தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, March 29, 2014

தொட்டம்பாளையம் கிராமத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்  பிரசாரம்





தொட்டம்பாளையம் : நீலகிரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொட்டம்பாளையம் கிராமத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:

இந்த கிராமத்துக்கு நான் முதன்முறையாக பிரசாரத்துக்கு வந்துள்ளேன்.
தேர்தலில் ராசா வெற்றி பெற்று வெற்றி விழாவிற்கு நான் மீண்டும் இங்கு
வருவேன். திமுக ஆட்சியில் தமிழக காவல்துறை உலக புகழ்பெற்ற ஸ்காட்லாண்ட் யார்டு போலீசுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் இருந்தது. தற்போதைய அதிமுக ஆட்சியில் காவல்துறையினருக்கு முதல்வருக்கு பாதுகாப்பு அளிக்கவே நேரம் சரியாக உள்ளது. இதனால் கொலை, கொள்ளை, பாலியியல் பலாத்காரம் அதிகரித்து தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
 அதிமுக அமைச்சர்கள் முதல்வர் ஹெலிகாப்டரில் வரும் போது ஹெலிகாப்டரை பார்த்து கும்பிடுகின்றனர். கீழே இறங்கி நடந்தால் நெடுஞ்சாண் கிடையாக படுத்து மரியாதை செலுத்துகின்றனர். பிறருக்கு வணக்கம் செலுத்துவதே தமிழர் பண்பாடு. இப்படி படுத்துக் கொண்டு வணக்கம் செய்வது கேவலமான செயல்பாடாகும்.
கடந்த திமுக ஆட்சியில் 2 மணி நேரம் மின்வெட்டு இருந்தது. அதற்கு மக்கள் அளித்த தண்டனை ஆட்சி மாற்றம். தற்போது 10 மணி நேரம் மின்வெட்டு உள்ளது.  இதனால் பல தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டு தொழிலாளர்கள் குடும்பத்துடன் நடுத்தெருவிற்கு வந்து விட்டனர்.
இக்கிராமத்தில் நெசவாளர்கள் அதிகம் உள்ளனர் என கேள்விப்பட்டேன். திமுக ஆட்சியில் நெசவாளர்களுக்கு விதிக்கப்பட்ட சென்வாட் வரியை மத்தியஅரசுடன் பேசி திமுக நீக்கியது. நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் தந்தது திமுக ஆட்சி. இலவச வேட்டி சேலை திட்டத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு பாவு நூல் கொடுத்து அதன் மூலம் நெசவாளர்கள் திமுக ஆட்சியில் பயனடைந்தனர். ஆனால் தற்போது இலவச வேட்டி சேலைகள் ஆந்திராவில் ஆர்டர் கொடுத்து
தயாரிக்கப்பட்டு வருகிறது.
இக்கிராமத்தில் நெடுஞ்சாலைத்துறை மூலம் 4.5 கோடி ரூபாயில் பவானி ஆற்றுப் பாலம் கட்டியது திமுக ஆட்சியில் தான். ஏழரை கோடி ரூபாயில் பவானி சாகர் அணை புதுப்பிக்கப்பட்டது. தார்ச்சாலை, 5 கோடியில் மேம்படுத்தப்பட்டது.
புன்செய்புளியம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.1 கோடியில்
புதியகட்டிடம் கட்டப்பட்டது. தற்போது அதிமுக ஆட்சியில் குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. மலைப்பகுதியில் சாலை வசதி சரியாக செய்யப்படவில்லை.
எனவே உதயசூரியனுக்கு வாக்களித்து மீண்டும் ராசாவை வெற்றி
பெறச்செய்யுங்கள். இவ்வாறு மு.க.ஸ்டா லின் பேசினார்.
பிரசாரத்தில் மாவட்ட திமுக செயலாளர் என்.கே.கே.பி.ராஜா, நீலகிரி தொகுதி தேர்தல் பொறுப்பாளர் அருண்குமார், பவானிசாகர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் எல்.பி.தர்மலிங்கம், பவானிசாகர் ஒன்றிய செயலாளர் ஓ.சுப்பிரமணியம், பொதுக்குழு உறுப்பினர் முத்துசாமி, ஊராட்சி தலைவர் நாகராஜ், முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மேகலா, புஸ்பா, ஊராட்சி துணைத் தலைவர் ஜெயராஜ், உத்தண்டியூர் ஊராட்சி தலைவர் ரமேஷ், திமுக பிரமுகர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஆறுச்சாமி, கலையரசி, தங்கராஜ், சிவகுமார், சிவா, செந்தில், சுரேஷ், கணேஷ், கோபால், மொழிக்காவலர் சுப்பிரமணியம், முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மு.க.ஸ்டாலின் பேச்சை ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்து கேட்டனர்.

0 comments:

Post a Comment