தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, March 28, 2015

நாட்டுப்படகில் பவானிஆற்றை  கடந்துசென்ற பண்ணாரிஅம்மன் சப்பரம் 





சத்தியமங்கலம், மார்ச் 25:
கிராமங்களில் பண்ணாரியம்மன் உலா வருவதையொட்டி, அக்கரை தத்தப்பள்ளி செல்வதற்காக அதன் குறுக்கே செல்லும் பவானிஆற்றை நாட்டில் படகில் கடந்து சென்றது.அங்கு திரண்டிருந்த பக்தர்கள் அம்மனை மலர்கள் தூவி வரவேற்றனர்.

பிரசித்தி பெற்ற அருள்மிகு பண்ணாரியம்மன் கோயில் விழா திங்கள்கிழமை இரவு பூச்சாட்டுதலுடன் துவங்கியது.  கோயில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்ட பண்ணாரி்அம்மன் உற்வசர் புதன்கிழமை காலை  சிக்கரம்பாளையம் வந்தடைந்தது.  அங்கு வழிநெடுகிலும் மக்கள் மலர்களைதூவி அம்மனை வரவேற்றனர். இக்கிராமம் முழுவதும் அம்மன் வீதியுலா வந்து பக்தர்கள் அருள்பாலித்துவிட்டு சப்பரம் அன்றிரவு வெள்ளியம்பாளையம் புறப்பட்டு சென்றது.

தொடர்ந்து வெள்ளியம்பாளையம், கொத்தமங்கலம், முடுக்கன்துறை வழியாக தொட்டம்பாளையம் சென்றடைந்தது. வெள்ளிக்கிழமை வெள்ளியம்பாளையம்புதூரில் இருந்து அக்கரைத்தத்தப்பள்ளி சென்றது. அப்போது இரு கிராமங்களுக்கு இடையே பாயும் பவானிஆற்றை  நாட்டுப்படகில் கடந்து சென்றது. 

சனிக்கிழமை,  அய்யன்சாலை, தாண்டாம்பாளையம், இக்கரைநெகமம், கெஞ்சனூர் ஆகிய கிராமங்களில் வீதியுலா நிறைவுற்றதும் அம்மன் சப்பரம் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை தண்டுமாரியம்மன் கோயிலில் தங்குகிறது.

29,30-இல் சத்தியமங்கலம் நகர்ப்புறத்தில் திருவீதியுலா காட்சியளிக்கும். 31-ம் தேதி கோம்புப்பள்ளம் மாசான பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு  பட்டவர்த்தி அய்யம்பாளையம்,மாரியம்மன் கோயிலுக்கு சென்றடையும். . பிற்பகலில்  புதுவடவள்ளி, புதுக்குய்யனூர்,ராஜன்நகர் வழியாக  செவ்வாய்க்கிழமை மீண்டும் கோயிலை சென்றடைந்ததும். அன்றிரவு கோயிலில் திருக்கம்பம் சாட்டுதல் நடைபெறும். 

ஏப்ரல் 6-ஆம் தேதி இரவு திருக்குளம் சென்று அம்மன் அழைத்து வருதலும் 7-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்குதல் நடைபெறுகிறது.  13-ஆம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவுபெறும்.

Thursday, March 26, 2015

சத்தியமங்கலம் கிராமங்களில் பண்ணாரிஅம்மன் வீதி உலா




சத்தியமங்கலம், மார்ச் 25:
பண்ணாரியம்மன் கோயில் குண்டம் விழாவையொட்டி சிக்கரசம்பாளையத்துக்கு புதன்கிழமை வந்த பண்ணாரிஅம்மன் சப்ரத்துக்கு கிராமமக்கள் மலர்கள் தூவி வரவேற்றனர். 

பிரசித்தி பெற்ற அருள்மிகு பண்ணாரியம்மன் கோயில் விழா திங்கள்கிழமை இரவு பூச்சாட்டுதலுடன் துவங்கியது. கோயில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்ட பண்ணாரி்அம்மன் உற்வசர் புதன்கிழமை காலை சிக்கரம்பாளையம் வந்தடைந்தது. அங்கு வழிநெடுகிலும் மக்கள் மலர்களைதூவி அம்மனை வரவேற்றனர். இக்கிராமம் முழுவதும் அம்மன் வீதியுலா வந்து பக்தர்கள் அருள்பாலித்துவிட்டு சப்பரம் அன்றிரவு வெள்ளியம்பாளையம் புறப்பட்டு சென்றது.

தொடர்ந்து மார்ச்.26-ஆம் தேதி (இன்று) வெள்ளியம்பாளையம், கொத்தமங்கலம், முடுக்கன்துறை வழியாக தொட்டம்பாளையம் சென்றடையும். 27-இல் வெள்ளியம்பாளையம்புதூர்,அக்கரைத்தத்தப்பள்ளி கிராமங்களில் வீதி உலாவும் 28-ஆம் தேதி அய்யன்சாலை, தாண்டாம்பாளையம், இக்கரைநெகமம், கெஞ்சனூர் ஆகிய கிராமங்களில் வீதியுலா நிறைவுற்றதும் அம்மன் சப்பரம் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை தண்டுமாரியம்மன் கோயிலில் தங்குகிறது.

29,30-இல் சத்தியமங்கலம் நகர்ப்புறத்தில் திருவீதியுலா காட்சியளிக்கும். 31-ம் தேதி கோம்புப்பள்ளம் மாசான பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு பட்டவர்த்தி அய்யம்பாளையம்,மாரியம்மன் கோயிலுக்கு சென்றடையும். . பிற்பகலில் புதுவடவள்ளி, புதுக்குய்யனூர்,ராஜன்நகர் வழியாக செவ்வாய்க்கிழமை மீண்டும் கோயிலை சென்றடைந்ததும். அன்றிரவு கோயிலில் திருக்கம்பம் சாட்டுதல் நடைபெறும்.

அதைத்தொடர்ந்து கோயிலில் தினமும் மலைவாழ் மக்கள் தாரை,தப்பட்டை, பீனாட்சி வாத்தியத்துடன் அம்மன் புகழ்பாடும் களியாட்டமும், நித்தியப்படி பூஜையும் . ஏப்ரல் 6-ஆம் தேதி இரவு திருக்குளம் சென்று அம்மன் அழைத்து வருதலும் 7-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்குதல் நடைபெறுகிறது. 13-ஆம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவுபெறும்.
கோலாகலமாக துவங்கியது பண்ணாரியம்மன் கோயில் விழா




சத்தியமங்கலம்,மார்ச் 24:
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அருள்மிகு பண்ணாரியம்மன் கோயில் விழா திருப்பூச்சாட்டுதலுடன் திங்கள்கிழமை இரவு கோலாகலமாக துவங்கியது.
தமிழக காநாடகத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பண்ணாரியம்மன் கோயில் விழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும். இந்த விழாவில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று தீ மிதிப்பர்.

இந்தாண்டுக்கான விழா திங்கள்கிழமை இரவு மலைவாழ்மக்களின் தாரைதப்பட்டை வாத்தியங்கள் முழங்க திருப்பூச்சாட்டுதலுடன் துவங்கியது. விழாவையொட்டி, பண்ணாரி தெப்பகுளத்தில் அமைந்துள்ள சருகு மாரியம்மன் மற்றும் லிங்கேஷ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தப்பட்டன. அதன்பிறகு, சிக்கரசம்பாளையம், வெள்ளியம்பாளையம் மற்றும் இக்கரைத் தத்தப்பள்ளி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த கிராமமக்கள் கோயிலில் விழா நடத்த அம்மனிடம் பூவரம் கேட்டனர்.

அம்மனிடம் இருந்து வரம் கிடைத்ததும் சுமாமிக்கு சிறப்புபூஜைகள் செய்து விழாவுக்கான ஏற்பாடுகளை செய்ய துவங்கினர். இந்நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர், பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் சிக்கரசம்பாளையம், இக்கரைநெகமமன்புதூர், தத்தப்பள்ளி, வடவள்ளி, குய்யனூர் உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
விழாவையொட்டி, பல்வேறு கிராமங்களில் அம்மன் சப்பரத்தில் திருவீதியுலா வந்து சென்றால் கிராமங்கள் செழிக்கும் என்பது ஐதீகம். இதன்படி, செவ்வாய்க்கிழமை இரவு கோயிலில் இருந்து புறப்பட்ட அம்மன், புதன்கிழமை சிக்கரசம்பாளையத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும். அதனைத் தொடர்ந்து, அம்மன் வீதியுலா நிறைவுற்று மார்ச்.31ம் தேதி கோவிலை வந்தடையும்.
வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்கள் மூலம் புதிய யுக்திகள் உருவாகும்: மத்திய தகவல் தொழில்நுட்ப மதிப்பீட்டுகுழு செயலாளர் பிரபாத்ரஞ்சன்



சத்தியமங்கலம்,மார்ச் 21:
வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்கள் மூலம் புதிய யுக்திகள் உருவாகும் என மத்திய தகவல் தொழில்நுட்ப மதிப்பீட்டுகுழு செயலாளர் பிரபாத்ரஞ்சன், சனிக்கிழமை பண்ணாரிஅம்மன் கல்லூரியில் நடந்த ஆண்டுவிழாவில் மாணவர்களுக்கு ஆலோசனை தெரிவித்தார்.
சத்தியமங்கலம் பண்ணாரிஅம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற கல்லூரிஆண்டுவிழாவிற்கு கல்லூரித் தலைவர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். கல்லூரியில் சிறந்த மாணவராக ஜெ.மதேஸும் சிறந்த மாணவியாக பி.எல்.நந்தினிமீனாளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு டாக்டர் சுப்பையன் விருதை வழங்கி மத்திய தகவல் தொழில்நுட்ப மதிப்பீட்டுகுழு செயலாளர் பிரபாத்ரஞ்சன் பேசியது:

வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்கள் மூலம் புதிய யுக்திகள் உருவாகின்றன. தகவல் தொழில்நுட்ப மதிப்பீடு குழுவானது இலவச காப்புரிமையை பெற்று தருகிறது. இந்த காப்புரிமை தொழில்நுட்ப பரிமாற்றம் செய்ய உதவும். மென்பொருகள் உருவாக்குவதைவிட அதன் உதிரிபாகங்களை தயாரிப்பு நல்ல வளர்ச்சியை தரும். மாணவர்களிடம் உள்ள பலத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றார். அதைத்தொடர்ந்து, பல்வேறு துறைகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு ரூ.8.82 மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டன. இக்கல்லூரியில் இயந்திரவியல் துறை மாணவர் கோகுலச் செல்வனுக்கு டாக்டர் விஸ்வநாதன் விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சென்னை ஆர்.எஸ்.பி.எல். நிறுவன செயலாளர் ஜி.ஶ்ரீ.வித்யா, கல்லூரி ஆலோசகர் எம்.விஜயகுமார், முதல்வர் த.சரவணன், கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட மாணவ,மாணவியர்கள் கலந்துகொண்டனர்.
சத்தி முள்ளூர் மாகார்சி அம்மன் கோவில் விழா



சத்தியமங்கலம், மார்ச் 24:
சத்தியமங்கலம் முள்ளூர் மாகார்சி அம்மன் கோவிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆண்டவர்நகர் முள்ளூர் மாகார்சி அம்மன் கோவில் விழா கணபதி செவ்வாய்க்கிழமை காலை பூஜையுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து, ராமர் கோவிலில் இருந்து புறப்பட்ட பக்தர்கள் பவானிஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்புபூஜைகள் நடைபெற்றன. விழாவையொட்டி, அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக்குழுத் தலைவர் எஸ்.என்.மாரப்பன் தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர்.
பண்ணாரிஅம்மன் கோவிலில்  நடைபெற்ற கோமாதா பூஜை

 

ஈரோடு புறநகர் மாவட்ட பேரவை சார்பில் பண்ணாரிஅம்மன் கோவிலில் சனிக்கிழமை நடைபெற்ற கோமாதா பூஜையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலிலிதா மீண்டும் முதல்வராக வேண்டி பண்ணாரி்அம்மன் கோவிலில் சனிக்கிழமை நடைபெற்ற கோமாதா பூஜைக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் என்.டி.தோப்பு வெங்கடாசலம் தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம், புறநகர் மாவட்ட பேரவை செயலாளர் எஸ்.எஸ்.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவிலில் உள்ள 16 பசுமாடுகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு பூக்கள் தூவி, பழம் கொடுத்து வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து, கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி, கோவில் வளாகத்தில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் சத்தி வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சி.என்.மாரப்பன், சத்தி நகர்மன்றத் தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம், பவானிசாகர் ஒன்றிய செயலாளர் வி.ஏ.பழனிசாமி, சத்தி ஒன்றிய பேரவை செயலாளர் ஸ்ரீனிவாசன் , மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எஸ்.கே.பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Monday, March 23, 2015

 அதிமுக நிர்வாகிகள் தேர்தல்


சத்தியமங்கலம் அதிமுக நகர செயலாளர் பதவிக்கான வேட்புமனுவை கட்சி தேர்தல் அலுவலர் ஞாயிற்றுக்கிழமை தாக்கும் செய்கிறார் சத்தி நகர்மன்றத் தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம்.
அதிமுக நிர்வாகிகள் தேர்தல்



அதிமுக நிர்வாகிகள் தேர்தல் நடைபெறுவதையொட்டி, பவானிசாகர் ஒன்றிய செயலாளர் பதவிக்கான வேட்புமனுவை கட்சித் தேர்தல்அலுவலரிடம் தாக்கல் செய்கிறார் தற்போதைய ஒன்றிய செயலாளர் வி.ஏ.பழனிச்சாமி.
 அதிமுக நிர்வாகிகள் தேர்தல்



சத்தியமங்கலம் அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் பதவிக்கான வேட்புமனுவை கட்சி தேர்தல் அலுவலரிடம் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யும் தற்போதைய ஒன்றிய செயலாளர் சி.என். மாரப்பன். உடன், மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம் உள்ளிட்டோர்
பவானிசாகரில் குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வுப் பேரணி

 
 
சத்தியமங்கலம்
தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புண்ர்வு வாரத்தையொட்டி பவானிசாகரில் புதன்கிழமை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. 

பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இருந்து புறப்பட்ட பேரணியை பவானிசாகர் ஒன்றியக்குழு தலைவர் வி.ஏ.பழனிச்சாமி கொடியசைத்து தொடக்கி வைத்தார். இந்த பேரணியானது காவல்நிலையம், பஸ்நிலையம் மற்றும் மார்க்கெட்சதுக்கம் வழியாக பள்ளியை வந்தடைந்தது. குடிநீர் மற்றும் சுகாதாரத்தை பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ மாணவியர் ஏந்திச் சென்றனர்.மேலும், பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் குறித்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இப்பேரணியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தாமணி, சத்தி உட்கோட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரிய உதவி செயற்பொறியாளர் மணிவண்ணன், ஈரோடு மாவட்ட துணை நிலநீர் வல்லுனர்கள் மணி, துரைசாமி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்
தாளவாடியில் சர்வதேச மகளிர் தின விழா 

 
சத்தியமங்கலம், மார்ச் 15: தாளவாடி சூசையபுரம் ஆஷாகேந்திரா மியூச்சுவல் பெனிபிட் வெல்பேர் டிரஸ்ட்  தொண்டு நிறுவனம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. 

நிகழ்ச்சிக்கு  ஜஸ்டின் பிரான்சிஸ் தலைமை வகித்தார். தாளவாடி வட்டார உதவி தொடக்க கல்வி அலுவலர் ஆர்.ராஜம்மா, மைசூர் மத்திய பெண்கள் பெடரேஷன் அமைப்பின் கர்நாடக மாநில ஒருங்கினைப்பாளர் டாக்டர் பரிமளா ஆகியோர் கலந்துகொண்டனர்.  தாளவாடி ஊராட்சித் தலைவர் நஞ்சுண்டநாயக்கர் பேசுகையில், பெண்களின் பிரச்னைகள் தீர்வு காணாமல் இந்த சமுதாயமும் முன்னேற வாய்ப்பில்லை.  மகளிர் பிரச்னைக்கு பிரச்சனைகளுக்கு தீர்வு என்பது மகளிரே என்றும் எந்த மதமானாலும் பெண்களுக்கு என்று தனி சக்தியும் இடமும் உண்டு. அதை பெண்கள் கண்டறிந்து வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். இதில் 500க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் கலந்து கொண்டனர்.

 வனம் மற்றும் வனவிலங்குகள் விழிப்புணர்வு  பேரணி
 
 
 
சத்தியமங்கலம் மாவட்ட வனஅலுவலர் அலுவலகத்தில் புறப்பட்ட  வனம் மற்றும் வனவிலங்குகள் விழிப்புணர்வு  பேரணியை ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து துவக்கி வைக்கிறார் மாவட்ட வனஅலுவலர் கே.ராஜ்குமார். உடன், ஆசனூர் புலிகள் காப்பக உதவி இயக்குநர் பத்மா, வனஅலுவலர் ராமராஜ் உள்ளிட்டோர்

Sunday, March 15, 2015

அவிநாசி வாசிக்கிறது!
***************************



 

புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் சார்பில் அவிநாசியில் முதல்முறையாக புத்தக திருவிழா மார்ச் 13 முதல் 17 வரை ஐந்து நாட்கள் தேவாங்கர் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

அவிநாசி புத்தக திருவிழாவை முன்னிட்டும், புத்தகம் வாசிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி சாந்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் அவிநாசி வாசிக்கிறது என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் மோகன்குமார் தலைமை தாங்கினார். சமூக ஆர்வலர் வி.பி.முருகானந்தன் முன்னிலை வகித்தார். புத்தகம் வாசிப்பதன் அவசியம் குறித்து விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் பேசினார். பின்னர் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உள்பட 500 இகும் மேற்பட்டோர் புத்தகம் வாசித்தனர்.

அவிநாசி புத்தக திருவிழா குறித்து விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் கூறி இருபதாவது. இளைய தலைமுறையிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அவிநாசியில் முதல்முறையாக புத்தக திருவிழா மார்ச் 13 முதல் 17 வரை ஐந்து நாட்கள் தேவாங்கர் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

இக்கண்காட்சியில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பாரதி புத்தகாலயம் , விகடன் பதிப்பகம், தமிழ் தேசம் புத்தக நிலையம், ஸ்டுடண்ட் புக் ஹவுஸ், லாவா புக்ஸ், ரீடிங் இந்தியா புக்ஸ், விவேகானந்தா புத்தகாலயம், ஸ்பைடர் புக்ஸ், புக் வேர்ல்ட் உள்ளிட்ட 25 இகும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களின் புத்தக அரங்கங்கள் இடம் பெறுகின்றன. பல்வேறு தலைப்புகளில் இலட்சகணக்கான தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் ஒரே இடத்தில கிடைக்க உள்ளது.கல்வி குறுந்தகடுகளும் கிடைக்கும். புத்தக கண்காட்சியில் வாங்கும் அனைத்து புத்தகங்களுக்கும் 10 % சிறப்பு தள்ளுபடி வழங்க படுகிறது.

தினசரி மாலை 6 .30 மணிக்கு தலை சிறந்த பேச்சாளர்கள் பங்குபெறும் சிறப்பு சொற்பொழுவுகள் நடைபெறுகிறது. மார்ச் 13 ஆம் தேதி எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் பேசுகிறார். மார்ச் 14 ஆம் தேதி சமூக ஆர்வலர் வி.பி.முருகானந்தன் பேசுகிறார். மார்ச் 15 ஆம் தேதி பேராசிரியர் சூரிய நாராயணன் பேசுகிறார். மார்ச் 16 ஆம் தேதி திருமதி சித்ரா சுப்ரமணியன் பேசுகிறார். மார்ச் 17 ஆம் தேதி நிறைவு விழாவில் தாகம் கலைக்குழுவின் பல்சுவை கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

அவிநாசி புத்தக திருவிழாவின் ஐந்து நாட்களிலும் பள்ளி, கல்லூரி நிறுவனங்களும், பொதுமக்களும், மாணவ மாணவியர்களும் திரளாக கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.

Saturday, March 7, 2015

ஏப்ரல் 7 ல் பண்ணாரிஅம்மன் கோயில் குண்டம் திருவிழா. பந்தக்கால் நடும் வைபவத்துடன் தொடங்கியது.


 

சத்தியமங்கலம், மார்ச்.7: பண்ணாரிஅம்மன் கோயில் குண்டம் திருவிழாவிற்கான பந்தக்கால் நடப்பட்டு விழா தொடங்கியது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்
வனப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் உள்ளது.
சுற்றுலா தலமான இக்கோயிலுக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி
மாவட்டங்களிலிருந்தும், அண்டைமாநிலமான கர்நாடகாவிலிருந்தும்
இலட்சக்கணக்காண பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இத்திருவிழாவில் இலட்சக்கணக்காண பக்தர்கள் வரிசையில் நாள்கணக்கில்
காத்திருந்து தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவர். விழா தொடங்குவதற்கான முன்னோட்டமாக நேற்று கோயிலின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள விநாயகர் சன்னதி முன்புறம் சிறப்புபூஜைகள் செய்யப்பட்டு பந்தக்கால் நடப்பட்டது. இந்த ஆண்டு குண்டம் திருவிழா மார்ச் 23 ம் தேதி திங்கட்கிழமை இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. மார்ச் 24 ம் தேதி அம்மன் உற்சவர் சப்பரம் கோயிலில் இருந்து புறப்பட்டு சிக்கரம்பாளையம், இக்கரைநெகமம் புதூர், வெள்ளியம்பாளையம், கொத்தமங்கலம், தொட்டம்பாளையம், வெள்ளியம்பாளையம்புதூர், அக்கரைத்தத்தப்பள்ளி,  அய்யன்சாலை, தாண்டாம்பாளையம், இக்கரைநெகமம், கெஞ்சனூர்,  சத்தியமங்கலம், பட்டவர்த்தி அய்யம்பாளையம்,  புதுவடவள்ளி, புதுக்குய்யனூர், ராஜன்நகர் கிராமங்களில் திருவீதிஉலா நடைபெறுகிறது. மார்ச் 31 ம் தேதி அம்மன் சப்பரம் கோயிலை வந்தடைந்த பின் அன்றிரவு கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அதைத்தொடர்ந்து கோயிலில் தினமும் மலைவாழ் மக்கள் தாரை,தப்பட்டை, பீனாட்சி வாத்தியத்துடன் அம்மன் புகழ்பாடும் களியாட்டமும், நித்தியப்படி பூஜையும் நடைபெறும்.  ஏப்ரல் 6 ம் தேதி இரவு திருக்குளம் சென்று அம்மன் அழைத்து வருதல், 7 ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்குதல் நடைபெறுகிறது.  ஏப்ரல் 13 ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் இலட்சக்கணக்காண பக்தர்கள் திருவிழாவில் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள், பரம்பரை அறங்காவலர்கள், கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
திம்பம் மலைப்பாதையில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து. ஒருவர் பலி. இருவர் காயம்



 

சத்தியமங்கலம், மார்ச்.7. சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்ட ஊசி வளைவுகள் உள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இம்மலைப்பாதை வழியாக தமிழகம் மற்றுமு கர்நாடக மாநிலத்திற்கிடையே 24 மணிநேரமும் பேருந்து மற்றும் சரக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு பால் டேங்கர் லாரி திம்பம் மலைப்பாதையில் வந்து கொண்டிருந்தது. லாரியை திருநெல்வேலியை சேர்ந்த டிரைவர் பால்ராஜ்(40) ஓட்டினார். சத்தியமங்கம் சி.ஆர்.கிரேன் நிறுவனத்தில் ஆபரேட்டர்களாக பணிபுரியும் கோபிசெட்டிபாளையம் சந்திராபுரம் கஸ்பா வீதியை சேர்ந்த செந்தமிழ்செல்வன்(23), சேலம் எடப்பாடி, வேம்பட்டியை சேர்ந்த செந்தில் (28) ஆகியோர் ஆசனூரிலிருந்து லாரியில் சத்தியமங்கலம் செல்வதற்காக லிப்ட் கேட்டு ஏறி உடன் வந்தனர். லாரி 27 வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து மலைப்பாதையின் தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு மலைச்சரிவில் உருண்டு 25 வது கொண்டைஊசிவளைவு அருகே சாலையில் வந்து கொண்டிருந்த நிலக்கரி பாரம் ஏற்றி லாரியில் பக்கவாட்டில் மோதி நின்றது. இவ்விபத்தில் செந்தமிழ்செல்வன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஆசனூர் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த பால்ராஜ் மற்றும் செந்திலை மீட்டு  சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த செந்தமிழ்செல்வன் பிரேதத்தை பரிசோதனைக்காக சத்தியமங்கலம்  அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இவ்விபத்து காரணமாக தமிழகம் கர்நாடக மாநிலத்திறற்கிடையே ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.