தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, March 26, 2014

சத்தியில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்
 
 
 
 

சத்தியமங்கலம், மார்ச்.27. நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பவானிசாகர் சட்டமன்ற தொகுதி ஜனநாயக முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் சத்தியமங்கலம் அத்தாணி சாலையில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சத்தி முன்னாள் எம்எல்ஏவும், பவானிசாகர் சட்டமன்றதொகுதி தேர்தல் பொறுப்பாளருமான எல்.பி.தர்மலிங்கம் தலைமை தாங்கினார். சத்தி நகர செயலாளர் வரவேற்றார். மாவட்ட செயலாளர் என்.கே.கே.பி.ராஜா, நீலகிரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீலகிரி மக்களவை தொகுதி வேட்பாளர் ஆ.ராசா பேசியதாவது.  திமுக தலைவர் கருணாநிதியிடம் நான் எந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தாலும் கொடுத்திருப்பார். ஆனால் நான் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட விரும்பியதால் வாய்ப்பளித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சாலை மேம்பாடு, புதிய அங்கன்வாடி கட்டிடங்கள், பள்ளி சுற்றுச்சுவர், குடிநீர்த்திட்டங்கள், மின்மயானம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்யப்பட்டுள்ளது. இந்திய தொலைத் தொடர்பு துறையில் நான் புரட்சியை ஏற்படுத்த நினைத்தேன். நாட்டு மக்கள் அனைவரும் செல்போன் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். இந்தியாவில் செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 3 கோடியிலிருந்து 90 கோடியாக உயர்ந்தது. அதற்காக அரசு எனக்கு தண்டனை கொடுத்தது ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி நஷ்டம், 33 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்திருக்கலாம் என்றெல்லாம் கூறுகிறார்கள். அப்படி நான் மோசடியில் ஈடுபட்டிருந்தால், என் வீட்டில் சிபிஐ மற்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். என் பெயரில் ஏதாவது சொத்து இருந்ததாக கண்டு பிடித்துள்ளனரா, ஒன்றுமில்லையே. நான் குற்றமற்றவன் என நிருபிக்க எனக்கு கிடைத்துள்ள வாய்ப்பு இது. எனவே, நீலகிரி மக்களவை தொகுதியை சேர்ந்த நீங்கள் என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை தகர்த்தெரிய எனக்கு வாக்களிக்க வேண்டும். மீண்டும் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக என்னை தேர்வு செய்ய வேண்டும் என்று பேசினார். .

0 comments:

Post a Comment