தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, February 28, 2014

சத்தி ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் கோவில் காவடி ஆட்டம்

 

 
சத்தியமங்கலம் ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற மஹா சிவராத்தி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் கோவில் விழா வியாழக்கிழமை கணபதி பூஜையுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து, ஸ்ரீ ராமர் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமிக்கு  அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு கொடியேற்றுதல் மற்றும் தீர்த்தக்குடம் எடுத்து வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

வெள்ளிக்கிழமை காலை சுவாமி ஆற்றில் இருந்து அழைத்து  வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 5 மணிக்கு காவடி எடுக்கும் பக்தர்கள் பவானிஆற்றுக்கு சென்று அங்கு காவடிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து, பக்தர்கள், காவடி ஆட்டத்துடன் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். வழிநெடுகிலும்  காவடி ஆட்டத்தைப் பார்த்த பக்தர்கள் பரவசமடைந்தனர். சிவன் அவதாரங்களில் ஒன்றான தன்னாசி மண்உருவசிலையை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி பக்தர்கள் வழிபட்டனர். இரவு நடந்த மஹா அபிஷேக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
சத்தியில் பள்ளி மாணவன் மாயம்

 
 
சத்தியமங்கலம், மார்ச்.1. சத்தியமங்கலத்தில் பள்ளிக்கு வந்த மாணவன் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது. சத்தியமங்கலம் விஎன்எஸ் நகரைச்சேர்ந்தவர் கோபால்(40). சென்டரிங் தொழிலாளியான இவரது மகன் கார்த்திக் (எ) கௌதம் (14). சத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வருகிறான். கவுதம் கையில் அடிபட்டுள்ளதால் கட்டு போடப்பட்டுள்ளது. நேற்று காலை வழக்கம் போல் பள்ளி செல்வதாக தாயார் யசோதாவிடம் கூறிவிட்டு தந்தை கோபால் பள்ளிக்கு கொண்டு வந்து விட்டுச்சென்றுள்ளார். கவுதம் பள்ளி வகுப்பறைக்கு சென்று பையை வைத்துவிட்டு பள்ளியை விட்டு வெளியே சென்று விட்டான். கவுதம் பள்ளியில் இல்லாததைக் கண்டு ஆசிரியர்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே கோபால் மற்றும் அவரது உறவினர்கள் கவுதமை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே பவானி ஆற்றுப்பாலத்திற்கு கீழ் அவனது செருப்பு, சட்டை மற்றும் பள்ளி அடையாள அட்டை இருந்தது. இதனால் ஆற்றில் குளித்த போது காணாமல் போய்விட்டானா என்ற சந்தேகத்தில் ஆற்றில் இறங்கி தேடி பார்த்தனர். அங்கும் இல்லாததால் வேறு எங்காவது சென்று விட்டானா என தேடி வருகின்றனர். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பவானிசாகர் அருகே தலையில் தேங்காய் உடைத்து விநோத வழிபாடு



பவானிசாகர் அருகே அய்யம்பாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செய்யும் விநோத வழிபாட்டில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகரை அடுத்துள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் தொட்டம்மா, சின்னம்மா மற்றும் மகாலட்சுமி கோயில்களில் மகாசிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி வியாழக்கிழமை  மாலை 4 மணிக்கு கிராம தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு விழா தொடங்கியது.

இக்கிராமத்தில் உள்ள குரும்பர் இன மக்கள் பாரம்பரியமாக விரதம் இருந்து தங்களது இஷ்டதெய்வங்களிடம் வரம் வேண்டி வழிபட்டனர். வரம் கிடைத்த  பக்தர்கள் கோவில் கருவறையில் பூசிக்கப்பட்ட தேங்காய்களை எடுத்து வந்து பூசாரி முன்  தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

 

அதனைத் தொடர்ந்து,  மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மூலவர் வைக்கப்பட்டு  தாரை தப்பட்டை முழங்க பவானி ஆற்றுக்கு சாமி அழைப்பதற்காக புறப்பட்டு சென்றனர். அங்கு சிறப்புபூஜைகள் செய்து ஆற்றங்கரையிலும் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தனர். அதன்பிறகு,  பவானி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்தல் நிகழ்ச்சியும்  நள்ளிரவிலும் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும்  நிகழ்ச்சி நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து, பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். இக்கிராமத்தில்
விவசாயம் செழிக்கவும், கால்நடைகள் நோயின்றி வாழவும், மழை பெய்யவேண்டியும்,  தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்வது ஐதீகம் என இக்கிராம மக்கள் தெரிவித்தனர்.  அய்யம்பாளையம்,கோவை மாவட்டம் தீத்திபாளையம், அஜ்ஜனூர், கல்வீரம்பாளையம், சின்னத்தடாகம், கெம்பையனூர், வண்டிக்காரனூர், சுண்டப்பாளையம், கஸ்தூரிபாளையம், பச்சாபாளையம், ஒக்கரியூர், நாயக்கனூர் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து
குரும்பர் இன மக்கள்  5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடும்பம் சகிதமாக கலந்து கொண்டனர். விடிய விடிய நடைபெற்ற இவ்விழா பாதுகாப்பு பணியில் பவானிசாகர் போலீசார் ஈடுபட்டிருந்தனர்
புன்செய் புளியம்பட்டி அருகே மரம் நடும் விழா
கலெக்டர் துவக்கி வைத்தார்.



 புன்செய் புளியம்பட்டி அருகே உள்ள மாராயிபாளையம் கிராமத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு மரம் நடும் விழாவை கலெக்டர் வி.கே.சண்முகம் துவக்கி வைத்தார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 66வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 66 லட்சம் மரக்கன்றுகள் நடும்பணியை முதல்வர் துவக்கி வைத்தார். அதன்படி புன்செய் புளியம்பட்டி அருகே உள்ள மாராயிபாளையம் கிராமத்தில்  மரக்கன்றுகளை நட்டு விழாவை கலெக்டர் வி.கே.சண்முகம் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எஸ்.ஆர். செல்வம், பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.சுந்தரம், பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வி.ஏ.பழனிசாமி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் பங்கு கொண்டனர்.
தாசரிபாளையம் அம்மா திட்ட முகாமில் 45 மனுக்கள் மீது உடனடி தீர்வு 


சத்தியமங்கலம் தாசரிபாளையத்தில் வருவாய்த்துறையின் மக்களைத் தேடி 
அம்மா திட்ட முகாமில் 45 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது.

சத்தியமங்கலம் அடுத்துள்ள கொமாரபாளையம் ஊராட்சிக்குட்பட்ட  தாசரிபாளையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற  வருவாய்த்துறையின் மக்களைத் தேடி அம்மா திட்ட முகாமுக்கு கொமாரபாளையம் ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.நஞ்சப்பன் தலைமை வகித்தார். சத்தி சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் எம்.ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.  முகாமில், குடும்ப அட்டை, சாதிச்சான்றிதழ்,பட்டா மாறுதல்,  குடும்ப அட்டையில் பெயர் நீக்கல் மற்றும் சேர்த்தல், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட 64 மனுக்கள் பெறப்பட்டன. 

இதில் 45 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது. நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டாட்சியர் எம்.செல்வராஜ், வருவாய் அலுவலர் டி.வான்மதி, கிராம நிர்வாக அலுவலர் எம்.ஜெயம்மா, கேஎன் பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் டி.கே.சேனாபதி, தாசரிபாளையம் அதிமுக செயலாளர் முத்துவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பு.புளியம்பட்டி நகர அம்மா பேரவை சார்பில்ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம்,நோட்டு புத்தகம்,பேனா வழங்கப்பட்டது.
************************************************************



  முதல்வரின் பிறந்த நாளையொட்டி புன்செய் புளியம்பட்டி நகர அம்மா பேரவை சார்பில் மதரசா குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம்,பேனா மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
   புன்செய் புளியம்பட்டி நகர அம்மா பேரவை சார்பில் முதல்வரின் 66வது பிறந்த நாளையொட்டி புன்செய் புளியம்பட்டி நகர பகுதிகளில் அண்ணா திமுக கட்சி கொடி ஏற்றியும் ,இனிப்புகள் வழங்கியும், கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்தும் கொண்டாடப்பட்டது.
  
 
  தொடர்ந்து ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முஸ்லிம் மதரசா குழந்தைகள் 207 பேருக்கு நோட்டு புத்தகம்,பேனா மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

 புன்செய் புளியம்பட்டி நகர அம்மா பேரவை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு நகர அம்மா பேரவை செயலாளரும்,கூட்டுறவு சங்க தலைவருமான ஆர்.ராமசாமி தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.மாவட்ட எம்.ஜி.ஆர் .மன்ற துணை செயலாளர் கே,ஜி.கோபால் வரவேற்று பேசினார். நகர  செயலாளர் எம்.கே.ராஜேந்திரன், நகர் மன்ற துணைத்தலைவர் டி.பாபு , ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலும் நகர துணை செயலாளர் ஆர் நாகராஜ்,ஒன்றிய மகளிர் அணி செயலாளர் ஆனந்த பிரபா ,பேரவை இணை செயலாளர் ஜி.கே.மூர்த்தி , எ.சி. டபுள்யு பொன்னுசாமி  உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் பேரவை இணை செயலாளர் ராஜன் சிவக்குமார் நன்றி கூறினார்.

Thursday, February 27, 2014

புன்செய் புளியம்பட்டியில் 150 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு


புன்செய் புளியம்பட்டி நகராட்சி திருமண மண்டபத்தில் பவானிசாகர் வட்டார குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பாக கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட ஆட்சி தலைவர் முனைவர் வி.கே.சண்முகம் தலைமை தாங்கி கர்ப்பிணி பெண்களுக்கு சீர் தட்டுகளை வழங்கினார். மாவட்ட திட்ட அலுவலர் தேவிகுமரி வரவேற்றார். ஈரோடு மாவட்ட ஊராட்சி தலைவர் எஸ்.ஆர்.செல்வம் முன்னிலை வகித்தார். பவானிசாகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.சுந்தரம் விழாவினை துவக்கி வைத்தார்.
பவானிசாகர் ஒன்றிய குழு தலைவர் வி.ஏ.பழனிசாமி, புளியம்பட்டி நகராட்சி துணை தலைவர் டி.பாபு, புளியம்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்தன், விண்ணப்பள்ளி மருத்துவ அலுவலர் வெங்கடாசலம் , பவானிசாகர் ஆணையாளர் சார்லஸ் கென்னடி மற்றும் ஊராட்சி தலைவர்கள், துணை தலைவர்கள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் 150 கர்ப்பிணி பெண்களுக்கு சீர் தட்டுகள் வழங்கப்பட்டது. நிறைவாக பவானிசாகர் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்(பொறுப்பு) உஷாராணி நன்றி கூறினார்.
தேமுதிக, பாமக எம்.எல்.ஏக்கள் ஜெயலலிதாவுடன் சந்திப்பு

 

 
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை தேமுதிகவைச் சேர்ந்த திருத்தனி தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் அருண் சுப்ரமணியம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த வேலூர் அணைக்கட்டு தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் கலையரசன் ஆகியோர் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, தங்களது தொகுதியின் வளர்ச்சிக்கு உதவுமாறு முதல்வர் ஜெயலலிதாவிடம், இரு எம்.எல்.ஏ.க்களும் கோரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன

Wednesday, February 26, 2014

வங்கதேசத்துக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றி தேடித்தந்தார் கோஹ்லி

 

பதுல்லா: ஆசிய கோப்பை லீக் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக சதம் அடித்து தனி ஆளாக போராடி வெற்றி தேடித்தந்தார் கேப்டன் விராத் கோஹ்லி. ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடக்கிறது. பதுல்லாவில் நேற்று நடந்த லீக் போட்டியில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராத் கோஹ்லி, பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆரம்பத்தில் புவனேஸ் வரும், முகமது ஷமியும் ஓரளவுக்கு நன்றாக பந்து வீசினர். சம்சுர் ரஹ்மானை (7) முகமது ஷமியும், மொமினுல் ஹக்கை (23) அஸ்வினும் வெளியேற்றினர். ஆனால், 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் முஷ்பிகுர் ரஹ்மானும், அனாமுல் ஹக்கும் அபாரமாக விளையாடினர். இந்த ஜோடிக்கு இந்திய பந்துவீச்சாளர்களால் எந்த நெருக்கடியும் தர முடியவில்லை. இந்திய பந்துவீச்சு படுமோசமாக இருந்ததால், இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 133 ரன்களை சேர்த்தது. அனாமுல் ஹக் (77) ஆரோன் பந்தில் வெளியேறினார்.

மறுமுனையில் அட்டகாசமாக ஆடிய கேப்டன் முஷ்பிகுர் ரஹ்மான் ஒருநாள் அரங்கில் தனது 2வது சதத்தை பூர்த்தி செய்தார். அதிரடியாக ஆடிய இவர் 113 பந்தில் 117 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் 50 ஓவரில் வங்கதேச அணி 7 விக்கெட் இழப்புக்கு 279 ரன் குவித்தது. இந்திய தரப்பில் முகமது ஷமி 10 ஓவரில் 50 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். 280 ரன் என்ற கடின இலக்கை சேஸ் செய்த இந்திய அணி பேட்டிங்கிலும் சொதப்பியது. துவக்க ஆட்டக்காரர்களான தவானும், ரோகித் சர்மாவும் ரன் எடுக்கவே திணறினர். தவான் 28, சர்மா 21 ரன்னில் வெளியேறினர்.

இக்கட்டான நிலையில் களமிறங்கிய கேப்டன் விராத் கோஹ்லி, ரகானேவுடன் இணைந்து பொறுப்புடன் ஆடினர். தனி ஆளாக போராடிய கோஹ்லி, வங்கதேசத்தின் பந்துவீச்சை துல்லியமாக கணித்து பவுண்டரி, சிக்சர் விளாசி சதம் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார். ஒருநாள் போட்டியில் அவர் அடித்த 19வது சதம் இது. மறுமுனையில் ரகானேவும் அரைசதத்தை கடந்தார். இந்த ஜோடி 213 ரன் சேர்த்த போது கோஹ்லி 136 ரன்னில் வெளியேறினார்.  ரகானே 73 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 49 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 280 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு இன்று முதல் ஹால்டிக்கெட்!

 
 
 
சென்னை: பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் இன்று முதல் இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்கக இயக்குநர் கு.தேவராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கூறியுள்ளதாவது: "பிளஸ்2 தேர்வு வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுத ‘சிறப்பு அனுமதி திட்டத்தின்' (தக்கல்) கீழ் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் இன்று மதியம் முதல் (www.tndge.in) என்ற இணையதளத்தில் தங்களது விண்ணப்ப எண்ணையும், பிறந்த தேதியினையும் பதிவு செய்து ‘ஹால்டிக்கெட்'டை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். கேட்டல், பேசுதல் திறன் தேர்வு மற்றும் செய்முறைத்தேர்வு செய்ய வேண்டிய தேதிகள் பற்றிய விவரங்கள் குறித்து, தனித்தேர்வர்கள் ஹால்டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ளலாம். ஏற்கனவே உரிய நேரத்தில் பிளஸ்2 தேர்வு எழுத ஆன் லைனில் விண்ணப்பித்து ஹால்டிக்கெட்டுகளை இதுவரையில் பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளாத தனித்தேர்வர்களும், மேற்குறிப்பிட்ட இணையதளத்தின் மூலம் உடனடியாக ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார்.

அபூர்வ நாயகன் - கமல் ஹாஸனைப் பற்றிய புத்தகம் வெளியீடு

 
 
நடிகர் கமல் ஹாஸனைப் பற்றி அபூர்வ நாயன் என்ற தலைப்பில் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசனின் அலுவலகத்தில், இப்புத்தகத்தை உருவாக்கிய ராமராஜ் காட்டன் நிறுவனத்தின் தலைவர் கே.ஆர்.நாகராஜன் இப்புத்தகத்தை வெளியிட, நடிகர் கமல்ஹாசன் பெற்றுக் கொண்டார்.

 
இந்தப் புத்தகத்தில் கமல்ஹாசனின் பல அரிய புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கின்றன. அதோடு கமலின் சாதனைகளை விளக்கும் வகையில் சில கவிஞர்களின் கவிதைகளும், கமலின் திரையுலக சாதனைகள் குறித்த புள்ளிவிபரங்களும் இப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது. இப்புத்தகம் வெளியிட்டது குறித்து குறிப்பிட்ட கே.ஆர்.நாகராஜன், "1960-ம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் சிறு பையனாக நுழைந்து இன்றுவரையிலும் தனது கடின உழைப்பால், வித்தியாசமான முயற்சிகளால் தமிழ்ச் சினிமாவின் புகழை உயர்த்தியிருக்கும் கமல்ஹாசனுக்கு ராமராஜ் காட்டன் நிறுவனம் செய்திருக்கும் ஒரு சிறிய சமர்ப்பணம் இது..," என்றார்.

 
நளினி உட்பட 4 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!!

 
 
 
டெல்லி: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உட்பட 4 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்தது. ராஜிவ் வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்கை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக்கியது உச்சநீதிமன்றம். இதைத் தொடர்ந்து இந்த மூவர் உட்பட ராஜிவ் வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்தது. பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரது விடுதலைக்கு எதிராகத்தான் அம்மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்று மூவரையும் விடுதலை செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

அப்போது எஞ்சிய 4 பேர் விடுதலைக்கும் மத்திய அரசு சார்பில் தடை கோரப்பட்டது. அதற்கு தனியே மனுத்தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நளினி உட்பட 4 பேரின் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு மனுத் தாக்கல் செய்தது. இம்மனுவை இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. இந்த விசாரணையின் முடிவில் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு இடைக்கால தடையை உச்சநீதிமன்றம் விதித்தது.

 

 

பண்ணாரிஅம்மன் கோவிலுக்கு வந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்,புதியதாக துவங்கப்பட்ட புன்செய் குரல் இணையதளத்தை பார்வையிடுகிறார். இதில் ஈரோடு மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம், சத்தி நகர்மன்றத் தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம், சத்தி ஒன்றிய  அதிமுக செயலாளர் வி.சி.வரதராஜ்,  பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் வி.ஏ.பழனிச்சாமி, கொமாரபாளையம் ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.நஞ்சப்பன்,கோணமூலை ஊராட்சி கழக செயலாளர் மணிகண்ட சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



 


 

தமிழக முதல்வர் 66வது பிறந்தநாளை முன்னிட்டு வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளையும் வென்று அம்மா பாரத பிரதமராக அரியணையில் அமர வேண்டும் என பண்ணாரி மாரியம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் அதிமுகவினர் தங்கத்தேர் இழுத்தனர். இதில் ஈரோடு மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம், சத்தி நகர்மன்றத் தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம், சத்தி ஒன்றிய  அதிமுக செயலாளர் வி.சி.வரதராஜ்,  பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் வி.ஏ.பழனிச்சாமி, கொமாரபாளையம் ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.நஞ்சப்பன்,கோணமூலை ஊராட்சி கழக செயலாளர் மணிகண்ட சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரி வனக்குடியிருப்பில்  முன்னாள் அமைச்சரும், கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் பண்ணாரி வனக்குடியிருப்பு வளாகத்தில் 66 மரக்கன்றுகளை நட்டார். உடன் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம் சத்தியமங்கலம் நகராட்சித்தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம், பவானிசாகர் ஒன்றியக்குழு தலைவர் பழனிச்சாமி உள்ளிட்டோர்.
கொமராபாளையம் ஊராட்சியில் நாள்தோறும் குடிநீர் விநியோகம்

 
சத்தியமங்கலம் அடுத்துள்ள கொமாரபாளையத்தில் கோடைகாலத்தில் ஏற்படும் குடிநீ்ர் பிரச்னை தவிர்க்க பலவேறு முன்னெச்சரிக்கை நடவடிக்க எடுக்கப்பட்டுள்ளதாக ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.நஞ்சப்பன் தெரிவித்தார்.இது குறித்து மேலும் அவர் கூறியது:

இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தில் 24 வீடுகள் ரூ.28 .80 லட்சம் செலவிலும் முதல்வரின் சூரிய சக்தி வசதியுடன் 45 பசுமை வீடுகள் ரூ.1.02 கோடி செலவிலும் கட்டப்பட்டுள்ளன. சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து கொமாரபாளையம் பவானி ஆற்றில் நீரேற்று கிணறு அமைத்து  குடிநீர் சுத்திகரிப்பு செய்யும் ரூ.16.25  லட்சம் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  ஊராட்சியில் பல்வேறு இடங்களில் ரூ.32.90 லட்சம் செலவில் கான்கிரீட் தளம், வடிகால் வசதி மற்றும் சிறுபாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 


தாசரிபாளையம், எம்ஜிஆர்நகர், இந்திராநகர், காமராஜ்நகர், கொமராபாளையம்,குமரன்கரடுஅங்கண்ணகவுன்டர்புதூர் ஆகிய இடங்களில் ரூ.10 லட்சம் செலவில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. காரணச்சேரி, செங்கோட்டையன் நகர் ஆகிய இடங்களில் ரூ.14 லட்சம் செலவில் மகளிர் சுகாதார வளாகமும்  காரணக்சேரி கிராமத்தில் ரூ.9 லட்சம் செலவில் சாண எரிவாயு கலன் மற்றும்  குண்டு குழியுமாக காணப்பட்ட காமராஜ்நகர், இந்திராநகர் மற்றும் கொமராபாளையம் அரசு மருத்துவமனை சாலை ஆகியவை ரூ.16 லட்சம் செலவில் தார் சாலையும் அமைக்கப்பட்டுள்ளன.
 மார்ச் 18-ல் பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா

பண்ணாரி அம்மன் கோயில்
பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா மார்ச் 18ம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.

தமிழக கர்நாடக மாநிலத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பண்ணாரி அம்மன் கோயில் விழா மார்ச் 3ம் தேதி திருப்பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. 10ம் தேதி திங்கள்கிழமை இரவு கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து, கிராமங்களில் பண்ணாரி அம்மன் திருவீதி உலா நடைபெறும்.

மார்ச் 17ம் தேதி இரவு அம்மன் அழைப்பும் குண்டம் விழாவும் 18-ம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை பக்தர்கள் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெறும். 19ம் தேதி இரவு புஷ்பரதம்,20ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா மற்றும் மாவிளக்கு எடுத்தல், 21ம் தேதி திருவிளக்குப்பூஜை மற்றும் தங்கத்தேர் புறப்பாடும் மார்ச்.24ம் தேதி மறுபூஜை நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டி குழுவினர் செய்து வருகின்றனர்.

அதிமுக தேர்தல் அறிக்கை: முக்கிய அம்சங்கள்

 

மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.
அதிமுக தேர்தல் அறிக்கையில் தமிழ் பிரதியை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும், ஆங்கிலப் பிரதியை விசாலாட்சி நெடுஞ்செழியன் பெற்றுக் கொண்டார்.
பின்னர் பேட்டியளித்த முதல்வர், தேர்தல் அறிக்கையில் நிறைய பக்கங்களும், அறிவிப்புகளும் இடம்பெற்றிருப்பதாக கூறினார்.
மேலும், ஒட்டுமொத்த இந்தியாவுக்கான வளர்ச்சித் திட்டங்கள் அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருப்பதாக அவர் தெரிவித்தார்.
அதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களின் வளர்ச்சி என்பது இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளையும், வெளியுறவுக் கொள்கையையும், நிதிக் கொள்கையையும் பொருத்தே அமைவதால், தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க, தமிழகத்திற்குரிய பங்கினைப் பெற, மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கிட, அதிமுக அங்கம் வகிக்கும் ஓர் அரசு மத்தியில் அமைவது அவசியம்; அத்தியாவசியம்; காலத்தின் கட்டாயம். அப்போது தான் தமிழ்நாட்டின் உரிமைகள் நிலைநாட்டப்படும்.
தமிழக மக்களின் துன்பங்களைப் போக்கும் வகையில், துயர்களைத் துடைக்கும் வகையில், தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக்கும் வகையில், அதிமுக கீழ்க்கண்ட வாக்குறுதிகளை மக்களுக்கு அளிக்கிறது.
கூட்டுறவு கூட்டாட்சி
இன்றைய சூழ்நிலையில் இறையாண்மையை தமக்குள் பகிர்ந்து கொண்டு மத்திய அரசும், மாநில அரசுகளும் ஒன்றையொன்று கட்டுப்படுத்தாமல் தத்தம் எல்லைக்குள், தனக்கான எல்லைக்குள் சுதந்திர செயல்பாட்டோடு பொதுப் பிரச்சினைகளை கூட்டுறவு மனப்பான்மையுடன் அணுகி தீர்வு காண வேண்டும். இதுவே கூட்டுறவு கூட்டாட்சி தத்துவம் ஆகும். இந்தக் கூட்டுறவு கூட்டாட்சி கொள்கையை நிலைப்படுத்த கூட்டுறவு கூட்டாட்சி கொள்கையை நிலைப்படுத்த கூட்டுறவு கூட்டாட்சி கொள்கையை நிலைப்படுத்த, செயல்படுத்த, நிலைநிறுத்த, செயல்படுத்த, நிலைநிறுத்த அதிமுக நடவடிக்கை எடுக்கும்.
இலங்கைத் தமிழர் பிரச்சனை
இலங்கை உள்நாட்டுப் போரின் போது, சர்வதேச விதிமுறைகளை மீறி போர்க் குற்றங்கள் நிகழ்த்தியவர்களை, இனப் படுகொலை செய்தவர்களை சர்வதேச நீதிமன்றம் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவும்; இலங்கை வாழ் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்தவும்; தனி ஈழம் அமைந்திட இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தவும் அதிமுக உறுதிபூண்டுள்ளது.
தமிழக மீனவர் நலன்
சட்டவிரோதமாக அப்பாவி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்தவும்; தமிழக மீனவர்களின் நலன்களைக் காக்கும் வகையில், இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தையை நடத்துவதற்குரிய சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும்.
ஆழ்கடல் மீன்பிடிப்பு, மீன்பிடி பிரச்சினைக்கு ஒரு தீர்வாக அமையும் என்பதால், ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்கும் வகையில், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வாங்குவதற்கு மத்திய அரசு மூலம் முழு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கடலோரப் பகுதிகளில் வாழும் தமிழக மீனவர்களின் வளத்தினை உறுதி செய்யும் வகையில், சென்னை காசிமேடு, கடலூர், புதுச்சேரி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலுள்ள உள்ள மீன்பிடித் துறைமுகங்கள் நவீனமயமாக்கப்படும்.
புலிக்கட் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து கடலோர மாவட்டங்களிலுள்ள நதி முகத்துவாரங்கள் முறையாக தூர்வாரப்படும்.
எண்ணூர், கடலூர், பூம்புகார், நாகப்பட்டினம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள கடல் அரிப்பு பிரச்சினையை தடுக்கும் வகையில், போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
மீனவர்களின் நலன்களைக் பாதுகாக்கும் வகையில் தேசிய மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம் சீரமைக்கப்படும்.
கச்சத்தீவு மீட்பு
தமிழக மீனவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில், கச்சத்தீவினை திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும்.
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு என்ற கொள்கையை அகில இந்திய அளவில் அகற்றத் தேவையான நடவடிக்கைகளை அதிமுக எடுக்கும்.
தமிழ் ஆட்சி மொழி
தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தும். இதுவன்றி, சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை அறிவிக்க தேவையான நடவடிக்கைகளை அதிமுக எடுக்கும்.
அனைவருக்கும் பொது விநியோகத் திட்டம்
அனைவருக்கும் பொது விநியோகத் திட்டம் இருக்கின்ற மாநிலங்களில், மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்குப் பதிலாக அனைவருக்கும் பயன் அளிக்கக்கூடிய பொது விநியோகத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை அதிமுக எடுக்கும்.
மண்ணெண்ணெய் ஒதுக்கீடு
தமிழ்நாட்டின் மாதத் தேவையான 65,140 கிலோ லிட்டர் மண்ணெண்ணெயை பெறத் தேவையான நடவடிக்கைகளை அதிமுக எடுக்கும்.
மின்சார வழித்தடங்களை வலுப்படுத்துதல் மற்றும் ஏற்படுத்துதல்
மின் மிகை மாநிலங்களிலிருந்து மின் குறை மாநிலங்களுக்கு மின்சாரத்தை எடுத்துச் செல்லும் வகையில், புதிய மின் வழித்தடங்களை அமைக்கவும், வலுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை அதிமுக எடுக்கும்.
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷனுக்கு டி.ஏ.எஸ். அனுமதி
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு தேவையான டி.ஏ.எஸ். அனுமதியை பெற அதிமுக நடவடிக்கை எடுக்கும். இதே போன்று, அனைத்திந்திய அளவில் மாநில அரசுகள் கேபிள் டி.வி. சேவை வழங்குவது ஊக்குவிக்கப்படும்.
காவேரி மேலாண்மை வாரியம்
காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்கத் தேவையான நடவடிக்கைககளை அதிமுக எடுக்கும்.
தேசிய அளவிலான வாக்குறுதிகள்
மதச்சார்பின்மை
மதச்சார்பின்மை கொள்கையை நிலைநாட்டவும், மேம்படுத்தவும் அதிமுக பாடுபடும்.
சமூக நீதி
இட ஒதுக்கீட்டுக் கொள்கையை தொடர்ந்து நிலைநாட்ட அதிமுக பாடுபடும். இதே போன்று, அந்தந்த மாநிலங்கள், மாநிலங்களின் நிலைமைகளுக்கு ஏற்ப இட ஒதுக்கீடு பின்பற்றப்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
மகளிர் நலன்
பெண் சிசுக் கொலையை அறவே ஒழிக்க முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்ட திட்டம் தொட்டில் குழந்தைத் திட்டம். ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டங்களின் கீழ் 25,000 ரூபாய் உதவித் தொகையுடன் 4 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தையும், பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்கு 50,000 ரூபாய் உதவித் தொகையுடன் 4 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தையும் அவர் வெற்றிகரமாக செயல்படுத்திக் கொண்டு இருக்கிறார்.
ஒரு குடும்பத்தில் ஒரே பெண் குழந்தை இருந்தால் 50,000 ரூபாயும், இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ஒவ்வொருவரின் பெயரிலும் தலா 25,000 ரூபாயும் வைப்பீடு செய்யும் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதே போன்று, அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், பெண்கள் அதிரடிப்படை, மகளிர் சுய உதவிக் குழுக்கள், குழந்தையின் பெயருக்கு முன்பு தாய் பெயரின் முதல் எழுத்தை இனிஷியலாக சேர்த்தல் என்ற புரட்சிகரமான உத்தரவு, இந்தியாவிற்கே வழிகாட்டியாக பாலியல் பலாத்காரத்தை தடுக்க 13 அம்சத் திட்டம் என பெண்கள் மேம்பாட்டிற்காக எண்ணற்ற திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இது போன்ற மகளிர் மேம்பாட்டுத் திட்டங்களை இந்தியா முழுவதும் செயல்படுத்த அதிமுக பாடுபடும்.
மகளிர் இடஒதுக்கீடு
நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் 33 விழுக்காடு இடங்களை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்யும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை அதிமுக எடுக்கும்.
நதிகள் இணைப்பு மற்றும் தேசியமயமாக்கம்
நதிகள் நாட்டுடைமை ஆக்கப்படுவதற்கும், நதிகளை இணைப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை அதிமுக எடுக்கும்.
பொதுத் துறை நிறுவனப் பங்குகள்
பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகள் தனியாருக்கு விற்கப்படாமல் இருப்பதை அதிமுக உறுதி செய்யும். பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சிகள் முற்றிலும் நிறுத்தப்பட அதிமுக பாடுபடும்.
வெளியுறவுக் கொள்கை
இந்திய நாட்டின் பாதுகாப்பையும், ஒற்றுமையையும் பாதுகாக்கும் வகையில், அண்டை நாடுகளுடனான நீண்ட நாள் எல்லைப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு நிரந்தர இடம் கிடைக்க அதிமுக பாடுபடும். வெளியுறவுக் கொள்கை என்பது மாநில நலன்களுக்கு எதிராக அமையக் கூடாது. எனவே, மாநில நலன்களை உள்ளடக்கிய வெளியுறவுக் கொள்கைகள் வகுக்கப்படும்.
பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு விலை நிர்ணயக் கொள்கை
பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயத்தை மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கைகளையும், எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை திரும்பப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் அதிமுக எடுக்கும். அதே போல், பல நாடுகளுடன் அந்தந்த நாட்டு செலாவணி மதிப்பில் இந்திய ரூபாய் மதிப்பினை நிர்ணயம் செய்வது, அதாவது கரன்சி ஸ்வாப் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இந்திய ரூபாயின் மதிப்பு வேறுபாடு காரணமாக ஏற்படும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு ஆகியவற்றை களையும் வகையில், இதற்கென தனி நிதியம் ஏற்படுத்தப்படும்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை ஆண்டு முழுவதும் ஒரே சீராக இருப்பது உறுதி செய்யப்படும். மானியத்துடன் கூடிய வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளைகளின் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இயற்கை எரிவாயு விலை என்பது உலகச் சந்தையின் அடிப்படையிலும், அமெரிக்க டாலர் கணக்கீட்டின் அடிப்படையிலும் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த இயற்கை வாயுவினை எடுக்கும் நிறுவனங்களுக்கான விலையை 1.4.2014 முதல் மத்திய அரசு இரட்டிப்பு ஆக்கியுள்ளது. இந்த விலை உயர்வு மறு ஆய்வு செய்யப்படும்.
கருப்புப் பணத்தை மீட்டெடுத்தல்
அதிமுக அங்கம் வகிக்கும் மத்திய ஆட்சி உருவாக்கப்படின், வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் முடங்கிக் கிடக்கும் பல லட்சம் கோடி ரூபாய் பணத்தை மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
பிற நாடுகளுடனான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தம் குறித்து ஆய்வு
வரி தவிர்ப்பு என்ற போர்வையில் வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், இந்திய நாட்டின் வருவாயைப் பெருக்கவும் வழிவகை செய்யப்படும்.
தொலைநோக்குத் திட்டம் 2023
வளர்ந்த நாடுகளுக்கு ஈடாக தமிழக மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்ற அடிப்படையிலும், தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கும் வகையிலும், தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023–ஐ தயாரித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். இது போன்றதொரு திட்டத்தை இந்தியா முழுமைக்கும் தீட்டி, இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை அதிமுக எடுக்கும்.
சிறுபான்மையினர் நலன்
கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்ல மானியம் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்ற அரசு அதிமுக அரசு.
உலமா ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், ஓய்வூதியத் தொகையையும் அரசு உயர்த்தி இருக்கிறது. வக்ஃபு வாரிய நிர்வாக மானியத் தொகை ஒரு கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. வக்ஃப் நிறுவனங்கள் மேம்பாட்டு நிதிக்கு 2012-2013 ஆம் ஆண்டு 3 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டது.
சிறுபான்மையினர் சுயதொழில் புரியும் வகையில், தொழில் தொடங்குவதற்கு அதிக அளவில் கடனுதவி அளிக்கப்பட்டு வருகிறது. இவற்றை இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை அதிமுக எடுக்கும். நீண்ட நாள் கோரிக்கையான மதம் மாறிய ஆதி திராவிடர்களை அட்டவணைப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
முதியோர் நலன்
மத்திய அரசால் வழங்கப்படும் முதியோருக்கான ஓய்வூதியத் தொகையை உயர்த்த அதிமுக நடவடிக்கை எடுக்கும்.
மாற்றுத் திறனாளிகள் நலன்
தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு படி 1,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பராமரிப்பு படியினை இந்தியா முழுவதும் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது மட்டுமல்லாமல், அரசு வேலைவாய்ப்பில் 3 விழுக்காடு இடங்களை நிரப்ப ஒரு சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.
வருமான வரிச் சட்டம் பிரிவு 80 டிடி-ன்கீழ் மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவரது குடும்பங்களுக்கு அளிக்கப்படும் சலுகை 50,000 ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படவும், பொதுக் கட்டடங்களில் உள்ள அலுவலகங்களை மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகுவதை உறுதி செய்யும் வகையிலும், சாய்தளங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநில அரசின் வருவாயைப் பறிக்க வழிவகை செய்யும் வருமான வரிச் சட்டத்தை திருத்தி அமைத்தல்
மாநில அரசுகளால் பொதுத் துறை நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் அனுமதி கட்டணம், உரிமைப் பங்கு, உரிமைக் கட்டணம் ஆகியவற்றிற்கான தொகையை மாநில பொதுத் துறை நிறுவனங்கள் தங்களது வருமானத்திலிருந்து கழித்துக் கொள்ளலாம் என்ற நிலை 2012-2013 ஆம் ஆண்டு வரை இருந்தது. இதனை மாற்றி, மாநில அரசால் விதிக்கப்படும் கட்டணங்களை தங்களது வருமானத்திலிருந்து கழித்துக் கொள்ளக் கூடாது என்று வருமான வரிச் சட்டம் 40-ல் திருத்தம் செய்யும் வகையில், நிதிச் சட்டத்தினை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.
இதன் மூலம், வரி அல்லாத வகையில் மாநில அரசுகளுக்கு நியாயமாக கிடைக்கும் வருவாயினை மத்திய அரசு தடுத்து நிறுத்தியுள்ளதோடு, மத்திய அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கவும் வழிவகை செய்துள்ளது. அதே சமயத்தில், மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் இந்தச் சலுகையை அனுபவிக்கின்றன. இந்தச் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை அதிமுக எடுக்கும்.
நிலக்கரி சுரண்டல்
குறைந்த விலையில் மாநில துறைகளுக்கு நிலக்கரி கிடைக்கும் வகையிலும், மத்திய அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும் வகையிலும், தற்போதுள்ள நிலக்கரி எடுப்பு முறை மாற்றி அமைக்க தேவையான நடவடிக்கைகளை அதிமுக எடுக்கும்.
இயற்கை வளங்கள் நியாயமான விலையில் கிடைக்க நடவடிக்கை
நாட்டின் இயற்கை வளங்கள் நியாயமான விலையில் நுகர்வோருக்கு கிடைக்க வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது. இதனை நிறைவேற்றும் வகையில், வெளிப்படையான இயற்கை வளக் கொள்கையை அதிமுக உருவாக்கும்.
தனி நபர் வருமான வரி
சாதாரண மக்களுக்கு ஓரளவு பயனளிக்கும் வகையில், 5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் பெறும் தனி நபருக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்க அதிமுக நடவடிக்கை எடுக்கும்.
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கொள்கை
உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையிலும், உள்நாட்டு நிறுவனங்கள் சர்வதேச அளவில் போட்டியிடக் கூடிய வகையிலும், இறக்குமதியை குறைத்து, ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என்பதே அதிமுக கொள்கை ஆகும். இது போன்ற கொள்கையினால் மட்டுமே ஏறி வரும் பண வீக்கத்தையும், இந்திய ரூபாயின் வீழ்ச்சியையும் கட்டுப்படுத்த முடியும் என அதிமுக கருதுகிறது. இவற்றை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை அதிமுக எடுக்கும்.
மாநில அரசுகளின் நிதி ஆதாரங்களைப் பெருக்க நடவடிக்கை
பல்வேறு நிபந்தனைகளுடன் கூடிய வெளிப்படையற்ற முறையிலான மானியங்களை தன் விருப்பத்திற்கேற்ப மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது. இதனை மாற்றி, மானியங்களை வெளிப்படையான முறையில் மாநிலங்களுக்கு வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை அதிமுக எடுக்கும்.
இந்திய அரசமைப்புச் சட்டம் 275-ன்படி மத்திய அரசின் விருப்புரிமையில் அளிக்கப்படும் மொத்த மானியங்களின் அளவை 7 விழுக்காடாக குறைக்கவும், நிதிக் குழுவின் மூலமாக வழங்கப்படும் தொகையை அதிகரிக்கவும் அதிமுக நடவடிக்கை எடுக்கும்.
மானியம் உட்பட செலவினப் பொறுப்பை மாநில அரசிடம் மத்திய அரசு ஒப்படைக்கும் போது, அதற்குத் தேவையான நிதி ஆதாரத்தையும் அளிக்க தேவையான நடவடிக்கைகளை அதிமுக எடுக்கும்.
ரகுராம் ராஜன் குழுவின் பரிந்துரைக்கு எதிர்ப்பு
மாநிலங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக் குறியீட்டின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற ரகுராம் ராஜன் குழுவின் பரிந்துரையினை பின்பற்றாமல், 14 ஆவது நிதிக் குழு தனது கடமையினை சுதந்திரமாக செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி உதவி
மத்திய அரசின் வருவாயில் பிரிக்கக் கூடிய இனங்களிலிருந்து 5 விழுக்காடு தொகையை உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க அதிமுக நடவடிக்கை எடுக்கும்.
விரிவான பொருளாதாரக் கொள்கை மற்றும் நிதிக் கொள்கை
அதிக வளர்ச்சி, குறைந்த நுகர்வோர் பணவீக்கம், குறைந்த நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஆகியவற்றை எய்துவதற்கான விரிவான பொருளாதாரக் கொள்கை வகுக்கப்படும்.
வேளாண்மை
பயிர்க் கடன்களை குறித்த காலத்தில் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி முழுவதையும் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
உழவர் பாதுகாப்புத் திட்டம்
விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு மிகுந்த பயனளிக்கும் உழவர் பாதுகாப்புத் திட்டத்தை, அகில இந்திய அளவில் அதிமுக செயல்படுத்திடும்.
உற்பத்தித் துறை
உற்பத்தி துறையை பெருக்கும் வகையில் தொழிற் கொள்கைகளை முதல்வர் ஜெயலலிதா அண்மையில் வெளியிட்டுள்ளார். அகில இந்திய அளவில் இதே போல் உற்பத்தி துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அதிமுக எடுக்கும்.
உற்பத்தி மண்டலம் ஒன்றினை ஏற்படுத்தவும், உள்நாட்டு சேமிப்பினை ஊக்கப்படுத்தவும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதன் காரணமாக, உற்பத்தி துறையில் முதலீடுகள் பெறுக வழிவகை செய்யப்படும். நாட்டின் மொத்த உற்பத்தியில் 30 விழுக்காடு உற்பத்தி துறை மூலம் பெறப்படுவது உறுதி செய்யப்படும்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள்
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை மேம்படுத்த மாநில அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் அகில இந்திய அளவில் கொண்டுவரப்படும்.
ஜவுளித் தொழில்
ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை அதிமுக எடுக்கும்.
வேலைவாய்ப்பினை அதிகரித்தல்
அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவில் 10 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதை உறுதி செய்யும் வகையில், திறன் மேம்பாடு மற்றும் இணக்கமான தொழில் கல்வி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
ஒரு திறமையான அரசாங்கத்திற்கு முதுகெலும்பாக இருப்பவர்கள் அரசு ஊழியர்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும். இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் ஊதிய விகிதங்கள் மாற்றி அமைக்கப்படும்.
ஊழல் ஒழிப்பு
ஊழலற்ற அரசு மத்தியில் அமைய அதிமுக உத்தரவாதம் அளிக்கிறது.
செயல்படும் மத்திய அரசு
கடந்த பத்து ஆண்டுகளாக ஒருங்கிணைந்த கொள்கை முடிவுகள் எதையும் எடுக்க முடியாத நிலையிலேயே மத்திய அரசு இருந்தது. கொள்கை முடக்குவாதத்தால் அது பரிதவித்தது. எடுக்கப்பட்ட சில துறை சார்ந்த கொள்கை முடிவுகளில், பெரும்பாலானவை தவறானதாகவும், காலதாமதத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்திருந்தன.
அதிமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசு அமைந்தால், அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் திடமான கொள்கை முடிவுகளை எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இத்தகைய திடமான முடிவுகளை எடுத்திட உறுதியான, துணிச்சலான, வலிமையான தலைமை தேவை. அத்தகைய தலைமையை அதிமுக வழங்கும்.
இவ்வாறு அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கோணமூலை ஊராட்சி மற்றும் சத்தி ஒன்றியம் சார்பில் சைக்கிள் பேரணி

தமிழக முதல்வரின் 66வது பிறந்தநாளை முன்னிட்டு சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் சத்தி கோணமூலை ஊராட்சி சார்பில் நடைபெற்ற சைக்களில் பேரணியில் டெல்லி மேல்சபை உறுப்பினர் செல்வராஜ், ஈரோடு மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம், சத்தி ஒன்றிய அதிமுக செயலாளர் வி.சி.வரதராஜ், சத்தி நகர்மன்றத் தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம், கோணமூலை ஊராட்சிக் கழக செயலாளர் மணிகண்ட சங்கர், கொமராபாளையம் ஊராட்சித் தலைவர் நஞ்சப்பன், நகர செயலாளர் வீரபத்திரா எஸ்.கே. கிருஷ்ணராஜ், சத்தி நகர கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.கே.பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்



பவானிசாகர் ஒன்றிய அதிமுக சார்பில் தொட்டம்பாளையம் மாகாளியம்மன் திடலில்
நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்
தாமோதரன் பேசினார். உடன்  மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம்,
பவானிசாகர் ஒன்றியக்குழு தலைவர் பழனிச்சாமி உள்ளிட்டோர்.
 பவானிசாகர் ஒன்றிய அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தொட்டம்பாளையம் மாகாளியம்மன் திடலில் நடைபெற்றது. பவானிசாகர் ஒன்றியக்குழு தலைவர் பழனிச்சாமி தலைமை
தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் கோபால் வரவேற்றார். ஒன்றியக்குழு
துணைத்தலைவர் வேலுமணி, தொப்பம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் தங்கராஜ், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் அமைச்சர் தாமோதரன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர்
எஸ்.ஆர்.செல்வம், தலைமைக்கழக பேச்சாளர் புரட்சிவாணன் ஆகியோர்
சிறப்புரையாற்றினர். இவ்விழாவில் முன்னாள் எம்எல்ஏ சிதம்பரம்,
அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் தேவராஜ், பவானிசாகர்
பேருராட்சி தலைவர் வெங்கடாசலம், துணைத்தலைவர் கே.செல்வம், ஒன்றிய ஜெ பேரவை செயலாளர் ரவி, தொகுதி இணை செயலாளர் அண்ணாதுரை மற்றும் கைத்தறி, பால்வள கூட்டுறவு சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கிளை செயலாளர் சுப்பிரமணியம் நன்றி கூறினார்.

Monday, February 24, 2014

ஜெயலலிதா அளித்த பேட்டி: 



* தேசிய கட்சிகளான, காங்கிரஸ் மற்றும் பா.ஜ., கூட்டணிக்கு தடுமாறுவது குறித்து உங்கள் கருத்து?
இது குறித்து, நான் கருத்து சொல்வதை விட, அந்த கட்சிகளிடம் கேட்டால் தான், நன்றாக இருக்கும்.

* கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் மட்டும் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது. வேறு கட்சிகளுடன், பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதா?
இந்த கூட்டணி போதும்.

* தேர்தலில், எதை மையமாக வைத்து பிரசாரம் செய்ய உள்ளீர்கள்?
ஏற்கனவே அறிவித்தபடி, எங்களின் தாரக மந்திரம், அமைதி, வளம், வளர்ச்சி. மேலும், எதை மையமாக வைத்து பிரசாரம் செய்வோம் என்பதை, தேர்தல் அறிக்கையில் சொல்வோம். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது; விரைவில், அது வெளியிடப்படும்.

* உங்கள் பிறந்த நாள் செய்தியாக, மக்களுக்கு எதை தெரிவிக்க விரும்புகிறீர்கள்?
மக்கள் எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்.அமைதி, வளம், வளர்ச்சி, தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் ஏற்பட, அனைவரும் பாடுபட வேண்டும்.

* மூன்றாவது அணியில், 14 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்த கட்சிகளுக்காக, பிற மாநிலங்களில், பிரசாரம் செய்ய செல்வீர்களா?
மிழகம், புதுச்சேரி உட்பட, 40 தொகுதிகளில் மட்டும், கவனம் செலுத்த உள்ளேன்.

* ராஜிவ் கொலை வழக்கில், தண்டனை பெற்றவர்களை விடுவிக்க, மத்திய அரசு நீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளதே?
இவ்வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இதை கவனமாக கவனித்து வருகிறோம். எங்கள் கருத்துக்களை, நீதிமன்றத்தில் எடுத்துரைப்போம். சட்டப்பூர்வமாக எதை செய்ய வேண்டுமோ, அதை ஆலோசித்து செய்வோம். இவ்வாறு, அவர் கூறினார்.
லோக்சபா தேர்தல்: வேட்பாளர்களை ஆதரித்து மார்ச் 3-ந் தேதி முதல் ஜெ. முதல்கட்ட பிரசாரம்

 
 சென்னை: லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் முதல்கட்டமாக 16 நாட்கள் முதல்வர் ஜெயலலிதா சூறாவளி பிரசாரம் செய்கிறார். மார்ச் 3-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 5-ந் தேதி வரை அவர் பிரசாரம் மேற்கொள்கிறார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளிலும், அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து முதல்கட்டமாக தமிழகத்தில் சூறாவளி தேர்தல் பிரசார சுற்றுப்பயண திட்ட அறிக்கையை அவர் வெளியிட்டார். முதல்கட்டமாக மார்ச் மாதம் 3-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 5-ந் தேதி வரை 16 நாட்கள் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக 19 இடங்களில் வாக்கு சேகரிக்கிறார். காஞ்சிபுரத்தில் பிரசாரம் தொடக்கம் காஞ்சிபுரம் (தனி) தொகுதியில் ஜெயலலிதா மார்ச் மாதம் 3-ந் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி வளாகத்தில் மார்ச் மாதம் 4-ந் தேதி ஜெயலலிதா பேசுகிறார். நாகப்பட்டினம் (தனி) மற்றும் மயிலாடுதுறை தொகுதிகளில் 6-ந் தேதி ஜெயலலிதா பிரசாரம் மேற்கொள்கிறார். நாகப்பட்டினம் அவரித் திடலிலும், மயிலாடுதுறை செம்பனார்கோவில் ஒன்றியம் காலஹஸ்திகாபுரம் ஊராட்சியிலும் ஜெயலலிதா வாக்கு சேகரிக்கிறார். கன்னியாகுமரி தொகுதியில், நாகர்கோவில் நாகராஜா திடலில் 9-ந் தேதி ஜெயலலிதா பேசுகிறார். சிதம்பரம் (தனி) தொகுதியில், சிதம்பரம் கீழ வீதியில் 11-ந் தேதி முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். ஈரோடு மற்றும் திருப்பூர் தொகுதிகளில் 13-ந் தேதி ஜெயலலிதா பிரசாரம் மேற்கொள்கிறார். ஈரோடு தொகுதியில், சித்தோடு பேரூராட்சி சித்தோடு நால்ரோட்டிலும், திருப்பூர் தொகுதியில், அண்ணாநகர் திருப்பூர் பெருமாநல்லூர் சாலையிலும் ஜெயலலிதா பேசுகிறார். கள்ளக்குறிச்சி தொகுதியில், சின்னசேலம் ஒன்றியம், உலகங்காத்தான் ஊராட்சி, ஆற்காடு மில் பகுதியில் 15-ந் தேதியும் ராமநாதபுரம் தொகுதியில், ராமநாதபுரம் நகரம் அரண்மனை முன்பு 18-ந் தேதியும் (செவ்வாய்கிழமை) ஜெயலலிதா வாக்கு சேகரிக்கிறார். திருச்சி.. புதுச்சேரியில்.... இதேபோல், திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகே, 19-ந் தேதி ஜெயலலிதா பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். விருதுநகர் மற்றும் சிவகங்கை தொகுதிகளில் 21-ந் தேதி ஜெயலலிதா வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். விருதுநகர் தொகுதியில், சிவகாசி நகரம், சிவகாசி - விருதுநகர் நெடுஞ்சாலை அருகில், குறுக்குப்பாதையிலும், சிவகங்கை தொகுதியில், காரைக்குடி, மகர நோன்பு கொட்டல், காந்தி ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் செய்கிறார். புதுச்சேரி தொகுதியில், உப்பளம் கடலூர் சாலையில் ஏ.எப்.டி. மைதானத்தில் 23-ந் தேதியும் திண்டுக்கல் தொகுதியில், திண்டுக்கல் பழனி ரோடு, அங்குவிலாஸ் விளையாட்டு திடலில் 25-ந் தேதியும் ஜெயலலிதா பிரசாரம் மேற்கொள்கிறார். வேலூர் தொகுதியில், அணைக்கட்டு ஒன்றியம், இடையன்காடு ஊராட்சி, காட்டுக்கொல்லையில் 28-ந் தேதியும் தூத்துக்குடி தொகுதியில், தூத்துக்குடி அண்ணாநகர் மெயின்ரோட்டில் ஏப்ரல் 1-ந் தேதியும் ஜெயலலிதா பேசுகிறார். தேனி தொகுதியில், தேனி நகரம் தேனி பைபாஸ் ரோட்டில் 2-ந் தேதியும் தென்காசி (தனி) தொகுதியில், சங்கரன்கோவில் வடக்கு மாசி வீதியில் 5-ந் தேதியும் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரிக்கிறார்.

லோக்சபா தேர்தல்: 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவி்ததார் ஜெ. -தொகுதி பங்கீட்டுக்கு பின் மாறும்! 
 
 
 
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளுக்குமான அதிமுக வேட்பாளர்களை அக்கட்சி பொதுச்செயலரும் முதல்வருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ளார். லோக்சபா தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற்றுள்ளன. இந்த இரு கட்சிகளுக்குமான தொகுதிகள் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் தமது பிறந்த நாளான இன்று 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளார் ஜெயலலிதா. அதிமுக தலைமைக் கழகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் வேட்பாளர்கள் பெயர்களை ஜெயலலிதா அறிவித்தார்.

இந்த வேட்பாளர் பட்டியலில் பெரும்பாலானோர் புதுமுகங்களாக இருக்கின்றனர். ஜெயலலிதா அறிவித்த 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விவரம் 
 1. திருவள்ளூர் (தனி)- டாக்டர் . வேணுகோபால் (மருத்துவ அணிச் செயலாளர் - மக்களவை குழுச் செயலாளர்)
 2. சென்னை வடக்கு - வெங்கடேஷ் பாபு, (வட சென்னை வடக்கு மாவட்ட செயலாளர், தமிழ் நாடு தொழில் முதலீட்டுக் கழக தலைவர்) 
3. சென்னை தெற்கு- டாக்டர் து. ஜெயவர்தன், 
4. மத்திய சென்னை - விஜயகுமார், (மாணவர் அணிச் செயலாளர், சிந்தாமணி கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர்) 
 5. ஸ்ரீபெரும்புதூர் - இராமச்சந்திரன்(காஞ்சிபுரம் மத்திய மாவட்ட அவைத் தலைவர்) 
6. காஞ்சிபுரம் (தனி) - மரகதம் குமரவேல் (திருப்போரூர் ஒன்றிய இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர், திருப்போரூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்) 
 7. அரக்கோணம் - திருத்தணி கோ. அரி ( திருவள்ளூர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ) 
8. வேலூர் - பா. செங்குட்டுவன், (வேலூர் புறநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்) 
 9. கிருஷ்ணகிரி - மு. அசோக்குமார் (கிருஷ்ணகிரி மாவட்டக் அவைத் தலைவர், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர்) 
10. தருமபுரி - மோகன் (தருமபுரி மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர்) 
11. திருவண்ணாமலை- சு. வனரோஜா, (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்) 
 12. ஆரணி- செஞ்சி சேவல் வெ. ஏழுமலை (விழுப்புரம் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ) 13. விழுப்புரம் (தனி) - எஸ். இராஜேந்திரன் (விழுப்புரம் வடக்கு மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர், மாவட்ட ஊராட்சிக் குழு 29-ஆவது வார்டு உறுப்பினர்) 14. கள்ளக்குறிச்சி - டாக்டர் க. காமராஜ் (விழுப்புரம் தெற்கு மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர்) 15. சேலம் - பன்னீர்செல்வம் (சேலம் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர்) 16. நாமக்கல்- சுந்தரம், (நாமக்கல் மாவட்ட அவைத் தலைவர், மாவட்ட ஊராட்சிக் குழு 4-ஆவது வார்டு உறுப்பினர், முன்னாள் எம்.எல்.ஏ) 17. ஈரோடு - செல்வக்குமார சின்னையன் (ஈரோடு மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர்) 18. திருப்பூர் - ஏ. சத்தியபாமா (தலைமைச் செயற்குழு உறுப்பினர், ஈரோடு புறநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர், கோபிசெட்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்) 19. நீலகிரி (தனி) - டாக்டர் கோபாலகிருஷ்ணன் (குன்னூர் நகர மன்றத் தலைவர்) 20. கோயம்புத்தூர் -நாகராஜன் (கோவை மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவுத் தலைவர், கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர்) 21 பொள்ளாச்சி - மகேந்திரன் (திருப்பூர் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர், மூங்கில்தொழுவு ஊராட்சிக் கழகச் செயலாளர், மூங்கில்தொழுவு ஊராட்சி மன்றத் தலைவர்) 22. திண்டுக்கல் - உதயகுமார் (நிலக்கோட்டை பேரூராட்சிக் கழகச் செயலாளர்) 23. கரூர் - டாக்டர் மு. தம்பிதுரை (கொள்கை பரப்புச் செயலாளர், அதிமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் மற்றும் மக்களவை குழுத் தலைவர்) 24. திருச்சிராப்பள்ளி - குமார் (இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர், அதிமுக மனுக்கள் பரிசீலனைக் குழு உறுப்பினர்) 25. பெரம்பலூர் - மருதைராஜ் (எ) மருதராஜா, (பெரம்பலூர் ஒன்றிய செயலாளர், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்) 26. கடலூர்- ஆ. அருண்மொழிதேவன் (கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர், தலைவர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், முன்னாள் எம்.எல்.ஏ) 27. சிதம்பரம் (தனி) - மா. சந்திரகாசி (பெரம்பலூர் மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ) 28. மயிலாடுதுறை - சு.மு. பாரதிமோகனன் (திருப்பனந்தாள் ஒன்றியக் கழகச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ) 29. நாகப்பட்டினம் (தனி) - டாக்டர் மு. கோபால் (திருவாரூர் மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ) 30. தஞ்சாவூர் - பரசுராமன் (தஞ்சாவூர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்) 31. சிவகங்கை - செந்தில்நாதன் (சிவகங்கை மாவட்ட செயலாளர், தேவகோட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக தலைவர்) 32. மதுரை- இரா. கோபாலகிருஷ்ணன் (மதுரை மாநகராட்சி துணை மேயர்) 33. தேனி - பார்த்திபன் (தேனி மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்) 34. விருதுநகர் - ராதாகிருஷ்ணன் (விருதுநகர் மாவட்ட துணைச் செயலாளர், சிவகாசி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்) 35. ராமநாதபுரம்- அன்வர்ராஜா, (சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர், முன்னாள் அமைச்சர்) 36. தூத்துக்குடி - ஜெயசிங் (தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்) 37. தென்காசி (தனி) - வசந்தி முருகேசன், (திருநெல்வேலி மாநகர் மாவட்ட இணைச் செயலாளர்) 38. திருநெல்வேலி - பிரபாகரன், (ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி செயலாளர்) 39. கன்னியாகுமரி - ஜான் தங்கம், (கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளர், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய தலைவர்) 40. புதுச்சேரி (40) - ஆ.ஏ. ஓமலிங்கம், (காரைக்கால் மாவட்ட செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ)


பண்ணாரி கோவிலில் 66 பால் குடம் எடுத்து சிறப்பு வழிபாடு

பண்ணாரிஅம்மன் கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்ற தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம், சத்தி ஒன்றிய செயலாளர் வி.சி.வரதராஜ், கோணமூலை ஊராட்சிக் கழக செயலாளர் எஸ்.மணிகண்ட சங்கர் உள்ளிட்டோர்

 முதல்வர் பிறந்த நாளைமுன்னிட்டு, சத்தியமங்கலம் ஒன்றிய அதிமுக சார்பில் பண்ணாரி கோவிலில் 66 பால்குடம் எடுத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தமிழக முதல்வர் பிறந்தநாளை அதிமுகவினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதேபோல், சத்தியமங்கலம் ஒன்றியம் மற்றும் கோணமூலை ஊராட்சி கிளை கழகம் சார்பில் திங்கள்கிழமை பால்குடம் எடுக்கும் விழாவுக்கு சத்தி ஒன்றிய செயலாளர் வி.சி.வரதராஜ் தலைமை வகித்தார். கோணமூலை ஊராட்சிக் கழக செயலாளர் மணிகண்ட சங்கர் முன்னிலை விகிக்தார். இந்நிகழ்ச்சியில் 66 வாத்தியங்கள் முழங்கவும், 66 ஆயிரம் பட்டாசுகள் வெடித்தும் 66 காமாட்சி விளக்குகள் அளித்தும் முதல்வர் பிறந்த நாளை கொண்டாடினர். அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம் தலைமையில் அதிமுக தொண்டர்கள் மக்களவைத் தேர்தலில் அதிமுக 40  தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டி, கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர்.
முதல்வர் பிறந்தநாள் விழா: 66 மாற்று திறனாளிகுக்கு இலவச வேஷ்டி சேலை வழங்கல்


தமிழக முதல்வர் 66வது பிறந்த நாளையொட்டி, சத்தி நகர பேரவை சார்பில் ஏழைகளுக்கு இலவச வேஷ்டி சேலை வழங்கப்பட்டது.


தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 66வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுகவினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.சத்தி நகர பேரவை சார்பில் நடைபெற்ற அமைத்து நிகழ்ச்சிகளுக்கு சத்தி நகர்மன்றத் தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் தலைமை வகித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சத்தி பவானீஸ்வரர் ஆலயத்தில் முதல்வர் பெயரில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து ஏழைகளுக்கு அன்னதானமும் 66  மாற்று திறனாளிகளுக்கு வேஷ்டி சேலைகள் வழங்கப்பட்டன. சத்தி அரசு மருத்துவமனையில் தொழுநோயாளிகளுக்கு பால்ரொட்டி மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம், நகர்மன்ற உறுப்பினர்கள் எச். சையத் பாஷில், ராணிக்குமார், டி,கே.ஈஸ்வரன்,ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் தேவராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


தமிழக முதல்வரின் 66வது பிறந்தநாளையொட்டி, சத்தியமங்கலம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 66 மரக்கன்றுகள் நடும் விழாவை துவக்கி வைக்கிறார் ஈரோடு மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம். அதைத் தொடர்ந்து, 3 ஆயிரம் பள்ளி குழந்தைகளுக்கு லட்டு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சத்தி  வேளாண் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை சங்கத் தலைவர் வி.சி.வரதராஜ்,ஈரோடு மாவட்ட பேரவை செயலாளர் எஸ்.எஸ்.ஆறுமுகம், நகர வங்கித் தலைவர் எஸ்.கே.பழனிச்சாமி,நகர்மன்ற உறுப்பினர் டி.கே.ஈஸ்வரன், கோணமூலை ஊராட்சி கழக செயலாளர் மணிகண்ட சங்கர் கலந்துகொண்டனர்
சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலிக்குட்டி மீட்பு




சத்தியமங்கலம் வனப்பகுதியில் தலமலை அருகே தாயை விட்டு பிரிந்த புலிக்குட்டியை வனத்துறையினர் மீட்டனர். 

சத்தியமங்லம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட, தலமலை வனப்பகுதியில், தெங்குமராஹாடா ஆதி கருவண்ணராயர் கோயிலுக்கு செல்லும் வழியில் வனத்தையொட்டி, ஜோதிர்லிங்கம் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. சனிக்கிழமை இரவு அங்கு காவல் பணியில் இருந்த  அனுமந்தன் என்பவர் புதருக்குள் புலிக்குட்டி ஒன்று இருந்ததை பார்த்துள்ளார். அதனை நாய்கள் துரத்திய நிலையில், அவற்றை விரட்டி விட்டு, துணியை புலிக்குட்டியின் மீது போர்த்தி அதனை பிடித்துள்ளார்.

புலிக்குட்டி பிடிபட்டது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குனர் ராஜ்குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து புலிக்குட்டியை மீட்டு, கூண்டில் அடைத்து எடுத்துச் சென்றனர். புலிக்குட்டிக்கு மருத்துவ பரிசோதனை செய்தபின், அதனை வனப்பகுதியில் விடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பவானிசாகர் வட்டாரத்தில் 10000 குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து; 
************************************************************

பவானிசாகர் வட்டாரத்துக்கு உட்பட்ட புன்செய் புளியம்பட்டி, காராபாடி, காவிலிபாளையம், பனையம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் 64 மையங்களில் மொத்தம் 10000 குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கப்பட்டது.

புன்செய் புளியம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து தொடக்கவிழா நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு பவானிசாகர் ஊராட்சி ஒன்றியகுழு தலைவர்   வி. ஏ.பழனிச்சாமி   தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி தலைவர்  எஸ்.ஆர். செல்வம் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கி முகாமை துவக்கி வைத்தார்.

இம்முகாமில் காலை 7 மணிமுதல் எராளமான பெண்கள் தங்கள் கைக்குழந்தை மற்றும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அழைத்து வந்து ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை ஊற்றி சென்றனர்.  இம்முகாம் பஸ் நிலையம், நகராட்சி திருமண மண்டபம், காந்தி நகர்,பவானிசாகர் அணை பூங்கா, பவானிசாகர் பஸ் நிலையம்,இலங்கை அகதிகள் முகாம்,அங்கன்வாடி மையங்கள்   உள்ளிட்ட முக்கிய இடங்களில்  மாலை 5 மணிவரை முகம் நடைபெற்றது.

மேலும் இந்நிகழ்ச்சியில்  பு புளியம்பட்டி நகராட்சி துணை தலைவர் பாபு.மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் பி.டி.ஆனந்தன் ஆகியோர் உள்பட  மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டார்கள்.
சத்தியமங்கலம் பண்ணாரிஅம்மன் கல்லூரி பட்டமளிப்பு விழா

 
சத்தியமங்கலம் பண்ணாரிஅம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற 14வது பட்டமளிப்பு விழாவில் 1315 பேருக்கு பொறியியல் பட்டங்கள் வழங்கப்பட்டன.


சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற 14–வது பட்டமளிப்பு விழாக்கு கல்லூரித் தலைவர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலையின் நிர்வாக இயக்குனர் பி.சரவணன், கல்லூரியின் ஆலோசகர் எம்.பி.விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முதல்வர் என்.ரங்கராஜன் வரவேற்றார்.

இதில் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கே.ராமசாமி பேசுகையில் தற்போதைய பொறியாளர்கள புதிய தொழில்நுட்பங்களையும் புதிய கண்டுபிடிப்புகளையும் உருவாக்க வேண்டும் என்றும்  உலகளவில் இந்திய பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுவர்கள் தான் முதன்மையாக திகழ்கிறார்கள் என்றும் புதுமையும்  புதிய கண்டுபிடிப்புகள் இந்தியர்களின் மரபணுபில் பதிந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

விழாவில் 1,315 மாணவ, மாணவிகளுக்கு முனைவர், முதுகலை மற்றும் இளங்கலை பட்டங்கள் வழங்கப்பட்டன.  கல்லூரியின் சிறந்த மாணவிக்கான ஸ்ரீமதி கலாவதி கார்த்திகேயன் தங்கப்பதக்கத்தை மின்னியல் துறை மாணவி டி.என்.சபர்மதிக்கும், பாரதரத்னா சி.சுப்பிரமணியம் தங்கப்பதக்க விருதினை மின்தொடர்பியல் மாணவி ஜி.கே.சரண்யாவுக்கும் வழங்கப்பட்டது.

விழாவில் அறக்கட்டளை நிர்வாகிகள் எஸ்.வி.அழகப்பன், எஸ்.வி.ஆறுமுகம், குண்டன், பண்ணாரி அம்மன் வித்யா நிகேதன் பள்ளிக்கூடத்தின் செயலாளர் ஏ.என்.குழந்தைசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Sunday, February 23, 2014






Saturday, February 22, 2014