தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
 வலுவான நிலையில் இந்திய அணி

 


ஜோகனஸ்பர்க்: ஜோகனஸ்பர்க் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில், இந்திய அணி 421 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 457 ரன்கள் முன்னிலை பெற்றது. 

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஜோகனஸ்பர்க்கில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 280, தென் ஆப்ரிக்கா 244 ரன்கள் எடுத்தன. 
மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 284 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா (135), கோஹ்லி (77) அவுட்டாகாமல் இருந்தனர். 

புஜாரா ஜோர்:

இன்று நான்காவது நாள் ஆட்டம் நடக்கிறது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணியின் புஜாரா 150 ரன்களை எட்டினார். மூன்றாவது விக்கெட்டுக்கு 222 ரன்கள் சேர்த்த போது, காலிஸ் பந்தில் புஜாரா (153) அவுட்டானார். ரோகித் (6) நிலைக்கவில்லை. கோஹ்லி (96) சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். ரகானே 15 ரன்களில் பெவிலியன் திரும்பினார். 
தோனி 29, அஷ்வின் 7 ரன்கள் எடுத்தனர். பின் வரிசையில் இஷாந்த் சர்மா (4), முகமது ஷமி (4) நிலைக்கவில்லை. இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 421 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானாது. 2 சிக்சர்கள் விளாசிய ஜாகிர் கான் (29) அவுட்டாகாமல் இருந்தார். தென் ஆப்ரிக்கா சார்பில் காலிஸ், பிலாண்டர் தலா 3, டுமினி, இம்ரான் தாகிர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

458 ரன்கள் இலக்கு:

இரண்டாவது இன்னிங்சில் 458 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், தென் ஆப்ரிக்க அணி களமிறங்கியது. தேநீர் இடைவேளையின் போது, தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில், விக்கெட் இழப்பின்றி 38 ரன்கள் எடுத்து, 420 ரன்கள் பின்தங்கி இருந்தது. ஸ்மித் (9), பீட்டர்சன் (28) அவுட்டாகாமல் இருந்தனர். .

0 comments:

Post a Comment