தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, March 20, 2014

புன்செய் புளியம்பட்டி பண்ணாரியம்மன் அன்னதான குழு சார்பில் பல்லாயிரகணக்கான பக்தர்களுக்கு அன்னதானம்



புன்செய் புளியம்பட்டி பண்ணாரியம்மன் அன்னதான குழு சார்பில் பண்ணாரியம்மன் குண்டம் திருவிழாவில் கலந்து கொண்ட பல்லாயிரகணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


 ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலம் வனப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் திருக்கோவில்.இக்கோவிலில்,ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும் குண்டம் திருவிழாவில் சுமார் 3 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.குண்டம் இறங்குவதற்காக 3 நாட்களுக்கு முன்பே வரிசையில் இடம் பிடித்து அமர்ந்துகொள்வார்கள்.

 
இவ்வாறு,வெயில்,மழை பாராமல் காத்திருந்து தெய்வபக்தியுடன் குண்டம் இறங்கும் பல்லாயிரகணக்கான  பக்தர்களுக்கு புன்செய்புளியம்பட்டியை சார்ந்த பண்ணாரியம்மன் அன்னதானக்குழு நண்பர்கள்  18-வது ஆண்டாக   அன்னதானம் வழங்கினர்.  இதுமட்டுமல்லாமல் வெயிலில் களைப்படைந்து வரும் பொதுமக்களுக்கு நீர்மோர்,மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. வாகனங்களில் சுகாதாரமான முறையில் நீர்மோர்,மற்றும் குளிர்பானங்கள் வழங்கபட்டன. மேலும்,அன்னதானத்துடன் மஞ்சள்,குங்குமம், கற்கண்டு, தாலிக்கயிறு மற்றும் பண்ணாரியம்மன் படம் அடங்கிய பிரசாத பாக்கெட்களும் பொதுமக்களுக்கு வழங்கபட்டன. பொதுமக்கள் வசதிக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு வரிசையாக அன்னதானம் பெற்று சென்றனர்.

    
பண்ணாரியம்மன் அன்னதானக்குழுவின்,தலைவர் எம்.வரதராஜ்,செயலாளர் என்.மயில்சாமி,ஜி.செல்வராஜ் ஆகியோர் கூறும்போது;

புனிதமான அன்னதான திருப்பணிக்கு  18-ஆண்டுகளாக ,பல்வேறு வகைகளில் உதவி செய்து வரும் புன்செய்புளியம்பட்டி வட்டார பொதுமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியினை ,அன்னதானக்குழுவின் சார்பாக தெரிவித்துகொள்ளுகிறோம். மேலும்,அன்னதானம் வழங்கும் கூட்டு முயற்சிக்கு,உறுதுணையாக இருந்த நண்பர்களுக்கும்,அவர்களது,குடு
ம்ப உறுப்பினர்களுக்கும்,நன்றி. மேலும் அன்னதான பணியினை சிறப்பாக நடத்துவதற்கு உதவியாக இருந்த கோவை மண்டல அறநிலைய துறை இணை ஆணையர் நடராஜன், கோவில் மேலாளர் கபிர்தாஸ், பொறியாளர் சுகுமார் மற்றும் கோவில் பணியாளர்கள், காவல் துறையினர், அறங்காவல் குழுவினருக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம் என்றார்கள்.

0 comments:

Post a Comment