தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, March 27, 2014

தொகுதிக்கு ராசா என்ன செய்தார்? மேடையில் பேச தயாரா? 
அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாசலம் கேள்வி 

வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணனை ஆதரித்து சத்தி கோணமூலை காந்திநகரில் வியாழக்கிழமை வாக்கு சேகரிக்கிறார் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம். உடன், மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம், மேலவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், சத்தி ஒன்றிய செயலாளர் வி.சி.வரதராஜ், கோணமூலை ஊராட்சித் தலைவர் பத்மினிசண்முகம்.



 
சத்தியமங்கலம்,மார்ச் 27:
நீலகிரி மக்களைத் தொகுதிக்கு ராசா என்ன செய்தார்? மேடையில் பேச தயாரா? என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீலகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணனை ஆதரித்து தமிழக சுற்றுச்சுழல் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் சத்தியமங்கலம் ஒன்றியம் மங்களபுரம், அரசூர், தாசநாயக்கனூர், இண்டியம்பாளையம், கரட்டூர், பெரியார்நகர்,சாணார்பாளையம், குப்பந்துறை, வேடசின்னானூர்,செண்பகபுதூர், கோணமூலை,மாரனூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வியாழக்கிழமை பிரசாரம் செய்தார். 

கோணமூலை கிராமத்தில் திறந்த வேனில் அவர் பேசியது: ஈரோடு மாவட்டத்திலேயே பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியி்ல தான் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.கடம்பூர் மலைக்கிராமத்தில் 60 ஆண்டுகளாக மலைவாழ் மக்களுக்கு எஸ்.டி சான்றிதழ் வழங்கப்படவில்லை. வருவாய்த்துறை அமைச்சராக இருந்த போது இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகளுக்கு எஸ்.டி.சான்றிதழ் வழங்கப்பட்டது.

கடம்பூர்-குன்றி இடையே தார்சாலை வசதி, ஆசனூர்,கடம்பூர் பகுதியில் ஆரம்ப சுகாதரா நிலையம், சத்தியில் பசுமைஅங்காடி, ரூ.20 கோடி செலவில் பவானிசாகர் மீன்குஞ்சு உற்பத்தி பண்ணை, ரூ.35 கோடி செலவில் அரசு அலுவலர் பயிற்சி நிலையம், சத்தியில் போக்குவரத்து காவல்நிலையம், சத்தியில் நகர்ப்புற சுகாதாரநிலையம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. 

நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் மத்திய அமைச்சராகவும் இருந்த ஆ.ராசா தொகுதிக்கு என்ன செய்தார். பவானிசாகர் தொகுதி மக்களை அடிக்கடி சந்தித்து அவர்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றியுள்ளோம்.  ஆனால் திமுக வேட்பாளர் ஆ.ராசா தொகுதிக்கு எத்தனை முறை வந்துள்ளார்? என்ன திட்டங்களை செயல்படுத்தினார். மேடை போட்டு பேசத் தயாரா? நாங்கள் மக்கள் பலத்தை நம்பி வாக்கு கேட்கிறோம். திமுகவினர் பணம் பலத்தை நம்பி வாக்கு கேட்கின்றனர். 

மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்த திமுகவினர் பெட்ரேல் டீசல் விலை உயர்வுக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.உணவு பாதுகாப்பு மசோதா மற்றும் சில்லறை வணிகம் போன்றவற்றுக்கு ஏன் அனுமதி அளிக்கப்பட்டது. டிஜிடல் டிவி ஒளிப்பரப்பு அனுமதி மறுப்பு மற்றும் கச்சத்தீவு பிரச்னையில் திமுக நிலைபாடு என்ன?  இதற்கு திமுக வேட்பாளர் ராசா மேடை போட்டு பதில் சொல்ல தயாரா?  என கேள்வி எழுப்பினார். 

இதில் ஈரோடு மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம், மேலவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ்,சத்தி ஒன்றிய செயலாளர் வி.சி.வரதராஜ், பவானிசாகர் ஊராட்சித் தலைவர் வி.ஏ.பழனிச்சாமி, சத்தி யூனியன் சேர்மன் கே.ஏ.சுப்புலட்சுமிஅய்யாசாமி,கோணமூலை ஊராட்சித் தலைவி பத்மின்சண்முகம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

0 comments:

Post a Comment