தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, March 24, 2014

பவானிசாகர் சாலையில் வாகனங்களை வழிமறித்த மக்னா யானை






சத்தியமங்கலம்,மார்ச் 23:
பவானிசாகர் சீரங்கராயன் கரடு பகுதியில் அவ்வழியாக செல்லும் வானகங்களை மக்னாயானை வழிமறிப்பதால் வாகனஓட்டிகள் அச்சத்துடன் செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

பவானிசாகர் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இப்பகுதியில் பசுந்தீனவங்கள் காய்ந்துபோனதால் அவை வனத்தைவிட்டு வெளியேறி அருகில் உள்ள தோட்டத்துக்குள் புகுந்து விடுகின்றன. குடிநீர் மற்றும் உணவு தேவைக்காக யானைகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயர்ந்து செல்கின்றன. இதனால் அவை மேட்டுப்பாளையம் சாலையை கடந்து பவானிசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதிக்கு செல்வது அவ்வவ்போது நடக்கும் நிகழ்வுகளாகும்.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக சீரங்கராயன்கரடு பகுதியில் முகாமிட்டுள்ள ஒற்றை மக்னாயானை அவ்வழியாக செல்வோரை பயமுறுத்துகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை பவானிசாகர் சாலையில் நீண்ட நேரம் நின்றுகொண்டிருந்தது வாகனஓட்டிகளை மிரட்டியது.  இதனால் அவ்வழியாக வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. 

நீண்டநேரம் பொறுமை காத்திருந்த வேன்,லாரி டிரைவர்கள் மெதுவாக நகர்ந்து சென்றபோது வாகனங்களை யானை துரத்தியது. யானையின் அட்டகாசத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து வனத்துறையினர் மற்றும் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த வனத்துறை மற்றும் போலீஸார் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மற்றும் வாகனஓட்டிகளை கட்டுப்படுத்தினர். 

வனத்துறையினர் சப்தம் போட்டு யானையை விரட்டினர். எதற்கும் அசராத அந்த யானை சாலையோர மரக்கிளைகளை முறித்து சாப்பிட்டபடி சாவகாசமான நின்று கொண்டிருந்தது. தகவல் கிடைத்து அங்கு வந்த பக்கத்து கிராமமக்கள் பட்டாசு வெடித்து துரத்தினர்.  யானை மீண்டும் காட்டுக்குள் சென்ற பிறகு மீண்டும் அப்பகுதியில் இயல்பு நிலை திரும்பியது. 

இது குறித்து அண்ணாநகர் விவசாயி பழனிச்சாமி கூறுகையில், பவானிசாகரில் இருந்து மேட்டுப்பாளையத்து காய்கறி மற்றும் பூ வியாபாரிகள் சீரங்கராயன் கரடு வழியாக செல்கின்றனர். மக்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த வழித்தடத்தை மக்னா வழியை மறித்து நிற்கிறது. சில நேரங்களில் மனிதர்களை தாக்க வருகிறது. சாலையில் நின்று பழகிபோன இந்த யானையை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார்

0 comments:

Post a Comment