தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, March 17, 2014

பண்ணாரிஅம்மன் குண்டம் விழா:
பண்ணாரி கோவில் வழியாக கனரக வாகனங்கள் செல்ல போக்குவரத்து தடை
 
 
சத்தியமங்கலம்,மார்ச் 17:
 
பண்ணாரிஅம்மன் குண்டம் விழா நடைபெறுவதையொட்டி, திங்கள்கிழமை மாலை முதல்  பண்ணாரி கோவில் வழியாக கர்நாடகம் செல்ல கனரக வாகனங்களுக்கு போலீஸார் தடைவிதித்துள்ளனர்.

சத்தியமங்கலம் அடுத்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு பண்ணாரிஅம்மன் கோவில் குண்டம் விழா இன்று (மார்ச்.17) நடைபெறுவதையொட்டி போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. சத்தியில் இருந்து பண்ணாரி,திம்பம் வழியாக மைசூர்  செல்லும் கனகர வாகனங்கள் திங்கள்கிழமை பிற்பகல் 2 மணி முதல் செவ்வாய்கிழமை பிற்பகல் 2 மணி வரை கோவில் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கனரக வாகன டிரைவர்கள் புதுவடவள்ளி பகுதியில் தங்களது லாரிகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். போக்குவரத்து போலீஸாரின்  இந்த தடை உத்தரவு செவ்வாய்க்கிழமை மாலை வரை நீடிக்கும். பால்,காய்கறி வேன் போன்ற அவசரகால வாகனங்களுக்கு இந்த தடை பொருந்தாது.

சேலம், ஈரோடு, அந்தியூர், பவானி, கோபி, ஆகிய பகுதிகளில் இருந்து குண்டம் இறங்க வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை புதுகுய்யனூர் தாற்காலிக பேருந்து நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும். அதேபோன்று, மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் வாகனங்கள் ராஜன்நகர் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்.  போலீஸ் விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎஸ்பி மோகன் தெரிவித்துள்ளார்.     

0 comments:

Post a Comment