தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, March 21, 2014

ஊட்டி மலை ரயில் புதிய இன்ஜின் சோதனை
 
குன்னூர்: மேட்டுப்பாளையம் - குன்னுார் இடையே, மலை ரயிலில், நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட புதிய இன்ஜின், சோதனை ஓட்டம் நடந்தது.
நீலகிரி மலை ரயிலுக்கு, "யுனெஸ்கோ' நிறுவனம் "உலக பாரம்பரிய சின்னம் என்ற அந்தஸ்து வழங்கியுள்ளது. மேட்டுப்பாளையம் குன்னூர் ஊட்டி வரை, 46 கி.மீ., ரயில் பாதை, பல் சக்கரத்தினால், ரயில் ஓடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு, ஓடும் ரயில்களுக்கு, "4 எக்ஸ்' கிளாஸ் நீராவி இன்ஜின்கள், திருச்சி, பொன்மலை பணிமனையில் உருவாக்கப்பட்டன.

ஏற்கனவே. மூன்று இன்ஜின்கள் இயங்கி வருகின்றன. நான்காவது இன்ஜின், சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. நேற்று காலை, 8:00 மணியளவில், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு சோதனை ஓட்டம் நடந்தது. நேற்று வரை, நான்கு சோதனைகள் முடிந்தன. இன்னும் இரு சோதனை ஓட்டங்கள் நடத்த வேண்டும். இன்ஜின் வடிமைக்க ஏற்பாடு செய்த, ஐ.எஸ்.ஏ., இன்ஜினியர் சம்பத் கூறுகையில்,""மற்ற இன்ஜின்களை விட எரிபொருளை அதிக சிக்கனப்படுத்தி மிகுந்த சக்தியுடன் இயங்க கூடிய இன்ஜின் இது. இந்த கோடை சீசனின் எவ்வித இடையூறுமின்றி இயக்கப்படும்,'' என்றார். யுனெஸ்கோ என்பது, ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கம். ஐக்கிய நாடுகள் சபையின், கல்வி, அறிவியல், கலாச்சார இயக்கம் என்பதன் சுருக்கமே, யுனெஸ்கோ. இதில், இந்தியா உட்பட, 196 உறுப்பு நாடுகள் உள்ளன; பாரம்பரிய சின்னங்களை, இந்த அமைப்பு தான், அறிவித்து வருகிறது. 

0 comments:

Post a Comment