தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, January 30, 2014

புன்செய் புளியம்பட்டியில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவியர்களுக்கான ஆலோசனை நிகழ்ச்சி -  ஞாயற்றுகிழமை (2/2/2014) நடைபெறுகிறது.
************************************************************************************************************
         
        புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் மற்றும் அம்மா மெட்ரிக் பள்ளி  சார்பில் 10 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கான தேர்வு ஆலோசனை நிகழ்ச்சி " விடியல் வழிகாட்டி 2014 "   (02-02-2014) ஞாயற்றுகிழமை காலை 9.30 மணியளவில் புன்செய் புளியம்பட்டி மாதம்பாளையம் ரோட்டில் அமைந்துள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

        இது குறித்து விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் கூறியுள்ளதாவது. 02-02-2014 ஞாயற்றுகிழமை காலை 9.30 மணியளவில் புன்செய் புளியம்பட்டி மாதம்பாளையம் ரோட்டில் அமைந்துள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவியர்களுக்கான ஆலோசனை நிகழ்ச்சி  " விடியல் வழிகாட்டி 2014 " நடைபெறுகிறது. 

       10 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் முக்கியத்துவம் தரவேண்டிய பகுதிகள் எவை?, எப்படி படித்தால் 100 இக்கு 100 மதிப்பெண்கள் பெறலாம்? 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை சிறப்பாக எழுதுவது எப்படி? இது போன்ற வினாக்களுக்கு பிரபல கல்வியாளர்கள் கலந்து கொண்டு விளக்கம் அளிக்கிறார்கள். மேலும் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் படிக்க வேண்டிய முக்கிய பகுதிகள் குறித்து பாடவாரியாக ஆசிரியர்கள் விளக்குகிறார்கள்.

      நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு அனைத்து பாடங்களுக்குமான வினாவங்கி புத்தகம், தேர்வு ஆலோசனை கையேடு புத்தகம், குறிப்பேடு, பேனா ஆகியவை இலவசமாக வழங்கபடுகின்றன. இந்நிகழ்ச்சியில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். மேலும் விபரங்களுக்கு 9842780240 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

       இந்நிழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விடியல் தலைவர் வாணி தருமராசு, செயலாளர் எஸ்.ஜெயகாந்தன், உறுப்பினர்கள் லோகநாதன், வடிவேலன், சக்திவேல் மற்றும் பலர் செய்து வருகிறார்கள்.

Monday, January 27, 2014

தாளவாடியில் கிராமசபா கூட்டம்

தாளவாடி மல்லன்குழி ஊராட்சி ஒங்கலபுரத்தில் கிராமசபா கூட்டம்

தாளவாடி மல்லன்குழி ஊராட்சி ஒங்கலபுரத்தில்  நடைபெற்ற கிராமசபா கூட்டத்தில் 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

65வது குடியரசு தினவிழாவையொட்டி, தாளவாடி ஊராட்சி ஒன்றியம் மல்லன்குழி ஊராட்சி ஒங்கலபுரம் ஊராட்சித் துவக்கப்பள்ளியில் தாளவாடி ஊராட்சிச ஒன்றியக்குழுத் தலைவர் கெம்பாமணி தேசியகொடியை ஏற்றிவைத்து இனிப்பு வழங்கினார்.அதனைத் தொடர்ந்து, நடைபெற்ற கிராம சபா கூட்டத்திற்கு ஊராட்சித் தலைவர் ரங்கசாமி தலைமை வகித்தார். துணைத்தலைவி சிக்கம்மா வரவேற்றார். ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கெம்பாமணி முன்னிலையில் நடைபெற்ற கிராமசபா கூட்டத்தில் குடிநீர், சுகாதாரம், கழிப்பிட வசதி, பெண்கள் மேம்பாடு உள்ளிட்ட 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.குணசேகரன், கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் ஏ.ரவி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
சத்தியமங்கலத்தில் குடியரசு தினம்

சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் 65 ஆவது குடியரசு தின விழா நடைபெற்றது

சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் 65 ஆவது குடியரசு தின விழா நடைபெற்றது. நகராட்சித் தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம் தேசியக் கொடியேற்றினார். ஆணையாளர் தனலட்சுமி மற்றும் நகராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Sunday, January 26, 2014

வேடர்நகர் அரசு உயர்நிலைபள்ளியில் ஆண்டுவிழா

வேடர்நகர் அரசு உயர்நிலைபள்ளியில் ஆண்டுவிழா

சத்தியமங்கலம் புதுவடவள்ளி வேடர்நகர் அரசு உயர்நிலைபள்ளியில் ஆண்டுவிழா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பள்ளியின் தலைமை ஆசிரியர் எ.சபியுல்லா கான் வரவேற்புரை ஆற்றினார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சின்னராஜ் தலைமை தாங்கினார். எஸ்.எம்.டி.சி. தலைவர் நளாயினி, பொருளாளர் சக்திவேல், பெற்றோர் ஆசிரியர் சங்க பொருளாளர் ராஜ் கவுண்டர், கவுன்சிலர் கல்யாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



பள்ளி மாணவ மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் ஓவியம், கட்டுரை, பேச்சு, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிறைவில் தமிழ் ஆசிரியை பிரேமா நன்றி கூறினார்.

மேலும் இவ்விழாவில் உதிவி தலைமை ஆசிரியர் மாதேஸ்வரி, ஆசிரியர்கள் அருள்செல்வன், அழகேசன், நந்தகுமார், ஓவிய ஆசிரியர் தருமராசு, ஆசிரியைகள் விஜியலட்சுமி, சாந்தி, நிஷாக்கானம், தேவி, கிருஷ்ணவேணி, பெற்றோர்கள், மாணவ மாணவியர்கள் உள்பட  பலர் பங்கேற்றனர்.
திம்பம் மலைப்பாதையில் தொங்கிய லாரியில் தீவிபத்து 

திம்பம் மலைப்பாதையில் தொங்கியபடி நிற்கும் லாரியில் தீப்பிடித்ததால் லாரியின் முன் மற்றும் பின் சக்கரங்கள் தீயில் கருகி சேதமடைந்தன.

திம்பம் மலைப்பாதையில் தொங்கியபடி நிற்கும் லாரியில் தீப்பிடித்ததால் லாரியின் முன் மற்றும் பின் சக்கரங்கள் தீயில் கருகி சேதமடைந்தன.

தமிழகத்தில் இருந்து கர்நாடகம் செல்லும் அனைத்து வாகனங்களும் அதேபோல கர்நாடகத்தில் இருந்து தமிழகம் வரும் வானகங்களும் திம்பம் மலைப்பாதை வழியாக பயணிக்கின்றன.  இந்நிலையில், மேட்டூரில் இருந்து மைசூருக்கு எரிசாராயம் ஏற்றிய லாரி ஒன்று வெள்ளிக்கிழமை திம்பம் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்தது. 7வது வளைவை கடந்துசெல்ல டேங்கர் லாரியை பின்னோக்கி இயக்கியபோது எதிர்பாராதவிதமாக லாரியின் பின் சக்கரங்கள் சாலையோர சுவற்றை இடித்துத்தள்ளிவிட்டு சரிவான பள்ளத்தில் இறங்கியது. அப்போது,லாரின் பின்புறம் மலைச்சரிவில் உள்ள மரத்தில்மோதிபடி நின்றது. இதனால் லாரிக்கு பெரும் சேதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. மரக்கிளைகளின் பிடியில் லாரி சிக்கிக்கொண்டதால் அது அந்தரங்கத்தில் தொங்கியவாறு நிற்கிறது. லாரியில் எரிசாராயம் பாரம் இருப்பதால் அதனை மீட்பதில் சிரமம் ஏற்படும் என தெரிந்து லாரி டிரைவர் மற்றும் கிளீனர் தப்பியோடிவிட்டனர்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு லாரியின் முகப்பு பகுதியில் திடீரென தீப்பிடித்ததால் அது பிற இடங்களுக்கும் பரவியது. இதனால் லாரியில் இருந்த சக்கரங்கள் தீயில் எரிந்து கருகின. அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் இரசாயனம் கலந்த திரவத்தை பீய்ச்சி அடித்து, தீ மேலும் பரவாலம் தடுத்தனர். இதனால் லாரியில் இருந்த எரிசாராயம் தீப்பிடிக்காமல் தப்பியது. லாரியில் உள்ள எரிசாராயம் இதுவரை அகற்றப்படாமல் இருப்பதால் அவ்வழியாக செல்லும் பயணிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.
சத்தியில் திருநீலகண்டர் நாயனார் குருபூஜை விழா

திருநீலகண்டர் நாயனார் குருபூஜை விழா

சத்தியமங்கலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருநீலகண்டர் நாயனார் குருபூஜை விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

சத்தியமங்கலம் குலாலர் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் விசாக நட்சத்திரத்தில் திருநீலகண்டர் குருபூஜை கொண்டாடப்படும். இதன்படி, செவ்வாய்க்கிழமை ஶ்ரீ பவானீஸ்வரர் ஆலயத்தில் குருபூஜை விழா துவங்கியது. 63 நாயன்மார்களில்  ஒருவரான திருநீலகணடர் சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை மற்றும் வழிபாடுகளும் அதனைத் தொடர்ந்து  உற்வசமூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

விழாவையொட்டி, அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் உற்சவமூர்த்தி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  இதையடுத்து, திருநீலகண்டர் கோயிலில் நடந்த அன்னதானம் விழாவில் 250க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து சிறுவர்,சிறுமிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை குலாலர் மன்றத் தலைவர் எஸ்.கே.நாகராஜ், செயலாளர் எஸ்.என்.ஆறுமுகம்,பொருளாளர் எஸ்.என்.காந்தி, இளைஞர் மன்ற தலைவர் எஸ்.ஜி.ரஞ்சித், செயலாளர் எஸ்.ஏ.வெங்கேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
2006 ஆம் ஆண்டு வன உரிமைச்சட்ட அமலாக்கம்:
கெத்தேசால் வன செட்டில்மென்டில் நில அளவை பணி துவங்கியது

இரண்டாம் கட்ட  நில அளவை பணியை சார் ஆட்சியர்  சந்திரசேகரசாகமுரி  துவக்கி வைத்தார்

ஈரோடு மாவட்ட வனப்பகுதியில் வாழும் மக்களுக்கு வனநில உரிமையை வழங்குவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை துவங்கியுள்ளது.இதன்  இரண்டாம் கட்ட  நில அளவை பணியை சார் ஆட்சியர்  சந்திரசேகரசாகமுரி  துவக்கி வைத்தார்.
கடந்த வாரத்தில் மாவநத்தம் வனசெட்டில்மென்டில் மாவட்ட ஆட்சியர் வி.கே.சண்முகம் துவக்கி வைத்த நில அளவை பணி முடிக்கப்பட்டு தற்போது இரண்டாவது கட்ட நிலஅளவை பணி ஆசனூர் வனச்சரகத்திற்குட்பட்ட கெத்தேசால் கிராமத்தில்  துவக்கப்பட்டது.
கோபி சார் ஆட்சியர் சந்திரசேகரசாகமுரி தலைமை தாங்கி நிலஅளவைப் பணியை துவக்கி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.சுந்தரம், புலிகள் காப்பக துணை இயக்குநரும் சத்தி மாவட்ட வன அலுவலருமான கே. ராஜ்குமார் ஆகியோர் வனஉரிமைச்சட்டம் மக்களுக்கு கொடுத்துள்ள உரிமைகளைப்பற்றி விளக்கி பேசினார்கள். ஆசனூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜடையன், சத்தி வருவாய் வட்டாட்சியர் த.முத்துராமலிங்கம், சத்தியமங்கலம் பழங்குடியினர் நலத்துறை தனிவட்டாட்சியர்  எம்.சேதுராஜ்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

Saturday, January 25, 2014

புன்செய் புளியம்பட்டி தபோவனம் பள்ளி ஆண்டு விழா
***************************************************************************
தபோவனம் பள்ளி ஆண்டு விழாவில் இந்த ஆண்டின் சிறந்த மாணவர்கள் விருது பெற்ற மாணவ மாணவியர்கள். உடன் பள்ளி தாளாளர் சாமியம்மா, முதல்வர் முத்துக்குமார், எல்.ஐ.சி. வளர்ச்சி அதிகாரி மணிகண்டன், வேணுகோபால், சக்சஸ் ஜெயச்சந்திரன், முருகானந்தம், விடியல் செயலர் எஸ்.ஜெயகாந்தன் ஆகியோர் உள்ளனர்.


         புன்செய் புளியம்பட்டி தபோவனம் மாமகரிஷி ஈஸ்வராய குருகுலம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

       ஆண்டு விழாவிற்கு சாமியம்மா அவர்கள் தலைமை தாங்கினார்கள். புன்செய் புளியம்பட்டி மக்கள்நல சங்க தலைவர் டாக்டர் சுப்ரமணியன், வெற்றிப்பாதை நிர்வாக ஆசிரியர் கே.வேணுகோபால், ஜெய்சீஸ் ஈரோடு எச்செல் முன்னாள் தலைவர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். தன்னம்பிக்கை பேச்சாளர் சக்சஸ் ஜெயச்சந்திரன் மாணவ மாணவியர்களுக்கு தன்னம்பிக்கை குறித்து சிறப்புரை ஆற்றினார். பள்ளியின் முதல்வர் முத்துக்குமார் வரவேற்றார்.

      1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை படிப்பு, நடனம், பேச்சு உள்பட பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த 10 மாணவ மாணவியர்களுக்கு எல்.ஐ.சி. நிறுவனம் சார்பாக இந்த ஆண்டின் சிறந்த மாணவர் விருதுகள் வழங்கப்பட்டது. இந்த விருதினை சத்தியமங்கலம் ரோட்டரி சங்க முன்னால் தலைவரும், எல்.ஐ.சி. வளர்ச்சி அதிகாரியுமான எம்.மணிகண்டன் வழங்கினார். அதேபோல் மாணவ மாணவியர்களுக்கு அன்பு, ஒழுக்கம் மற்றும் படிப்பு உள்பட பல்வேறு விசயங்களை சிறப்பாக கற்று தந்தமைக்காக ஆசிரியர் மூர்த்தி அவர்களுக்கு இந்த ஆண்டின் சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்பட்டது.

       அதனை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியர்களின் பாடல், நாடகம், யோகா மற்றும் நடனம் உள்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. தேச ஒற்றுமை, குளோபல் வார்மிங், ஆங்கில மொழியின் அவசியம், யோகா கற்பதன் அவசியம் உள்பட பல்வேறு தலைப்புகளில் மாணவ மாணவியர்கள் நிகழ்த்திய நாடகம், தெருகூத்து, நடனங்கள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. இந்நிகழ்ச்சியில் தபோவனம் நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். 
 
புன்செய் புளியம்பட்டியில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா
 

 
அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேச்சு

 ஜெயலலிதா பிரதமராக 40 தொகுதிகளிலும் வெற்றபெற பாடுபட வேண்டும் - அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேச்சு


புன்செய் புளியம்பட்டியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். 97 ஆவது பிறந்தநாள் விழா பொதுகூட்டத்தில் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கலந்து கொண்டு ஜெயலலிதா பிரதமராக 40 தொகுதிகளிலும் வெற்றபெற பாடுபட வேண்டும்  என்று பேசினார்.

பாரதரத்னா புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 97 ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் புன்செய் புளியம்பட்டி திரு வி க திடலில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு நகர அண்ணா தி.மு.க. செயலாளர் எம்.கே.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம்,  நகர துணை தலைவர் டி.பாபு முன்னிலை வகித்தனர். பவானிசாகர் ஒன்றிய குழு தலைவர் வி. ஏ. பழனிசாமி வரவேற்று பேசினார்.

வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும் போது, மக்களின் பணம் மக்களிடம் சென்று சேரவேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழக முதல்வர் ஜெயலலிதா செயல்பட்டு வருகிறார். கடந்த 21/2 ஆண்டுகளில் மற்ற மாநிலங்கள் வியக்கும் வண்ணம் திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தி வருகிறார் நமது முதல்வர் ஜெயலலிதா. விலையில்லா 20 கிலோ அரிசி, திருமண நிதிஉதவி, முதியோர் உதவி தொகை திட்டம், விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டம், விலையில்லா ஆடு, மாடுகள் வழங்கும் திட்டம், பல்வேறு வகையான நோய்களுக்கு முதலமைச்சர் காப்பீடு திட்டம், ஏழைகளுக்கு பசுமை வீடுகள் திட்டம், அம்மா உணவகம், அம்மா குடிநீர், மனுக்களின் மீது உடனடி தேர்வு காண அம்மா திட்ட முகாம் என எண்ணற்ற திட்டங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றி வருகிறார். விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெற்று தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்கள் இந்தியாவின் பிரதமராக பதவியேற்க நாம் அனைவரும் சபதம் ஏற்கவேண்டும் என்றார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர்கள் தேவலா ரவி, மணவை மாறன் ஆகியோர் பேசினார்கள். முன்னதாக எம்.ஜி.ஆர். அவர்களின் வேடம் அணிந்து அவரின் கொள்கை பாடல்களுக்கு நடன நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள்எம்.பி, காளியப்பன்,  முன்னாள் எம்.எல்.ஏ. சிதம்பரம், மாவட்ட பேரவை செயலாளர் ஆறுமுகம், ஊராட்சி தலைவர்கள் காராபாடி வெள்ளிங்கிரி, விண்ணப்பள்ளி கணேசன், புங்கம்பள்ளி மயிலாள் சம்பத், பனையம்பள்ளி ஈஸ்வரன், ஒன்றிய குழு உறுப்பினர்கள், நகரமன்ற உறுப்பினர்கள் உள்பட ஏராளமான அண்ணா திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகர அவைத்தலைவர் ஜெயசேகரன் நன்றி கூறினார்.
தாய் திட்டத்தின் கீழ் சாலைபணி அடிக்கல் நாட்டுவிழா



பனையம்பள்ளி ஊராட்சி இந்திரா நகர் காலனியில் தாய் திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணியின் அடிக்கல் நாட்டும் விழா
 பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பனையம்பள்ளி ஊராட்சி இந்திரா நகர் காலனியில் தாய் திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணியின் அடிக்கல் நாட்டும் விழாவை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எஸ்.ஆர். செல்வம் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பவானிசாகர் ஒன்றிய குழு தலைவர் வி ஏ பழனிசாமி, பனையம்பள்ளி ஊராட்சி தலைவர் ஈஸ்வரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்
 தேசிய வாக்காளர் தினத்தையொட்டி சத்தியமங்கலத்தில் பள்ளி மாணமாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தில் வட்டாட்சியர் முத்துராமலிங்கம், நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திம்பம் மலைப்பாதையில் ஆசிட் லாரி கவிழந்து விபத்து
திம்பம் மலைப்பாதையில் ஆசிட் லாரி கவிழ்ந்து கொட்டும் நிலையில் உள்ளது

சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதையில் ஆசிட் லாரி கவிழ்ந்து கொட்டும் நிலையில் உள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கிய சாலையாக திண்டுக்கல் &  பெங்களுரு தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலை வழியாக இரு மாநில அரசுப்பேருந்துகள் மற்றும் பல மாநில கனரக சரக்குப்போக்குவரத்து வாகனங்கள் 24 மணிநேரமும் பயணிக்கின்றன. இச்சாலையில் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகள் திம்பம் மலைப்பாதை உள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடதல் பாரம் ஏற்றிவரும் கனரக வாகனங்கள் அடிக்கடி பழுது ஏற்பட்டு மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நேற்று மேட்டுரிலிருந்து மைசூருக்கு ஹைட்ரோகுளோரிக் ஆசிட் லோடு ஏற்றிச்சென்ற  டேங்கர் லாரி 7 வது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து பின்பக்கமாக மலைப்பாதையில் சரிந்து தலைகீழாக நின்றுள்ளது. டேங்கரில் ஆசிட் உள்ளதால் கசிந்து விபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. 
 
 
 
இதே போன்று கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு பஞ்சு பாரம் ஏற்றி வந்த லாரி திம்பம் மலை உச்சியில் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இரு விபத்துக்களிலும் லாரி டிவைர்கள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.
வாழையில் ஊடுபயிராக புகையிலை சாகுபடி

புன்செய் புளியம்பட்டி பனையம்பள்ளி பகுதியில் விவசாயிகள்  வாழையில் ஊடுபயிராக புகையிலை சாகுபடி செய்வது அதிகரித்து வருகிறது

விவசாயத்தில் கூடுதல் வருமானம் பெறுவதற்காக ஊடுபயிர் சாகுபடி செய்வது புன்செய் புளியம்பட்டி பகுதியில் அதிகரித்து வருகிறது.

புஞ்சைபுளியம்பட்டி சுற்றுவட்டார பகுதிளான கணக்கரசம்பாளையம், தாசம்பாளையம், பனையம்பள்ளி, புங்கம்பள்ளி, விண்ணப்பள்ளி, நல்லூர், நொச்சிக்குட்டை, மாதம்பாளையம், காராப்பாடி மற்றும் காவிலிபாளையம்  பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் புகையிலை பயிரிடப்பட்டுள்ளது.அண்மைகாலமாக  குறைந்து வரும் நீராதாரமும்  மாறி வரும் பருவநிலையின் மாற்றம் காரணமாக விவசாயிகள் ஒரே பயிரை நம்பி இருக்காமல் பல  பயிர்களை சாகுபடி செய்வது தற்போது விவசாயத்தில் கூடுதல் வருமானத்திற்கு உதவியாக உள்ளது.


புன்செய் புளியம்பட்டி பனையம்பள்ளி பகுதியில் விவசாயிகள்  வாழையில் ஊடுபயிராக புகையிலை சாகுபடி செய்வது அதிகரித்து வருகிறது. தனியாக உரம் போடுவதும் தனியாக பாசனம் செய்யவதும் தவிர்க்கப்படுகிறது. இதனால், மண்வளம் அதிகரிப்பதுடன் களைகளும் ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்படும். இது குறித்து பனையம்பள்ளி விவசாயி பழனிச்சாமி கூறுகையில், புகையிலை சாகுபடி செய்வதால்  ஏக்கர் ஒன்றுக்கு 1 டன் வரை மகசூல் கிடைக்கிறது. இதன் உற்பத்தி செலவு ரூ.40 ஆயிரம் ஆகிறது. காய்ந்த பதப்படுத்தப்பட்ட புகையிலை கிலோ ரூ.80 வரை விற்பனையாகும் என்பதால் 3 மாத சாகுபடியில் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரம் வரை லாபம் ஈட்டஇயலும். புகையிலை சாகுபடியில் கிடைக்கும் உபரி வருமானத்தில் ஆண்டுபயிரான வாழைக்கு உரமிடுதல், களை வெட்டுதல் உள்ளிட்ட செலவினங்களை ஈடுகட்டமுடியும் என்றார்.

விவசாய முன்னேற்றம் தேசிய கருத்தரங்கு


விவசாய முன்னேற்றம் தேசிய கருத்தரங்கு

சத்தியமங்கலம் காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இந்திய அரசின் தேசிய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகமும் இணைந்து ‘ இந்தியாவில் கிராமப்புற விவசாயத்தின் முன்னேற்றம் மற்றும் அதன் சவால்‘ என்ற தலைப்பில்  தேசிய அளவிலான இருநாள் கருத்தரங்கை நடத்தியது. சிறப்பு விருந்தினராக கொச்சின் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு பொருளாதாரத்துறை பேராசிரியர் அருணாச்சலம் கலந்து கொண்டு கருத்தரங்கை துவக்கி வைத்து  சிறப்புரையாற்றினார். இந்தியாவில் விவசாயத்துறையின் இன்றைய நிலை பற்றியும், விவசாயத்துறையின் முன்னேற்றத்திற்கு அரசாங்கத்தின் பங்கு, இன்றைய இளைஞர்களின் ஈடுபாடு ஆகியவற்றை பற்றியும் தமது உரையில் விளக்கினார்.

முன்னதாக கல்லூரி நிறுவனத்தலைவர் பெருமாள்சாமி தலைமை ஏற்று விழா மலரினை வெளியிட்டார். கல்லூரி செயலர் அருந்ததி, துணைச்செயலர் செல்வி. மலர்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மோகன்தாஸ் வாழ்த்திப் பேசினார்.

மேலாண்மைத் துறைத்தலைவர்  சரவணகுமார் வரவேற்றார். கருத்தரங்கில் வெளிமாநிலங்களில் இருந்து சிறப்பு பேச்சாளர்கள் மற்றும் தலைமை பேச்சாளர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 650 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்தனர்.

சூரியகாந்தி
 புன்செய் புளியம்பட்டி அருகேயுள்ள நொச்சிகுட்டை கிராம பகுதி விவசாயிகள் தங்கள் நிலங்களில் சூரியகாந்தி செடிகளை பயிர் செய்துள்ளனர். அவை நன்கு செழித்து வளர்ந்து காலை நேரத்தில் கதிரவனை நோக்கி மலர்ந்து நிற்கும் அழகிய காட்சி.

Thursday, January 23, 2014

திருப்பூர் புத்தகத் திருவிழா

பின்னல் புக் டிரஸ்ட், பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 11வது திருப்பூர் புத்தகத் திருவிழா திருப்பூர் கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் 2014ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி முதல் பிப்ரவரி 9ம் தேதி முடிய 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது
31-01-2014 - தொடக்க விழா
மாவட்ட ஆட்சியர் ஜி.கோவிந்தராஜ் -அமித் குமார் சிங் ஐபிஎஸ் 
மாண்புமிகு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அவர்கள்
வணக்கத்திற்குறிய மேயர் அ.விசாலாட்சி அவர்கள்
சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் அவர்கள்
1.02.2014
சினிமா நூற்றாண்டு விழா
இயக்குனர் சீனு ராமசாமி - என்.நன்மாறன் Ex MLA
எடிட்டர் லெனின்
2.02.2014
எஸ்.ஜி.ரமேஷ்பாபு - இரா.காமராசு
03.02.2014
ச.தமிழ்செல்வன் - சன்டிவி வீரபாண்டியன்
04.02.2014
சாமிநாதன் - வெண்ணிலா
05.02.2014
பேரா. அப்துல் காதர் - பிரின்ஸ் கஜேந்திரபாபு
06.02.2014
திருப்பூர் தமிழ்ச் சங்கம் - இலக்கிய விருது விழா
 07.02.2014
மாணவர் திறனாய்வுப் போட்டிகள்
செந்தாமரைக் கண்ணன் ஐபிஎஸ்
திருநாவுக்கரசு காவல்துறை துணை ஆணையர் அவர்கள்
08.02.2014
நீதியரசர் சந்துரு - விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை
09.02.2014
சிந்தனைப் பட்டிமன்றம்
பேரா. மு.ராமச்சந்திரன் குழுவினர்

Wednesday, January 22, 2014

3 பேரைக் கொன்ற ஊட்டி புலி சுட்டுக்கொலை

 ஊட்டி : ஊட்டியில் மூன்று பேரையும், இரண்டு மாட்டையும்கொன்று 19 நாட்களாக பிடிபடாமல் தப்பித்து வந்த புலியை அதிரடிப்படையினர் சுட்டு வீழ்த்தினர்.நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே சோலாடா பகுதி வனத்தில் கடந்த 4ம் தேதி கவிதா என்ற பெண்ணையும், கடந்த 6ம் தேதி தொட்டபெட்டா பகுதியில் சின்னப்பன் என்பவரையும், 8ம் தேதி குந்தசப்பை பகுதியில் முத்துலட்சுமி என்ற பெண்ணையும் புலி கடித்துக் கொன்றது.இந்த புலியை சுட்டுப்பிடிக்க வனத்துறை, அதிரடிப்படையினர் மற்றும் போலீசார் களமிறக்கப்பட்டனர். 50க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் நவீன கருவிகளை பொருத்தி புலியை பிடிக்கும் பணி நடந்தது. கடந்த 10, 11ம் தேதி குந்தசப்பை தேயிலை தோட்டங்களில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் புலி நடமாடியது பதிவானது. புலியை பிடிக்க பல்வேறு பகுதிகளில் கூண்டு வைக்கப்பட்டது. ஆனால், புலி சிக்கவில்லை.

கடந்த 19ம் தேதி கப்பச்சி கிராமத்தில் மாட்டை அடித்துக் கொன்று தின்றது. புலியின் அட்டகாசம் தொடர்ந்தது.கப்பச்சி பகுதி பாரகேலா தேயிலை தோட்டத்தில் நேற்று மாலை மீண்டும் மாடு ஒன்றை புலி கடித்துக் கொன்றது.  தீப்பந்தங்களுடன் கிராம மக்கள் 500க்கு மேற்பட்டோரும், அதிரடிப்படையினர், வனத்துறையினர் டார்ச் லைட்டுடன் வனத்தில் புலி பதுங்கிய இடத்தை சுற்றி வளைத்தனர்.12 பேர் கொண்ட அதிரடிப்படை குழுவினர் ஏகே 47 ரக துப்பாக்கியுடனும், வனத்துறையினர் 50க்கும் மேற்பட்டோர் புலியை கொல்லும் முயற்சியில் ஈடுபட்டனர். புலியை நோக்கி அதிரடிப்படையினர் 3 முறை சுட்டனர்.

ஆனால் புலி தப்பியது. 4வது முறை சுட்டதில் புலி வீழ்ந்தது. அதன் அருகே சென்று பார்த்த போது புலிக்கு அசைவு இருந்தது. பிறகு பல முறை புலியை துப்பாக்கியால் சுட்டனர். இதில் புலி இறந்தது. புலி இறந்ததும் கிராம மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் துள்ளிக் குதித்தனர். கப்பச்சி கிராம மக்கள் ஆயிரகணக்கானோர் அப்பகுதியில் குவிந்தனர்.

இன்று முதல் பள்ளிகள் இயங்கும்

புலி பீதியால் சோலாடா பகுதியைச் சுற்றிய 25 கிராமங்களில் உள்ள 48 பள்ளிகளுக்கு 5ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.  இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக கப்பச்சி, தும்மனட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் 17 பள்ளிகளுக்கு நாளை வரை விடுமுறை அளிக்கப்பட்டது. புலி பிடிபட்டதால் விடுமுறை ரத்து செய்யப்பட்டு இன்று (23ம் தேதி) முதலே பள்ளிகள் செயல்படும் என கலெக்டர் சங்கர் தெரிவித்துள்ளார்.

 ராஜ்யசபாதேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு



சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு பிப். மாதம் தேர்தல் நடக்கிறது. இதில் அ.தி.மு.க.சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி 
  • முத்துகருப்பன்
  •  சின்னதுரை
  •  சசிகலா புஷ்பம்
  •  விஜிலா சத்யானந்த் 
ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மார்க்சிஸ்ட் சார்பில் போட்டியிடும் ஒரு வேட்பாளருக்கு அ.தி.மு.க. ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளது.

Tuesday, January 21, 2014

 சத்குரு ஸ்ரீ தியாகராஜரின் உருவப்படம்


 சத்குரு ஸ்ரீ தியாகராஜரின் உருவப்படம்

சத்குரு ஸ்ரீ தியாகராஜரின் 167வது ஆராதனை விழாவை முன்னிட்டு சத்தியமங்கலம் அக்ரஹாரம் லட்சுமிகெளரி என்பவர் வீட்டின் முன் செவ்வாய்க்கிழமை  கோலமிடப்பட்ட  சத்குரு ஸ்ரீ தியாகராஜரின் உருவப்படம் 
ஆற்றில் தண்ணீர் எடுக்கும் அதிகாரத்தை வழங்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பவானிஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கு சட்டப்படி அனுமதி வழங்கக்கோரி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் சத்தியில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்

பவானிஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கு சட்டப்படி அனுமதி வழங்கக்கோரி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் சத்தியில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை திப்புசுல்தான் சாலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் ராமகவுண்டர் தலைமை வகித்தார். சத்தி வட்ட செயலாளர் சுப்பையன் முன்னிலை முன்னிலை வகித்தார். தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் எம்.ஆர்.சிவசாமி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசியது:  சத்தி, கோபி, பவானி வட்டாரத்தில் கடந்த 50 ஆண்டுகளாக பவானிஆற்று நீரை பம்ப் செட்,பைப் லைன் மற்றும் கேபிள் முறையில் நீர் எடுத்து சென்று விவசாயம் செய்து வருகின்றனர். அண்மையில், நீதிமன்ற உத்தரவு படி ஆற்றோர பம்ப் செட்டுகளுக்கு மின்இணைப்பு துண்டிப்பு செய்யப்பட்டது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தால் மின் துண்டிப்பு தாற்காலிகமாக நிறுத்துவைக்கப்பட்டுள்ளது.  பவானி ஆற்று நீர்பம்ப் செட் விவசாயத்தை முறைப்படுத்தி அங்கீகாரம் செய்து ஆற்றில் தண்ணீர் எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்குவதுதான் நிரந்தர தீர்வாகும்.

நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள தற்போதைய வறட்சி காலத்தில் இத்தகைய நீர்ப்பாசனத்தை அரசு ஊக்கவிக்க வேண்டும். 

கேரளாவிலும் கர்நாடகத்திலும் ஆற்றுநீரை பம்ப் மூலம் எடுத்து விவசாயம் செய்ய சட்டப்பூர்வமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் சேலம் நாமக்கல் மாவட்டங்களில் காவிரி நீரை பல கிலோ மீட்டர்கள் பைப் லைன் மூலம் எடுத்து விவசாயம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதே போல், பவானி ஆற்று நீர் உபயோகி்க்கும் பம்ப் செட் விவசாயிகளுக்கு சட்டப்படி அனுமதி அளிக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் மின் துண்டிப்பு செய்யக்கூடாது என்றும் துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளுக்கு மறு மின் இணைப்பு அளிக்க வேண்டும். இது சம்மந்தமாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கில் பம்ப் செட்டுகளுக்கு மின் துண்டிப்பு செய்யாமல் நிறுத்த தடை ஆணை நீடிக்க முதல்வர் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Monday, January 20, 2014


கோழிகொண்டை பூ
 புன்செய் புளியம்பட்டி அடுத்துள்ள பவானிசாகர் பகுதிகளில் உள்ள ராஜன்நகர்,காந்திநகர் கிராமங்களில் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் கோழிகொண்டை பூ செடிகள் பயிரிட்டுள்ளனர். பூ மாலைகளில் அதிகளவில் பயன்படுத்தப்படும் கோழிகொண்டை பூக்கள் செடிகளில் அழகாக காட்சியளிக்கிறது.
பவானிசாகர் வட்டாரத்தில் 10000 குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கப்பட்டது


10000 குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து

பவானிசாகர் வட்டாரத்துக்கு உட்பட்ட புன்செய் புளியம்பட்டி, காராபாடி, காவிலிபாளையம், பனையம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் 65 மையங்களில் மொத்தம் 10000 குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கப்பட்டது.

புன்செய் புளியம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து தொடக்கவிழா நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு பவானிசாகர் சட்டமன்ற  உறுப்பினர்  பி.எல். சுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி தலைவர்  எஸ்.ஆர். செல்வம் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கி முகாமை துவக்கி வைத்தார்.

இம்முகாமில் காலை 7 மணிமுதல் எராளமான பெண்கள் தங்கள் கைக்குழந்தை மற்றும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அழைத்து வந்து ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை ஊற்றி சென்றனர்.  இம்முகாம் பஸ் நிலையம், நகராட்சி திருமண மண்டபம், காந்தி நகர் உள்ளிட்ட முக்கிய இடங்களில்  மாலை 5 மணிவரை முகம் நடைபெற்றது.

மேலும் இந்நிகழ்ச்சியில்  பு புளியம்பட்டி நகராட்சி தலைவர் அன்பு, துணை தலைவர் பாபு.ஊராட்சி ஒன்றிய  தலைவர்   வி. ஏ. பழனிச்சாமி மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் பி.டி.ஆனந்தன் ஆகியோர் உள்பட  மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டார்கள்
பனியில் குளிக்கும் மலைமுகடுகள்

 
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் மலை பகுதியில் கடும் பனிபொழிவு நிலவுகிறது. மலியம்துர்கம் மலை முகடுகளில் அதிகாலையில் காணப்பட்ட பனிமூட்டம்
 போலியோ முகாம்

 
சத்தியமங்கலம்   தாய் சேய் நலவிடுதியில் போலியோ  சொட்டு முகாம்

சத்தியமங்கலம்   தாய் சேய் நலவிடுதியில் நடைபெற்ற  போலியோ முகாமில் நகரமன்ற தலைவர் OM சுப்பிரமணியம் குழந்தைகளுக்கு போலியோ  சொட்டு மருந்து வழங்கினார். நகராட்சி ஆணையாளர் கு.தனலட்சுமி, கவுன்சிலர் பாசில், ரோட்டரி சங்க பிரதிநிதி வை.கோவிந்தராஜ் உள்பட பலர் இதில் பங்கேற்றனர். நகரில் மொத்தம் 13 இடங்களில் 3860 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது 

ஆசனூர் அருகே எஸ்.ஐ. மீது தாக்குதல்

சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எஸ்.ஐ. ஆனந்தகுமார்

ஆசனூர் அருகே விசாரணைக்குச் சென்ற உதவி காவல் ஆய்வாளரின் மண்டையை உடைத்ததாக, ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட 6 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.

ஆசனூர் மலைப் பகுதியில் ஏராளமான சொகுசு தங்கும் விடுதிகள் உள்ளன. பல்வேறு இடங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் இங்கு தங்குவது வழக்கம். இந் நிலையில், அவிநாசியில் உள்ள உணவு விடுதி உரிமையாளர் மோகனசுந்தரம் (35), அவரது நண்பர்கள் 6 பேர் கேர்மாளத்தில் உள்ள தனியார் ஆடம்பர விடுதியில் சனிக்கிழமை அறை எடுத்து தங்கியுள்ளனர். 
இவர்களுக்கும் ஹோட்டல் நிர்வாகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஹோட்டல் மேலாளர், ஆசனூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலையில் புகார் அளித்தார். இதையடுத்து, உதவி ஆய்வாளர் கு.ஆனந்தகுமார் கேர்மாளம் தனியார் விடுதிக்குச் சென்று விசாரணை நடத்தினார். 

குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் மோகனசுந்தரம் மற்றும் அவரது நண்பர்களை ஜீப்பில் ஏற்றி ஆசனூர் காவல் நிலையத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் அழைத்து வந்து கொண்டிருந்தார். கெத்தேசால் என்ற இடத்தில் வந்தபோது, முன் இருக்கையில் அமர்ந்திருந்த உதவி ஆய்வாளரை, மோகனசுந்தரம் மது பாட்டிலால் தாக்கினாராம். இதில் எஸ்.ஐ. மண்டை உடைந்தது.

அப்போது, அவ்வழியாக வந்த ஆசனூர் ஊராட்சித் தலைவர் ஜடையன் மற்றும் கிராம மக்கள், உதவி ஆய்வாளரை மீட்டு சத்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து ஆசனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மோகனசுந்தரம் மற்றும் அவரது நண்பர்களைக் கைது செய்தனர்.
எம் ஜி ஆர் 97 வது பிறந்தநாள் 

 
எம் ஜி ஆர் 97 வது பிறந்தநாள்
 சத்தியமங்கலம் கோட்டுவீரம்பாளையம் -  எம் ஜி ஆர் 97 வது பிறந்தநாளை முன்னிட்டு நகரமன்ற தலைவர் O M சுப்பிரமணியம் கொடியேற்றி இனிப்பு வழங்கினார் , அருகில் கவுன்சிலர்கள் ராணி குமார் சையத்பாசில் , சிவகுமார் லட்சுமணன் மற்றும் பலர்  உள்ளனர்.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் சரிவு


பவானிசாகர் அணையின் நீர்மட்டம் சரிவு
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 45.69 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 705 கன அடியாகவும் உள்ளது. அணையிலிருந்து பவானி ஆற்றில் 700 கனஅடியும், எல்பீபி வாய்க்காலில் 5 கனஅடியும் திறந்து விடப்பட்டுள்ளது.

Thursday, January 16, 2014


புத்தக திருவிழா வாசகங்கள்
*********************************



ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் மரித்த ஆதித்த கரிகாலனுக்காக இப்போது அழ வைத்தது புத்தகங்கள் தான்
 - பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர்

************************************************************

புத்தகங்களை தொடும் போது நாம் அனுபவத்தை தொடுகிறோம்
- திரைப்பட பாடலாசிரியர் நா. முத்துக்குமார்

****************************************************************

ஒரு புத்தகம் ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றும்
- திரைப்பட நடிகர் சத்யராஜ்

****************************************************************

இதுவரை புத்தகங்களால் தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்
- திரைப்பட நடிகர் ஜீவா

****************************************************************

எனக்கு கற்று கொடுத்த ஆசான்கள் புத்தகங்கள் தான்
 - திரைப்பட நடிகை ரோகிணி

****************************************************************

புத்தகம் இல்லாத வீடு ஆன்மா இல்லாத வீடு
- ஆவன பட இயக்குனர், எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார்

****************************************************************

தனிமையில் இருந்தாலும் புத்தகங்களோடு இருந்தால் தனிமையை தவிடு பொடியாக்கும் வல்லமை புத்தகங்களுக்கு உண்டு.
- வழக்குரைஞர்அருள்மொழி

****************************************************************

ஒவ்வொரு பிறவியிலும் ஒரு மனிதனோடு வாழந்த அனுபவத்தை புத்தகம் தருகிறது.
- திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான்

****************************************************************

வாசித்தல் ஒரு வரம்! வாசித்தல் ஒரு யோகம்
- கவிபேரரசு வைரமுத்து

****************************************************************

கலைவாணி கையில் இன்னும் புத்தகம் இருக்கிறது. நாம் வாசிக்க வேண்டாமா?
- பட்டிமன்ற நடுவர் முனைவர் கு.ஞானசம்பந்தன்

****************************************************************

ஒவ்வொரு புத்தகமும் ஒரு நல்ல துணைவன்
- எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

****************************************************************

நாம் வாழ்க்கையை வாசிக்க புத்தகங்களை நமது பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும்
- விஜய் டிவி நீயா நானா கோபிநாத்

****************************************************************

ஒரே வாழ்கையில் நூறு வாழ்கை வாழ்ந்த அனுபவத்தை புத்தகம் தரும்.
- பத்திரிகையாளர் ஞாநி

****************************************************************

மனிதனுடைய மனதின் கோணலை நேர் படுத்துவது புத்தகங்கள் தான்
- காந்திய மக்கள் இயக்க நிறுவனர் தமிழருவி மணியன்

****************************************************************

ஒவ்வொரு நூலுமே எனக்கு மிகப்பெரிய பரிசு
- திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன்

****************************************************************

புத்தகங்களின் மூலமாக நேரடியாக சொர்கத்தை அடைய முடியும்
- கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்

****************************************************************

உட்கார்ந்த இடத்திலிருந்தே புத்தகத்தின் மூலம் உலகத்தை அறிந்து கொள்ளலாம்
- திரைப்பட நடிகர் சிவகுமார்

****************************************************************

உணவை விட புத்தகம் மிகவும் அவசியம்
- திரைப்பட நடிகர் / இயக்குனர் மிஷ்கின்

****************************************************************
பொங்கல் தினம்

புளியம்பட்டி மாமகரிஷி ஈஸ்வராய குருகுலம் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பொங்கல் தினம்
 புன்செய் புளியம்பட்டி மாமகரிஷி ஈஸ்வராய குருகுலம் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பொங்கல் தினம் கொண்டாட பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சாமியம்மா தலைமை தாங்கினார். முதல்வர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.  பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்க பட்டது.
புன்செய் புளியம்பட்டியில் தைப்பூச விழா




புன்செய் புளியம்பட்டி அருள்மிகு சுப்ரமணியர்
புன்செய் புளியம்பட்டி அருள்மிகு சுப்ரமணியர் திருகோவிலில் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடபட்டது. இதனையொட்டி காலையில்  திருகல்யாண உற்சவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அபிஷேக பூஜை மற்றும் சிறப்பு அலங்காரத்துடன் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை உடன் திருக்கோவில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் மதியம் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மார்க்கழிக்கு விடை கொடுக்கும் சூரியன் 
 
சூரியன் மறையும் ரம்மியமான காட்சி
 
இயற்கை அழகில் மனதை மயக்கும் அந்திப் பொழுதில் சூரியன் மறையும் ரம்மியமான காட்சி

இடம்: சத்தியமங்கலம் கடம்பூர் மலைக்கிராமம், திங்கள்கிழமை மாலை
 
ஸ்ரீ ஊத்துக்குளி அம்மன்
 புன்செய் புளியம்பட்டி ஸ்ரீ ஊத்துக்குளி அம்மன் கோவிலில் உழவர் திருநாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.இதனையொட்டி ஸ்ரீ ஊத்துக்குளி அம்மனுக்கு மீனாட்சி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு  ஸ்ரீ ஊத்துக்குளி அம்மனை தரிசித்தனர்.
சத்தியமங்கலம் நடுமலை மாதேஸ்வரன் கோயிலில் மாட்டுப்பொங்கல் விழா

புளியம்கோம்பை நடுமலை மதேஸ்வரர் கோவில் விழாவில் மலர் அலங்காரத்தில்  பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஸ்ரீ நந்தீஸ்வரர்.

மாட்டுப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடுமலை மாதேஸ்வரன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாடு பூஜையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. தமிழ்ரகளின் உணர்வோடு இரண்டறக் கலந்துவிட்ட  பொங்கல் பண்டிகையை கிராமமக்கள் கோலாகலமாக கொண்டாடினர். பொங்கலுக்கு சில தினங்களுக்கு முன்பிருந்தே மக்கள் வீட்டுக்கு வெள்ளையடித்து வர்ணம் பூசி அழகுபடுத்தினர். மார்கழி கடைசிநாளான திங்கள்கிழமை சங்கராந்தி விழா கொண்டாடும் விதமாக  பெண்கள் விரதம் இருந்து வீடுகளுக்கு வேப்பிலை,ஆவாரம்பூ மற்றும் பூலப்பூவை ஒன்றாக சேர்த்து வீட்டு முகப்பில் காப்புகட்டி விழாவை வரவேற்றனர்.இதேபோல வணிக நிறுவனங்கள்,கடைகள் மற்றும் வாகனங்களில் பொங்கல் பூக்கள் கட்டப்பட்டன.

    மண்உருவ மாட்டுப் பொம்மைகள்



செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தைப்பொங்கல் விழாவில் பெண்கள் சூரியனுக்கு பொங்கலிட்டு வழிபட்டனர். ஆண்டு முழுவதும் உழைக்கும் மாடுகளை தெய்வமாக கருதி வழிபடும் மாட்டுப் பொங்கல்கிராமப்புறங்களில்  புதன்கிழமை உற்சாகமாக கொண்டாடப் பட்டது.  சத்தியமங்கலம் சுற்றுப்புறப் பகுதியில் உள்ள விவசாயிகள் தொழுவத்தில் கட்டியிருந்த மாடுகளை குளிப்பாட்டி, அவற்றின்  கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி  கழுத்தில் மணிகள்,பாசிகள் சேர்க்கப்பட்ட அலங்கார கயிறுகள் கட்டி அழகுபடுத்தினர். மேலும் மாடுகளுக்கு புதியதாக மூக்கணாங்கயிறு, தாம்பு கயிறு அணிவித்து பழங்களை கொண்டு மாடுகளுக்கு பொங்கல் படைத்து சிறப்பு பூஜைகள் செய்து வணங்கினர். 

 சத்தியமங்கலம் புளியம்கோம்பையில் உள்ள நடுமலை மாதேஸ்வரன் கோயிலில் நந்தீஸ்வரன், நந்தி சிலைகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு புதன்கிழமை அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.  கால்நடைகள் நோயின்றி நீண்ட நாள் வாழவும் விவசாயம் செழிக்கவும் மண் உருவபொம்பைகளை காணிக்கையாக செலுத்தி வழிபடுவது  வழக்கம். அதன்படி விவசாயிகள்  மாடுகள், காவல் நாய் போன்ற மண் உருவ பொம்மைகளை நேர்த்திக்கடனாக செலுத்தி வழிபட்டனர். ஆண்டுக்கொருமுறை மாட்டுப்பொங்கல் நாளில் மட்டுமே இக் கோயிலில் வழிபாடுகள் நடைபெறும் என்பதால் புதன்கிழமை ஏராளமான விவசாயிகள் இதில் கலந்துகொண்டனர்.

சத்தியமங்கலம் கொமராபாளையம் தவளகிரி முருகன் கோயிலில் புதன்கிழமை மாலையில் நடந்த பூப்பறிப்பு விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். சத்தியில் இருந்து பொதுமக்கள் நடைபயணமாக முருகன்கோயிலுக்கு சென்று வழிபட்டனர். அங்கு  ஒருவருக்கொருவர் இனிப்புகள் மற்றும் இதர தின்பண்டங்களை வழங்கி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துக்கொண்டனர்
தைப்பொங்கல்: சொந்த ஊருக்கு திரும்பிய மலைவாழ் மக்கள் 

மக்கம்பாளையம் கிராமத்தில் ராகியில் உ்ள்ள துகள் நீங்கத் தூவுதல் பணியில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள்

தைத்திங்களை வரவேற்க ஜீரஹள்ளி கிராமத்தில் உழவுப்பணியில் திங்கள்கிழமை ஈடுபட்ட விவசாயி

வேலைதேடி பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்த மலைக்கிராம மக்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு   சொந்த கிராமத்துக்கு திரும்பினர். 

சத்தியமங்கலம் வனக்கோட்டம் கடம்பூர் மலை கிராமங்களில் ஏராளமான பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இவர்களின் பெரும்பாலானோர் வேலை வாய்ப்யின்மை மற்றும் சந்தன கடத்தல் வீரப்பன் பிரச்னை காரணமாக 2000-ம் ஆண்டின் துவக்கத்தில் மலைவாழ்மக்கள் சமவெளி பகுதிக்கு சென்றனர். 

இவர்கள் கோவை,சத்தி,பொள்ளாச்சி ஈரோடு போன்ற இடங்களில் கரும்பு வெட்டும் விவசாய கூலிக்கும் ,திருப்பூர் நூற்பாலை,பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வந்தனர். இதேபோல, நீலகிரி பகுதியில்  மூங்கில்வெட்டுதல், தேயிலை பறிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு சென்று  இவர்கள் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.


இந்நிலையில்,தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாட வேலைதேடி வெளியூர் சென்ற மலைவாழ் மக்கள் குடும்பத்தோடு சொந்த ஊர் திரும்பினர்.  இதையடுத்து சத்தியமங்கலம் தினசரி மார்க்கெட்டில் வியாபாரம் களைகட்டியது. சுண்ணாம்பு, வர்ணம், மாட்டுக்கயிறு, கரும்பு,வாழைப்பழம் போன்ற பொருள்கள் விற்கும் கடைகளில் கூட்டம் அலை மோதியது. பின்னர், பொருள்களை வாங்கி கொண்டு சொந்த ஊர் திரும்ப முடியாமல் அவதிபட்டனர். 

சத்தியில் இருந்து  காடகநல்லி, கேர்மாளம் செக்போஸ்ட், குன்றி மாக்கம்பாளையம் ஆகிய வழித்தடத்தில் இரு முறை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எந்தவொரு சிறப்பு போக்குவரத்து வசதியும் ஏற்படுத்தவில்லை. இதனால் குடும்பம் குடும்பமாக வந்த வெளியூரில் இருந்து வந்த மலைவாழ்மக்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்தனர்.  இதையடுத்து, அவர்கள் அதிக வாடகை கொடுத்து கேர்மாளம், கோட்டமாளம், இருட்டிபாளையம், குன்றி, மாக்கம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு தனியார் லாரி, வேன், டெம்போ மூலமாக சொந்த ஊருக்கு சென்றனர்.
 
இந்தாண்டு பருவமழை பொய்துவிட்டதால் சாகுபடி செய்யப்பட்ட மரவள்ளிக்கிழங்கு, ராகி, மக்காச்சோளம் பயிர்கள் வாடுகின்றன.பீன்ஸ்,சின்ன வெங்காயம் போன்றவை விவசாயிகளுக்கு கை கொடுத்ததால்  மலைவாழ் மக்கள் தைப்பொங்கலை வரவேற்க தயாராகி விட்டனர்.
 
பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பண்ணாரி அம்மனை தரிசித்தனர்
 தைப்பொங்கலையொட்டி,சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரி அம்மன் கோயிலுக்கு அதிகாலை முதலே பக்தர்கள் வரத் துவங்கினர். அதிகாலை நடந்த சிறப்பு அலங்கார பூஜையில் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்  பண்ணாரி அம்மன்.பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர்.புதுமணத்தம்பதி மற்றும் இளைஞர்கள் இதில் அதிகளவில் கலந்துகொண்டனர். சத்தியில் இருந்து கோயிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சத்தி டிஎஸ்பி முத்துமாணிக்கம் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பொங்கல் கபாடி போட்டியில் முதல்பரிசு பெற்ற பாரதி கலாமன்றம்அணி
 
சத்தியமங்கலம் அருகே உள்ள ராஜன் நகர் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற பொங்கல் கபாடி போட்டியில் முதல்பரிசு பெற்ற பாரதி கலாமன்றம் அணிக்கு சுழற்கோப்பையை வழங்குகிறார் நிலக்கிழார் எஸ்.வெங்கடாசலம. உடன், ஈரோடு மாவட்ட அமைச்சூர் கபாடி கழக சேர்மன் எஸ்.கே.ராமசாமி,தலைவர் பி.அன்பழகன்,செயலாளர் என்.கே.கே.பி.சத்யன் உட்பட ஆர்.எப்.கே.சி.நண்பர்கள் கபாடி குழுவினர்
 
பவானிசாகர் பூங்கா குளத்தில் படகு சவாரி மேற்கொண்ட கிராமமக்கள்
பொங்கல் விடுமுறை தினத்தையொட்டி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து 3 நாள்கள் விடுமுறை அளித்துள்ளதால் பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பவானிசாகர் அணைக்கு வந்தனர் பவானிசாகர் பூங்கா குளத்தில் படகு சவாரி மேற்கொண்ட கிராமமக்கள்.
பவானிசாகர் தொட்டம்பாளையத்தில் கத்திபோடும் விழா

பவானிசாகர் அருகே உள்ள தொட்டம்பாளையம் ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடும் விழா

பவானிசாகர் அருகே உள்ள தொட்டம்பாளையம் ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கத்திபோடும் விழா புதன்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

விழாவையொட்டி, தொட்டம்பாளையம் பவானி ஆற்றங்கரையில் சக்தி அழைத்தல் என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இளைஞர்கள் பவானிஆற்றில் குளித்துவிட்டு, மஞ்சள் வேஷ்டி அணிந்து  தாரை தப்பட்டையுடன் கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர். அப்போது, அவர்கள் 'சவுடேஸ்வரி தாயே' என்ற பக்தி பரவசத்துடன் தோளில் கத்திபோட்டபடி ஊர்வலமாக வந்தனர். சில பக்தர்கள் வயிற்றில் வாழைக்காய் வைத்து கத்தியால் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நண்பகலில் நடைபெற்ற பெருபொங்கல் பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து புதன்கிழமை மாலையில் நடைபெற்ற அம்மன் வீதியுலாவில் அலங்கரிக்கப்பட்ட சிம்மவாகனத்தில் சவுடேஸ்வரி அம்மன்  சவுடேஸ்வரிஅம்மன், பங்களாமேடு, அண்ணாநகர், விக்னேஷ்நகர், ராஜீவ்நகர், வினோபாஜி  வீதி மற்றும் தேவாங்கபுரம் வீதியில் உலா வந்து பத்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Wednesday, January 15, 2014

காட்டு யானைகள் முகாம்

காட்டு யானைகள் முகாம்
 சத்தி அடுத்துள்ள விளாமுண்டி பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுயானைகள் மதிப்பானூர் கிராமத்தில் புகுந்தன.பொதுமக்கள் வனத்துறையினர் விரட்டியதால் மதிப்பானூர் வயல்வெளிகளில் முகாமிட்டுளள 6 காட்டுயானைகள்

தொட்டிபாளையம் நெல்வயல்களில் ஹாயாக அணிவகுத்து செல்லும் யானைகள்    

வனத்துறையினர் பட்டாசு வெடித்து துரத்தியதால் பிளிறியபடி ஓடும் யானைகள்

பொங்கல் நல்வாழ்த்துக்கள்!