தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, March 19, 2014

இந்தியாவின் தலை எழுத்தை மாற்றும் வகையில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள்

தென்காசி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் வசந்தி முருகேசனை ஆதரித்து, முதல்வர் ஜெயலலிதா சங்கரன்கோவிலில் பிரசாரம்

 


திருநெல்வேலி: மத்திய அரசில், தனது பேரனுக்கும், குடும்பத்தினருக்கும் மத்திய அமைச்சரவையில் வளமான துறையை பெறுவதில் கருணாநிதி முனைப்புடன் இருந்தார். மகளுக்கு ராஜ்யசபா எம்.பி.,பதவிக்கு மடிப்பிச்சை கேட்ட கருணாநிதி, பிற்படுத்தப்பட்டோர் இட ஓதுக்கீட்டை ஏன் வலியுறுத்த வில்லை என கருணாநிதிக்கு ஜெ., பிரசாரத்தின் போது கேள்வி கேட்டார்.

தென்காசி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் வசந்தி முருகேசனை ஆதரித்து, முதல்வர் ஜெயலலிதா சங்கரன்கோவிலில் பிரசாரம் இன்று ( 19 ம் தேதி புதன்கிழமை ) செய்தார். அவர் பேசியதாவது: வரவிருக்கும் பார்லி., தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான சாதாரண தேர்தல் அல்ல. இந்திய மக்களுக்கு விடுதலை பெற்றுத் தரும் தேர்தல். ஊழல் சாம்ராஜ்யத்தில் இருந்து இந்தியாவை விடுவிக்கின்ற தேர்தல். உங்களை, துன்பங்கள், துயரங்களில் இருந்து விடுவிக்கும் தேர்தல். விலைவாசி உயர்வு, பணவீக்கம் என அனைத்து துறைகளிலும் மந்த நிலை காணப்படுகிறது. ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதுபோன்ற மோசமான அரசை பார்த்ததே இல்லை என்று கூறும் அளவிற்கு மத்திய அரசு உள்ளது. இந்த அரசுடன் ஒட்டி, உறவாடிய கட்சி தி.மு.க., ஸ்பெக்ட்ரம் எனும் இமாலய ஊழலில் ஈடுபட்ட ஒரு கட்சி தி.மு.க., இந்நிலையில், இந்தியாவை காப்பாற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டது. உங்கள் ஓட்டுக்களை அ.தி.மு.க., விற்கு செலுத்த வேண்டும்.

தூத்துக்குடி அனல்மின் நிலையம் 4 வது யூனிட் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி மறுத்து வருகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இது நிறைவேற்றப்படும். தொழில் முனைவோருக்கு கூடுதல் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.101.5 லட்சம் மெட்ரிக் டன் என்ற உணவு தானிய உற்றபத்தியை எட்டியது. இது தமிழக அரசின் சாதனை. வேளாண்துறையில் , சென்னையை தவிர வறட்சி நிவாரணம் வழங்கிய ஒரே மாநில அரசு எனது தலைமையிலான அரசு தான் என்று சொலிக்கொள்கிறேன். தென்காசி நகர்ப்புற சாலைக்கு 9 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சங்கரன் கோவில் நகர்ப்புற சாலைக்கு 17 கோடி ஒதுக்கீடு, தென்காசியில் பச்சிளம் குழந்தை காக்கும் மையம் , சங்கரன்கோவில் வாசுதேவ நல்லூர் தென்மலையில் புதிய ஆரம்ப சுகாதார மையம். கோழிப்பண்ணைகள், உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உங்கள் ஆதரவுடன் மத்தியில் அ.தி.மு.க., அங்கம் வகிக்கும் மத்திய அரசு அமையும்போது மேலும் நல்ல தொரு பணிகள் செய்ய முடியும்.

வளர்ச்சி பணிகள் மழைபோல் கொட்டும் : நான் வருவதற்கு சற்று முன் மழை பெய்தது என்று சொன்னார்கள். இது இயற்கை நமக்கு அளிக்கும் சமிக்ஞை, எங்களை வெற்றி பெற செய்தால், எங்களின் ஆட்சி அமைந்தால், மழை கொட்டுவது போல் நன்மைகள், வளர்ச்சி பணிகள் வந்து கொட்டும் என்பதை நமக்கு இயற்கை நமக்கு சொல்லாமல் சொல்கிறது.

10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் அங்கம் வகித்த தி.மு.க., தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை. விலைவாசி உயர்வுக்கு காரணமான மத்திய அரசுக்கும், இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய தி.மு.க,.வுக்கும் நல்ல பாடம் புகட்ட வேண்டும் என உங்களை கேட்டு கொள்கிறேன். செய்வீர்களா ? நீங்கள் செய்வீர்களா ?

40 தொகுதிகளிலும் வெற்றி : பெட்ரோல் விலை, சமையல் காஸ் விலை செய்யப்படும் போது ஜெ., எதிர்ப்பார் என்று என்னை விமர்சனம் செய்தவர் கருணாநிதி. மத்திய அரசுக்கு பக்வாத்தியம் அடித்த கருணாநிதி, விலைவாசி உயர்வுக்கு காரணமாக இருந்தார். கருணாநிதி சொல்வதை இனி மக்கள் நம்ப தயாராக இல்லை. அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க செய்யுமாறு கேட்டு கொள்கிறேன். செய்வீர்களா ? நீங்கள் செய்வீர்களா? விலைவாசியை கட்டுப்படுத்த மத்திய அரசின் பொருளாதார கொள்கையில் மாற்றம் தேவை இதற்கு 40 தொகுதிகளிலும், நீங்கள் அ.தி.மு.க., வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறேன். செய்வீர்களா ? நீங்கள் செய்வீர்களா? மத்திய அரசின் முதலீடு குறைந்துள்ளது. ஏற்றுமதி குறைந்துள்ளது. இந்திய பணத்தின் மதிப்பு குறைந்துள்ளது. பண வீக்கம் ஏற்பட்டுள்ளது. இது போன்ற பிரச்சனைகளை தீர்க்க மத்தியில் ஆட்சி மாற்றம் தேவை.

போர்க்குற்றவாளி என இலங்கையை அறிவிக்க வேண்டும், இலங்கையை நட்பு நாடு என்பதை நிறுத்த வேண்டும், என பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி நாங்கள் அனுப்பி வைத்தோம் ஏதாவது அவர்கள் நிறைவேற்றினார்களா ? தமிழக மீனவர்களை காக்க தவறியது, கச்சத்தீவை மீட்க நவடிக்கை எடுக்காதது, சமையல்காஸ் விலை உயர்த்தியது. தமிழகத்திற்கு நிதி வழங்காதது, தமிழக அரசு நடத்தும் கேபிள் நிறுவனத்திற்கு டிஏ.எஸ், அனுமதி வழங்காதது, பெட்ரோலிய விலை உயர்த்தியது, பொருட்கள் சேவை வரியை கொண்டு வந்தது, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை கொண்டு வந்தது. மானிய சமையல் காஸ் எண்ணிக்கை குறைப்பு, விவசாயிகளின் வயிற்றில் அடித்தது, உர விலை உயர்த்தியது, 13 வது நிதிக்குழு பரிந்துரையின் படி 937 கோடி வழங்க மறுத்ததது இப்படி தமிழகத்திற்கு மத்திய அரசு பல துரோகங்களை செய்துள்ளது. 17 ஆண்டு காலம் மத்திய அரசில் அங்கம் வகித்த தி.மு.க, எந்த வொரு நல்ல திட்டமும் செய்யவில்லை. இது போல இன்னும் பல வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கிறார். இது எல்லாம் மக்களை ஏமாற்றும் செயல்.

மத்திய அரசில் , தனது பேரனுக்கும், குடும்பத்தினருக்கும் வளமான துறையை பெறுவதில் கருணாநிதி முனைப்புடன் இருந்தார். மகளுக்கு ராஜ்யசபா எம்.பி.,பதவிக்கு மடிப்பிச்சை கேட்ட கருணாநிதி, பிற்படுத்தப்பட்டோர் இட ஓதுக்கீட்டை ஏன் வலியுறுத்த வில்லை. தமது குடும்பத்தினருக்கு வளமான துறை ஒதுக்கப்படுகிறதா என்பதே கவலை, கருணாநிதிக்கு. தன்னலம் என்ற அக்கறையில் செயல்பட்டு வருகிறார்.

கிருஷ்ணசாமி மீது தாக்கு: கிருஷ்ணசாமி, கடந்த சட்டசபை தேர்தலில் எங்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு 2 தொகுதிகளை வெற்றி பெற்றார். கடந்த 2012 ல் சட்சபையில் தமிழ் என்றாலும் தமிழ்நாடு என்றாலும் இது தமிழக மாண்புமிகு புரட்சி தலைவி தான் என்று பேசினார். இப்போது கருணாநிதி குறித்து புகழ் பாடுகிறார். சீட் யார் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு சாதகமாக பேசுவதே இந்த தொகுதியில் போட்டியிடும் கிருஷ்ணசாமி. இவர்களை கண்டு ஏமாந்து விடாதீர்கள். இட ஒதுக்கீட்டை விட்டு கொடுத்து தமது குடும்பத்தினருக்கு இடம் பெற்ற கருணாநிதியின் தி.மு.க.வை நீங்கள் வேரோடும், மண்ணோடும் வீழ்த்த வேண்டும் என கேட்டு கொள்கிறேன். எனவே வரும் தேர்தலில் இந்தியாவின் தலை எழுத்தை மாற்றும் வகையில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள் இவ்வாறு ஜெ., பேசினார்.

0 comments:

Post a Comment