தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, March 17, 2014

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு

 

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்த இடதுசாரி கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கப் போவதாக அறிவித்தன. நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்த இடதுசாரி கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கப் போவதாக அறிவித்தன.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழுக்கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் பி.சம்பத் மற்றும் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே. வரதராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் லோக்சபா தேர்தலில் போட்டியிட உள்ள 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் யார் யார் என்று தேர்வு செய்யப்பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராம கிருஷ்ணன் திங்கட்கிழமை மாலை சென்னையில் செய்தியாளர்களிடம் வெளியிட்டார். வேட்பாளர்கள் விபரம் வருமாறு 
 
வட சென்னை - வாசுகி 
மதுரை - விக்ரமன் 
தஞ்சாவூர் - தமிழ் செல்வி
 விழுப்புரம் - ஆனந்தன் 
 கன்னியாகுமரி - பெல்லார்மின் 
விருதுநகர் - சாமுவேல் 
திருச்சி - ஸ்ரீதர் 
கோவை - பி. ஆர் நடராஜன் 
 திண்டுக்கல் - பாண்டி 
 
ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment