தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, January 28, 2015

ஏப்ரல் 7 ல் பண்ணாரிஅம்மன் கோயில் குண்டம் திருவிழா

 
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரிஅம்மன் கோயிலின் அழகிய தோற்றம்

 
சத்தியமங்கலம், ஜன.29: 
 
பண்ணாரிஅம்மன் கோயில் குண்டம் திருவிழா ஏப்ரல் 7 ம் தேதி நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் உள்ளது. சுற்றுலா தலமான இக்கோயிலுக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களிலிருந்தும், அண்டைமாநிலமான கர்நாடகாவிலிருந்தும் இலட்சக்கணக்காண பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். 
 
இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இத்திருவிழாவில் இலட்சக்கணக்காண பக்தர்கள் வரிசையில் நாள்கணக்கில் காத்திருந்து தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவர். இந்த ஆண்டு குண்டம் திருவிழா மார்ச் 23 ம் தேதி திங்கட்கிழமை இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. மார்ச் 24 ம் தேதி அம்மன் உற்சவர் சப்பரம் கோயிலில் இருந்து புறப்பட்டு சிக்கரம்பாளையம், இக்கரைநெகமம் புதூர், வெள்ளியம்பாளையம், கொத்தமங்கலம், தொட்டம்பாளையம், வெள்ளியம்பாளையம்புதூர், அக்கரைத்தத்தப்பள்ளி,  அய்யன்சாலை, தாண்டாம்பாளையம், இக்கரைநெகமம், கெஞ்சனூர்,  சத்தியமங்கலம், பட்டவர்த்தி அய்யம்பாளையம்,  புதுவடவள்ளி, புதுக்குய்யனூர், ராஜன்நகர் கிராமங்களில்  திருவீதிஉலா நடைபெறுகிறது. மார்ச் 31 ம் தேதி அம்மன் சப்பரம் கோயிலை வந்தடைந்த பின் அன்றிரவு கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.  அதைத்தொடர்ந்து கோயிலில் தினமும் மலைவாழ் மக்கள் தாரை,தப்பட்டை, பீனாட்சி வாத்தியத்துடன் அம்மன் புகழ்பாடும் களியாட்டமும், நித்தியப்படி பூஜையும்  நடைபெறும். 
 
ஏப்ரல் 6 ம் தேதி இரவு திருக்குளம் சென்று அம்மன் அழைத்து வருதல், 7 ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்குதல் நடைபெறுகிறது.  ஏப்ரல் 13 ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் இலட்சக்கணக்காண பக்தர்கள் திருவிழாவில் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள், பரம்பரை அறங்காவலர்கள், கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Monday, January 12, 2015

சத்தியமங்கலத்தில் 10வது, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கான பொது தேர்வு ஆலோசனை நிகழ்ச்சி



சத்தியமங்கலம் ஜனவரி 12:
புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் மற்றும் கோயம்புத்தூர் சங்கரா கல்வி நிறுவனங்கள் சார்பில் 10வது, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கான பொது தேர்வு ஆலோசனை நிகழ்ச்சி விடியல் வழிகாட்டி-2015 சத்தியமங்கலம் வரதம்பாளையம் ஜே.கே.பி மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் வரவேற்றார். சங்கரா அறிவியல் & வணிகவியல் கல்லூரி முதல்வர் எஸ்.நடராஜன் தலைமை தாங்கினார். சங்கரா பாலிடெக்னிக் முதல்வர் எஸ்.கணேஷ் முன்னிலை வகித்தார். தேர்வு ஆலோசனை கையேட்டினை சங்கரா கல்வி நிறுவனங்களின் துணை செயலாளர் சாகேத் இராமச்சந்திரன் வெளியிட்டார். லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளி இயக்குனர் பாஸ்கோ இறையன்பு வாழ்த்துரை வழங்கினார். மாணவர்கள் பொதுத்தேர்வை தன்னம்பிக்கையுடன் எழுதுவது குறித்து பேராசிரியர் சூரியநாராயணன் சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் முக்கியத்துவம் தரவேண்டிய பகுதிகள் எவை? எப்படி படித்தால் 100 இக்கு 100 மதிப்பெண்கள் பெறலாம்? 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை சிறப்பாக எழுதுவது எப்படி? 12 ஆம் வகுப்புக்கு பிறகு என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? , இன்ஜினியரிங் கவுன்சலிங் செல்வது எப்படி? மாணவர்கள் உடல்நலத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்?, மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்வது எப்படி? என்பது குறித்து மாணவ மாணவியர்களுக்கு விளக்கமளிக்கபட்டது.

மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடங்களில் படிக்க வேண்டிய முக்கிய பகுதிகள் குறித்து பாடவாரியாக ஆசிரியர்கள் உரையாற்றினார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் வினாவங்கி புத்தகம், தேர்வு ஆலோசனை கையேடு , குறிப்பேடு, பேனா ஆகியவை இலவசமாக வழங்கபட்டன.

இந்நிகழ்ச்சியில் சத்தியமங்கலம், வேடர்நகர், ராஜன்நகர், சிக்கரசம்பாளையம், ரங்கசமுத்திரம், கெம்பநாயகன்பாளையம், டி.ஜி.புதூர், தூக்கநாயகன்
பாளையம், ஏழூர், பெரியகொடிவேரி, பங்களாபுதூர் உள்பட பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள 20 இகும் மேற்பட்ட மேல்நிலை, உயர்நிலை பள்ளிகளை சார்ந்த 1000 மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விடியல் செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் உறுப்பினர்கள் லோகநாதன், சக்திவேல் மற்றும் சங்கரா கல்வி நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் செய்து இருந்தனர்.

Thursday, January 8, 2015

சத்தியில் ஆருத்ரா தரிசன திருக்கல்யாண உற்சவ பெருவிழா




சத்தியமங்கலம்,
சத்தியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழாவில் சிவகாமியோடு ஸ்ரீநடராஜர் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மார்கழி மாதத்தில் பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியும் சிவாலயங்களில்  திருவாதிரையும் விமரிசையாக கொண்டாடப்படும். இதன்படி, சத்தியமங்கலம் அக்ரஹாரம் ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் ஆருத்ரா தரிசன திருக்கல்யாண உற்சவ பெருவிழா பாலிகை தெளித்தலுடன் புதன்கிழமை துவங்கியது.  ஞாயிற்றுக்கிழமை மாலை  மாப்பிள்ளை அழைப்பும்  பிற்பகலில் சுவாமிக்கு திருக்கல்யாண உற்வசம்  மற்றும் ஸ்ரீமீனாக்ஷி சுந்தரேஸ்வரர் வீதியுலாவும் நடைபெற்றன. திங்கள்கிழமை காலை நடராஜருக்கு அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து ஆருத்ரா தரிசனமும் நடைபெற்றது.

சத்தி பவானீஸ்வரர் ஆலயத்திலும் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த திருக்கல்யாண வைபவமும் அதனைத் தொடர்ந்து  ஊஞ்சல் உற்வச நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். திங்கள்கிழமை அதிகாலை மஹா அபிஷேகமும் அலங்கார தரிசனமும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, மலர் அலங்காரத்தில் ஸ்ரீசிவகாமி அம்மனோடு ஸ்ரீநடராஜர் பெருமான் வீதியுலா வந்தார். நடராஜர் ஊர்வலத்தில் குழந்தைகள், பெண்கள் கும்மியடித்தும் கோலாட்டம் ஆடியும் நடராஜபெருமானை வழிபட்டனர். தொடர்ந்து, குலாலர் வீதியில் நடைபெற்ற ஆராதனை நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான  பக்தர்கள் கலந்துகொண்டு  நடராஜை தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து நடந்த அன்னதான நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்

Sunday, January 4, 2015

அன்னூரில் 10வது, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கான தேர்வு ஆலோசனை நிகழ்ச்சி - 1000 மாணவர்கள் பங்கேற்பு


 





அன்னூர் ஜனவரி 5:

புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் மற்றும் கோயம்புத்தூர் சங்கரா கல்வி நிறுவனங்கள் சார்பில் 10வது, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கான தேர்வு ஆலோசனை நிகழ்ச்சி விடியல் வழிகாட்டி-2015 அன்னூர் தாசபலஞ்சிக திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் வரவேற்றார். சங்கரா அறிவியல் & வணிகவியல் கல்லூரி முதல்வர் எஸ்.நடராஜன் தலைமை தாங்கினார். சங்கரா பாலிடெக்னிக் முதல்வர் எஸ்.கணேஷ் முன்னிலை வகித்தார். தேர்வு ஆலோசனை கையேட்டினை சங்கரா கல்வி நிறுவனங்களின் துணை செயலாளர் சாகேத் இராமச்சந்திரன் வெளியிட்டார். மாணவர்கள் பொதுத்தேர்வை தன்னம்பிக்கையுடன் எழுதுவது குறித்து இலக்கியவானி பேராசிரியர் புனிதா ஏகாம்பரம் சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் முக்கியத்துவம் தரவேண்டிய பகுதிகள் எவை? எப்படி படித்தால் 100 இக்கு 100 மதிப்பெண்கள் பெறலாம்? 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை சிறப்பாக எழுதுவது எப்படி? 12 ஆம் வகுப்புக்கு பிறகு என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? , இன்ஜினியரிங் கவுன்சலிங் செல்வது எப்படி? மாணவர்கள் உடல்நலத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்?, மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்வது எப்படி? என்பது குறித்து மாணவ மாணவியர்களுக்கு விளக்கமளிக்கபட்டது.

மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடங்களில் படிக்க வேண்டிய முக்கிய பகுதிகள் குறித்து பாடவாரியாக வீடியோ திரையிடப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் வினாவங்கி புத்தகம், தேர்வு ஆலோசனை கையேடு , குறிப்பேடு, பேனா ஆகியவை இலவசமாக வழங்கபட்டன.

இந்நிகழ்ச்சியில்அன்னூர், சொக்கம்பாளையம், கருவலூர், கானூர்புதூர், ஆனையூர், பெரியபுத்தூர், காட்டம்பட்டி, கோவில்பாளையம், தென்பொன்முடி, மேட்டுபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள 20 இகும் மேற்பட்ட மேல்நிலை, உயர்நிலை பள்ளிகளை சார்ந்த 1000 மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விடியல் செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் உறுப்பினர்கள் லோகநாதன், சக்திவேல் மற்றும் சங்கரா கல்வி நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் செய்து இருந்தனர்.

Saturday, January 3, 2015

அன்னூர் புத்தக திருவிழா துவங்கியது

 


அன்னூர் ஜனவரி 3:

புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் மற்றும் அன்னூர் ரோட்டரி சங்கம் சார்பில் அன்னூரில் முதல்முறையாக புத்தக திருவிழா அன்னூர் பஸ்நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ தாசபலஞ்சிக பின் திருமண மண்டபத்தில் துவங்கியது.

விடியல் செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் வரவேற்றார். அன்னூர் ரோட்டரி சங்க தலைவர் கே.சி.சுந்தரம் தலைமை தாங்கினார். புத்தக கண்காட்சியை அன்னூர் வட்டாச்சியர் இந்திரா துவக்கி வைத்தார். திரு காளியப்பன் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். மின்துறை உதவி செயல் பொறியாளர் எம்.சுப்பிரமணியம் முதல் விற்பனையை பெற்று கொண்டார்.

அன்னூர் புத்தக திருவிழா கண்காட்சியில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பாரதி புத்தகாலயம் , விகடன் பதிப்பகம், தமிழ் தேசம் புத்தக நிலையம், ஸ்டுடண்ட் புக் ஹவுஸ், லாவா புக்ஸ், ரீடிங் இந்தியா புக்ஸ்,  விவேகானந்தா புத்தகாலயம்  உள்ளிட்ட 25 இகும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களின் புத்தக அரங்கங்கள் இடம் பெறுகின்றன. பல்வேறு  தலைப்புகளில் இலட்சகணக்கான தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் ஒரே இடத்தில் விற்பனைக்கு வைக்கபட்டுள்ளது. கல்வி குறுந்தகடுகளும் கிடைக்கும். புத்தக கண்காட்சியில் வாங்கும் அனைத்து புத்தகங்களுக்கும் 10 % சிறப்பு தள்ளுபடி வழங்க படுகிறது.
தினசரி மாலை 6 .30 மணிக்கு  தலை சிறந்த பேச்சாளர்கள் பங்குபெறும் சிறப்பு சொற்பொழுவுகள் நடைபெறுகிறது. ஜனவரி 4 ஆம் தேதி பட்டிமன்ற பேச்சாளர் கோவை தனபால்  பேசுகிறார்.ஜனவரி 5 ஆம் தேதிஜாலசக்கரவர்த்தி எம்.யோனா அவர்களின் மாயாஜால் மேஜிக் ஷோ நிகழ்ச்சி நடைபெறுகிறது.  ஜனவரி 6 ஆம் தேதி கு.அருள்வேல்  பேசுகிறார். ஜனவரி 7ஆம் தேதி நிறைவு விழாவில் தன்னம்பிக்கை பேச்சாளர் இயகோகா சுப்பிரமணியம்   பேசுகிறார்.

அன்னூர் புத்தக திருவிழாவின் ஐந்து  நாட்களிலும் பள்ளி, கல்லூரி நிறுவனங்களும்,  பொதுமக்களும், மாணவ மாணவியர்களும் திரளாக கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என விடியல் செயலாளர் எஸ். ஜெயகாந்தன் கேட்டு கொண்டுள்ளார்.