தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, December 28, 2014



நம்பியூர் புத்தக திருவிழாவில் பெருந்துறை வளர்தமிழ் தென்றல் கோ.பா.ரவிக்குமார் கலந்து கொண்டு படிப்பது சுகமே என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். அருகில் நம்பியூர் அரிமா சங்க தலைவர் வெற்றிவேல், விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன், ஸ்ரீ ரங்கவிலாஸ் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் உரிமையாளர் எம்.குணசேகரன், குமுதா கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஜனகரத்தினம், அரிமா சங்க பட்டைய தலைவர் வெங்குடுசாமி ஆகியோர் உள்ளனர்.

Saturday, December 27, 2014

உலகுக்கே வழிகாட்டியாக திகழ்வது திருக்குறள்
- ஸ்டாலின் குணசேகரன்





விடியல் சமூகநல இயக்கம் மற்றும் நம்பியூர் அரிமா சங்கம் சார்பில் நம்பியூரில் முதல்முறையாக புத்தக திருவிழா நம்பியூர் காந்திபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நடைபெற்று வருகிறது.

மாலை நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்ச்சியில் விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் வரவேற்றார். குமுதா கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஜனகரத்தினம் தலைமை தாங்கினார். காமராஜ் பள்ளியின் தாளாளர் கருப்புசாமி, நுகர்வோர் பாதுகாப்பு மைய துணை தலைவர் சண்முகசுந்தரம், நம்பியூர் காவல்துறை ஆய்வாளர் விவேகானந்தன், அரிமா சங்க தலைவர் வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஈரோடு மக்கள் சிந்தனை பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசும் போது புத்தகங்கள் தனி மனித வாழ்கைக்கு மட்டுமல்ல சமுதாய முன்னேற்றத்துக்கும் காரணமாக இருக்கின்றன. ஒரு புத்தகம் மனிதனின் வாழ்வை மாற்றி விடும். மாணவர்கள் மீது நாம் அளவற்ற நம்பிக்கை வைக்க வேண்டும். மாணவர்களை மட்டும் நாம் சரியாக வழிநடத்தினால் அவர்களை விட சிறந்தவர்கள் யாரும் இருக்க முடியாது. மாணவ மாணவியர்கள் பாட புத்தகத்தோடு பிற புத்தகங்களை படிக்க வேண்டும். பாடபுத்தகங்களை படிக்கும் போது அறிவாளியாகலாம். பாடம் அல்லாத புத்தகங்களை பாதிக்கும் போது நல்ல மனிதன் ஆகலாம். மாணவர்களை பண்படுத்தும், பக்குவபடுத்தும் ஆயுதம் புத்தகம். அடுத்த தலைமுறை கையில்தான் இந்த சமுதாயம் இருக்கிறது. புத்தகங்களை வாசிக்கும் போது ஈடுபாட்டோடு மனபூர்வமாக வாசிக்க வேண்டும். ஒவ்வொரு மாணவனும் இல்லந்தோறும் சிறிய நூலகம் அமைக்க முயற்சி செய்ய வேண்டும். ஏனென்றால் நல்ல நூல்கள் நமக்கு நண்பன்.

உலகில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட நூல் பைபிள். அடுத்த இரண்டாம் இடம் குரான். மூன்றாம் இடத்தில் இருப்பது திருக்குறள். திருக்குறளில் இல்லாத விசயங்களே இல்லை. அய்யன் திருவள்ளுவரால் 2000 ஆண்டுகளுக்கே முன்பே நம் வாழ்கைக்கு வேண்டிய அத்தனை விசயங்களையும் தந்த நூல் திருக்குறள். திருக்குறள் இல்லாத வீடே இருக்க கூடாது. மாணவ மாணவியர்கள் திருக்குறளை முழுவதுமாக படிக்க வேண்டும். மலேசிய அரசாங்கம் திருக்குறளை தமிழில், ஆங்கிலத்தில், மலாய் மொழியில் அச்சிட்டு ஆண்டுதோறும் மாணவ மாணவியர்களுக்கு இலவசமாக வழங்குகிறது. நம் தாய்மொழியில், தமிழ் மொழியில் திருக்குறளை படிக்கும் இனிமை, இன்பம் மொழிபெயர்ப்பு நூலில் கிடைக்காது.உலகுக்கே வழிகாட்டியாக திகழ்வது திருக்குறள் தான். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நல்ல நூல்களை வாங்கி தர வேண்டும். நம் மண்ணின் அருமை பெருமைகளை, சுதந்திர இந்தியாவின் வரலாற்றை, நம் கலாசாரத்தை அறிந்து கொள்ள தேடி தேடி நூல்களை படிக்க வேண்டும். நம்பியூர்  புத்தக திருவிழாவை அனைத்து பொதுமக்களும், மாணவ மாணவியர்களும் முழுமையாக பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்றார்.

நிறைவாக நம்பியூர் அரிமா சங்க பட்டைய தலைவர் வெங்குடுசாமி நன்றி கூறினார்.

Thursday, December 25, 2014

 நம்பியூர் வாசிக்கிறது




விடியல் சமூகநல இயக்கம் மற்றும் நம்பியூர் அரிமா சங்கம் சார்பில் நம்பியூரில் முதல்முறையாக புத்தக திருவிழா நம்பியூர் காந்திபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு வெட்டையம்பாளையம் கொமரசாமி கவுண்டர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 800 மாணவ மாணவியர்கள் புத்தகம் வாசித்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் வி.கே.சிவகுமார்,  விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன், நம்பியூர் அரிமா சங்க தலைவர் வெற்றிவேல், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உள்பட பலர் பங்கு கொண்டனர்.

Wednesday, December 24, 2014

நம்பியூர் புத்தக திருவிழா துவங்கியது

 
நம்பியூர் டிசம்பர் 24:

விடியல் சமூகநல இயக்கம் மற்றும் நம்பியூர் அரிமா சங்கம் சார்பில் நம்பியூரில் முதல்முறையாக புத்தக திருவிழா நம்பியூர் காந்திபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில்  துவங்கியது


இளைய தலைமுறையிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நம்பியூரில் முதல்முறையாக புத்தக திருவிழா டிசம்பர் 24 முதல் 28 வரை ஐந்து நாட்கள் நம்பியூர் காந்திபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில்  நடைபெறுகிறது.

நம்பியூர் புத்தக திருவிழாவின் துவக்க விழாவில் விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் வரவேற்றார். நம்பியூர் அரிமா சங்க மாவட்ட தலைவர் பூபதி தலைமை தாங்கினார். அரிமா முன்னாள் மாவட்ட ஆளுநர் கல்யாண சுந்தரம் புத்தக அரங்கினை திறந்து வைத்தார். முதல் புத்தக விற்பனையை பி.கே.ஆர் குழும தலைவர் ஈஸ்வரன் துவக்கி வைத்தார். நம்பியூர் காவல்துறை ஆய்வாளர் ஆர்.விவேகானந்தன், உதவி தொடக்க கல்வி அலுவலர் சுப்பையா, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் கந்தசாமி, காந்திபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பையன், குமுதா கல்வி நிறுவன தலைவர் ஜனகரத்தினம், கொமரசாமி கவுண்டர் மெட்ரிக் பள்ளி தாளாளர் சிவகுமார், காமராஜ் மெட்ரிக் பள்ளி தாளாளர் கருப்புசாமி,செந்தூர் பாலிடெக்னிக் முதல்வர் அர்ஜுனன், சிந்தாமணி வித்யாலயா நிர்வாகி லோகநாதன், நம்பியூர் அரிமா சங்க தலைவர் வெற்றிவேல், அரிமா வெங்குடுசாமி மற்றும் அரிமா உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


இக்கண்காட்சியில்  25 இகும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களின் புத்தக அரங்கங்கள் இடம்பெற்றுள்ளன.  பல்வேறு  தலைப்புகளில் இலட்சகணக்கான தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் ஒரே இடத்தில் விற்பனைக்கு வைக்கபட்டுள்ளது. கல்வி குறுந்தகடுகளும் கிடைக்கும். புத்தக கண்காட்சியில் வாங்கும் அனைத்து புத்தகங்களுக்கும் 10 % சிறப்பு தள்ளுபடி வழங்க படுகிறது.

தினசரி மாலை 6 .30 மணிக்கு  தலை சிறந்த பேச்சாளர்கள் பங்குபெறும் சிறப்பு சொற்பொழுவுகள் நடைபெறுகிறது. டிசம்பர் 24 ஆம் தேதி மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பேசுகிறார். டிசம்பர் 25 ஆம் தேதி பெருந்துறை வளர் தென்றல் கோ.பா.ரவிக்குமார் பேசுகிறார். டிசம்பர் 26 ஆம் தேதி பேராசிரியர் செ.சு.பழனிசாமி, அரிமா கே.தனபாலன்  ஆகியோர் பேசுகிறார்கள்.  டிசம்பர் 27ஆம் தேதி கோயம்புத்தூர் தன்னம்பிக்கை பேச்சாளர் பேராசிரியர் சூரியநாராயணன்  பேசுகிறார். டிசம்பர் 28 ஆம் தேதி நிறைவு விழாவில் முனைவர் எஸ்.உஷாராணி  பேசுகிறார்.

நம்பியூர் புத்தக திருவிழாவின் ஐந்து  நாட்களிலும் பள்ளி, கல்லூரி நிறுவனங்களும்,  பொதுமக்களும், மாணவ மாணவியர்களும் திரளாக கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என விடியல் செயலாளர் எஸ். ஜெயகாந்தன் கேட்டு கொண்டுள்ளார்.
பாகிஸ்தான் பள்ளி மாணவர்களுக்கு அஞ்சலி
 
 
 
புன்செய் புளியம்பட்டி டிசம்பர் 20:

புன்செய் புளியம்பட்டி மாமகரிஷி ஈஸ்வராய குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் பாகிஸ்தான் பெஷாவர்  ராணுவ பள்ளியில் தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியான 132 மாணவ மாணவியர்களுக்கு  மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் முத்துக்குமார், விடியல் செயலாளர் ஜெயகாந்தன், உறுப்பினர்கள் சக்திவேல், லோகநாதன், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உள்பட 700 இக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நம்பியூரில்  முதல்முறையாக புத்தக திருவிழா

டிசம்பர் 24 முதல் 28 வரை ஐந்து நாட்கள் நடைபெறுகிறது.


நம்பியூர் டிசம்பர் 22:

விடியல் சமூகநல இயக்கம் மற்றும் நம்பியூர் அரிமா சங்கம் சார்பில் நம்பியூரில் முதல்முறையாக புத்தக திருவிழா டிசம்பர் 24 முதல் 28 வரை ஐந்து நாட்கள் நம்பியூர் காந்திபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில்  நடைபெறுகிறது.

இது குறித்து விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் கூறி இருபதாவது. இளைய தலைமுறையிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில்நம்பியூரில் முதல்முறையாக புத்தக திருவிழா டிசம்பர் 24 முதல் 28 வரை ஐந்து நாட்கள் நம்பியூர் காந்திபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில்  நடைபெறுகிறது.

இக்கண்காட்சியில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பாரதி புத்தகாலயம் , விகடன் பதிப்பகம், தமிழ் தேசம் புத்தக நிலையம், ஸ்டுடண்ட் புக் ஹவுஸ், லாவா புக்ஸ், ரீடிங் இந்தியா புக்ஸ்,  விவேகானந்தா புத்தகாலயம்  உள்ளிட்ட 25 இகும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களின் புத்தக அரங்கங்கள் இடம் பெறுகின்றன. பல்வேறு  தலைப்புகளில் இலட்சகணக்கான தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் ஒரே இடத்தில கிடைக்க உள்ளது.கல்வி குறுந்தகடுகளும் கிடைக்கும். புத்தக கண்காட்சியில் வாங்கும் அனைத்து புத்தகங்களுக்கும் 10 % சிறப்பு தள்ளுபடி வழங்க படுகிறது.

தினசரி மாலை 6 .30 மணிக்கு  தலை சிறந்த பேச்சாளர்கள் பங்குபெறும் சிறப்பு சொற்பொழுவுகள் நடைபெறுகிறது. டிசம்பர் 24 ஆம் தேதி மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பேசுகிறார். டிசம்பர் 25 ஆம் தேதி பெருந்துறை வளர் தென்றல் கோ.பா.ரவிக்குமார் பேசுகிறார். டிசம்பர் 26 ஆம் தேதி பேராசிரியர் செ.சு.பழனிசாமி, அரிமா கே.தனபாலன்  ஆகியோர் பேசுகிறார்கள்.  டிசம்பர் 27ஆம் தேதி கோயம்புத்தூர் தன்னம்பிக்கை பேச்சாளர் பேராசிரியர் சூரியநாராயணன்  பேசுகிறார். டிசம்பர் 28 ஆம் தேதி நிறைவு விழாவில் முனைவர் எஸ்.உஷாராணி  பேசுகிறார்.
நம்பியூர் புத்தக திருவிழாவின் ஐந்து  நாட்களிலும் பள்ளி, கல்லூரி நிறுவனங்களும்,  பொதுமக்களும், மாணவ மாணவியர்களும் திரளாக கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என விடியல் செயலாளர் எஸ். ஜெயகாந்தன் கேட்டு கொண்டுள்ளார்.

Monday, December 15, 2014

பகலில் இரவாக மாறிய திம்பம் மலைப்பாதை. கடும் பனிமூட்டத்தால் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்




சத்தியமங்கலம், டிச 15: சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதையில் நேற்று பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்கமுடியாமல் தவித்தனர்.

சத்தியமங்கலத்திலிருந்து மைசூர் செல்லும் சாலையில் அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட திம்பம் மலைப்பாதை உள்ளது. கடல்மட்டத்திலிருந்து 1105 மீட்டர் உயரத்தில் உள்ளதால் இங்கு ஊட்டி போன்று கடுங்குளிர் நிலவுவது வழக்கம். கடந்த சில நாட்களாக குளிருடன் கடும்பனிமுட்டம் உள்ளதால் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 11 மணி வரை நீடிப்பதால் பஸ், லாரி, கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் மஞ்சள்நிற முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகன ஓட்டிகள் மெதுவாக இயக்கினர். இதனால் வாகனங்கள் மலைப்பாதையில் வழக்கமாக அரைமணி நேரத்தில் கடக்கும் தூரத்தை அடைய ஒருமணிநேரம் ஆகிறது. இதனால் இரவு நேரங்களில் திம்பம் மலைப்பாதை வழியாக செல்லும் கனரக வாகனங்கள் பண்ணாரி மற்றும் ஆசனூர் சோதனை ச்சாவடிகளில் நின்று பனிமூட்டம் விலகிய பின்பு புறப்பட்டு செல்கின்றன. இரவு நேரம் மற்றும் அதிகாலையில் வேலைக்கு செல்பவர்கள் குளிர் காரணமாக பணிக்கு செல்லமுடியாமல் தவிக்கின்றனர். மேகமூட்டமும் பனிப்பொழிவும் காலை 11 மணிவரை நீடிப்பதால் சாலைகளில் எதிரேவரும் வாகனங்கள் தெளிவாக தெரியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். திம்பம், ஆசனுர், கேர்மாளம் மற்றும் தாளவாடி ஆகிய சுற்றுவட்டார மலைகிராமங்களில் விவசாயமே முக்கியத் தொழிலாக இருப்பதால் காலை மற்றும் மாலை நேரங்களில் நிலவும் கடுங்குளிரால் தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் தவிக்கின்றனர்.

Thursday, December 11, 2014

புன்செய் புளியம்பட்டியில் மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் விழா



 


புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் சார்பில் மகாகவி பாரதியாரின் 133 ஆவது பிறந்தநாள் விழா புன்செய் புளியம்பட்டியை அடுத்த எம்.கவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கொண்டாடபட்டது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயபாரதி தலைமை தாங்கினார். கிராம அறிவு மையத்தின் இயக்குனர் கந்தசாமி, விடியல் உறுப்பினர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் மகாகவி பாரதியார் அவர்களின் சிறப்புகள் குறித்து மாணவ மாணவியர்களுக்கு எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து 100 இக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பாரதி உருவபடத்தின் முகமூடி அணித்து பாரதியார் பாடல்களை பாடினார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Wednesday, December 10, 2014

புன்செய் புளியம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஹாக்கி போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை
*******************************************************************************************************


புன்செய் புளியம்பட்டி டிசம்பர் 11:

புன்செய் புளியம்பட்டி கெ.ஒ.ம.அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தேனியில் நடைபெற்ற 32ஆவது பாரதியார் தின விழா ஹாக்கி போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

32 ஆவது பாரதியார் தின விழாவை முன்னிட்டு பள்ளிகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டிகள் தேனியில் நடைபெற்றது. புன்செய் புளியம்பட்டி கெ.ஒ.ம.அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஆரம்ப சுற்றுகளில் திருநெல்வேலி அணியை 4-0 என்ற கணக்கிலும், ஆவடி அணியை 3-0 என்ற கணக்கிலும் வென்று அரைஇறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். அரையிறுதி போட்டியில் சேலம் அணியை 1-0 என்ற கணக்கிலும் இறுதி போட்டியில் திருவண்ணாமலை ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் அணியை 4-0 என்ற கணக்கிலும் வெற்று சாம்பியன் பட்டம் வென்றனர். மொத்தம் 16 டிவிசன் இடையே நடைபெற்ற ஹாக்கி போட்டியில் புன்செய் புளியம்பட்டி கெ.ஒ.ம.அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்று கோப்பையை வென்றுள்ளனர். இப்பள்ளி தொடர்ச்சியாக 3 ஆவது முறையாக மாநில அளவில் ஹாக்கி போட்டியில் முதலிடம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது.

அதேபோல் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற முதல்வர் கோப்பை ஹாக்கி போட்டியில் இரண்டாம் இடம் பெற்று கோப்பை மற்றும் தலா 75000 ரொக்கபரிசு பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு முதல்வர் கோப்பை வென்று தலா 1 லட்சம் ரொக்கபரிசு பெற்று இப்பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

சாதனை படைத்த மாணவிகளுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி புன்செய் புளியம்பட்டி ஆதிபராசக்தி கோவிலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்.லிங்கப்பா கவுண்டர் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் கே.ஓதியப்பன் முன்னிலை வகித்தார்.

புன்செய் புளியம்பட்டி நகராட்சி தலைவர் பி.எஸ்.அன்பு, விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன், நகரமன்ற உறுப்பினர் முரளி கிருஷ்ணன், ரஜினி ரசிகர் மன்ற தலைவர் செந்தில்குமரன் உள்பட பலரும் கலந்து கொண்டு ஹாக்கி அணி பயிற்சியாளர் அருள்ராஜ் மற்றும் கோப்பை வென்ற அணித்தலைவர் அம்முகுட்டி, வீராங்கனைகள் ஐஸ்வர்யா, ரேணுகா, கற்பகம், பாக்யா, காயத்திரி, சுப்புலட்சுமி, பூங்கொடி, துர்காதேவி, கோமதி, சுகப்ரியா, நர்மதா, யமுனாதேவி, ஜெயஸ்ரீ, அப்ரீதா, அஸ்வினி, பார்வதி, பாத்திமாபிவி ஆகிய மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சாதனை மாணவிகள் ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஊர்வலம் ஆதிபராசக்தி கோவிலில் தொடங்கி மெயின் ரோடு வழியாக டானாபுதூர் கெ.ஒ.ம அரசு மகளிர் பள்ளியில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் கெ.ஒ.ம அரசு மகளிர் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் உள்பட 1500 இக்கும் மேற்பட்டோர் பங்கு கொண்டனர்.




Monday, December 1, 2014

தானும் உயர்ந்து சமுதாயத்தையும் உயர்த்த வேண்டும் என்பதை உணர்த்தியவர் நா.மகாலிங்கம்: பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர்
 




சத்தியமங்கலம்,டிச 1:தனிமனிதன் தன்னை உயர்த்திக்கொண்டு, சுற்றியுள்ள சமுதாயத்தையும் உயர்த்த வேண்டும் என்பது மறைந்த நா.மகாலிங்கத்தின் எண்ணம் என சத்தியில் திங்கள்கிழமை நடைபெற்ற அவரது நினைவஞ்சலிக் கூட்டத்தில் கோவை பாரதிய வித்யா பவன் தலைவர் பி.கே.கிருஷண்ராஜ் தெரிவி்த்தார்.

மறைந்த பொள்ளாச்சி தொழிலதிபர் நா.மகாலிங்கத்துக்கு நினைவஞ்சலிக் கூட்டம் சத்தியில் திங்கள்கிழமை நடைபெற்றது. சத்தியமங்கலம் காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஏற்பாடு செய்திருந்த  இக்கூட்டத்திற்கு பேரூர் ஆதினம் இளையபட்டம் மருதாச்சல அடிகளார் கலந்துகொண்டு புகழஞ்சலி செலுத்தினார்.

 கோவை பாரதிய வித்யா பவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ், நா.மகாலிங்கம் உடனான நினைவு பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் கூறியது: தன்னையும் உயர்த்திக்கொண்டு சுற்றிவாழும் சமுதாயத்தையும் உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் நா.மகாலிங்கம். வந்தோம், வாழ்ந்தோம்,சென்றோம் என்றில்லாமல் துணிச்சல், சரித்திரம், வாழ்க்கையில் வெற்றி என்பது நிரூபித்து காட்டியவர்.அவரது சமூகப்பணி  நேற்றைய தலைமுறைக்கும் மட்டுமே தெரியும். இதனை இன்றைய தலைமுறையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கரும்பு சாகுபடியால் விவசாயிகள் வாழ்க்கைத்தரம் உயர்ந்து என விவசாயிகள் தெரிவித்தனர். விவசாயம்,அரசியல்,தொழில்,கல்வி என அனைத்து துறைகளிலும் கால்பதித்தவர். அவரது கொள்கைகளை பின்பற்றி வாழ்ந்தால் வெற்றி நம் அருகில் வரும் என்றார். சத்தி பண்ணாரிஅம்மன் குழுமங்களின் தலைவர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம், சத்தி காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தலைவர் ஆர்.பெருமாள்சாமி, சக்தி சர்க்கரை ஆலை இயக்குநர் எம்.பாலசுப்பிரமணியம், பொதிகை தொலைகாட்சி மைய இயக்குநர் ஆண்டால் பிரியதர்சினி,முன்னாள் எம்எல்ஏக்கள் எஸ்.என்.பாலசுப்பிரமணியம், எல்.பி.தர்மலிங்கம், சத்தி பண்ணாரிஅம்மன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயலாளர் ஏ.என்.குழந்தைசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 புன்செய் புளியம்பட்டியில் 10வது, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கான  தேர்வு ஆலோசனை நிகழ்ச்சி -
2000 மாணவர்கள் பங்கேற்பு
************************************************************


 
 

புன்செய் புளியம்பட்டி டிசம்பர் 2:

புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் மற்றும் கோயம்புத்தூர் சங்கரா கல்வி நிறுவனங்கள் சார்பில் 10வது, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கான  தேர்வு ஆலோசனை நிகழ்ச்சி விடியல் வழிகாட்டி-2014  நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் வரவேற்றார். சங்கரா அறிவியல் & வணிகவியல் கல்லூரி முதல்வர் எஸ்.நடராஜன் தலைமை தாங்கினார். சங்கரா பாலிடெக்னிக் முதல்வர் எஸ்.கணேஷ் முன்னிலை வகித்தார்.  கோவை பாரதியார் பல்கலைகழகம் அண்ணா ஐ. ஏ. எஸ்.  பயிற்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் எம்.பத்மநாபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தேர்வு ஆலோசனை கையேட்டினை சங்கரா கல்வி நிறுவனங்களின் இணை செயலாளர் செல்வி நித்யா ராமசந்திரன் வெளியிட்டார். வெளியிடுகிறார். உடல்நலம் குறித்து டாக்டர் ராமசாமி, தன்னம்பிக்கை குறித்து வானொலி தங்கவேலு, ரேடியோ சிட்டி சீயான் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் 10  மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் முக்கியத்துவம் தரவேண்டிய பகுதிகள் எவை? எப்படி படித்தால் 100 இக்கு 100 மதிப்பெண்கள் பெறலாம்? 10  மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை சிறப்பாக எழுதுவது எப்படி? 12 ஆம் வகுப்புக்கு பிறகு என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? , இன்ஜினியரிங் கவுன்சலிங் செல்வது எப்படி? மாணவர்கள் உடல்நலத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்?, மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்வது எப்படி? என்பது குறித்து மாணவ மாணவியர்களுக்கு விளக்கமளிக்கபட்டது.

மேலும் 10  மற்றும் 12 ஆம் வகுப்பு பாடங்களில் படிக்க வேண்டிய முக்கிய பகுதிகள் குறித்து பாடவாரியாக ஆசிரியர்கள் விளக்கமளித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் வினாவங்கி புத்தகம், தேர்வு ஆலோசனை கையேடு , குறிப்பேடு, பேனா ஆகியவை இலவசமாக இலவசமாக வழங்கபட்டன.

இந்நிகழ்ச்சியில் புன்செய் புளியம்பட்டி, பனையம்பள்ளி, காவிலிபாளையம், பெத்திகுட்டை, பட்டிமணியகாரன்பாளையம், வேமாண்டம்பாளையம், எஸ்.புங்கம்பாளையம், நல்லூர், செம்மம்பாளையம், வாலிபாளையம்,மில்மேடு, காராபாடி உள்பட பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள  20 இகும் மேற்பட்ட மேல்நிலை, உயர்நிலை பள்ளிகளை சார்ந்த 2000 மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விடியல் தலைவர் கே.தருமராசு, செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் உறுப்பினர்கள் லோகநாதன், சக்திவேல், வடிவேலன் மற்றும் சங்கரா கல்வி நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் செய்து இருந்தனர்.






புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் மற்றும் கோயம்புத்தூர் சங்கரா கல்வி நிறுவனங்கள் சார்பில் 10வது, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கான தேர்வு ஆலோசனை நிகழ்ச்சி விடியல் வழிகாட்டி-2014 நடைபெற்றது. விடியல் வழிகாட்டி 2014 நிகழ்ச்சியில் திரண்ட மாணவ மாணவியர்களின் கூட்டம்

புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் மற்றும் கோயம்புத்தூர் சங்கரா கல்வி நிறுவனங்கள் சார்பில் 10வது, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கான  தேர்வு ஆலோசனை நிகழ்ச்சி விடியல் வழிகாட்டி-2014  நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தேர்வு ஆலோசனை கையேட்டினை டாக்டர் பத்மநாபன், சங்கரா கல்வி நிறுவனங்களின் துணை செயலாளர் நித்ய ராமசந்திரன் ஆகியோர் மாணவ மாணவியர்களுக்கு வழங்கினர். அருகில் சங்கரா கல்லூரி செயலாளர் சந்தியா ராமசந்திரன், அறிவியல் கல்லூரி முதல்வர்  எஸ்.நடராஜன், பாலிடெக்னிக் முதல்வர் எஸ்.கணேஷ், விடியல் செயலர் எஸ்.ஜெயகாந்தன் ஆகியோர் உள்ளனர்.
புன்செய் புளியம்பட்டியில்10வது, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கான  தேர்வு ஆலோசனை நிகழ்ச்சி



புன்செய் புளியம்பட்டி நவம்பர் 28:

புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் மற்றும் கோயம்புத்தூர் சங்கரா கல்வி நிறுவனங்கள் சார்பில் 10வது, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கான தேர்வு ஆலோசனை நிகழ்ச்சி விடியல் வழிகாட்டி-2014 வருகின்ற 30-11-2014 ஞாயிறு அன்று காலை 9.30 மணிக்கு நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

இதுகுறித்து விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் கூறியிருப்பதாவது, புன்செய் புளியம்பட்டி  விடியல் சமூகநல இயக்கம் சார்பில் ஆண்டுதோறும் 10 ஆவது மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ-மாணவியர்களுக்கான தேர்வு ஆலோசனை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.  இந்த ஆண்டுக்கான தேர்வு ஆலோசனை நிகழ்ச்சி வருகின்ற 30-11-2014 ஞாயிறு அன்று காலை 9.30 மணிக்கு புன்செய் புளியம்பட்டி மாதம்பாளையம் ரோட்டில் அமைந்துள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சிக்கு சங்கரா அறிவியல் & வணிகவியல் கல்லூரி முதல்வர் எஸ்.நடராஜன் தலைமை தாங்குகிறார். சங்கரா பாலிடெக்னிக் முதல்வர் எஸ்.கணேஷ் முன்னிலை வகிக்கிறார். கோவை பாரதியார் பல்கலைகழகம் அண்ணா ஐ. ஏ. எஸ்.  பயிற்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் எம்.பத்மநாபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். தேர்வு ஆலோசனை கையேட்டினை சங்கரா கல்வி நிறுவனங்களின் இணை செயலாளர் செல்வி நித்யா ராமசந்திரன் வெளியிடுகிறார். உடல்நலம் குறித்து டாக்டர் ராமசாமி, தன்னம்பிக்கை குறித்து வானொலி தங்கவேலு ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். மேலும் புன்செய் புளியம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள மேல்நிலை, உயர்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கிறார்கள்.

இந்நிகழ்ச்சியில் 10  மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் முக்கியத்துவம் தரவேண்டிய பகுதிகள் எவை? எப்படி படித்தால் 100 இக்கு 100 மதிப்பெண்கள் பெறலாம்? 10  மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை சிறப்பாக எழுதுவது எப்படி? 12 ஆம் வகுப்புக்கு பிறகு என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? , இன்ஜினியரிங் கவுன்சலிங் செல்வது எப்படி? மாணவர்கள் உடல்நலத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்?, மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்வது எப்படி? என்பது  போன்ற வினாக்களுக்கு பிரபல கல்வியாளர்கள் விழாவில் கலந்து கொண்டு வழிகாட்டுகிறார்கள். மேலும் 10  மற்றும் 12 ஆம் வகுப்பு பாடங்களில் படிக்க வேண்டிய முக்கிய பகுதிகள் குறித்து பாடவாரியாக ஆசிரியர்கள் விளக்கமளிக்க உள்ளார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் வினாவங்கி புத்தகம், தேர்வு ஆலோசனை கையேடு , குறிப்பேடு, பேனா ஆகியவை இலவசமாக  வழங்கப்பட உள்ளன.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வீணான பயம், பதற்றம் இவற்றை நீக்கி தன்னம்பிக்கையுடன் தேர்வை எழுதும் வகையிலும்,  எதிர்கால வாழ்கைக்கு வழிகாட்டும் வகையிலும் நடைபெற உள்ள
இந்நிகழ்ச்சியில்  மாணவ மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டு பயன் பெற அழைக்கிறோம். நிகழ்ச்சி குறித்து மேலும் விபரங்களுக்கு 98427 80240 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
திம்பம் மலைப்பாதையில் மீண்டும் ஆள்கொல்லி சிறுத்தை தாக்கி தொழிலாளி பலி







திம்பம் மலைப்பாதையில் மீண்டும் ஆள்கொல்லி சிறுத்தை தாக்கியதில் கூலித்தொழிலாளி பலியானார்.இச்சம்பவம் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடக மாநிலம் கொள்ளேகால் நொக்கஹள்ளி என்ற இடத்தில் கத்திரிக்காய், உருளைக்கிழங்கு பாரம் ஏற்றிய காய்கறி மினிலாரி, மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை ஓட்டுநர் ரமேஷ் ஓட்டினார். அதில் நொக்கஹள்ளியைச் சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஸ்ரீவாசன்(35),ஜடையன்(32) ஆகியோரும்  வந்தனர்.  புதன்கிழமை இரவு திம்பம் மலைப்பாதை 25-ஆவது வளைவு பாதையில் திரும்பும்போது மினிலாரி பழுதாகி நின்றது. இதையடுத்து, 3 பேரும் லாரியை அதே இடத்தில் நிறுத்துவிட்டு மற்றொரு வேனை வரவழைத்து அதில் காய்கறிகளை ஏற்றினர். அதன்பிறகு, ஓட்டுநர் ரமேஷ் காய்கறி வேனில் சத்தி சென்றுவிட்டார்.  தொழிலாளர்கள் இருவரும் பழுதாகி நிற்கும் வேனில்  தங்கியிருந்தனர்.

இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை ஸ்ரீவாசன் மலம் கழிப்பதற்காக வனத்தையொட்டியுள்ள இடத்திற்கு சென்றார். அப்போது, அங்கு பதுங்கியிருந்த சிறுத்தை ஸ்ரீவாசனினை தாக்கியது. அவரை காட்டுக்குள் இழுத்துச் சென்று கடித்துக் கொன்றது.  இதனை நேரில் பார்த்து உறைந்துபோன மற்றொரு தொழிலாளி ஜடையன், அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி நடந்த சம்பவத்தை கூறினார்.  அதனைத் தொடர்ந்து, 5-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுசேர்ந்தபடி வரிசையாக சென்றன. பின்னர்,அவர்கள் நடந்த சம்பவத்தை பண்ணாரி சோதனைசாவடியில் பணியில் இருந்த வனத்துறை மற்றும் காவல்துறையினரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து, சத்தி புலிகள் காப்பகத்தின் இணை இயக்குநர் கே.ராஜ்குமார் மற்றும் வனத்துறையினர் வியாழக்கிழமை சம்பவயிடத்தை ஆய்வு செய்தனர். மலைப்பாதையில் இருந்து சுமார் 50 அடி சரிவுபாதையில் அடர்ந்த புதர்மறைவில் ஸ்ரீவாசன் சடலம் கிடப்பது தெரியவந்தது. சடலத்தின் அருகில் சிறுத்தை பதுங்கியிருக்கலாம் என அஞ்சிய வனத்துறையினர் வானத்தை நோக்கி  துப்பாக்கியால் சுட்டபடி காட்டுக்குள் சென்றனர்.  புதர்மறைவில் கிடந்த ஸ்ரீவாசன் சடலத்தை  அவர்கள் மீட்டு சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன், இதே பகுதியில் வேன் டிரைவர் முகமது இலியாஸ் மற்றும் வனக்காவலர் கிருஷ்ணன் சிறுத்தையால் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து புலிகள் காப்பக இணை இயக்குநர் கே.ராஜ்குமார் கூறியது: இரவு நேரங்களில் வனவிலங்குகள் அதிகம் நடமாடாடும் பகுதி என்பதால் வாகன ஓட்டிகள் வனச்சாலையில் நடமாடுவதை தவிர்க்கவேண்டும். தற்போது, திம்பம் பாதையில் காமிராக்கள் வைத்து ஆட்கொல்லி சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம். இரவுமுழுவதும் வனத்துறையின் ரோந்து படையினர் தீவிர கண்காணிப்பு ஈடுபட்டு வருகின்றனர். மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றால் உடனடியாக பண்ணாரியில் உள்ள ரோந்து படையினருக்கு தகவல் தெரிவிக்குமாறும் அவர்கள் ஓட்டுர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளித்து அழைத்துச் செல்வார்கள் என்றார்.   

Tuesday, November 25, 2014

காவியத் தலைவன் படத்துக்கு வரிவிலக்கு




வசந்த பாலன் இயக்கத்தில் வரும் 28-ம் தேதி வெளியாகவுள்ள காவியத் தலைவன் படத்துக்கு தமிழக அரசு வரிவிலக்கு அளித்துள்ளது. முன்பெல்லாம் படத்தின் தலைப்பு தமிழில் இருந்தாலே போதும், வரி விலக்கு நிச்சயம் என்ற நிலை இருந்தது. அதிமுக அரசு பதவிக்கு வந்த பிறகு அந்த நிலை மாறியது. தமிழில் தலைப்பு, ஆபாசமில்லாத காட்சி அமைப்பு, அனைவரும் பார்க்கத்தக்க வகையில் யு சான்று என்று பல அம்சங்கள் சிறப்பாக அமைந்தால் மட்டுமே வரிவிலக்கு என்ற கட்டுப்பாடுகள் வந்தன.

இந்தக் கட்டுப்பாடுகள் இன்னொரு பக்கம் அரசியல் ரீதியான நெருக்கடிகளுக்குப் பயன்பட்டதாக உதயநிதி ஸ்டாலின் போன்றவர்கள் விமர்சித்தாலும், மக்களுக்குச் சேர வேண்டிய வரிச்சலுகை குப்பைப் படங்களை எடுத்தவர்களுக்கும் போகாமல் தடுக்க ஓரளவு உதவி வருகிறது. படங்களுக்கு வரிச் சலுகை பெறுவது அத்தனை சாதாரண விஷயமல்ல என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் வசந்த பாலன் இயக்கத்தில், சித்தார்த், ப்ருத்விராஜ், வேதிகா நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை வரவிருக்கும் காவியத் தலைவன் படத்துக்கு முழுமையாக கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வனப்பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவாமல் தடுக்க தீவிர ரோந்து பணி: ஐ.ஜி. சங்கர் பேட்டி


ஈரோடு, நவ.23–
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கோவை மேற்கு மண்டலத்துக்குட்பட்ட ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் மேற்கு மண்டல ஐ.ஜி. சங்கர் கலந்து கொண்டு பேசினார். கூட்டம் முடிந்த பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கடந்த ஆண்டை விட குற்றங்கள் குறைந்து உள்ளது. கடந்த ஆண்டு 8 மாவட்டத்திலும் 290 கொலை வழக்குகள் பதிவாகி இருந்தன. இந்த ஆண்டு 260 வழக்குகள் தான் பதிவாகி உள்ளது. சங்கிலி (நகை) பறிப்பு வழக்குகள் கடந்த ஆண்டு 211 பதிவானது. இந்த ஆண்டு 144 வழக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது.
வழக்குகளை விரைவில் முடிப்பதிலும் குற்றங்களை தடுப்பதிலும் அனைத்து மாவட்டங்களும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
ஈரோடு , நீலகிரி மாவட்ட மற்றும் மாவட்ட வனப்பகுதிகளில் நக்சலைட்டுகள் நடமாட்டம் கிடையாது. இம்மாவட்ட மலைப்பகுதிகளில் அதிரடி படை வீரர்களுடன் போலீசாரும் இணைந்து ரோந்து சுற்றி தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். வனப்பகுதிகளில் எந்த பதட்டமும், தீவிரவாதிகளின் நடமாட்டமும் இல்லை. இவ்வாறு ஐ.ஜி.சங்கர் கூறினார்.

மேதா பட்கருடன் கலந்துரையாடிய பர்கூர் பழங்குடி குழந்தைகள்



ஈரோட்டுக்கு சனிக்கிழமை வந்த சமூகசேவகி மேதா பட்கருடன் பர்கூர் பழங்குடியின குழந்தைகள் கலந்துரையாடினர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப் பகுதியில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் சுடர் தொண்டு நிறுவனம் சார்பில் பள்ளி செல்லா, பள்ளி இடைநின்ற மாணவர்களுக்காக உண்டு உறைவிட சிறப்புப் பயிற்சி மையம் செயல்படுகிறது.
பர்கூரை சுற்றியுள்ள கொங்காடை, ஒன்னகரை, தம்புரெட்டி, குட்டையூர், சுண்டப்பூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் நாற்பது மாணவர்கள் இம்மையத்தில் பயின்று வருகின்றனர்.
இம் மையத்தில் பயிலும் மாணவர்கள் பல்வேறு காரணங்களால் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் என்பதால், இவர்களுக்கு வெறுமனே பாடபுத்தகங்கள் மட்டுமின்றி ஒரிகாமி என்ற காகிதக்கலை, கல்விச்சுற்றுலா, விளையாட்டு என செயல்வழிக்கல்வி அளிக்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, இம் மையத்தில் பயிலும் மாணவர்கள் சனிக்கிழமை ஈரோட்டுக்கு வந்திருந்த பல்லுயிர் பாதுகாப்பு அறிவியல் ரயிலை காண சுடர் தொண்டு நிறுவனம் மூலம் அழைத்துவரப்பட்டனர். மத்திய அரசின் சார்பில் வந்துள்ள இந்த "அறிவியல் எக்ஸ்பிரஸ்' எனப்படும் இந்த ரயிலின் 16 பெட்டிகளில் ஏறி பல்லுயிர் பாதுகாப்பு குறித்த விளக்கங்களை கண்டு கேட்டு அறிந்தனர்.
அடுத்ததாக ஈரோடு பெரியார் நினைவிடத்துக்குச் சென்று பார்வையிட்டுக் கொண்டிருக்கும்போது, அங்கு வந்திருந்த சுற்றுச் சூழலியலாளரும், சமூகசேவகியுமான மேத்தா பட்கரை இந்தக் குழந்தைகள் சந்தித்து பேசினர். அவரும் சற்று நேரம் இக்குழந்தைகளிடம், மலைக்கிராமங்களில் உள்ள கல்வி வசதிகள், பள்ளி இடைநிற்றல் ஏன் ஏற்படுகிறது என்பது குறித்து கலந்துரையாடினார்.
கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது ஈரோடு செங்குந்தர் கல்விக் கழக செயலர் எஸ்.சிவானந்தன், தமிழக பசுமை இயக்கத் தலைவர் மருத்துவர் வெ.ஜீவானந்தம் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்தப் பயண நிகழ்வில் சுடர் தொண்டு நிறுவன இயக்குநர் எஸ்.சி.நடராஜ், கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் அருணாச்சலம், தாமரைச்செல்வன், பள்ளி ஆசிரியர்கள் மாதப்பன், பெரியசாமி உள்ளிட்டோர் பங்ககேற்றனர்.

தரமற்ற கசிவு நீர்த் தடுப்புச் சுவர் கட்டுமானப் பணியை நிறுத்திய விவசாயிகள்


புஞ்சைபுளியம்பட்டி அருகே தடுப்பணையில் இருந்து வெளியேறும் கசிவுநீரை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட தடுப்புச் சுவரின் கட்டுமானப் பணியில் தரம் இல்லை எனக் கூறி அப் பகுதி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, கட்டுமானப் பணியையும் அவர்கள் தடுத்து நிறுத்தினர்.
சத்தி, தேசிபாளையம் ஊராட்சி கருப்பகவுண்டன்புதூரில் உள்ள தடுப்பணையில் மழைநீர் தேங்காமல் வீணாகிவிடுவதாகவும், அணையில் பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும் எனவும் உள்ளாட்சி நிர்வாகத்திடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, தடுப்பணையில் தடுப்புச் சுவர் கட்டுமானப் பணி திங்கள்கிழமை துவங்கியது. தடுப்புச் சுவரை ஒட்டியுள்ள மண்ணை அகற்றிவிட்டு, புதிதாக குழிதோண்டி கான்கிரீட் போடுவதற்கு பதிலாக மண்ணை அகற்றாமல் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதைப் பார்த்த விவசாயிகள் கண்டித்தனர். இதுகுறித்து தகவல் தெரிவித்தும் சம்பவ இடத்துக்கு வராத தேசிபாளையம் ஊராட்சித் தலைவரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்ததாரர் மற்றும் கட்டுமானப் பணியாள்கள் தொடர்ந்து பணி மேற்கொண்டதால், விவசாயிகள் திரண்டு பணியை தடுத்து நிறுத்தினர்.
அங்கு வந்த பவானிசாகர் ஒன்றியக் குழுத் தலைவர் வி.ஏ.பழனிச்சாமி, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தடுப்புச் சுவர் கட்டுமானப் பணியை பார்வையிட்டனர். சரியான அளவில் சிமெண்ட் கலவையில்லாமல் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்துமாறு அவர்கள் ஒப்பந்ததாரை கேட்டுக்கொண்டனர்.தடுப்பணை நீர் கசியாதபடி நிலத்தடியில் 5 அடிவரை மண்ணை தோண்டி எடுத்துவிட்டு கட்டுமானப் பணியை தொடங்குவதாக ஒப்பந்ததாரர் உறுதியளித்தையடுத்து விவசாயிகள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.


Sunday, November 16, 2014

திம்பம் மலைப்பாதையில் லாரி பழுது. நாலரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. பயணிகள் கடுங்குளிரில் அவதி.




சத்தியமங்கலம், நவ.17 . அடுத்த திம்பம் மலைப்பாதையில் லாரி குழியில் இறங்கியதால் தமிழகம் & கர்நாடக மாநிலத்திற்கிடையே நாலரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சத்தியமங்கலம் & மைசூர் சாலையில் பண்ணாரியை அடுத்து அடர்ந்த வனப்பகுதியில் 27 அபாயகரமான கொண்டை ஊசிவளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை உள்ளது. இம்மலைப்பாதை வழியாக 24 மணி நேரமும் சரக்கு வாகனங்கள் மற்றும் இருமாநில பேருந்து போக்குவரத்து நடைபெற்று வருகிறது. தற்போது பெய்த மழை காரணமாக கொண்டைஊசிவளைவுகளில் சாலையில் குழிகள் ஏற்பட்டுள்ளதால் லாரியின் சக்கரங்கள் குழியில் சிக்கி நகரமுடியாமல் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. நேற்று அதிகாலை 5 மணியளவில் மைசூரிலிருந்து பருத்திப்பஞ்சு பாரம் ஏற்றிய லாரி கோவை செல்வதற்காக செல்வதற்காக மலைப்பாதையில் வந்து கொண்டிருந்தது. 15 வது கொண்டை ஊசிவளைவில் லாரி திரும்பியபோது லாரியின் பின்சக்கரம் குழியில் சாலையில் உள்ள சிக்கி லாரி நகரமுடியாமல் நின்றது. இதனால் வாகனங்கள் செல்லமுடியாமல் மலைப்பாதையின் இருபுறமும் வரிசையில் நின்றன. இதுகுறித்து தகவலறிந்த சத்தியமங்கலம் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்தை சீர்படுத்தும பணியில் ஈடுபட்டனர். காலை 9.30 மணியளவில் லாரி கிரேன் முலம் மீட்கப்பட்டு போக்குவரத்து சீரானது. பேருந்தில் பயணம் செய்த பயணிகள் கடுங்குளிரில் அவதிப்பட்டனர். மலைப்பாதையில் 3, 6, 12, 15, 20 மற்றும் 24 ம் கொண்டை ஊசிவளைவுகளில் உள்ள குழிகளை மூட தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பட்டதாரி ஆசிரியருக்கு இணையான சம்பளத்தை உடற்கல்வி ஆசிரியருக்கும் வழங்க வேண்டும்


சத்தியமங்கலம்,நவ 17:

பட்டதாரி ஆசிரியருக்கு இணையான உடற்கல்வி ஆசிரியருக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் இயக்குநர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் இயக்குநர்கள் நலச சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம் சத்தியமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது, காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரிச் செயலாளர் பி.மலர்ச்செல்வி தலைமை தாங்கினார்.பிபிஜி கல்வி நிறுவனங்களின் தாளாளர் சாந்திதங்கவேலு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இதில் தமிழ்நாடு அனைத்து உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் கூட்டமைப்பின் தலைவர் சோலை எம்.ராஜா மாணவ, மாணவிகளுக்கு இலவச பந்துகளை வழங்கினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
அனைத்து பள்ளி மாணவர்களும் விளையாட வேண்டும் என்ற அடிப்படையில் மாணவர்களுக்கு இலவச பந்துகள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்களின் விளையாட்டு திறனை உடற்கல்வி ஆசிரியர்கள் வெளியே கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு மேல்நிலைப்பள்ளியிலும் உடற்கல்வி இயக்குநரை நியமிக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியரை போலவே உடற்கல்வி ஆசிரியருக்கும் சம்பளம் வழங்க வேண்டும். பகுதி நேர உடற்கல்வி ஆசிரியரை நிரந்தரப் பணிக்கு மாற்ற வேண்டும். உடற்கல்வி ஆசிரியர் அக்கவுண்ட் டெஸ்டில் தேர்ச்சி பெறவேண்டும் என்ற அரசின் கொள்கை தவறானது.தற்போது காலியான பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் சாரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயலாளர் ஏ.எஸ்.சக்திபாலாஜி, மாநில துணைப் பொதுச் செயலாளர் எம்.ராஜேந்திரன், மாநில பொதுச்செயலாளர் ஆர்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

Saturday, November 15, 2014

புன்செய் புளியம்பட்டி அருகிலுள்ள காவிலிபாளையம் குளத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்க வேண்டும்.

- தமிழக அரசுக்கு விடியல் சமூகநல இயக்கம் வேண்டுகோள்







புன்செய் புளியம்பட்டியை அடுத்துள்ள காவிலிபாளையத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குளத்தில் பறவைகள் சரணாலயம் அமைத்து சுற்றுலா தலமாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடியல் சமூகநல இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.

ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி நகராட்சிக்கு அருகில் காவிலிபாளையம்  ஊராட்சி உள்ளது. இங்கு 1500 குடும்பங்களை சேர்ந்த சுமார் 5000 பேர் வசித்து வருகிறார்கள். இங்கு சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பெரிய குளம் ஒன்று உள்ளது.

வகுத்துகவுண்டன் புதூர், தென்னமாங்குளம், செல்லம்பாளையம், காராபாடி, கண்டிசாலை, கோப்பம்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள தடுப்பணை மற்றும் சிறிய குளங்களில் இருந்து வெளியேறும் உபரி நீர்கள் கடைசியில் காவிலிபாளையம் குளத்தை சென்று அடைகிறது. அதே போல் புன்செய் புளியம்பட்டி செட்டிகுட்டை, வெங்கநாயகன்பாளையம் குளம், நல்லூர் குளம், புங்கபள்ளி குளம் ஆகியவற்றின் உபரி நீரும் காவிலிபாளையம் குளத்தை வந்தடைகிறது. எனவே இந்த குளத்தில் ஆண்டு முழுமையும் நீர் உள்ளது. மேலும் காவிலிபாளையம் குளத்துக்கு நீர் ஆதாரமாக விளங்கும் சுற்றியுள்ள குளங்களை தூர்வாரினால் உபரி நீர் வீணாகாமல் காவிலிபாளையம் குளத்தை முழுமையாக வந்தடையும்.

தமிழகத்தில் தற்போது மொத்தம் 14 பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த 14 சரணாலயங்களை காட்டிலும் பரப்பளவில் காவிலிபாளையம் குளம் மிகவும் பெரிது. ஈரோட்டில் உள்ள வெள்ளோடு பறவைகள் சரணாலயம் 0.77 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. அதைவிட மிகவும் அதிக அளவில் 500 ஏக்கர் பரப்பளவில் காவிலிபாளையம் குளம் அமைந்துள்ளது. இதில் ஏராளமான பறவைகள் உள்ளன. அவ்வபோது பிற இடங்களில் இருந்தும் பறவைகள் வருகின்றன. காவிலிபாளையம் குளத்துக்கு அருகிலேய சிறிய மலைக்குன்று ஒன்று உள்ளது. இங்கு இருந்து பார்த்தால் காவிலிபாளையம் குளத்தை முழுமையாக பார்வை இடலாம்.

மேலும் குளத்தை சுற்றிலும் ஏராளமான கருவேல மரங்கள் உள்ளது. பறவைகள் உண்ணக்கூடிய பழ மரங்களை அதிகளவில் நட்டால் இன்னும் அதிக பறவைகள் இங்கு வரக்கூடும். இங்கு தற்போது கொக்கு, நாரை, நீர்காகம் உள்பட பல்வேறு பறவைகள் உள்ளது. அதிக பரப்பளவு, ஆண்டு முழுவதும் நீர், சுற்றிலும் சிறிய மரங்கள், அருகிலேயே மலைகுன்று என பறவைகள் சரணாலயம் அமைக்க அனைத்து வசதிகளையும் காவிலிபாளையம் குளம் இயற்கையாகவே பெற்றுள்ளது. பறவைகளுக்கான வாழ்வாதாரம், உணவு தரும் பழ மரங்கள் என சில வசதிகளை செய்தால் ஆண்டு முழுவதும் பறவைகள் இங்கே வருகை தர ஆரம்பிக்கும்.

மேலும் இங்கு படகுகள் மூலம் சுற்றுபயணம் செய்து பறவைகளை காணவும் வசதி ஏற்படுத்தினால் பொதுமக்கள் அதிக அளவில் வருவார்கள். சுற்றுலா பயணிகளின் வசதிக்காக தங்குமிடம், வழிகாட்டி, தொலைநோக்கி, வாகன வசதி, உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தினால் இந்த பகுதி மிகசிறந்த சுற்றுலா தலமாக மாறும். இதன் மூலம் சிறு மற்றும் குறு வியாபாரிகள் பயன்பெறுவார்கள். ஏராளமான பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

வண்ணங்களின் உலகம் பூக்கள் என்றால் வண்ணங்களோடு சேர்த்து இனிமையான குரலையும் கொண்டது பறவைகளின் உலகம். இன்று உலகில் 1300 இகும் மேற்பட்ட பறவை இனங்கள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அழகழகான பறவைகளை இயற்கை சூழ்நிலையில் கண்டு மகிழ்வது அனைவருக்கும் பிடிக்கும். பறவையை கண்டான். விமானம் படைத்தான் என்பார்கள். புதிய புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு காரணமாக பறவைகள் திகழ்கின்றன. கூட்டம் கூட்டமாக பறவைகள் பறந்து செல்வதை கண்டு ரசிப்பது பரவசமான அனுபவம். ‘இந்தியப் பறவையியலின் தந்தை' என அழைக்கப்படும் சாலிம் அலி அவர்களின் பிறந்த நாளான நவம்பர் 12 ஆம் தேதி ஆண்டு தோறும் தேசிய பறவைகள் தினமாக கொண்டாடபடுகிறது. இத்தருணத்தில் தமிழக அரசுக்கு விடியல் சமூகநல இயக்கம் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். தமிழக அரசு, வனத்துறை மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மூலம் கள ஆய்வு செய்து காவிலிபாளையம் குளத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நிற்கும் பால் லாரி: போக்குவரத்து பாதிப்பு



ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பண்ணாரி அடுத்த திம்பம் மலைப்பாதை உள்ளது. இந்த மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது.

இதில் சில அபாயகரமான வளைவுகளில் அதிக பாரம் ஏற்றிவரும் லாரிகள் சிக்கி அடிக்கடி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்ந்து அடிக்கடி நடந்து வருகிறது.
நேற்று இரவு 10 மணி அளவில் திம்பம் மலைப்பாதை 12–வது வளைவில் ஒரு லாரி திடீரென பழுதாகி நின்றது. இதனால் திடீர் போக்குவரத்து தடை ஏற்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் அது சரி செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.

தொடர்ந்து வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் கர்நாடகாவிலிருந்து கேரளாவுக்கு பால் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி திம்பம் மலைப்பாதை வழியாக வந்து கொண்டிருந்தது.

5–வது சுற்று பாதையின் வளைவில் அந்த லாரி திரும்பும்போது அதில் உள்ள பள்ளத்தில் அந்த லாரி சிக்கிகொண்டது. தற்போது பெய்து வரும் பலத்த மழையால் திம்பம் மலைப்பாதை ரோடு மிகவும் சிதிலம் அடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. டிரைவர் எவ்வளவோ முயன்றும் லாரியை எடுக்க முடியவில்லை.

இதனால் மலை மேலே இருந்து கீழே வரும் வாகனங்களும் கீழே இருந்து மலை மீது ஏறும் மற்ற லாரிகள், பஸ் மற்றும் இதர வாகனங்களும் தொடர்ந்து செல்ல முடியாமல் நிற்கிறது. போக்குவரத்து ஸ்தம்பித்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பஸ் மற்றும் கார் வேன்களில் உள்ள பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

சம்பவ இடத்துக்கு நெடுஞ்சாலை ரோந்து போலீசாரும் மற்றும் மீட்பு குழுவினரும் விரைந்து உள்ளனர்.
தொடர் மழையால் கடம்பூர் மலைப்பகுதியில் உருவான புதிய அருவிகள்




சத்தியமங்கலம், நவ 14: சத்தியமங்கலம் கடம்பூர் மலைப்பகுதியில் தொடர்ச்சியாக பெய்த மழையின் காரணமாக புதிய அருவிகள் உருவாகியுள்ளன.இந்த அருவிகள் பெரும்பள்ளம் அணையில் கலப்பதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

சில வாரங்களாக சத்தி புலிகள் காப்பகத்தில் கனமழை பெய்து வருவாதல் பெரும்பாலான குளம், குட்டைகள் நிரம்பிவிட்டன. மலைக்கிராமங்களில் நிலத்தடிநீர் உயர்ந்தும் நிலத்தில் ஈரப்பதம் பிடித்துள்ளதால் தொடர்ச்சியாக பெய்யும் மழைநீர் நிலத்தில் தேங்கி நிற்காமல் ஓடைகளில் வழிந்தோடுகின்றன. கடம்பூர்,மல்லியம்மன் துர்க்கம், குன்றி, மாக்கம்பாளையம், அருகியம், கூத்தம்பாளையம், இருட்டிபாளையம் உள்ளிட்ட வனக்கிராமங்களில் சில வாரங்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக காய்ந்து கிடந்த வனப்பகுதி பச்சைப்பசேலென மாறியது.

சிற்றோடைகள் மற்றும் பள்ளங்களில் ஓடும் நீர் பாறைகளின் வழியாக 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அருவியாக கொட்டுகிறது. கே.என்.பாளையத்திலிருந்து கடம்பூர் செல்லும் மலைப்பாதையில் இந்த அருவிகள் தோன்றியுள்ளதால் மலைப்பாதையில் பயணிப்பவர்கள் அருவிகளில் வழியும் வெண்நுரை அருவிநீரை நின்று ரசித்தபடி செல்கின்றனர். அருவியில் கொட்டும் நீர் ஐஸ் போல் குளிர்ந்துள்ளது மட்டுமின்றி வனப்பகுதியிலிருந்து மூலிகைகள் கலந்து வருவதால் குற்றாலத்தில் உள்ள நீருக்கு இணையானது என மலைகிராம மக்கள் கூறுகின்றனர்.

இலைகள் உதிர்ந்து வறண்டு சருகாக காணப்பட்ட வனப்பகுதியானது தற்போது எங்கு பார்த்தாலும் பச்சைகம்பளம் போர்த்தியபடி மரங்கள் தெரிகின்றன. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மண்ணில் ஈரப்பதம் ஏற்பட்டதால் மானாவாரியாக கிடந்த நிலங்களில் உழவு பணி நடந்து வருகிறது. கசிவுநீர்க்குட்டைகள், தடப்பணைகள் நிரம்பிவிட்டதால் வனவிலங்குகள் அந்தந்த குட்டைகளில் நீர் அருந்துவதாலும் யானைகள் நடமாட்டம் குறைந்துவிட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
விளையாட்டு போட்டிகளில் அம்மா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை



பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற மாவட்ட அளவிலான எறிபந்து போட்டியில் அம்மா மெட்ரிக் பள்ளி மாணவிகள் மூத்தோர் பிரிவில் இரண்டாம் இடமும், மாணவர்கள் மூன்றாம் இடமும் பெற்றனர். அதேபோல் இளையோர் பிரிவில் மாணவர்கள் மூன்றாம் இடமும் பெற்றனர். வெற்றிபெற்ற மாணவர்களை அம்மா மெட்ரிக் பள்ளியின் செயலாளர் திருமதி ராணி அன்பு பாராட்டினார். உடன் உடல்கல்வி ஆசிரியர் வரதராஜ் உள்ளார்.
இலவச கண் சிகிச்சை முகாம் 

 
 



ஈரோடு மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை, புன்செய் புளியம்பட்டி ட்ரீ அறக்கட்டளை, ஸ்ரீ தனியலக்ஷ்மி ட்ரேடர்ஸ், நல்லூர் வெற்றி நர்சிங் காலேஜ் ஆகியவை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நடைபெற்றது. இதில் ஏராளமான் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

இவ்விழாவில் புன்செய் புளியம்பட்டி நகராட்சி துணை தலைவர் டி.பாபு, வெற்றி காலேஜ் லோகநாதன், ட்ரீ டிரஸ்ட் ஸ்ரீனிவாசன், ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி தலைமை ஆசிரியர் முத்து, அரவிந்த் கண் மருத்துவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Wednesday, November 12, 2014

சாக்கடை நீர் புகுவதை தடுக்கக்கோரி ஆலத்துக்கோம்பை கிராமமக்கள் சாலை மறியல்



சத்தியமங்கலம்,நவ 13:
கிராமத்துக்கு சாக்கடை நீர் புகுவதை தடுக்ககோரி ஆலத்துக்கோம்பை கிராமமக்கள் புதன்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சத்தியமங்கலம் அருகே உள்ள ஆலத்துக்கோம்பை அண்ணாநகரில் 100-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் உள்ளன. இக்கிராமத்தை ஒட்டி பண்ணாரிஅம்மன் சர்க்கரை ஆலைக்கு சொந்தமான விவசாய பண்ணையும், பணியாளர் குடியிருப்பும் உள்ளது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக பண்ணையிலிருந்து வெளியேறும் மழைநீரும் பணியாளர் குடியிருப்பு சாக்கடைநீரும் கலந்து அண்ணாநகர் கிராமத்துக்குள் புகுந்து வீட்டு சுவர்களை ஒட்டியவாறு செல்வதால் சுவர்களில் ஈரப்பதம் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளதாக புகார் தெரிவித்தனர்.

இது குறித்து கிராமமக்கள் சர்க்கலை ஆலை நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். சாக்கடை நீரை மாற்று பகுதியில் கொண்டு செல்ல எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சதுமுகை ஊராட்சி வார்டு உறுப்பினர் பழனிச்சாமி தலைமையில் 50 -கும் மேற்பட்டோர் சத்தியமங்கலம் - கொடிவேரி சாலையில் அமர்ந்து புதன்கிழமை சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த பவானிசாகர் எம்எல்ஏ, பி.எல்.சுந்தரம் கிராம மக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, சர்க்கரை ஆலை நிர்வாகம் சார்பில் மாற்று ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்ததையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

Tuesday, November 11, 2014





புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் சார்பில் குழந்தைகள் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இன்று நேரு நகர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் LIFE OF PI ஆங்கில திரைப்படம் திரையிட பட்டது. மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் திரைபடத்தை கண்டுகளித்தனர்.

 



புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் சார்பில் குழந்தைகள் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இன்று வெங்கநாயகன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் பாரதி திரைப்படம் திரையிட பட்டது. மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் திரைபடத்தை கண்டுகளித்தனர்.