தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, March 20, 2014

மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில் மரம் சார்ந்த உயிரி எரிசக்தி உற்பத்தி தொழில்குறித்த 2 நாள்  கருத்தரங்கம்.
 
11 மாநில பிரதிநிதிகள் பங்கேற்பு.
 
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக துணைவேந்தர் கே.ராமசாமி துவக்கிவைத்தார்.
 
 


 
மேட்டுப்பாளையம்.மார்ச்.20.மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் "தொழிற்சாலை சார்ந்த வேளாண்காடுகள் "எனும் திட்டம் மாற உற்பத்தியை அதிகரிக்கும் விதத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறது.இத்திட்டத்தின் ஒருபகுதியாக "மரம் சார்ந்த எரிசக்தி உற்பத்தி தொழில் கருத்தரங்கம் 20, 21 ஆகிய இரண்டு நாட்கள் நடக்கிறது.அதன் துவக்கவிழா இன்று நடந்தது.பேராசிரியர் முனைவர் கே.டி.பார்த்திபன் வரவேற்று பேசினார்.கல்லூரி முதல்வர் முனைவர்.பி.துரைராசு கருத்தரங்கு விளக்க உரை ஆற்றினார். சென்னை ஆரோமீரா  எரிசக்தி நிறுவன நிர்வாக இயக்குனர் ஜி.சுரேஷ்,வன மரபியல் மற்றும் இனப்பெருக்க ஆராய்ச்சி நிலையத்தின்  ஆராய்ச்சி  ஒருங்கிணைப்பாளர் டி.பி.ரகுநாத் ஆகியோர் சிறப்புரை  ஆற்றினார்கள். நிகழ்ச்சியில் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக துணைவேந்தர் முனைவர் கே.ராமசாமி, இரண்டு நாள் கருத்தரங்கை துவக்கிவைத்து சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தெளிவான ஆராய்ச்சிக்கு பின் விவசாயிகள் பலன் பெரும் வகையில் எரிசக்தி தோட்டங்கள் உருவாக்கும் திட்டம் செயல்படுத்த இக்கருத்தரங்கு நடக்கிறது. மரம், விறகு, மற்றும், வேளாண் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 40 சதவீதம் வேளாண் கழிவுகள்,60 சதவீதம் மரங்கள் மூலம் மின்சாரம் தயாரிக்கலாம். இந்தியாவில் உள்ள தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, ஹரியானா,பஞ்சாப்,உத்தராஞ்சல்,பீகார்,உட்பட 11 மாநிலங்களில் இருந்து 32 தொழில் நிறுவனங்கள், 34 விஞ்ஞானிகள்,10 தொழில் முனைவோர்கள் மற்றும் வனத்துறை,வனவித்யான் கேந்த்ரா, வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் 10 முன்னணி விவசாயிகள் என 110 பேர் பங்கேற்றுள்ளனர்.
 
இக்கருத்தரங்கில் மரத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்க புதிய தொழில் நுட்பம்,மர  அறுவடை,மற்றும் எரிசக்தி தோட்டங்களை உருவாக்குவது குறித்து விளக்கி கூறப்படும். இத்திட்டம் செயல்படுத்தப்படும் போது விவசாயிகள் மிகவும் பயன்பெறுவர்.இவ்வாறு அவர் பேசினார். முடிவில் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் முனைவர் ஐ.சேகர் நன்றி கூறினார்.

0 comments:

Post a Comment