தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, March 26, 2014

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு

 

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வெளியிட்டனர்.
தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய ராகுல் காந்தி, "தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் முன்னர் நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களுடனும் காங்கிரஸ் கட்சி சார்பில் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
பல்வேறு தரப்பினரும் முன்வைத்த கோரிக்கைகளை அலசி ஆராய்ந்து அவற்றில் இருந்த முக்கிய அம்சங்கள் அனைத்தும் தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது" என்றார்.
காங். தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
* அனைவருக்கும் சமூக பாதுகாப்பு உரிமை வழங்குதல்.
* அனைவருக்கும் குறைந்த செலவில் மருத்துவ வசதி சேவை ஏற்படுத்துதல்.
* ஏழைகளுக்குத் தரமான வசிப்பிட உரிமையை ஏற்படுத்தி தருதல்.
* ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்குள் நாட்டின் வளர்ச்சியை 8% ஆக உயர்த்தும் வகையில் பொருளாதார சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும்.
* உற்பத்தி துறையில் கவனம் செலுத்தி பொருளாதார நிலையை மேம்படுத்தப்படும்.
* முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வூதிய திட்டம்.
* குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பொருளாதார பாதுகாப்புக்கு உறுதி செய்யப்படும்.
* ஊழல் தடுப்புச் சட்டங்களை நிறைவேற்றப்படும்.
* தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்.
* பொருளாதாரத்தில் பின் தங்கிய அனைத்து சமுதாயத்தினருக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்கப்படும். அதேவேளையில், தற்போது நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டில் பாதிப்பு ஏற்படாமல் உறுதி செய்யப்படும்.
* மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற முன்னுரிமை அளிக்கப்படும்.
* சுகாதாரத்திற்கான செலவினங்கள் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தில் 3% ஆக அதிகரிக்கப்படும்.
* பள்ளிகள்தோறும், இல்லந்தோறும் கழிவறைகள் வசதி உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* தொழிலாளர் வர்க்கத்தினருக்கு மருத்துவக் காப்பீடு ஏற்படுத்தப்படும்.
* அபாயகரமான தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர் நலனில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
* இடம்பெயர்ந்து தொழில் புரியும் அனைத்து தொழிலாளர்களையும் ஓராண்டு காலத்திற்குள் ஆதார் திட்டத்தில் இணைக்கப்படும்.
* அமைப்புச் சாரா தொழிலாளர்கள் சமூக பாதுகாப்புச் சட்டம் 2008, முழுவீச்சில் அமல்படுத்தப்படும்.
* இட ஒதுக்கீட்டில் பயன் பெறாத வகுப்புகளை அடையாளம் காண சிறப்பு ஆணையம் அமைக்கப்படும்.
* தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்முறை தடுப்புச் சட்டம் 2013- ஐ அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* வருமானத்தை அதிகரிக்கும் வகையில் நேரடி வரி விதிப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், பொருட்கள் மற்றும் சேவை வரி மசோதாவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரதமர் மன்மோகன் சிங்:
புதிய தொலைநோக்கு பார்வையுடன் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக மக்களவை தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.
மேலும், விவசாயிகள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் நன்மை பிறப்பிக்கும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.
சோனியா காந்தி:
தேர்தல் அறிக்கையை வெளியிட்டபின் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, "சுகாதார உரிமை மற்றும் ஏழைகளுக்கு உறைவிட உரிமை உள்ளிட்டவை காங்கிரஸின் முக்கிய வாக்குறுதிகள் ஆகும்.
நாங்கள் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் உரிய மதசார்பற்ற இந்தியாவுக்காக போராடி வருகிறோம். தேர்தல் கருத்துக் கணிப்புகள் மீண்டும் மீண்டும் தவறானவை என்று நிரூபிக்கப்பட்டதால், அவற்றின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.
வாரணாசி தொகுதியில் மோடிக்கு எதிரான சவாலை நிச்சயமாக சந்திப்போம். காங்கிரஸ் வேட்பாளர் இன்னும் முடிவாகவில்லை.
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு பிரதமரைத் தேர்தெடுக்கும்" என்றார் சோனியா காந்தி.
ராகுல் காந்தி:
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறும்போது, "பாஜகவை போலவே சில மாநிலங்களில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டாலும், அதனால் பெரிய அளவில் பின்னடைவு இருக்காது. நாட்டை நாசப்படுத்திய கொள்கையின் பிரதிநிதியாகவே நரேந்திர மோடி இருக்கிறார்" என்றார்.

 

0 comments:

Post a Comment