தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, March 26, 2014

ஆசனூர் வனத்தில் தண்ணீர் தேடி அலையும் யானைகள்:

மரக்கிளையில் தண்ணீர் குடிநீர்தொட்டி
 

சத்தியமங்கலம், மார்ச் 25:
வறட்சியின் காரணமாக வனத்தையொட்டியுள்ள விவசாய நிலங்களில் புகுந்து அங்குள்ள தண்ணீர் தொட்டிகளை சேதப்படுத்துவதால் விவசாயிகள் தண்ணீர் தொட்டியை வனவிலங்குகளுக்கு எட்டாத  மரக்கிளைகளில் ஏற்றி வைத்துள்ளனர்.

நடப்பாண்டு பருவமழை பொய்த்துவிட்டதால் தாளவாடி, ஆசனூர் மலைப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் வனவிலங்குகள் குடிநீர் தேடி வனத்தையொட்டியுள்ள கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன. அவை அங்கு சாகுபடி செய்யப்பட்ட விவசாயப் பயிர்களை நாசப்படுத்துவதும் கிராமமக்கள் அவற்றை விரட்டியடிப்பதும் வாடிக்கையாகிவிட்டது. விவசாய கிணறுகளில் குடிநீர் அதலபாதாளத்துக்கு சென்ற நிலையில், விவசாயத்துக்கு தேவையான தண்ணீரை பண்ணைக்குட்டையில் நிரப்பி சிக்கனமாக பயன்படுத்தி வருகின்றனர். 

இதற்கிடையில், யானைகளின் தொந்தரவு அதிகமாகி வருவதால் எட்டாத உயரத்தில் மரக்கிளைகளில் குடிநீர் தொட்டியை ஏற்றிவைத்து பாதுகாத்து வருகின்றனர். இது குறித்து ஆசனூர் விவசாயி கூறியது: வனவிலங்குகள் தாகம் தீர்க்க போதுமான தண்ணீர் வசதி வனத்தில் இல்லை. இதனால் அவை பக்கத்து விவசாய நிலங்களில் புகுந்து தொந்தரவு செய்கின்றன. அவைதவிர, செந்நாய்கள், மான்கள், காட்டுப்பன்றிகள் மற்றும் காட்டெருமைகள் போனற விலங்குகள் குடிநீர் தொட்டியை உடைத்து சேதப்படுத்துக்கின்றன. அவைகளிடமிருந்து பாதுகாக்க குடிநீர் தொட்டியை மரக்கிளையில் வைத்து பாதுகாத்து வருகிறோம். போர்வெல் தண்ணீரை மின்மோட்டார் மூலம் மரக்கிளையில் உள்ள தொட்டிக்கு சப்ளை செய்து, விவசாயத்துக்கும்  கால்நடைகளுக்கும் வழங்கி வருகிறோம் என்றார்.

0 comments:

Post a Comment