தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, June 13, 2014

 தொடர் மழையால் சத்தி வனப்பகுதி பசுமையானது

 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையான இப்பகுதி மிகவும் அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதாலும் மேலும் பல வகை மான்கள் பெருவாரியாக வசிப்பதாலும் இங்கு தற்போது புலிகள் மற்றும் சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வனப்பகுதி மக்களும் சுற்றுலா பயணிகளும் பகல் நேரத்திலும் பல பகுதிகளில் புலிகள் மற்றும் சிறுத்தைகள் நடமாட்டத்தை நேரில் பார்த்து உள்ளனர்.

கடந்த மாதம் வெயிலின் கோர பிடியில் சிக்கிய சத்தியமங்கலம் வனப்பகுதி முழுவதும் காய்ந்து போய் கிடந்தது. வனப்பகுதியில் உள்ள நீரோடைகளும் வறண்டு போய் கிடந்தன.

சுட்டெரித்த வெயிலுக்கிடையே தொடர்ந்து சில நாட்களாக கோடை மழை கொட்டியது. இந்த தொடர் மழையால் வனப்பகுதி மீண்டும் பசுமையானது.
கருகி காய்ந்து போய் கிடந்த வனப்பகுதி தற்போது பச்சை போர்வைகளை போர்த்தி இருப்பது போல் பசுமையாக இருப்பதை கண்டு வன ஆர்வலர்களும், இயற்கை ஆர்வலர்களும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

மேலும் வனப்பகுதியில் உள்ள குட்டைகளிலும் தண்ணீர் சேர்ந்துள்ளது. வன ஓடைகளிலும் ஓரளவு தண்ணீர் சல..சல..வென ஒடிக்கொண்டிருக்கிறது. இதனால் தற்போதைக்கு வன விலங்குகளின் தண்ணீர் பஞ்சமும் தீர்ந்துள்ளது.

0 comments:

Post a Comment