தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, November 30, 2013

டிசம்பர் 1  - இன்று உலக எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு தினம்
************************************************************
       இன்று உலக அளவிலே அச்சுறுத்திவரும் உயிர்கொல்லி நோய் எய்ட்ஸ். இந்நோய்க்கு மருந்து கிடையாது. எய்ட்ஸ் நோய்க்கு முடிவு மரணம் மட்டுமே. எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வை இளைய தலைமுறை மற்றும் பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 1 ஆம் தேதி உலக எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கபடுகிறது.

எச்.ஐ.வி. :-

எச்.ஐ.வி. கிருமி மனித உடலில் உள்ள வெள்ளை அணுக்களை நேரடியாக தாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து பல நோய்கள் தக்க வழி செய்கிறது.

எய்ட்ஸ் ;-

உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பொது பல சந்தர்ப்பவாத நோய்கள் ஏற்படும் நிலையே உள்ளது.

எச்.ஐ.வி. /
எய்ட்ஸ் எவ்வாறு பரவுகிறது?
  • பாதுகாப்பற்ற முறையில் பலருடன் உடலுறவு கொண்டால் எச்.ஐ.வி. தொற்றுள்ள ஒரு நபரிடமிருந்து மற்றவருக்கு பரவும்.
  • பரிசோதிக்க படாத எச்.ஐ.வி. கிருமி உள்ள இரத்தம் பெறுவதன் மூலம் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவும்.
  • எச்.ஐ.வி. தொற்றுள்ள கர்ப்பிணி பெண்ணிடமிருந்து கருவில் இருக்கும் குழந்தைக்கு பரவ வாய்ப்புகள் உள்ளது.
  • கிருமி தொற்றுள்ள சுத்தம் செய்யபடாத ஊசிகளை பகிர்ந்து கொள்வதால் பரவும்.
எச்.ஐ.வி. / எய்ட்ஸ் இவைகள் மூலம் பரவாது!

  • ஒன்று சேர்ந்து விளையாடுவது போன்ற சாதாரண பழக்க வழக்கத்தினால் பரவாது.
  • எச்.ஐ.வி. தொற்று உள்ள ஒரு நபரின் இருமல் மற்றும் தும்மலின் மூலம் மற்றவருக்கு பரவாது.
  • எச்.ஐ.வி. தொற்று உள்ள ஒரு நபர் பயன்படுத்திய கழிவறையை மற்ற நபர் பயன்படுத்துவதன் மூலம் பரவாது.
  • எச்.ஐ.வி. உள்ள நபர் பயன்படுத்திய பொருட்களை மாற்றிகொள்வதால் பரவாது.
  • கொசுகடி மூலம் பரவாது.
எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள்!
  • மனைவியை மட்டுமே நேசி! எய்ட்ஸ் வருமா யோசி!
  • சாதிக்கும் வயதில் சபலம் வேண்டாம். சபலம்தான் மரணத்தை நோக்கி எடுத்து வைக்கும் முதல் அடி!
  • ஒருவனுக்கு ஒருத்தி என்பது நியதி! அதை மறந்தால் எய்ட்ஸ் வருவது உறுதி!
  • திருமணம் வரை காத்திருப்பீர்! மணவாழ்க்கை ஒன்றே எய்ட்ஸ்ஐ தடுக்கும்.
  • ஆணுறை எய்ட்ஸ்ஐ தடுக்கும். மனக்கட்டுப்பாடு ஒன்றே எய்ட்ஸ்ஐ தவிர்க்கும். 

கட்டுரையாளர்:
**********************
எஸ்.ஜெயகாந்தன், செயலாளர்,
விடியல் சமூகநல இயக்கம், புன்செய் புளியம்பட்டி
இன்று முதல்(டிச.1) அமலுக்கு வருகிறது  சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்
*******************************************************************************************************

சத்தியமங்கலம்,டிசம்பர் 1:

புலிகள் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி சத்தியமங்கலம் வனக்கோட்டம் இன்று (டிசம்பர் 1) முதல் புலிகள் காப்பகமாக நடைமுறைக்கு வருகிறது. 


தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் முதமலை, கோவை மாவட்டம் ஆனமலை, நெல்லை மாவட்டம் களக்காடு-முண்டந்துறை ஆகிய இடங்களில் புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது. அதைத் தொடர்ந்து, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் உத்தரவுபடி, அதன் நெறிமுறைகளைப் பின்பற்றி இன்று முதல்(டிச.1)  சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் உள்ள 1 லட்சத்து 4 ஆயிரம் எக்டேர் வனப்பரப்பு  புலிகள் காப்பகமாக அமல்படுத்தப்படுகிறது.

சத்தி  வனக்கோட்டத்தின் வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் கர்நாடக வனப்பகுதியும், தெற்கே நீலகிரி மற்றும் கோவை வனக்கோட்டமும் கிழக்கே ஈரோடு வனக்கோட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.  இங்கு யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, மான், செந்நாய், கரடி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இங்கு 25க்கும் மேற்பட்ட புலிகள் நடமாடுகின்றன. சத்தி வனக்கோட்டம் வனவிலங்குகள் வாழ்வதற்கான ஏற்ற சூழல் உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டது. 

சத்தியமங்கலம் வனக்கோட்டமானது  மாவட்ட வனஅலுவலர் தலைமையில்  செயல்பட்டு வந்தது. இனி, மாவட்ட வனஅலுவலர் நியமனம் இருக்காது. தேசிய புலிகள் ஆணைய உத்தரவுபடி இன்று முதல்(டிச.1) முதல் சத்தி வனக்கோட்டம்  புலிகள் காப்பகமாக தகுதி உயர்வு பெறுகிறது. மேலும் புலிகள் காப்பகத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையாக அமலுக்கு வருவதால் இனி கள இயக்குநர் தலைமையில் வனத்துறையினர் செயல்படுவர். மண்டல வனப்பாதுகாப்பு அலுவலர் இனி கள இயக்குநராகவும் மாவட்ட வனஅலுவலர்கள் துணை இயக்குநர்களாக செயல்படுவர்.

சத்தி வனக்கோட்டத்தில் சத்தி, பவானிசாகர், தாளவாடி, தூக்கநாயக்கன் பாளையம் ஆசனூர் என 5 வனச்சரகங்கள் செயல்பட்டு வந்தன. தற்போது,  பல்வேறு சரகங்களில் இருந்து சில பகுதிகளை பிரித்து கேர்மாளம், தலமலை என மேலும் 2  வனச்சரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.  புலிகள் காப்பம் அமலுக்கு வருவதால் சத்தி வனக்கோட்டம் 5இல் இருந்து 7 சரகங்களாக உயர்த்தப் பட்டுள்ளது. இதற்கென வனச்சரக அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என்பாளையம், தலமலை ஆகிய வனச்சரகங்கள் சத்தியமங்கலம் துணைஇயக்குனர் கட்டுப்பாட்டிலும், ஆசனூர், தாளவாடி, கேர்மாளம் ஆகிய வனச்சரகங்கள் ஆசனூர் துணைஇயக்குனர் கட்டுப்பாட்டிலும் இருக்கும்.
போக்குவரத்து பாதிப்பு




சத்தியமங்கலம் டிசம்பர் 1:
சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதை 9 வது கொண்டை ஊசி வளைவில் நேற்று காலை 9 மணியளவில் கட்டை பாரம் ஏற்றிய லாரி பழுதடைந்ததால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Friday, November 29, 2013

தாளவாடியில் மூடுபனி - கடும் குளிரால் மக்கள் அவதி!
****************************************************************************
சத்தியமங்கலம் நவம்பர் 30:

      சத்தியமங்கலம் அருகே தாளவாடி மலைபாங்கான பகுதியாகும்.இங்கு ஆண்டு தோறும் சராசரியாக 600 மி.மீட்டர் மலை பெய்கிறது. இதனை நம்பி விவசாயிகள் வேளாண்மை செய்து வருகின்றனர். மேலும் அக்டோபர் முதல் ஜனவரி வரை தொடர்ந்து 4 மாதங்கள் கடுங்குளிர் வாட்டி எடுக்கும். மாலை 5 மணிக்கே லேசான குளிர் எடுக்கும். பின்னர் நேரம் ஆக ஆக மூடுபனி அடர்த்தியாக பொழிய துவங்கி விடுகிறது. இதனால் இரவு முழுவதும் கடும்குளிர் ஏற்பட்டு பொது மக்களை வாட்டுகிறது.
        இந்த மூடுபனி இரவு முழுவதும் தொடர்கிறது. மறுநாள் விடிந்தாலும் காலை 8 மணி வரை அப்படியே உள்ளது. 10 அடி தூரத்தில் எதுவும் தெரிவது இல்லை. மேலும் மாலை 7 மணிக்குள் பொதுமக்கள் வீட்டினுள் சென்று முடங்கி விடுகின்றனர். இரவு முழுவதும் கடுங்குளிரால் பொதுமக்கள் மிகவும் அவதிபடுகின்றனர்.
புன்செய் புளியம்பட்டியில் சாலையோர வியாபாரிகள் சங்க கூட்டம்
************************************************************************
புன்செய் புளியம்பட்டி ,நவ 30:
புன்செய் புளியம்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட சாலையோர சிறு வியாபாரிகள் மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள் சங்கக் கூட்டம் பு.புளியம்பட்டியில் பி.எஸ்.கே.நிஜாம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இப்பகுதியில் வியாபாரம் செய்து வரும் 150 சாலையோர சிறு வியாபாரிகளைக் கொண்டு புதிய சங்கம் அமைக்கப்பட்டது. புதிய  தலைவராக பி.என்.ராஜேந்திரன், துணைத் தலைவராக பி.எஸ்.கே.நிஜாம், செயலாளராக சுப்பிரமணி (எ) ரகு,  துணைச் செயலாளராக ஈஸ்வரி, பொருளாளராக கணேசமூர்த்தி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதில், பவானிசாகர் சட்டப்பேரவை உறுப்பினர் பி.எல்.சுந்தரம், தமிழ்நாடு சாலையோர சிறு வியாபாரிகள் கூட்டமைப்பின் மாநில கன்வீனர்-வழக்கறிஞர் செவ்விளம்பரிதி ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், சாலையோர சிறுவியாபாரிகளுக்கான உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமலாக்க வேண்டும். சாலையோர சிறுவியாபாரத்தை ஒழுங்குபடுத்தவும், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் 2009-ஆம் ஆண்டு இந்திய அரசு ஒரு கொள்கையை வரையறுத்துள்ளது. அதன்படி நகர வியாபாரக் குழு அமைக்க நடவடிக்கை எடுத்து சாலையோர வியாபாரத்தை அங்கீகாரம் செய்ய வேண்டும். அதுவரை தற்போதைய வியாபாரத்திற்கு எவ்வித இடையூறையும் செய்யக்கூடாது என்ப உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Thursday, November 28, 2013

மழை வேண்டி சத்தியில் திருவிளக்குப்பூஜை
***************************************************************
சத்தியமங்கலம்,நவ 29:
மழை பெய்ய வேண்டி, சத்தியமங்கலம் நகர ஒன்றிய மற்றும் நகர விஷ்வ ஹிந்து பரிஷ் சார்பில் நடைபெற்ற திருவிளக்குப் பூஜையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சத்தி கோணமூலை பத்ரகாளியம்மன் கோவில் நடைபெற்ற திருவிளக்குப்பூஜைக்கு அலகுமலை ஸ்ரீ தபோவனம் பூஜ்யஸ்ரீ குகப்பிரியானந்த சரவஸ்வதி சுவாமி தலைமை வகித்தார்.விஷ்வ ஹிந்து பரிஷ் நகரத் தலைவர் ப.ஈஸ்வரமூர்த்தி முன்னிலை வரவேற்றார்.இந் நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். நாடு முழுவதும் மழை பெய்ய வேண்டியும் மழை வளம் பெருகவும் நாட்டில் அமைதி நிலவவும் விவசாயம் செழிக்க வேண்டி திருவிளக்குப்பூஜை நடத்தப்பட்டதாக விஷ்வ ஹிந்து பரிஷ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மாவீரர் தினம் - தீபமேற்றி மவுன அஞ்சலி
*********************************************



சத்தியமங்கலம், நவ.29.
இலங்கைப் போரில் உயிர் நீத்த தமிழர்களுக்காக அஞ்சலி செலுத்தும்
மாவீரர் தினம் பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமில் அனுசரிக்கப்பட்டது. இதில் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தீபமேற்றி மவுன அஞ்சலி செலுத்தினர்.
விளைநிலங்களுக்குள் ஆடுகள் நுழைவதை தடுக்க புதுயுக்தி!
***********************************************************************************
சத்தியமங்கலம், நவ.29.
          பவானிசாகர் பகுதியில் ஆடுகள் கம்பி வேலிக்குள் புகுந்து பயிரை மேயாமல் இருக்க ஆட்டின் கழுத்தில் குச்சிகளை கட்டும் புதிய யுக்தியை ஆட்டுப்பட்டி உரிமையாளர்கள் கையாண்டு வருகின்றனர். பவானிசாகர் நகர்ப்பகுதியில் 20 க்கும் மேற்பட்டோர் வெள்ளாடு வளர்ப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.


         ஆட்டுப்பட்டி உரிமையாளர்கள்ஆடுகளை தினமும் பவானிசாகர் நகர்ப்பகுதி, பவானிசாகர் அணை மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தின் 4 பண்ணைகளை ஒட்டியுள்ள தரிசு நிலங்களில் மேய்ச்சலுக்கு ஓட்டி செல்கின்றனர். வேளாண்பண்ணையை சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள முள்கம்பிவேலியில் கம்பிவலை துவாரம் பெரிதாக உள்ள இடங்களில் ஆடுகள் நுழைந்து
பண்ணைக்குள் பயிரிட்டுள்ள நெல் உள்ளிட்ட மற்ற பயிர்களை மேய்ந்துவிடுகின்றன.
       ஆடுகள் மேய்ந்து பயிர்கள் சேதமடைவதால் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் ஆட்டுப்பட்டி உரிமையாளர்களை அடிக்கடி எச்சரித்து வந்தனர். இப்பிரச்சினைக்கு தீர்வுகாண் ஆடுகளுக்கு கழுத்தில் 2 அடி நீளமுள்ள 3 குச்சிகளை ஆட்டின் கழுத்தில் இறுக்காதவாறு  கட்டி மேய்ச்சலுக்கு ஓட்டி செல்கின்றனர். குச்சிகள் நீளமாக உள்ளதால் ஆடு தலையை கம்பிவேலிக்குள் நுழைக்க முடிவதில்லை. இதனால் தற்போது ஆட்டு உரிமையாளர்கள் நிம்மதியாக மேய்ச்சலுக்கு செல்வதாக கூறுகின்றனர். இதைக்கண்ட பவானிசாகர் சுற்றுவட்டார கிராம மக்களும் இப்புதிய யுக்தியை கையாண்டு வருகின்றனர்.
புன்செய் புளியம்பட்டியில் 26 மாடுகள் பறிமுதல்!
**********************************************************

புன்செய் புளியம்பட்டி, நவ.29. கர்நாடக மாநிலத்திலிருந்து புன்செய் புளியம்பட்டிக்கு  மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டத்தில் பரவலாக கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவிவருவதால் கால்நடை சந்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலத்திலிருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வருவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே பவானிசாகர் அருகே உள்ள நால்ரோடு அண்ணாநகர் பகுதியில் கர்நாடக மாநிலத்திலிருந்து மாடுகளை கொண்டுவந்து  விற்பனை செய்வதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மண்டல துணைவட்டாட்சியர் செல்வராஜ் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றபோது கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரை சேர்ந்த மவுலா(30), ஜன்னத்(35), அப்துல்ரஷீத்(35), பாபு(35), மாதேவா(40) ஆகிய 5 பேரும் 26 மாடுகளை புஞ்சைபுளியம்பட்டி சந்தைக்கு கொண்டு சென்றதாகவும் சந்தைக்கு
தடைவிதிக்கப்பட்டுள்ளதால் இப்பகுதியில் மாடுகளை லாரியிலிருந்து இறக்கி
வியாபாரிகளுக்கு விற்க முயற்சித்ததும் தெரிய வந்தது.  மாடுகள் பறிமுதல்
செய்யப்பட்டு பெரியகள்ளிப்பட்டி அருகே உள்ள செல்வகணேசபுரம் பிராணிகள் நலசங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாடுகளை விற்க முயற்சித்த ஐவரை வருவாய்த்துறையினர் புன்செய் புளியம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Wednesday, November 27, 2013

விலையில்லா மடிக்கணிணி வழங்கிய தமிழக முதல்வருக்கு புன்செய் புளியம்பட்டி கெ.ஒ.ம. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் நன்றி
******************************************************************************************************************
       தமிழக மக்களின் குறிப்பாக மாணவ மாணவியர்களின் நலனில் மிகவும் அக்கறை கொண்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் மகத்தான திட்டங்களில் ஒன்றுதான் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கும் திட்டம்.இ ன்று தகவல் தொழில்நுட்பபுரட்சியின் உயர் சாதனையான கணிப்பொறி உயர்கல்வி பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மிகவும் தேவையான ஒன்று. ஆனால் அதிக தொகை கொடுத்து கணிப்பொறிகளை  வாங்கும் நிலையில் பெரும்பாலான ஏழை மாணவ மாணவியர்கள் இல்லை. கணிப்பொறி என்பது வசதி படைத்தவர்கள் மட்டுமே வாங்க முடிந்த பொருளாக இருந்தது. ஆனால் இந்நிலையை மாற்றி அனைத்து அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் தங்கள் உயர்கல்வியை சிறப்பாக தொடர உதவிய பெருமை மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்களயே சாரும்.  தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு தற்போது விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
       
சமிபத்தில் புன்செய் புளியம்பட்டி கெ.ஒ.ம. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 277 பேருக்கு விலையில்லா மடிகணினிகளை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம் மற்றும் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.சுந்தரம் ஆகியோர் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் கே.ஓதியப்பன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் லிங்கப்பா கவுண்டர், பவானிசாகர் ஒன்றிய குழு தலைவர் வி.எ. பழனிசாமி மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உள்பட பலர் பங்கு கொண்டனர்.

விலையில்லா மடிக்கணினிகளை பெற்று கொண்ட மாணவிகள் கூறியதாவது.


 1. என் பெயர் ஜி.சித்ரா. பெற்றோர் கோபால் - பேபி. என் தந்தை நெசவு தொழில் செய்கிறார். நான் புன்செய் புளியம்பட்டியில் வசிக்கிறேன். எங்கள் குடும்ப பொருளாதார சூழலில் கணிப்பொறி வாங்க முடியாது. இந்நிலையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வழங்கியுள்ள விலையில்லா மடிக்கணிணி  நான் உயர்கல்விகாக கல்லூரியில்  படிக்கும்போது மிகவும் உதவியாக இருக்கும். விலையில்லா மடிக்கணிணி வழங்கி எனது எதிர்கால வாழ்கைக்கு உதவிய மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு என் பெற்றோர் மற்றும் எனது பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

 
 2. என் பெயர் கே.அனிதா. பெற்றோர் கருப்புசாமி- சுப்பதாள். என் தந்தை கூலி தொழில் செய்கிறார். நான் புன்செய் புளியம்பட்டி அருகே ஆலபாளையம் கிராமத்தில்  வசிக்கிறேன். எங்கள் குடும்ப பொருளாதார சூழலில் கணிப்பொறி வாங்க முடியாது. இந்நிலையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வழங்கியுள்ள விலையில்லா மடிக்கணிணி  நான் உயர்கல்விகாக கல்லூரியில்  படிக்கும்போது மிகவும் உதவியாக இருக்கும். விலையில்லா மடிக்கணிணி வழங்கி எனது எதிர்கால வாழ்கைக்கு உதவிய மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு என் பெற்றோர் மற்றும் எனது பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.



3. என் பெயர் ஆர்.மோகனப்ரியா. பெற்றோர் ராஜேந்திரன் - பாக்யலட்சுமி. என் தந்தை கூலி தொழில் செய்கிறார். நான் புன்செய் புளியம்பட்டியில்  வசிக்கிறேன். எங்கள் குடும்ப பொருளாதார சூழலில் கணிப்பொறி வாங்க முடியாது. இந்நிலையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வழங்கியுள்ள விலையில்லா மடிக்கணிணி  நான் உயர்கல்விகாக கல்லூரியில்  படிக்கும்போது மிகவும் உதவியாக இருக்கும். விலையில்லா மடிக்கணிணி வழங்கி எனது எதிர்கால வாழ்கைக்கு உதவிய மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு என் பெற்றோர் மற்றும் எனது பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

4. என் பெயர் ஆர்.லக்ஷ்மி. பெற்றோர் ரங்கநாதன்-பேபி. என் தந்தை கூலி தொழில் செய்கிறார். நான் புன்செய் புளியம்பட்டி அருகேயுள்ள கோட்டபாளையம்   கிராமத்தில் வசிக்கிறேன். எங்கள் குடும்ப பொருளாதார சூழலில் கணிப்பொறி வாங்க முடியாது. இந்நிலையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வழங்கியுள்ள விலையில்லா மடிக்கணிணி  நான் உயர்கல்விகாக கல்லூரியில்  படிக்கும்போது மிகவும் உதவியாக இருக்கும். விலையில்லா மடிக்கணிணி வழங்கி எனது எதிர்கால வாழ்கைக்கு உதவிய மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு என் பெற்றோர் மற்றும் எனது பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

5. என் பெயர் கே.வி.நந்தினி. பெற்றோர் வெங்கடேஷ்- ராஜ்குமார். என் தந்தை கூலி தொழில் செய்கிறார். நான் புன்செய் புளியம்பட்டி அருகேயுள்ள திருமலைகவுண்டன்பாளையம்   கிராமத்தில் வசிக்கிறேன். எங்கள் குடும்ப பொருளாதார சூழலில் கணிப்பொறி வாங்க முடியாது. இந்நிலையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வழங்கியுள்ள விலையில்லா மடிக்கணிணி  நான் உயர்கல்விகாக கல்லூரியில்  படிக்கும்போது மிகவும் உதவியாக இருக்கும். விலையில்லா மடிக்கணிணி வழங்கி எனது எதிர்கால வாழ்கைக்கு உதவிய மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு என் பெற்றோர் மற்றும் எனது பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

6. என் பெயர் ஆர்.மோகனப்ரியா. பெற்றோர் ராஜேந்திரன்-கன்னிஅம்மாள்.என் தந்தை கூலி தொழில் செய்கிறார். நான் புன்செய் புளியம்பட்டி அருகேயுள்ள வண்டிபாளையம்  கிராமத்தில் வசிக்கிறேன். எங்கள் குடும்ப பொருளாதார சூழலில் கணிப்பொறி வாங்க முடியாது. இந்நிலையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வழங்கியுள்ள விலையில்லா மடிக்கணிணி  நான் உயர்கல்விகாக கல்லூரியில்  படிக்கும்போது மிகவும் உதவியாக இருக்கும். விலையில்லா மடிக்கணிணி வழங்கி எனது எதிர்கால வாழ்கைக்கு உதவிய மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு என் பெற்றோர் மற்றும் எனது பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

7. என் பெயர் எஸ்.மைவிழி. பெற்றோர் செல்வன் - கவிதா. என் தந்தை கூலி தொழில் செய்கிறார். நான் புன்செய் புளியம்பட்டி அருகேயுள்ள கோப்பம்பாளையம்  கிராமத்தில் வசிக்கிறேன். எங்கள் குடும்ப பொருளாதார சூழலில் கணிப்பொறி வாங்க முடியாது. இந்நிலையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வழங்கியுள்ள விலையில்லா மடிக்கணிணி  நான் உயர்கல்விகாக கல்லூரியில்  படிக்கும்போது மிகவும் உதவியாக இருக்கும். விலையில்லா மடிக்கணிணி வழங்கி எனது எதிர்கால வாழ்கைக்கு உதவிய மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு என் பெற்றோர் மற்றும் எனது பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

8. என் பெயர் ச.கோகிலா. பெற்றோர் செல்வராஜ்- பாப்பாத்தி. என் தந்தை கூலி தொழில் செய்கிறார். நான் புன்செய் புளியம்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையம்  கிராமத்தில் வசிக்கிறேன். எங்கள் குடும்ப பொருளாதார சூழலில் கணிப்பொறி வாங்க முடியாது. இந்நிலையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வழங்கியுள்ள விலையில்லா மடிக்கணிணி  நான் உயர்கல்விகாக கல்லூரியில்  படிக்கும்போது மிகவும் உதவியாக இருக்கும். விலையில்லா மடிக்கணிணி வழங்கி எனது எதிர்கால வாழ்கைக்கு உதவிய மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு என் பெற்றோர் மற்றும் எனது பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அய்யப்ப பக்தர்கள் வருகையால் பண்ணாரி அம்மன் கோவிலில் கூட்டம் அதிகரிப்பு
*****************************************************************************************************************

சத்தியமங்கலம், நவ.28
சத்திய மங்கலம் அருகே உள்ள பண்ணாரியம்மன் கோவில் தமிழகத்தில் உள்ள புகழ் பெற்ற தலங்களில் ஒன்றாகும். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வனப்பகுதியை யொட்டி உள்ள இந்த கோவிலில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
தற்போது சபரிமலை அய்யப்பமார்கள் சீசனை யொட்டி பண்ணாரியம்மன் கோவிலுக்கு கடந்த சில நாட்களாக வரும் கூட்டம் அதிகரித்து உள்ளது.
சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் பலர் இங்கு வந்து பண்ணாரியம்மனை வழிபட்டு போகிறார்கள். பண்ணாரி, தாளவாடி, ஆசனூர், சத்திய மங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வந்து வணங்கிவிட்டு சபரி மலை புறப்பட்டு செல்கிறார்கள்.

இதேபோல் சாம்ராஜ் நகர், மைசூர், கொள்ளேகால் உள்பட கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் அய்யப்ப பக்தர்களும் செல்லும் வழியில் பண்ணாரியம்மன் கோவிலில் தங்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு பண்ணாரி அம்மனை நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டு சென்ற வண்ணம் உள்ளனர்.
இதனால் பண்ணாரியம்மன் கோவிலில் பகல்–இரவு என பக்தர்கள் கூட்டம் அலைமோதிய வண்ணம் உள்ளனர்.
சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணிணி வழங்கும் விழா
**************************************************************************************************************
சத்தியமங்கலம், நவ.28.


சத்தியமங்கலம் அருகே பவானிசாகர்  அரசு  மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் 12 ம் வகுப்பு மாணவ மாணவிகள் 94 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் நஞ்சன் வரவேற்றார். பேருராட்சித்தலைவர் வெங்கடாசலம், துணைத்தலைவர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம், பவானிசாகர் எம்எல்ஏ பி.எல்.சுந்தரம் ஆகியோர் விழாவிற்கு தலைமை தாங்கி பள்ளி மாணவ மாணவியர் 94 பேருக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பவானிசாகர் பால்வள கூட்டுறவு சங்க தலைவர் ராஜகோபால், தொட்டம்பாளையம் சவுடேஸ்வரி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு  சங்க தலைவர் கோபால், பேருராட்சி கவுன்சிலர்கள், பள்ளி ஆசிரியர்கள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tuesday, November 26, 2013

புன்செய் புளியம்பட்டியில் அறுபத்து மூவர் திருவீதி  உலா
********************************************************************************
புன்செய் புளியம்பட்டி நவம்பர் 27:      
       புன்செய் புளியம்பட்டி உண்ணாமுலையம்மை உடனமர் அண்ணாமலையார் திருகோவிலில் அறுபத்துமூவர் திருவீதி  உலா மிக சிறப்பாக நடைபெற்றது. காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் தங்கள் திருகரங்களால் நால்வர் பெருமக்களுக்கு பன்னீர் அபிஷேகம் செய்தனர். மாலை 63 நாயன்மார், தொகையடியார் ஒன்பது பேர் மற்றும் பஞ்சமூர்த்திகள் வீற்று இருந்த திருத்தேர் வீதிஉலா நடைபெற்றது. ஊர்வலத்தில் மகளிர் அணியினர் சீருடை அணிந்து ஆடியும், பாடியும் வந்தனர். பவானி, திருப்பூர் மற்றும் ராசிபுரம் திருத்தொண்டர்கள் கைலாய வாத்தியங்களை விண்அதிர முழங்கினார்கள்.


     இந்நிகழ்சிகளில் சிறப்பு அழைப்பாளர்களாக தவத்திரு குமரகுருபர அடிகள், சிவத்திரு ந.இரா.சென்னியப்பனார், சிவத்திரு ப.குமரலிங்கம், சிவத்திரு அ.தியாகராசன், சிவத்திரு ச.த.ஆறுமுகம், திருப்பூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் வழிபாட்டுகுழு சிறப்பாக செய்து இருந்தது. இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Monday, November 25, 2013

விலையில்லா மிதிவண்டி வழங்கிய தமிழக முதல்வருக்கு
பனையம்பள்ளி  மேல்நிலைபள்ளி மாணவ மாணவியர்கள் நன்றி
******************************
************************************************************

சத்தியமங்கலம் நவம்பர் 27:   
    
         தமிழ்நாட்டு மக்கள் மற்றும் மாணவ மாணவியர்களின் நலனில் மிகவும் அக்கறை கொண்ட மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் பயன் அளிக்கும் பல்வேறு நல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.
         ஒரு நாடு பொருளாதாரத்தில் முதன்மையாக திகழ வேண்டும் என்றால் அதற்கு அடிப்படையாக திகழ்வது கல்வியாகும். இதனை நன்கு உணர்ந்த மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் கல்வியறிவு பெற்று திகழ வேண்டும் என்ற நோக்கத்தில் 2013 - 2014 ஆம் நிதியாண்டில் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கி மாணவர்கள் கல்வி கற்க தேவையான பாடநூல், நோட்டு புத்தகம், சீருடை, காலனி, விலையில்லா பேருந்து அட்டை, அட்லஸ், பென்சில், ஜாமென்றி பாக்ஸ், விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிக்கணினி ஆகியவற்றை வழங்கி வருகிறார். அத்தோடு கல்வி இடைநிற்றலை தவிர்க்க ஊக்கத்தொகை ரூபாய் 1500 மற்றும் ரூபாய் 2500 வழங்கி வருகிறார்.
        
     கிராமப்புற மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு திட்டம் தான் விலையில்லா மிதிவண்டி திட்டம். சமீபத்தில் பவானிசாகர் அருகேயுள்ள பனையம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பனையம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எ.தேவேந்திரன் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கே.குருசாமி தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம், பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.சுந்தரம் ஆகியோர் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்கள். மொத்தம் 51 மாணவ மாணவியர்களுக்கு மிதிவண்டிகள்  வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பவானிசாகர் ஒன்றியகுழு தலைவர் வி.எ.பழனிசாமி, பனையம்பள்ளி ஊராட்சி தலைவர் ஈஸ்வரன், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உள்பட பலர் பங்கு கொண்டனர்.
                      விலையில்லா மிதிவண்டிகளை பெற்றுக்கொண்ட மாணவ மாணவியர்கள் கூறியதாவது.     

1. என் பெயர் யா.சுவாதி. பெற்றோர் யாதவன் - நிர்மலா. என் தந்தை கூலி தொழில் செய்கிறார். நான் பனையம்பள்ளி கிராமத்தில் வசிக்கிறேன். பள்ளிக்கு நேரத்துக்கு வர தமிழக அரசு வழங்கியுள்ள மிதிவண்டி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிதிவண்டி வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வருக்கு எனது பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

 
2. என் பெயர் கே.நந்தினி. பெற்றோர் குமாரசாமி -சாந்தி . என் தந்தை விவசாய தொழில் செய்கிறார். நான் பனையம்பள்ளி அருகே உள்ள மல்லியம்பட்டி கிராமத்தில் வசிக்கிறேன். எங்கள் ஊர் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நான் பள்ளிக்கு நடந்து தான் வந்து கொண்டு இருந்தேன்.பள்ளிக்கு நேரத்துக்கு வர தமிழக அரசு வழங்கியுள்ள மிதிவண்டி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிதிவண்டி வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வருக்கு எனது பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
 
3. என் பெயர் ஆர்.ஜோதிமணி. பெற்றோர் ரங்கசாமி - மலர்கொடி . என் தந்தை விவசாய தொழில் செய்கிறார். நான் பனையம்பள்ளி அருகே உள்ள மல்லியம்பட்டி வடக்கு தோட்டம் காலனியில் வசிக்கிறேன். எங்கள் ஊர் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நான் பள்ளிக்கு நடந்து தான் வந்து கொண்டு இருந்தேன். தற்போது பள்ளிக்கு நேரத்துக்கு வர தமிழக அரசு வழங்கியுள்ள மிதிவண்டி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிதிவண்டி வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வருக்கு எனது பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
 
4. என் பெயர் ஜி.மகேஸ்வரி. பெற்றோர் குருநாதன் - கீதா. என் தந்தை கூலி தொழில் செய்கிறார். நான் பனையம்பள்ளி அருகே உள்ள பெரிய பருசபாளையத்தில்  வசிக்கிறேன். எங்கள் ஊர் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நான் பள்ளிக்கு நடந்து தான் வந்து கொண்டு இருந்தேன். தற்போது பள்ளிக்கு நேரத்துக்கு வர தமிழக அரசு வழங்கியுள்ள மிதிவண்டி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிதிவண்டி வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வருக்கு எனது பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
 
5. என் பெயர் பி.மோகனப்ரியா. பெற்றோர் பத்திரன் - பாப்பாள். என் தந்தை கூலி தொழில் செய்கிறார். நான் பனையம்பள்ளி அருகே உள்ள தேசிபாளையம் கிராமத்தில் வசிக்கிறேன். எங்கள் ஊர் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நான் பள்ளிக்கு நடந்து தான் வந்து கொண்டு இருந்தேன். தற்போது பள்ளிக்கு நேரத்துக்கு வர தமிழக அரசு வழங்கியுள்ள மிதிவண்டி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிதிவண்டி வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வருக்கு எனது பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.


6. என் பெயர் பி.அன்னபூரணி. பெற்றோர் பழனிசாமி - பொன்னி. என் தந்தை கூலி தொழில் செய்கிறார். நான் பனையம்பள்ளி அருகே உள்ள வெங்கநாயக்கன்பாளையம் கிராமத்தில் வசிக்கிறேன். எங்கள் ஊர் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நான் பள்ளிக்கு நடந்து தான் வந்து கொண்டு இருந்தேன். தற்போது பள்ளிக்கு நேரத்துக்கு வர தமிழக அரசு வழங்கியுள்ள மிதிவண்டி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிதிவண்டி வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வருக்கு எனது பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
 
7. என் பெயர் பி.சங்கீதா. பெற்றோர் பழனி - சாந்தி. என் தந்தை கூலி தொழில் செய்கிறார். நான் பனையம்பள்ளி அருகே உள்ள கலை நகரில்  வசிக்கிறேன். எங்கள் ஊர் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நான் பள்ளிக்கு நடந்து தான் வந்து கொண்டு இருந்தேன். தற்போது பள்ளிக்கு நேரத்துக்கு வர தமிழக அரசு வழங்கியுள்ள மிதிவண்டி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிதிவண்டி வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வருக்கு எனது பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

8. என் பெயர் எஸ்.கிருஷ்ணவேணி. பெற்றோர் சங்குமணி - சுமித்ரா. என் தந்தை கூலி தொழில் செய்கிறார். நான் பனையம்பள்ளி அருகே உள்ள பாச்சாமல்லநூர் கிராமத்தில் வசிக்கிறேன். எங்கள் ஊர் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நான் பள்ளிக்கு நடந்து தான் வந்து கொண்டு இருந்தேன். தற்போது பள்ளிக்கு நேரத்துக்கு வர தமிழக அரசு வழங்கியுள்ள மிதிவண்டி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிதிவண்டி வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வருக்கு எனது பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.


பாய்1. என் பெயர் எஸ்.அஜித்குமார். பெற்றோர் செல்வராஜ் - கண்ணம்மாள். என் தந்தை கூலி தொழில் செய்கிறார். நான் பனையம்பள்ளி அருகே உள்ள பனங்காட்டுபாளையம்  கிராமத்தில் வசிக்கிறேன். எங்கள் ஊர் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நான் பள்ளிக்கு நடந்து தான் வந்து கொண்டு இருந்தேன். தற்போது பள்ளிக்கு நேரத்துக்கு வர தமிழக அரசு வழங்கியுள்ள மிதிவண்டி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிதிவண்டி வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வருக்கு எனது பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
 
 பாய் 2. என் பெயர் ஆர்.மணிகண்டன். பெற்றோர் ராமசாமி - பழனிஅம்மாள். என் தந்தை கூலி தொழில் செய்கிறார். நான் பனையம்பள்ளி அருகே உள்ள பாச்சாமல்லநூர் கிராமத்தில் வசிக்கிறேன். எங்கள் ஊர் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நான் பள்ளிக்கு நடந்து தான் வந்து கொண்டு இருந்தேன். தற்போது பள்ளிக்கு நேரத்துக்கு வர தமிழக அரசு வழங்கியுள்ள மிதிவண்டி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிதிவண்டி வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வருக்கு எனது பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 
பாய் 3. என் பெயர் ஆர்.தேவன். பெற்றோர் ரங்கசாமி - ராதா. என் தந்தை கூலி தொழில் செய்கிறார். நான் பனையம்பள்ளி அருகே உள்ள கே.வி.கே. நகரில் வசிக்கிறேன். எங்கள் ஊர் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நான் பள்ளிக்கு நடந்து தான் வந்து கொண்டு இருந்தேன். தற்போது பள்ளிக்கு நேரத்துக்கு வர தமிழக அரசு வழங்கியுள்ள மிதிவண்டி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிதிவண்டி வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வருக்கு எனது பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
 
பாய் 4. என் பெயர் டி.மதன்குமார்.  பெற்றோர் துரைசாமி - தனலட்சுமி. என் தந்தை விவசாய தொழில் செய்கிறார். நான் பனையம்பள்ளி அருகே உள்ள குறும்பபாளையம் கிராமத்தில் வசிக்கிறேன். எங்கள் ஊர் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நான் பள்ளிக்கு நடந்து தான் வந்து கொண்டு இருந்தேன். தற்போது பள்ளிக்கு நேரத்துக்கு வர தமிழக அரசு வழங்கியுள்ள மிதிவண்டி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிதிவண்டி வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வருக்கு எனது பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
 
 
பாய் 5. என் பெயர் கே.மெய்ஞானம்.  பெற்றோர் காளியப்பன் - ராஜேஸ்வரி. என் தந்தை கூலி தொழில் செய்கிறார். நான் பனையம்பள்ளி அருகே உள்ள தாசம்பாளையம் கிராமத்தில் வசிக்கிறேன். எங்கள் ஊர் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நான் பள்ளிக்கு நடந்து தான் வந்து கொண்டு இருந்தேன். தற்போது பள்ளிக்கு நேரத்துக்கு வர தமிழக அரசு வழங்கியுள்ள மிதிவண்டி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிதிவண்டி வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வருக்கு எனது பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
விளைநிலங்களில் ஆலைகழிவுகளை கொட்டிய லாரி சிறைபிடிப்பு
****************************************************************************
புன்செய் புளியம்பட்டி, நவ.27.

புன்செய் புளியம்பட்டி அருகே விவசாய நிலங்களில் சர்க்கரை ஆலைக்கழிவை கொட்டிய லாரியை கிராமமக்கள் திங்கள்கிழமை சிறைபிடித்தனர்.

 சத்தியமங்கலம் அடுத்துள்ள புன்செய் புளியம்பட்டி உயிலம்பாளையம் வடக்குத்தோட்டத்தை சேர்ந்தவர் விவசாயி ராமராஜ்(51).  இவருக்கு பனையம்பள்ளி கிராமத்தில் 10 ஏக்கர் மானாவாரி நிலம் உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை தனியார்  சர்க்கரை ஆலையில் இருந்து வந்த மொலாசஸ் டேங்கர் லாரி ராமராஜ் தோட்டத்தில்ஆலைக்கழிவை கொட்டிவிட்டு சென்றது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. மேலும், ரசாயனம் கலந்த கழிவால் தோட்டத்தில் வளர்ந்த புட்செடிகள் கருகி விட்டன.

இக்கிராமத்தையொட்டியுள்ள மானாவாரி நிலங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வர். தற்போது,  விவசாயிகள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லாமல் தவித்தனர். இந்நிலையில், தனியார்  சர்க்கரை ஆலையில் இருந்து திங்கள்கிழமை பனையம்பள்ளி கிராமத்துக்கு வந்த  ஒரு மொலாசஸ் லாரியை கிராமமக்கள் பிடித்து சர்க்கரை கழிவு கொட்டுவதை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த பவானிசாகர் எம்எல்ஏ  பி.எல்.சுந்தரம், கிராம நிர்வாக அலுவலர்  மோகன் ஆகியோர் லாரி டிரைவர் பாலமுருகனிடம்  விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து, கிராமநிர்வாக அலுவலர் மொலாசஸ் லாரியை சத்தி வட்டாட்சியர் (பொறுப்பு) அருணாச்சலத்திடம் ஒப்படைத்தனர். 

இப்பிரச்னைக்கு தீர்வு காணப்தற்கான சமாதானக்கூட்டம் சத்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் பவானிசாகர் எம்எல்ஏ பி.எல்.சுந்தரம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பண்ணாரிஅம்மன் சர்க்கரை ஆலை நிர்வாகிகள், பனையம்பள்ளி கிராமமக்கள் மற்றும்  வட்டாட்சியர்(பொறுப்பு) அருணாச்சலம் ஆகியோர் கலந்துகொண்டனர். 

எதிர்வரும் காலத்தில் விளைநிலங்களில் ஆலைக்கழிவுகளை கொட்டுவதில்லை என சர்க்கரை ஆலை நிர்வாகிகள் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர்.இதனை பொதுமக்கள் ஏற்றுக்கொண்டதையடுத்து ஆலைக்கு சொந்தமான மொலாசஸ் லாரியை வருவாய்த்துறையினர் விடுவித்தனர்.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 5,600 கனஅடியாக அதிகரிப்பு!
************************************************************




கேரள வனப்பகுதி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்புப் பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 5,600 கனஅடியாக அதிகரித்துள்ளது.
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. இதன் நீர்மட்டக் கொள்ளளவு 120 அடி. இதில் 15 அடி சேறும் சகதியுமாக உள்ளது. அணை மூலம் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கடந்த சில மாதங்களாக மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில்  மழை பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து நாள்தோறும் சராசரியாக 2,000 கனஅடிக்கு குறைவாக இருந்தது. இதனால், நீர்வரத்துக்கு ஏற்ப, அணையில் இருந்து பவானி ஆறு மற்றும் கால்வாய்க்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக மேற்குத் தொடர்ச்சி மலையில் மழை பெய்து வருவதாலும், மின்உற்பத்திக்காக பில்லூர் அணையில் தண்ணீர் திறந்து விடப்படுவதாலும், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 67 அடியாகவும் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 5,600 கனஅடியாகவும் உள்ளது. அணையில் இருந்துவிநாடிக்கு, ஆற்றில் 400 கனஅடியும் கால்வாயில் 1900 கனஅடி நீரும் திறந்துவிடப்படுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, தெங்குமரஹாடா மற்றும் பவானிசாகர் பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர வாய்ப்புள்ளதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.

Friday, November 22, 2013

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
*********************************************************



சத்தியமங்கலம் நவம்பர் 22
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக திகழ்வது பவானி சாகர் அணை. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று மழை பெய்துள்ளது.
ஊட்டி மலைப்பகுதிகளான குண்டா என்ற பகுதியில் 55 மி.மீட்டர் மழையும், கெத்தைபகுதியில் 72 மி.மீட்டர் மழையும், குன்னூர் 47 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இந்தமழை நீர்மாயாற்றின் வழியாக பவானிசாகர் அணைக்குவருகிறது. இதனால் அணையின் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு 1627 கனஅடி நீர் வந்தது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு 2142 கனஅடி தண்ணீர் வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளது.
நேற்று 67.03 ஆக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று 67.07 ஆக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்காலில் 1800 கனஅடிநீரும், பவானி ஆற்றில் 200 கனஅடி நீரும் திறந்து விடப்படுகிறது.

Wednesday, November 20, 2013

சத்தியமங்கலம்  மல்லிகை செடிகளுக்கு கவாத்து செய்யும் பணியில் விவசாயிகள்
**************************************************************************************************************************

சத்தியமங்கலம் நவம்பர் 21 :
சத்தியமங்கலம்  சில நாள்களாக பனிப்பொழிவு நிலவிவருவதால் மல்லிகை செடிகளுக்கு கவாத்து செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள சிக்கரசம்பாளையம், கெஞ்சனூர், தாண்டாம்பாளையம், பகுத்தம்பாளையம், இக்கரை தத்தப்பள்ளி, வெள்ளியம்பாளையம், கொத்தமங்கலம், ராஜன் நகர், புதுவடவள்ளி, காராச்சிக்கொரை, தொப்பம்பாளையம், கோடேபாளையம், தொட்டம்பாளையம், எரங்காட்டூர், ஆலாம்பாளையம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லி, முல்லை, ரோஜா, சம்பங்கி, செண்டுமல்லி, கோழிக்கொண்டை உள்ளிட்ட பூக்கள்  சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு விளையும் பூக்கள், சத்தியில் உள்ள தமிழ்நாடு விவசாயிகள் மலர்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் வியாபாரிகள் முன்னிலையில் ஏலம் விடப்படுகிறது.
கோவை, ஈரோடு, சேலம், மைசூர், தும்கூர், சிமோகா, பெங்களுரு, ஹைதராபாத், மும்பை நகரங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானம் மூலமும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தற்போது மழை குறைந்து கடுமையாக பனி கொட்டுவதால் மல்லிகை செடியில் அரும்புகள் சிறுத்து மகசூல் குறைந்துவிட்டது. இதனால் பூச்செடிகளை கவாத்து செய்யும் பணியில் (பூச்செடிகளின் முதிர்ந்துபோன மேல்பகுதிகளை வெட்டி எடுத்தல்) விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து தொட்டம்பாளையம் விவசாயி காளியப்பன் கூறியது: செடிகளை கவாத்து செய்வதால், பிப்ரவரி மாதத்தில் செடிகள் துளிர்த்து புத்துயிர் பெறும். 3 மாதங்கள் கழித்து பூ விளைச்சல் அதிகரிக்கும். பனிப்பொழிவு காரணமாக பூக்கள் உற்பத்தி குறைந்துகொண்டே வருகிறது. கடந்த மாதம் 20 டன்னாக இருந்த வரத்து தற்போது 5 டன்னாக குறைந்துவிட்டது என்றார்.

Tuesday, November 19, 2013

பொதுமக்களை அச்சுறுத்தும் மக்னா யானை
***********************************************


சத்தியமங்கலம் வனக்கோட்டத்திற்குட்பட்ட பண்ணாரி பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன.தீவனம் தேடி அலையும் யானைகள் திம்பம் வனத்தில் இருந்து பண்ணாரி காட்டுக்கு இடம் பெயருவது வழக்கம்.இந்நிலையில், திம்பம் காட்டுப்பகுதியில் இருந்து வெளியே வந்த மக்னாயானை  மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரம் நின்று கொண்டு காட்டுக்குள் செல்லாமல்  அடம்பிடித்தது. இதனால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள் யானை காட்டுக்குள் செல்லும் வரை காத்திருந்து பின்னர் வாகனங்களை இயக்கினர்.
பவானிசாகர் வயல்வெளிகளில் காட்டுயானைகள் அட்டகாசம்
******************************************************************



சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகர் தொட்டம்பாளையம் முருகன்,சின்னமணி ஆகியோருக்கு கீழ்பவானி வாய்க்காலையொட்டி நெல் வயல்கள் உள்ளன. இந்நிலையில், திங்கள்கிழமை நெல்வயலுக்குள் புகுந்த  காட்டுயானைகள் அங்கு சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்களை நாசப்படுத்தின.அங்கு வந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானைகளை விரட்டினர்.
பவானிசாகர் அருகே வேப்பமரத்தில் பால்வடியும் அதிசயம்
**********************************************************************************

சத்தியமங்கலம், நவ 20:
பவானிசாகர் அருகே வேப்பமரத்தில் பால் வடிந்துவருவதாக வந்த தகவலையடுத்து அப்பகுதி மக்கள் அந்த வேப்பமரத்தை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

சத்தியமங்கலம் அடுத்துள்ள  அய்யன்சாலை செட்டிதோட்டத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (40)  விவசாயி. இவரது தோட்டத்தில் உள்ள கருப்பராயன் கோயில் வளாகத்தில் கருவேம்பு, இச்சி, அத்தி மற்றும் வின்ன மரங்கள் உள்ளன. இக்கோவிலி்ல் உள்ள கருப்பராயன், கன்னிமார், முனீஸ்வரன், வீரமாத்தி, மராட்டி மற்றும்  விராடதன்னாசி சிலைகளை அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர்.


இந்நிலையில், இந்திராநகரை சேர்ந்த கூலித்தொழிலாளர்களாக ராஜசேகர், சின்னச்சாமி, சேகர், ரவி, அல்லிமுத்து, ராஜன், செந்தில், முருகன், அர்ஜீனன் ஆகியோர் வாழைத்தோட்டத்தில் களைவெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது வேப்பமரத்தின் உச்சியிலிருந்து பால் போன்ற திரவம் சொட்டுவதை பார்த்தனர்.

இது குறித்து தோட்டத்து உரிமையாளர் ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த கோவில் பூசாரி கருப்பஆசாரி மற்றும் ராஜேந்திரன் பால்வடியும் அதிசய வேப்பமரத்தைப் பார்த்தனர்.இது பற்றி பக்கத்து கிராமமக்களுக்கு பரவியதால் இதனை ஏராளமானோர் பார்த்துச் சென்றனர்.

இதுகுறித்து பூசாரி கருப்பஆசாரி கூறியதாவது. கோவில் வளாகத்தில் உள்ள வேப்பமரம் 200 ஆண்டு கால பழமை வாய்ந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு மரத்தை வெட்டுவதற்கு கோவிலில் வரம் கேட்டபோது சாமி உத்தரவு அளிக்கவில்லை. அதனால் மரத்தை வெட்டாமல் விட்டுவிட்டோம். மரத்தில் வடியும் பாலை எடுத்து அருந்தியதில் அது சுவையுடன் இருப்பது ஆச்சிரியமாக உள்ளது. இதையடுத்து, வேப்பமரத்துக்கு அபிஷேக பூஜை நடத்தப்படும் என்றார். 


வேப்பமரத்தில் பால்வடியும் காட்சியை சுற்றுவட்டார கிராமங்களான அய்யன்சாலை, உத்தண்டியூர், ராமாபுரம், மாரனூர், இந்திராநகர், அக்கரைதத்தப்பள்ளி, எரங்காட்டுர், சாஸ்திரிநகர், ஆலாம்பாளையம், கரிதொட்டம்பாளையம், வாய்க்கால்புதூர், மற்றும் தொட்டமப்£ளையம் கிராமமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்து வருகின்றனர்.


புன்செய் புளியம்பட்டியில் உலக கழிப்பறை தின விழிப்புணர்வு பேரணி
************************************************************************************************
        ஆண்டுதோறும் நவம்பர் 19 ஆம் தேதி உலக கழிப்பறை தினமாக கடைபிடிக்க படுகிறது. இதை முன்னிட்டு புன்செய் புளியம்பட்டி நகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் கே.வி.கே.அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. 

   
        இந்நிகழ்ச்சிக்கு புன்செய் புளியம்பட்டி நகராட்சி ஆணையாளர் (பொ) லலிதாமணி தலைமை தாங்கினார். கே.வி.கே. அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி தலைமை ஆசிரியர் கே.துரைசாமி, நகராட்சி சுகாதார ஆய்வாளர் வே.வீரபாகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி துணை தலைவர் டி.பாபு கொடியசைத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். விழிப்புணர்வு ஊர்வலம் கே.வி.கே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவங்கி சத்தி மெயின் ரோடு, பாவடி வீதி வழியாக மீண்டும் பள்ளியை அடைந்தது. இந்நிகழ்ச்சியில் நகராட்சி அனைத்து பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட 200 இகும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Monday, November 18, 2013

தேசிய ஒருமைப்பட்டு தின உறுதிமொழி
******************************************


சத்தியமங்கலம் நவம்பர் 19:

முன்னால் பாரத பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் பிறந்த நாளான நவம்பர் 19 ஆம் தேதி தேசிய ஒருமைப்பட்டு தினமாக ஆண்டுதோறும் கடைபிடிக்க படுகிறது. இதையொட்டி புன்செய் புளியம்பட்டி அருகேயுள்ள பேரநாயக்கன்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய ஒருமைப்பட்டு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ப.வெங்கடாசலம் தலைமை தாங்கினார். விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் முன்னிலை வகித்தார். இந்திரா காந்தி அவர்களின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் மாணவ மாணவியர்கள் தேசிய ஒருமைப்பட்டு உறுதிமொழி எடுத்தனர். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் த.சசிகலா, பொ.வடிவேலன் உள்பட 100 இக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.