தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, March 16, 2014

திட்டத்தை முடக்குவது தான் ஜெ., யின் சாதனை: ஸ்டாலின் பேச்சு


 

ராஜபாளையம்:"ஏற்கனவே இருந்த திட்டங்களை கிடப்பில் போடுவது மட்டும் தான் ஜெ., ஆட்சியில் நடக்கிறது,” என, ராஜபாளையத்தில் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.

தென்காசி தொகுதி தி.மு.க., கூட்டணி வேட்பாளர் கிருஷ்ணசாமியை (புதிய தமிழகம்) ஆதரித்து நேற்று, ஸ்டாலின் பேசியதாவது:தி.மு.க., ஆட்சியில் தான் தாமிரபரணி குடிநீர் திட்டம் தயாரிக்கப்பட்டு, விருதுநகர் மாவட்டத்தில் (ராஜபாளையம் தவிர) செயல்படுத்தப்பட்டது. அப்போது நான் உள்ளாட்சிதுறை அமைச்சர்; ராஜபாளையம் நகராட்சியில் இருந்து மட்டும், அந்த திட்டத்திற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.இன்று வரை தாமிரபரணி குடிநீர், ராஜபாளையத்திற்கு வரவில்லை. தற்போது, ராஜபாளையம் குடிநீர் ஆதாரமாக உள்ள 'ஆறாம் மைல்கல்' நீர்த்தேக்கம், புது பஸ் ஸ்டாண்ட் ஆகியவை தி.மு.க., ஆட்சியில் அமைக்கப்பட்டன; ஜெ., ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை. ஏற்கனவே இருந்த திட்டங்களை, கிடப்பில் போடுவது மட்டும் தான் நடக்கிறது. தி.மு.க., ஆட்சியில் பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை; தற்போது, இருமடங்கு உயர்ந்து உள்ளது. பால் விலை மற்றும் மின் கட்டணத்தை கேட்டால் 'ஷாக்' அடிக்குது. ஜெ., ஆட்சிக்கு பாடம் புகட்டவேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, தென்காசியில் அவர் பேசியதாவது:ஜெயலலிதா, கடந்த மூன்று ஆண்டுகளில் செய்த சாதனைகளை கூறமுடியுமா? அவர் மக்களை சந்திப்பதில்லை. 'சீசனுக்கு சீசன்' வந்து செல்வது போல, தேர்தல் வந்தால் மட்டுமே மக்களை சந்திக்க வருவார். வீட்டில் இருந்து கிளம்பி ஆகாய வழியாக, ஒரு திடலுக்கு செல்கிறார்; அங்கிருந்து இன்னொரு திடலில் பேசிவிட்டு செல்கிறார்; அவர் மக்களை சந்திக்க மாட்டார். அவருக்கு மக்கள் பிரச்னைகள் தெரியாது. தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் அதிகரித்து வருகின்றன. விலைவாசியும் அதிகரித்து வருகிறது.சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் பதவிக்கு, புதியவரை தேர்ந்தெடுக்காமல் உள்ளனர்; அது, தலித் மக்களுக்கான பதவி.சங்கரன்கோவிலில் நடந்த இடைத்தேர்தலின் போது, அமைச்சர்கள் தெருத்தெருவாக, வார்டுக்கு ஒருவர் பணியாற்றினர். தேர்தல் முடிந்த பின், அமைச்சர்கள் வந்தார்களா?இவ்வாறு அவர் பேசினார்.

0 comments:

Post a Comment