்து சென்ற ஆண்டைவிட கூடுதலாக உள்ளது என  வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

சத்தியமங்கலம்,பவானிசாகர், புன்செய் புளியம்பட்டி வட்டாரத்தில் சுண்டைக்காய் சாகுபடி செய்யப்படுகின்றன. மேலும் பவானிசாகர் வனப்பகுதியில் சேகரிக்கப்படும் சுண்டைக்காய் புன்செய் புளியம்பட்டி சந்தைக்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.  சுண்டைக்காய் சாகுபடி செய்யும் விவசாயிகள் அவற்றை உடைத்து அதில் உள்ள விதைகளில் பாதியை நீக்கிவிடுகின்றனர். பின்னர், அதனை களத்தில் உலரவைத்து விற்பனைக்கு கொண்டு வருவர். ஜூன் மற்றும் ஜூலை மாத இதன் பருவ காலம். பல்வேறு பகுதிகளில் இருந்த கொண்டு வரப்பட்ட சுண்டைக்காய் வற்றலை புன்செய் புளியம்பட்டியில் விற்பனைக்கு வந்து அவை கிலோ ரூ.70-வரை விற்பனையானது..  கொள்முதல் செய்யப்பட்ட வற்றலை மூட்டைகளில் நிரப்பி  தூத்துக்குடி, திண்டுக்கல், மதுரை,சென்னை, சேலம் பகுதிகளுக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து வியாபாரி சண்முகம் கூறியது: சுண்டைக்காய் வற்றலை நீர்மோர், வற்றல்குழம்பு மற்றும் சித்த மருத்துவதுக்கு பயன்படுகிறது. வற்றலை மீண்டும் உப்பு கலந்து உலரவைத்து சமைத்து சாப்பிடுவர். ஒரு மூட்டையின் எடை 37 கிலோவாக இருக்கும். ஜூலை மாத இறுதி வரை 600 மூட்டைகள் வரத்து வரலாம். சாரசரியாக வாரம் 150 மூட்டைகள் விற்பனைக்கு வருகின்றது என்றார்