தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, March 24, 2014

கம்பத்ராயன்கிரி மலையில் காட்டுத்தீ:  
2 நாள்களாக போராடி தீயை அணைத்த வனத்துறை




சத்தியமங்கலம்,மார்ச் 23:
சத்தியமங்கலம் வனப்பகுதி கம்பத்ராயன்கிரி மலைப்பகுதியில் கொளுந்துவிட்டு எரிந்த தீயை வனத்துறையினர் 2 நாள்களாக போராடி அணைத்தனர்.

சத்தியமங்கலம் வனப்பகுதி கம்பத்ராயன்கிரி காப்புக்காட்டில் ராமர்போலி என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை இரவு தீப்பிடித்தது. இப்பகுதியில் உள்ள சீமார் புல்லில் பற்றிய தீ காடுமுழுவதும் பரவியது. சீமார் புல் எளிதாக தீப்பிடித்து வேகமாக சாம்பலாகும் தன்மை கொண்டதால் சுமார் 5 ஹெக்டேர் பரப்பளவில் பரவிகிடந்த காய்ந்துபோன சீமார்புற்கள் தீயில் கருகின. மலைப்பகுதியில் கொளுந்துவிட்டு எரியும் சம்பவத்தை சத்தி நகரவாசிகள் பார்த்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தீ மேலும் பரவாமல் தடுத்து தீயை கட்டுபடுத்தும் பணியில் வனவர் ராஜேந்திரன் தலைமையில் 25 வனஊழியர்கள்,20  கிராம வனக்குழு உறுப்பினர் என 45 பேர் ராமர்போலி காட்டுக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  கோடை வெப்பத்துடன் தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் வனஊழியர்கள் புகைமண்டலத்தில் சிக்கி மயக்கம்அடைந்தனர். தீயில் சிக்கிய  நெளசத் என்ற வனஊழியரை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

செங்குத்தான மலைப்பாதையில் தண்ணீர் கிடைக்காததால் அங்கு விளைந்த செடிகளை விசிறியாக மாற்றி  தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு நாள் போராட்டத்திற்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை காலை தீயை முற்றிலுமாக அணைத்தனர். 

இது குறித்து வனஊழியர்கள் கூறியது: ராமர்போலி  பகுதியில் வளர்ந்த சீமார்புற்களை கிராமமக்கள் அறுத்துவிட்டு அடிக்கட்டை மட்டும் விட்டு செல்வர். சீமாருடன் வாழம்புல் என்ற களைச்செடியும் கூடவே வளருவதால் களைச்செடியை அகற்றுவதற்காக சீமார் புல் அறுப்போர் தீ வைத்து எரியூட்டுவர். இவ்வாறு வைக்கப்பட்ட தீ பிற இடங்களுக்கும் பரவியதால் தீ கொளுந்துவிட்டு எரிந்தது. இதில் சீமார்புல் மற்றும் வாழம்புல் என்ற களைச் செடிகள் மட்டுமே எரிந்து சாம்பலாயின. வனத்தில் தீவைத்த மர்மநபரை தேடி வருகின்றனர் என்றார்

0 comments:

Post a Comment