தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, March 27, 2014

பவானிசாகர் அருகே வாழைகளை சேதப்படுத்திய காட்டுயானைகள்


காட்டுயானைகளால் சேதமடைந்த  குலைதள்ளிய வாழைகள்
சத்தியமங்கலம்,மார்ச் 27:
பவானிசாகர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து வாழைகளை சேதப்படுத்திய யானைகளை வனத்துறையினர் விரட்டியடித்தனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த தொப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி கண்ணையன்(30).  பவானிசாகர் விளாமுண்டி வனப்பகுதியை ஒட்டி உள்ள இவரது தோட்டத்தில் கதலி ரக வாழைகள் சாகுபடி செய்துள்ளார். வியாழக்கிழமை அதிகாலை இவரது தோட்டத்துக்குள் புகுந்த 2 காட்டுயானைகள் வாழைகளை தின்றும் மிதித்தும் நாசப்படுத்தின. இதனால் குலைதள்ளிய 100 க்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன. 

யானைகள் நடமாட்டம் குறித்த வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்தும் தீ்ப்பந்தம் ஏந்தியும் யானைகளை விரட்டியடித்தனர்.

விளாமுண்டி வனத்தில் இருந்து யானைகள் வெளியேறுவதை தடுக்க வனத்துறை சார்பில் அகழிகள் வெட்டப்பட்டுள்ளன. ஆனால் குறைந்தளவே ஆழமுள்ள அகழிகளை யானைகள் தாண்டி செல்கின்றன. இதனை ஆழப்படுத்தினால் யானைகள் கிராமத்துக்குள் புகுவதை தடுக்க இயலும் என கிராமமக்கள் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment