தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, March 15, 2014

முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தேமுதிக - 5 தொகுதிகளுக்கு போட்டியாளர்கள் அறிவிப்பு
 
 
சென்னை: லோக்சபா தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக பா.ஜனதா கூட்டணியில் தேமுதிகவின் தொகுதிப் பங்கீடு குறித்து தெளிவான அறிவிப்பு வெளியாகாத நிலையில், தேமுதிக 5 தொகுதிகளுக்கான தனது முதல் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.
திருவள்ளூரில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். அதற்கு முன்பாக அக்கட்சி தனது, முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. 
 
வேட்பாளர்கள் விவரம்: 
 
மதுரை - சிவமுத்துகுமார், மதுரை மாநகர மாவட்ட கழக செயலாளர் 
 
திருவள்ளூர் (தனி) - வி.யுவராஜ், வடசென்னை மாவட்ட கழக செயலாளர் 
 
வடசென்னை - சவுந்திரபாண்டியன், செயலாளர், தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவை 
 
திருச்சி - ஏ.எம்.ஜி.விஜயகுமார், கழக மாணவரணி செயலாளர்
 
நாமக்கல் - மகேஷ்வரன், கழக மாணவரணி முன்னாள் துணை செயலாளர்

0 comments:

Post a Comment