தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, August 31, 2014

தாளவாடி மலைப்பகுதியில் தொடர்மழை. வனக்குட்டையில் யானைகள் உற்சாக குளியல்.
 

 
 
சத்தியமங்கலம், செப்.1. தாளவாடி மலைப்பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் வனக்குட்டைகள் நிரம்பி வனவிலங்குகளின் குடிநீர்பிரச்சினை தீர்ந்துள்ளது. தாளவாடி மலைப்பகுதியில் தாளவாடி, ஆசனூர், தலமலை மற்றும் கேர்மாளம் ஆகிய 4 வனச்சரகங்கள் உள்ளன. இவ்வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கழுதைப்புலி, கரடி, காட்டெருமை, செந்நாய், மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வகை விலங்குகள் வசிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததால் ஓடைகள், பள்ளங்கள், வனக்குட்டைகள் வற்றி வனவிலங்குகளுக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. இதனால் யானை மற்றும் காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் விவசாய விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதம் செய்தது மட்டுமின்றி குடிநீர் தேடி அலைந்தன. வனத்துறையினரும் வனவிலங்குகளுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு டிராக்டர்கள் மூலம் வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் நீர் நிரப்பி வந்தனர். இதற்கிடையே கடந்த ஒரு மாதகாலமாக தாளவாடி மலைப்பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குளம், குட்டைகள், தடுப்பணைகளில் மழைநீர் நிரம்பியுள்ளது. வனப்பகுதியில் காய்ந்து கிடந்த மரம், செடி கொடிகள் துளிர்த்து பச்சைப்பசேலென காட்சியளிக்கின்றன. வனவிலங்குகள் வனக்குட்டையில் தேங்கியுள்ள தண்ணீரில் ஆனந்தக்குளியல் போடுகின்றன. தாளவாடியை அடுத்த கொங்கள்ளி மலைப்பகுதியில் உள்ள குட்டையில் தினமும் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து நீர் அருந்தி செல்கின்றன.
அட்ரஸ் இல்லாமல் போனது விஜய்காந்த் கட்சி: அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாசலம்


சத்தியமங்கலம்,ஆக 31:
மக்களவைத் தேர்தலில்  விஜயகாந்தை மக்கள் புறக்கணித்துவிட்டதால் தேமுகவுக்கு முகவரி இல்லாமல் போய்விட்டது என தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் தெரிவித்தார்.


நீலகிரி மக்களைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றிபெற்றதையடுத்து,  பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குபட்ட சத்தியமங்கலம், அரியப்பம்பாளையம், உக்கரம், பெரியூர், கொத்துக்காடு, சதுமுகை, கேஎன்.பாளையம், கெஞ்சனூர், சிக்கரம்சபாளையம் ஆகிய பகுதியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம், நீலகிரி மக்களவை உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

சதுமுகையில் திரண்டிருந்த நெசவாளர்கள் மத்தியில் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் பேசியது:
அதிமுகவுக்கு அதிக வாக்குகள் பெற்று தந்த இந்த சதுமுகையில் அதிகமாக நெசவாளர்கள் வசிக்கின்றனர். நெசவாளர் பசுமை வீடுகள், மின் ராட்டை,  முதியோர் உதவித் தொகை போன்ற நலத்திட்ட உதவிகள் தந்து நெசவாளர்களின் நலனின் அதிமுக அதிக அக்கறை காட்டி வருகிறது. நெசவாளர்கள் கோரிக்கைகள் எதுவாயினும் அவற்றை 30 நாள்களில் நிறைவேற்றித் தரப்படும். தேர்தல் வாக்குறுதிகளை முறைப்படி நிறைவேற்றி வருகிறோம். சத்தியில் விரைவில் அம்மா உணவகம் திறக்கப்பட உள்ளது. அதிமுக பொறுப்பேற்கும் போது கடுமையான மின்பற்றாக்குறை நிலவியது.

தெளிவான சிந்தனை, திறமையான நிர்வாகத்தால் மின்மிகை மாநிலமாக மாறி வருகிறது. வறட்சியில் கூட குடிநீர் பிரச்னையை தீர்வு கண்டார். கிராமந்தோறும் மண்சாலை எல்லாம் தார்சாலையாக உருவக்கெடுகிறது. சத்தியில் நகர்ப்புற அரசுமருந்துவமனை, போக்குவரத்து காவல்நிலையம், ஆயிரம் பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, அம்மா உணவகம் போன்ற அதிமுக சாதனைகள், மக்களவைத் தேர்தலில் காங். கட்சிக்கு லென்ஸ வைத்து பார்ககும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தேமுதிக கட்சிக்கு முகவரியே போய் விட்டது. திமுகவுக்கு கிடைத்த முட்டையால் ஆம்லெட் கூட போட முடியாது. அதிமுக தொண்டர்கள் உழைப்பால் எதிர்கட்சியே இல்லாமல் போய்விட்டது என்றார்.

நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம், சத்தி நகர்மன்றத் தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம், ஈரோடு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.எஸ்.ஆறுமுகம், அதிமுக ஒன்றிய செயலாளர்(வடக்கு) சி.என்.மாரப்பன், கேஎன் பாளையம் பேரூராட்சி அதிமுக செயலாளர் எஸ்.ஆர்.சின்னச்சாமி, அரியப்பம்பாளையம் பேரூராட்சித் தலைவர் பி.ஆர்.துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சத்தியமங்கலத்தில் விநாயகர் சிலை ஊர்வலம்





சத்தியமங்கலம், ஆக 31:
சத்தியமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊர்வலத்தில் 86 விநாயகர் சிலைகள் எடுத்துவரப்பட்டு பவானிஆற்றில் கரைக்கப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, சத்தியமங்கலம் நகர்ப்பகுதி, கொத்துக்காடு, அரியப்பம்பாளையம்,இண்டியம்பாளை
யம், தாசம்பாளையம், பவானிசாகர், பகுத்தம்பாளையம்,உப்புப்பள்ளம், புன்செய் புளியம்பட்டி, கணபதிபாளையம் மற்றும் சாணார்பதி ஆகிய இடங்களில் இந்துமுன்னணி சார்பில் 86   விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன.

சத்தியில் நடைபெறும் விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலந்துகொள்வதற்காக பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகள் எஸ்ஆர்டி மைதானத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன. ஈரோடு மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் எஸ்.ஆர்.செல்வம் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். சத்தி நகர்மன்ற தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். இந்த ஊர்வலம் மைசூர் சாலை, ஆற்றுப்பாலம், கோட்டுவீராம்பாளையம், கடைவீதி, பெரியபள்ளிவாசல் வீதி, சத்யா தியேட்டர், திப்புசுல்தான் சாலை வழியாக பவானிஆற்றை சென்றடைந்தது. ஊர்வலத்தில் பங்கேற்ற இந்து முன்னணியினர் விநாயாகர் சிலைகளு்க்கு சிறப்பு பூஜைகள் செய்து  சிலையை ஆற்றில் கரைத்தனர்.

ஊர்வலத்தையொட்டி, ஈரோடு மாவட்ட கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி தலைமையில் 4 டிஎஸ்பிகள், 11 காவல்ஆய்வாளர்கள், 73 உதவிகாவல்ஆய்வாளர்கள், 268 காவலர்கள் என மொத்தமாக 356 பேர் பாதுபாப்பு பணியில் ஈடுபட்டனர்.
 
சத்தியமங்கலம் அடுத்துள்ள அரியப்பம்பாளையத்தில் நடைபெற்ற விழாவில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசுகிறார் நீலகிரி மக்களவை உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன். ஈரோடு மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம்,சத்தி நகர்மன்றத் தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம், அரியப்பம்பாளையம் பேரூராட்சித் தலைவர் பி.ஆர்.துரைசாமி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.எஸ்.ஆறுமுகம், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து கிளை செயலாளர் மணி,சத்தி ஒன்றிய அதிமுக செயலாளர் வி.சி.வரதராஜ் உள்ளிட்டோர்
 

சத்தியமங்கலம் அடுத்துள்ள கோணமூலையில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளர் நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் பங்கேற்ற நீலகிரி மக்களவை உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன்,ஈரோடு மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம், சத்தி ஊராட்சி ஒன்றிய செயலாளர்கள் வி.சி.வரதராஜ், சி.என்.மாரப்பன், சத்தி நகர்மன்றத் தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம், கோணமூலை ஊராட்சித் தலைவர் எஸ்.பத்மினிசண்முகம், அதிமுக ஊராட்சி செயலாளர் மணிகண்ட சங்கர் உள்ளிட்டோர்

Saturday, August 30, 2014

இலக்கியம் படிக்கும் குழந்தை வாழ்வியலைக் கற்றுக்கொள்ளும் - திரைப்பட இயக்குநர் மிஷ்கின்

 



குழந்தைகள் இலக்கியத்தை கற்றுக்கொள்வதால் வாழ்வியலைக்கற்று பக்குவம் பெறும் என்றார் திரைப்பட இயக்குநர் மிஷ்கின்.

மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற புத்தகத் திருவிழா தொடக்க நிகழ்ச்சியில் அவர் பேசியது:

நான் புத்தகங்களைப் படித்த நேரங்கள் தான் வாழ்க்கையில் எனக்கு பயனுள்ள நேரமாக இருந்தன. எனது பாட்டி எனக்கு கற்றுக்கொடுத்த பழக்கம் இது. நூற்றுக்கணக்கான கதைகளை எனக்குள் புகுத்தியது பாட்டிதான். அதிலிருந்துதான் எனது புத்தகம் வாசிக்கும் பழக்கம் துவங்கியது.

எனது வாழ்க்கையில் 72க்கும் மேற்பட்ட தொழில்களைச் செய்து பார்த்துவிட்டேன். எல்லாவற்றிலும் சலிப்பு ஏற்பட்டது. கடைசியாக வெள்ளைச்சுவர் வடிவத்தில் சினிமாத்துறை என்னை அழைத்தது. எல்லோரும் ஏதாவது ஒரு நேரத்தில் கதைகளைச் சொல்கிறோம். சினிமா பிரேம்களில் வரும் கற்பனை

மனிதர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதை நான் கதை சொல்லும் களமாக்கிக்கொண்டேன். அதிலும் எனக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது.

அப்போதும், எனக்கு ஆறுதலைத் தந்தது புத்தகங்களே. எந்த ஒரு கவலையாக இருந்தாலும் அதை புத்தகங்கள் மறக்கச்செய்துவிடும்.

புத்தகங்களைப்படிப்பது ஒரு தவநிலை. அதை நான் செல்லும் வழியெங்கும் செய்துகொண்டிருக்கிறேன். மனிதகுலத்தின் அனுபவ தொகுப்பாக இருக்கும் புத்தகங்களை படிப்பதை விட வேறு எதுவும் நமக்குப் பயன்தராது. குழந்தைகள் படித்து முதலிடத்தில் வரவேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடே கிடையாது. குழந்தை பாஸ் செய்தால் போதும். அதுவும் சமூகத்துக்காகவே தேவைப்படுகிறது. எனது மகளுக்கு டால்ஸ்டாய் புத்தகங்களை படிக்க கொடுக்கிறேன். அவளும் கதை சொல்கிறாள். குழந்தைகள் இலக்கியம் படிக்கும் போது தான் வாழ்வியலை கற்றுக்கொள்ளும். எதிர்காலத்தில் அச்சமின்றி வாழும் பக்குவம் பெற்றுவிடும். இல்லையென்றால் எதிர்காலத்தில் திருமணம் செய்து போராட வேண்டிவரும்.

புத்தகம் படிக்கும் போது நான் ஆன்மாவுக்குள் பயணிப்பதாக உணர்கிறேன். எனக்கு சொந்த வீடு கிடையாது. ஆனால் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் வைத்திருக்கிறேன். புத்தகங்கள் தான் உண்மையான முதலீடாகும். வேறு எதில் முதலீடு செய்தாலும் அது நிரந்தரமல்ல. இளைஞர்களே எதிர்கால சமுதாயம் என்பதும் சரியாகாது.

நமது குழந்தைகள் தான் எதிர்காலத்தை நிர்ணயிக்கும். அவற்றுக்கு புத்தகங்களை வாங்கிக்கொடுத்து படிப்பதை ஊக்கப்படுத்துங்கள். அவர்களின் வாழ்வு வளமாக அமையும் என்றார்.
கணினி யுகத்திலும் புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறையவில்லை - நல்லி குப்புசாமி செட்டி

 
 
கணினி பயன்பாடு அதிகரித்து வந்த போதும் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் குறையவில்லை. நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது என தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி பேசினார்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் மதுரை தமுக்கம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைத்து அவர் பேசியது:

கிராமத்தில் பிறந்து படித்து நல்ல நிலைக்கு உயர்ந்த பலரும் தங்களின் அனுபவங்களை சமூக வளர்ச்சிக்காக பயன்படுத்துகின்றனர். அனுபவங்கள் புத்தக வடிவில் வெளிவரும் போது அது பலருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. அரிச்சந்திரன் நாடகத்தை பார்த்து மனதில் பதிய வைத்திருந்ததால் தான் காந்தியடிகள் தேச சுதந்திர போராட்டத்தில் சத்தியம், அஹிம்சையை கடைசி வரையிலும் கடைபிடித்தார்.

பழங்கால பிரபலங்களின் வரலாறை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நாங்கள் ரண்டார்கை உதவியோடு புத்தகம் வெளியிடச் செய்தோம். அது பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றைத் தெரிந்து கொள்ள உதவியாக இருந்தது. இது போல் அகராதிகளை வெளியிடவும் உதவியிருக்கிறோம்.

புத்தக தேடல் என்பது எப்போதும் குறையாதது. இன்றைய வாழ்வியல் சூழலில் பலருக்கு படிக்க நேரம் இல்லையென்றாலும் புத்தகம் வாங்குவது குறையவில்லை. பேப்பர்,பென்சில் உபயோகம் குறைந்து கணினி யுகத்தில் நாம் இருக்கிறோம். ஆனாலும் புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் ஒரு சதவீதம் கூட குறையவிóலலை. அவரவர்கள் வயதுக்கு தகுந்தபடி புத்தகங்களை வாங்கி வாசிக்கிறார்கள்.

மதுரையில் புத்தகத் திருவிழா ஆரம்பிக்கும் போது புத்தகங்கள் விற்பனையாகுமா என மிகவும் தயங்கினார்கள். ஆனால், இன்றைக்கு 220க்கும் மேற்பட்ட அரங்குகளை அமைத்த போதும் மேற்கொண்டும் அரங்குகளை அமைக்க இடம் கேட்கின்ற நிலை உள்ளது. அரிய தகவல்களை புத்தகங்களில் தான் பார்க்க முடியும். அந்த வகையில் புத்தகங்களை வழங்குவதை சேவையாக செய்வதை பாராட்டுகிறேன் என்றார்.

ஆட்சியர் எல்.சுப்பிரமணியன்: புத்தகங்களை வாசிப்பதை ஒவ்வொருவரும் கலையாக வளர்த்துக்கொள்ள வேண்டும். வரலாறுகளையும் இலக்கியங்களையும் புத்தகங்கள் வாயிலாகவே நாம் அறிந்து கொள்ளமுடியும். வாசிóக்கும் ஆர்வத்தை ஊக்குவிப்பதாக இந்த புத்தகத் திருவிழா உள்ளது. இங்கு ஒவ்வொருவரும் குடும்பத்தோடு வரவேண்டும். ஆராய்ச்சிக்குத் தேவையான புத்தகங்கள் மாணவர்களுக்கு உதவும். புத்தகம் படிக்க நேரம் ஒதுக்குவது குறைந்து வருகிறது. இந்த நிலையை மாற்றி புத்தகங்களைப் படிக்க கூடுதல் நேரத்தை செலவிடவேண்டும் என்றார்.


நிகழ்ச்சியில் வரவேற்றுப் பேசிய பபாசி தலைவர் மெ.மீனாட்சி சோமசுந்தரம், லாப நோக்கமற்ற இயக்கமாக பபாசி உள்ளது. வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கச் செய்வதே இதன் நோக்கம். சென்னை, மதுரையில் நேரடியாகவும், மற்ற நகரங்களில் பிற கண்காட்சிகளுக்கு உதவியாகவும் புத்தக விழாக்களை நடத்தி வருகிறோம் என்றார். பபாசி செயலர் கே.எஸ்.புகழேந்தி நன்றி கூறினார்.
வேளாங்கண்ணி ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்: பக்தர்கள் குவிகின்றனர்; செப். 7-ம் தேதி பெரிய தேர் பவனி



 நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுத் திருவிழா நாளை (ஆக.29) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் கிறிஸ்தவர்களின் யாத்திரைத் தலமாக விளங்குகிறது. ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்துகொண்டே இருக்கும் இந்தப் புகழ்பெற்ற பேராலயத்தின் ஆண்டுத் திருவிழா, வெள்ளிக் கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழா செப்.8-ம் தேதி வரையிலும் நடைபெறும்.

திருவிழாவின் முதல் நாளான வெள்ளி மாலை 6 மணிக்கு கொடி யேற்றப்படுகிறது. முன்னதாக தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் திருக்கொடியை புனிதம் செய்து வைக்கிறார். புனிதம் செய்யப்பட்ட கொடி வேளாங்கண்ணி கடைத்தெரு, ஆரிய நாட்டுத் தெரு, கடற்கரை சாலை வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு லட்சக்கணக்கான மக்களின் வாழ்த்துகளுடன் கொடிக் கம்பத்தில் ஏற்றப்படும்.

நற்கருணை ஆசீர், திருப்பலி

அதன் பின்னர் பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு ஆராதனை நடைபெறவுள்ளது. தொடர்ந்து நற்கருணை ஆசீர்வாதம், தமிழில் திருப்பலி ஆகியவை நிறைவேற்றப்படும். இவற்றில் பேராலய அதிபர் மைக்கேல் அடிகளார், பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ் அடிகளார், உதவி பங்குத் தந்தைகள், அருட்சகோதரிகள் கலந்துகொள்வார்கள்.

மறுநாள் முதல் ஒவ்வொரு நாளும் பேராலயத்தில் காலை 5 மணிக்கு தமிழில் திருப்பலி நடை பெறும். பின்னர் அன்னையின் திருச்சொருப ஆசீரும், நோயாளிகளை மந்திரித்தலும் நடைபெறும். விண்மீன் ஆலயத்தில் தினந்தோறும் தமிழ், மராத்தி, மலையாளம், கொங்கனி உள்ளிட்ட மொழிகளில் திருப்பலிகளும், தமிழில் அருங்கொடை, ஜெபத் திருப்பலியும் நடைபெறும். மாதாகுளம், பேராலய கீழ்கோயில், பேராலய மேற்கோயில், சிலுவைப்பாதை ஆகியவற்றிலும் தினமும் திருப்பலிகள் நடைபெறும்.

செப்.7-ம் தேதி பெரிய தேர் பவனி

செப்டம்பர் 7-ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர்பவனி நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு மாலை 5.15 மணிக்கு பேராலய கலையரங்கில் தமிழில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம் ஆகியவை நடைபெறும். பின்னர் தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் தலைமையில் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப்படும். இதையடுத்து அன்று மாலை 7 மணிக்கு பெரிய தேர்பவனி நடைபெறும். மின் அலங்கார பெரிய தேரில் மாதா சொரூபம் வைக்கப்பட்டு தேர்பவனி நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

8-ம் தேதி மாலை 6 மணிக்கு அன்னையின் திருக்கொடி இறக்கப்பட்டு ஆண்டுத் திருவிழா நிறைவடைகிறது. பின்னர் மாலை 6.15 மணிக்கு பேராலய கீழ்கோயிலில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி நிறைவேற்றப்படும்.

குவியும் பக்தர்கள் கூட்டம்

இத்திருவிழா தொடங்குவதையொட்டி நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் பாதயாத்திரையாக புறப்பட்ட பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். பக்தர்களின் வசதிக்காக மும்பை, திருவனந்த புரம், திருநெல்வேலி, சென்னை ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு ரயில்களும், மாநிலத்தின் முக்கிய ஊர்களில் இருந்து சிறப்புப் பேருந்துகளும் இயக்கப் படுகின்றன. பக்தர்களுக்குத் தேவையான மருத்துவ முகாம்கள், கழிவறை, குளியலறை, குடிநீர், ஆகிய அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கண்காணிப்பு கேமரா

வேளாங்கண்ணி விழாவையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 50 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தனியார் வாகனங்கள் அனைத்தும் நகருக்கு வெளியே நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடலில் இறங்கி பக்தர்கள் ஆபத்தில் சிக்கிக் கொள்வதை தவிர்க்க தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடற்கரையில் கூட்டத்தை கட்டுப்

படுத்த கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம், பேரூராட்சி நிர்வாகம், மாவட்ட காவல்துறை மற்றும் பேராலய நிர்வாகம் ஆகியவை இணைந்து திருவிழாவை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளன.

Friday, August 29, 2014

 அதிமுகவினர் வெற்றி கொண்டாட்டம் 


அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா  போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மீண்டும் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி,சத்தியமங்கலத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து,பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.இதில் ஈரோடு மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம், சத்தி நகர்மன்றத் தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம், சத்தியமங்கலம் ஒன்றிய செயலாளர்கள் வி.சி.வரதராஜ்,சி.என்.மாரப்பன், மாவட்ட பேரவை செயலாளர் எஸ்.எஸ்.ஆறுமுகம், சத்தி நகர கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.கே.பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சத்தியமங்கலத்தில் 250 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை



சத்தியமங்கலம், ஆக 29:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சத்தியமங்கலம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் 250 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

இந்து முன்னணி சார்பில் சத்தியமங்கலம், பவானிசாகர், புன்செய் புளியம்பட்டி, தாளவாடி,கொத்துக்காடு, கோட்டுவீராம்பளையம், ரங்கசமுத்திரம், புளியம்கோம்பை, குள்ளங்கரடு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட இடங்களில் 250 விநாயர்கள் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. சத்தியமங்கலம் பவானீஸ்வரர் ஆலயம் முன்பு 11 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இந்து முன்னணி சார்பில் ஞாயிற்றுக்கிழமை  நடைபெறும் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு சத்தி போலீஸார் அனுமதி அளித்துள்ளனர்.

பொதுமக்கள் விநாயகர் சிலைகளை தங்களது சொந்த பொறுப்பில் வைத்துக் கொள்ளவேண்டும். இடையூறு ஏற்படும் சூழலில் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

சத்தியமங்கலம், பெரியூர், கொத்துக்காடு, அரியப்பம்பாளையம், கோட்டுவீராம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களில் கொண்டுவரும் விநாயகர் சிலைகள் எஸ்ஆர்டி கார்னரில் நிறுத்தி வைக்கப்படும். பின்னர், அங்கிருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு 10க்கும் மேற்பட்ட இடங்களில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சத்தியமங்கலம் குலாலர் வீதியி்ல உள்ள விநாயகர் கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் அருகம்புல் அலங்காரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ வரசித்தி விநாயகர்

Thursday, August 28, 2014

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!
நலம் பெறுக! வளம் பெறுக!


சத்தியமங்கலத்தில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிப்பு ! - சத்தி நகராட்சி அதிரடி


நகராட்சியினரால் இடித்து அப்புறப்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்பு கட்டடங்கள்

திப்புசுல்தான் சாலையில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை ஜேசிபி மூலம் இடித்து அகற்றும் நகராட்சி பணியாளர்கள்

சத்தியமங்கலம்,ஆக 28:
சத்தியமங்கலம் நகராட்சிக்குட்பட்ட திப்புசுல்தான் சாலையில்  ஆக்கிரமித்து கட்டப்பட்ட 75க்கும் மேற்பட்ட வீடுகள், வணிககடைகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன.

சத்தியமங்கலம் நகராட்சிப் பகுதியில் மழைநீர் வடிகால் கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. நகராட்சி. மழைநீர் வடிகால்கள் மொத்த நீளம் 63.5 கிமீ. நகராட்சி நிலஅமைப்புப் படி இந்த  வடிகால்கள் 14 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள  சிறு சாக்கடைகளை அகற்றிவிட்டு எதிர்கால தேவைக்கேற்ப மழைநீர் வடிகால் கட்டுவதால் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி முடிவு செய்தது. இதற்கான தீர்மானம் நகர்மன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கையில் நகராட்சி இறங்கியது.

ஆக்கிரமிப்பாளர்கள் தானாகவே முன்வந்து கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் இல்லையெனில் நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றப்படும் என தண்டோரா மூலம் தெரிவிக்கப்பட்டது.10க்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்கள் மட்டுமே  தானாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தினர்.  அப்புறப்படுத்தபடாத கட்டடங்களை சத்தி நகராட்சி ஆணையாளர் கே.சரவணக்குமார், சுகாதார அலுவலர் கே.சக்திவேல், நகரமைப்பு ஆய்வாளர் சி.செல்வன்,வருவாய் ஆய்வாளர் ஆயிஷா ஆகியோர் கொண்ட குழுவினர் கணக்கெடுத்து ஜேசிபி மூலம் இடித்து அகற்றி வருகின்றனர். மேலும், அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பண்ணாரி வனத்தில் மகன் கொலை:தந்தை உள்பட 2 பேர் கைது 


மகனை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட தந்தை துரைசாமி மற்றும் செல்வன்

சத்தியமங்கலம், ஆக.29. பண்ணாரியம்மன் கோயில் தெப்பக்குளம் அருகே நேற்று முன்தினம் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக்கிடந்த திருப்பூரைச் சேர்ந்த டெய்லர் பாண்டியனை தந்தையே ஆள் வைத்து கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாண்டியன் தினமும் மது அருந்துவதற்கு காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் பணம் கேட்டு டார்ச்சர் செய்ததாகவும், குடித்துவிட்டு வந்து தன்னையும் தன் மனைவி சந்திரா (50) வையும் கையில் கிடைத்த பொருட்களால் அடித்து துன்புறுத்தியதாகவும், இரவில் தூங்கவிடாமல் தொந்தரவு செய்ததாகவும், சாப்பிடும்போது தட்டை காலால் உதைப்பதாகவும் கூறினார். விடிய விடிய டார்ச்சர் செய்துகொண்டே இருந்ததால் பாண்டியனை கொன்றுவிட முடிவு செய்து வரப்பள்ளத்தை சேர்ந்த மருந்தடிக்கும் தொழிலாளி செல்வன்(30) என்பவரை அணுகி மகனை கொல்ல ஏற்பாடு செய்து தருமாறு கேட்டதாகவும் செல்வன் வேறொரு நண்பரை ஏற்பாடு செய்து தந்ததாகவும், இதற்கிடையே நேற்று முன்தினம் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளியின் மகள் திருமணத்திற்கு சென்ற பாண்டியன் பண்ணாரியில் கொலை செய்யப்பட்டு கிடந்ததாக கூறினார். இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது இச்சம்பவத்தில் 3 பேர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் பிடிபடுவார்கள் எனவும் கூறினர். துரைசாமி மற்றும் செல்வன் ஆகிய இருவரை சத்தியமங்கலம் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Wednesday, August 27, 2014

வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சியில் புன்செய் புளியம்பட்டி மாணவி பவித்ரா  இரண்டாமிடம்! - ரூபாய் 25000 ரொக்கப்பரிசு வென்றார்








புன்செய் புளியம்பட்டி ஆகஸ்ட் 29:

         திருச்சி துவாக்குடியிலுள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் நடைபெற்ற புதிய தலைமுறையின் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் புன்செய் புளியம்பட்டி எஸ்.ஆர்.சி மெட்ரிக் பள்ளி மாணவி பவித்ரா இரண்டாமிடம் பெற்று ரூபாய் 25000 ரொக்கப்பரிசு வென்றார்.

        புதிய தலைமுறையின் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி திருச்சி துவாக்குடியிலுள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் நடைபெற்றது. இந்த கண்காட்சியை தேசிய தொழில்நுட்பக் கழக இயக்குநர் சுந்தரராஜன் தொடங்கி வைத்தார். இதில் 58 படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. மாவட்ட அளவிலான கண்காட்சிகளில் முதலிடம் பிடித்த மாணவர்களின் படைப்புகள் இறுதிப்போட்டியில் இடம்பெற்றன. 9 ஆம் வகுப்புக்கு கீழ் படிக்கும் மாணவர்கள் இளையோர் பிரிவிலும், 9ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களை மூத்தோர் பிரிவிலும் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன. ஜூனியர், சீனியர் பிரிவு என மொத்தம் 115 மாணவர்கள் இதில் பங்கேற்றனர். சிக்கனம், சேமிப்பு, செல்வம் என்ற தலைப்பின் கீழ் மாவட்ட அளவிலான கண்காட்சி நடைபெற்றது. மின்சார சிக்கனம், மாற்று எரிசக்தி, பொருட்களை மறுசுழற்சி செய்தல் என பல படைப்புகளை மாணவர்கள் காட்சிக்கு வைத்திருந்தனர்.

           இதில் புன்செய் புளியம்பட்டி எஸ்.ஆர்.சி மெட்ரிக் பள்ளி மாணவி பவித்ரா தனது கண்டிபிடிப்புகளான நிலக்கடலை பறிக்கும் எந்திரம் மற்றும் களை பறிக்கும் எந்திரம்  உள்ளிட்ட படைப்புகளை கண்காட்சியில் வைத்திருந்தார். மூத்தோர் பிரிவில் மாணவி பவித்ரா இரண்டாமிடம் பெற்றார். இதற்கான பரிசுதொகை 25000 ரூபாய்க்கான காசோலையை புதிய தலைமுறை தலைமை செயல் இயக்குனர் ஷ்யாம் சுந்தர் வழங்க மாணவி பவித்ரா பெற்று கொண்டார்.

          இந்நிகழ்ச்சியில் தேசிய தொழில்நுட்பக் கழக இயக்குநர் சுந்தரராஜன், தினமலர் இணையாசிரியர் ராமசுப்பு, திருச்சி மண்டல பாஸ்போர்ட் மேலாளர் பாலமுருகன், திருச்சி மண்டல மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனர்,  எஸ்.ஆர்.சி. மெட்ரிக் பள்ளி ஆசிரியர் என்.பிரேம்நாத்,மாணவி பவித்ராவின் பெற்றோர் ராஜா சுரேந்தர் - ராதா உள்பட பலர் பங்கேற்றனர்.



தி எக்ஸ்பாண்டபிள்ஸ் 3 -விமர்சனம்



பெருந்தலைகள் ஒன்று கூடி குழுவாக செயல்பட்டு அநியாயத்தை அழிக்கும் ஆக்‌ஷன் டீம் தான் 'தி எக்ஸ்பாண்டபிள்ஸ் 3'.

சட்டத்துக்கு விரோதமாக ஆயுதக் கடத்தல், விற்பனைனு ஊரையே விலை என்னவென்று கேட்கிறார் மெல் கிப்சன். அவரின் மொத்த சாம்ராஜ்யத்தையும் அழிக்க கிளம்புகிறார்கள் சில்வஸ்டர் ஸ்டாலினின் ஆக்‌ஷன் டீம். ஆனாலும் முதல் அட்டம்ப்ட் தோல்வியை தழுவ, அடுத்த கட்ட தாக்குதலாக இளம் வீரர்கள் கொண்ட குழுவுடன் களத்தில் இறங்க சொல்லி சில்வஸ்டருக்கு உத்தரவு வருகிறது. உத்தரவை மீற முடியாமல் வேண்டா வெறுப்பாக இளம் வீரர்களுடன் களத்தில் இறங்க‌ ஒரு கட்டத்தில் சில்வஸ்டர் ஸ்டாலின் தவிர மொத்த குழுவும் வில்லன் பிடியில் சிக்குகிறது. இந்த புதிய குழுவிற்கு உதவ கிளம்பி வருகிறார்கள் பழைய ஜாம்பவான்கள். பிறகு என்ன ஆனது என்பதுதான் மீதி கதை.

சில்வஸ்டர் ஸ்டாலின், மெல் கிப்சன், ஜேசன் ஸ்டேதம், அர்னால்டு, கெல்லன் லட்ஸ், ஜெட் லீ, ஹாரிசன் ஃபோர்டு, கேல்ஸி க்ரேம்மர், டெர்ரி கிரேவ்ஸ் என காட்சிக்கு காட்சி கை தட்டலையும், விசிலையும் நிறுத்த முடியாத அளவிற்கு பிரம்மாண்ட ஹீரோக்களின் வருகை. சில்வஸ்டர் ஸ்டாலினின் கதை, திரைக்கதையாக நாம் பார்த்து பழகிய அதே ஆயுத கடத்தல் வில்லன், அதை அழிக்க கிளம்பும் வீரர்கள் குழு என்றாலும் ஆக்‌ஷன் பின்னனியில் சுவாரஸ்யமாக்கியிருக்கின்றனர்.

பிரம்மாண்ட ஹீரோக்கள் ஒன்று இரண்டு பேர் நடித்தாலே இயக்குனருக்கு கதையை கையாள்வதில் சற்றே கடினம் ஏற்படும். ஆனால் காட்சிக்கு காட்சி வந்து கொண்டே இருக்கும் பல பிரம்மாண்ட ஹீரோக்களை சரியான முறையில் பயன்படுத்தி அவர்களின் ஹீரோயிஸம் குறையாமல் கதையை நகர்த்திய இயக்குனர் பாட்ரிக் ஹக்ஸ்க்கு சபாஷ்!

இளம் வீரர்கள் தேர்வு ஊர் ஊராக சில்வஸ்டர் பயணம் என இடையில் சற்றே போர் அடிக்கிறது என்றாலும், தொடர்ந்து வரும் ஆக்‌ஷன் காட்சிகள் அதை மறக்க செய்து விடுகின்றன. கடைசி நாற்பத்தைந்து நிமிடங்களில் வரும் ஆக்‌ஷன் காட்சிகள் சீட்டு நுனிக்கு நம்மை தள்ளுகிறது. கிளைமேக்ஸில் பீட்டர் மென்ஸீஸின் கேமரா அபாரமாக சுழன்று காட்சி படுத்தியுள்ளது. ஆக்‌ஷன் கதைக்கேற்ற ப்ரையன் டைலரின் பின்னனி இசை அதிரடி.

அநியாயம் செய்தால் முடிவு மரணமே என டமால் டுமீல்களுக்கு இடையில் ஆக்‌ஷன் அதிரடி செய்து பட்டையைக் கிளப்புகிறது 'தி எக்ஸ்பாண்டபிள்ஸ் 3'.
இந்தியாவின் தொன்மையான மொழி தமிழே! - நாவலாசிரியர் பொன்னீலன்

 



இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் தொன்மையான மொழி தமிழே என அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனத் தலைவர் நாவலாசிரியர் பொன்னீலன் கூறினார்.

மதுரை காளவாசல் பகுதியில் தமுஎகச சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை கோரிய உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர் ஆற்றி உரை:

உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி சம்ஸ்கிருதம் என்பது சரியல்ல. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மொழி தாய் மொழியாக உள்ளது. ஆனால், சம்ஸ்கிருதம் எந்த மாநிலத்திலும் தாய் மொழியாக இல்லை. பேச்சு மொழியாக இல்லாததை உலகத் தாய் மொழி என்பது சரியல்ல. இந்தியாவின் தொன்மையான மொழிகளில் தமிழானது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.

ஆகவே, தமிழை ஆட்சி மொழியாக, நீதிமன்ற மொழியாக ஆலய மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற தமுஎகசவின் போராட்டம் வெற்றி பெறும். தமிழ் ஆட்சிமொழிக் கோரிக்கைக்கு கலை இலக்கிய பெருமன்றம் துணை நிற்கும் என்றார்.

பகுத்தறிவாளர் கழகத் தலைவர் நேரு, மூட்டா 2 ஆம் மண்டலப் பொருளாளர் பேராசிரியர் பெ.க.பெரியசாமி, அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலர் என்.முத்து அமுதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாரத மாதாவின் பாதமாக இருப்பது தமிழே! - தமிழண்ணல்
பாரத மாதாவின் பாதமாக இருப்பது தமிழ் மொழிதான் என தமிழறிஞர் தமிழண்ணல் கூறினார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை கோரி நடைபெற்ற உண்ணாவிரதத்தில் அவர் பேசியதாவது: தமிழ்த் தாத்தா உ.வே.சா., பரிதிமாற் கலைஞர் பெயர்களில் தமிழக அரசு விருது வழங்கி வருகிறது. அதே சமயத்தில், ஆரம்பக் கல்வியில் ஆங்கிலத்தைப் புகுத்திவருவது ஏற்புடையதல்ல.

தமிழகத்தில் தமிழைப் பாதுகாக்க திராவிட இயக்கங்கள் தவறிவிட்டன. தமிழை வளர்க்கும் தொலைநோக்குப் பார்வையுடைய தலைவர்கள் இல்லை. மாநில அரசு மொழிக் கொள்கையை தெளிவுபடுத்த வேண்டும்.

தாய் மொழிக் கல்வி மற்ற மாநிலங்களில் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பதை அறிய தமிழக அரசு தமுஎகச போன்ற அமைப்புகளை இணைத்து ஆய்வு செய்து, அந்த குழு பரிசீலனை அடிப்படையில் தமிழை அனைத்து நிலைகளிலும் கொண்டு வர வேண்டும்.

பாரத மாதாவின் பாதங்களாக தமிழ் உள்ளது. ஆனால், தமிழை நீதித் துறையில், நிர்வாகத் துறையில், உயர் கல்வியில் கொண்டுவருவதற்கு இன்னும் போராட வேண்டியுள்ளது.

தமிழ் மொழி எனும் தீபத்தை அணையாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்துக்கு உள்ளது என்றார்.

போராட்ட நோக்கை விளக்கி பேராசிரியர் அருணன் பேசியது: நம் நாட்டில் 40 சதவிகிதம் பேர்தான் இந்தி பேசுகிறார்கள். இந்தி தவிர, 21 மொழிகளுக்கான சம அந்தஸ்தை மத்தியில் ஆட்சியிலிருப்போர் தர மறுக்கிறார்கள். மொழி என்பது அவரவர் திறமையை வெளியே கொண்டுவரும் சாதனம். ஆகவே, அன்னிய மொழியில் தேர்வை எழுதினால் தனித் திறனை வெளிக்கொண்டு வர முடியாது. ஆகவே, மத்திய அரசு இந்தி அறிந்தோர் அந்த மொழியிலும், மற்றவர் ஆங்கிலத்திலும் தேர்வெழுத கூறுவது சரியானதல்ல.

தமிழகத்தில் தரமான கல்வியை அளிக்க அம்மா கல்விக்கூடத்தையும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்க வேண்டும் என்றார்.

உண்ணாவிரதத்துக்கு தலைமை வகித்து தமுஎகச மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் பேசியதாவது: தமிழைக் காக்க மொழிப் போர் நடத்தும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சமூகத்தின் மனசாட்சியான எழுத்தாளர்கள், கலைஞர்கள் மொழியைக் காக்க நடத்தும் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வது அவசியம் என்றார்.

மதுரை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் ரா.அண்ணாதுரை வாழ்த்துரையில், இடதுசாரிகளின் தொடர் முயற்சியாலே தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது. ஆனால், மக்களவையில் இந்தி, ஆங்கிலம் தவிர்த்து மற்ற மொழிகளில் பேச முடியாத நிலை உள்ளது என்றார்.

போராட்டத்தில் தமுஎகச மாநிலத் தலைவர்கள் எஸ்.ஏ.பெருமாள், என்.நன்மாறன், தேனி சீருடையான், ஆர்.நீலா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

புரட்சிக் கவிஞர் மன்றம் பி.வரதராசன், செந்தமிழ்க் கல்லூரி குருசாமி மற்றும் நந்தலாலா, நா.முத்துநிலவன், தெ.முத்து, மயிலை பாலு, மதுக்கூர் ராமலிங்கம், லெட்சுமணப் பெருமாள் ஆகியோர் வெவ்வேறு தலைப்புகளில் பேசினர். தப்பாட்டம், கவிதை, பாடல்கள் நிகழ்ச்சியும் நடைபெற்றன. தமுகஎகச மாவட்டத் தலைவர் ப.கவிதாகுமார் வரவேற்றார்.
தபால்தலை, ரூபாய் நோட்டில் விநாயகர்!

 



ஆகஸ்ட் 29-ம் தேதி விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட ஒவ்வொருவரும் தயாராகிக் கொண்டிருப்பீர்கள்.

ஆனால், இந்து மதம் பெரிதும் பரவியிருக்காத வெளிநாடுகளில் விநாயகரின் உருவம் பொறித்த தபால்தலை, ரூபாய் நோட்டுகள், நாணயங்களை வெளியிட்டுள்ளது ஆச்சரியமான செய்தி. இதுகுறித்து, மதுரை தபால் தலை சேகரிப்போர் சங்க உதவி தலைவர் ஜி. சக்திவடிவேல் கூறும்போது, விநாயகர் வழிபாடு தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் இருந்துள்ளது. இப்போதும் குறிப்பிட்ட சதவிகிதத்தினர் இந்துமத கடவுள்களை வழிபட்டு வருகின்றனர். நேபாளம், தாய்லாந்து மற்றும் லாவோஸ் நாடுகள் வெளியிட்ட தபால் தலையில் விநாயகர் உருவம் உள்ளது. இதில் லாவோஸ் என்பது, பர்மா, வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள சிறிய தீவு நாடாகும். சில நாடுகளின் ரூபாய் நோட்டுக்களிலும் விநாயகர் இடம்பிடித்துள்ளார்.

தாய்லாந்து நாட்டின் 10 பாட் நாணயத்தில் விநாயகர் உருவம் உள்ளது. அதேபோல, இந்தோனேசியாவில் 20,000 ரூபாய் தாளிலும் விநாயகர் படம் உள்ளது. சுமார் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீவுகளால் ஆன இந்தோனேசியா முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடாகும்.

அங்கு 2 சதவிகிதத்திற்கும் குறைவான மக்களே இந்து மதத்தை பின்பற்றுகிறார்கள். இருப்பினும், அந்நாட்டில் இந்துக்கள் அதிகம் வாழ்கிற பாலி தீவில், செல்வத்தின் அதிபதியாக விநாயகர் கருதப்படுகிறார். எனவே, இந்தோனேசிய அரசு விநாயகர் உருவம் பதித்த ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது.

சோழ மன்னர்களின் படையெடுப்பே காரணம்

லாவோஸ் நாட்டில் விநாயகருக்கு மட்டுமின்றி சரஸ்வதி, பிரம்மா, நாககன்னிக்கும் தபால்தலை வெளியிடப் பட்டுள்ளது. ராஜராஜசோழன், ராஜேந்திர சோழ மன்னர்களின் படையெடுப்புகளும், பிற்காலத்தில் வணிகத் தொடர்புகளுமே தெற்காசிய நாடுகளில் இந்து கலாச்சாரம் பரவக் காரணம்” என்றார். கே.கே.நகரில் வசிக்கும் ஜி.சக்திவடிவேல், ரோஜா மலர், காந்திஜி போன்ற படங்கள் இடம்பெற்ற நூற்றுக் கணக்கான தபால் தலைகளை சேகரித்து வைத்துள்ளார். இதுதவிர வெவ்வேறு நீள அகலங்களைக் கொண்ட தபால்தலைகள், வட்டம், நீள்வட்டம், அறுங்கோணம் வடிவ தபால்தலைகளை சேகரித்து வைத்துள்ளார். விதவிதமான அலங்கார கள்ளிச்செடிகளை வளர்ப்பது, வித்தியாசமான மது பாட்டில்களை சேகரிப்பது போன்றவற்றிலும் இவருக்கு ஆர்வம் அதிகம். அவரது தொடர்பு எண்: 98421 24515

வாபஸ் பெறப்பட்ட விநாயகர்!

இந்தோனேசியா உருவ வழிபாட்டை கடுமையாக எதிர்க்கும் மக்கள் அதிகம் கொண்டநாடு என்பதால், அங்கு விநாயகர் உருவத்துடன் ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் பின்னாட்களில் அரசே அவற்றை திரும்பப் பெற்றுவிட்டது. எனவே, விநாயகர் படம் பொறித்த இந்தோனேசிய ரூபாய் நோட்டு அரிய பொக்கிஷமாகி விட்டது
என்னடா எந்திருச்சு வந்துட்டான்னு நினைக்கிறாங்க: இயக்குநர் பார்த்திபன் ஓபன் டாக்


 




'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தோட வெற்றி, வாழ்த்து குவியல் ஆகியவற்றை எல்லாம் ஓரமாக வைத்து விட்டு வீதி இறங்கி திருட்டி வி.சி.டிக்கு எதிராக போராடி வருகிறார் இயக்குநர் பார்த்திபன்.

அவரிடம் பேசியதில் இருந்து..

'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பை பார்த்து என்ன நினைச்சீங்க?

அழுகுற அளவிற்கு பீல் பண்ணினேன். ஜனங்க தியேட்டர்ல படத்தை எப்படி ரசிக்கிறாங்கனு பார்க்க ஒரு வாரம் ஆயிடுச்சு. எஸ்கேப் தியேட்டர்ல நேற்று தான் போய் பார்த்தேன். முன்னாடி எல்லாம் போய் பார்க்குறப்போ, பார்த்தா சிரிப்பாங்க அவ்வளவு தான். நேற்று இடைவேளையின் போது எல்லா பெண்களும் என்னைப் பாத்துட்டு கத்துறாங்க. ஆர்யாவை பார்த்து எப்படி கத்துவாங்களோ அப்படி கத்தினாங்க. அதை அந்த கதையோட வெற்றியாக தான் பார்க்கிறேன். மக்களோட ரசனை மாறியிருப்பதற்கான வெற்றி. இப்பல்லாம் சந்தோஷம் என்பது கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. இந்தப் படத்தை நிறைய திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப் போறேன். நிறைய பரிசுகளை தள்ளிட்டு வரும் அப்படிங்கிறது இப்போதைய கனவு.

இதோட தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் எடுக்கும் திட்டம் இருக்கிறதா?

படத்தோட பெயர் 'உப்புமா கம்பெனி'. கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தோட பார்ட் 2-ஆக இயக்க தீர்மானித்திருக்கிறேன். இப்போதைக்கு தலைப்பு மட்டும் முடிவாகி இருக்கிறது. இன்னும் கதை எதுவுமே நான் தீர்மானிக்கவில்லை.

'அஞ்சான்' படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு, விளம்பரங்கள் ஆகியவற்றிற்கு மத்தியில் நமது படத்தை வெளியிடலாம் என்று எதை நம்பி முடிவு செய்தீர்கள்?

பல சமயம் எனது உதவியாளர்கள்கிட்ட பேசும் போது, நமக்கு ஓ.கே சார் ரசிகர்கள் இதை ரசிப்பாங்களானு கேட்பாங்க. அதாவது இவங்களை விட ரசிகர்கள் மட்டமானவங்க முட்டாள்னு முடிவு பண்ணிப்பாங்க. நான் என்ன முடிவு பண்ணுவேன்னா நானும், ரசிகனும் ஒண்ணு தான். என்னை மாதிரி தான் ரசிகர்களும் அப்டேட் ஆயிட்டே இருக்காங்கனு நினைக்கிறேன். என்ன தான் 'அஞ்சான்' வந்தால் கூட, என்னை மாதிரியான ரசிகர்கள் 'கோலி சோடா' மாதிரியான படத்துக்கு போவோம். அதோட சதவீதம் ரொம்ப கம்மி. புதிய முயற்சிகள் எங்கேயாவது வந்துச்சுன்னா தேடிப்போய் பார்ப்போம். 'அஞ்சான்' போனோம் டிக்கெட் கிடைக்கலைனு ஒரு கூட்டம் இருக்கு. 'அஞ்சான்'க்கு போனா கூட்டம் ஜாஸ்தியா இருக்குமோ அப்படினு நினைக்கிற ஒரு கூட்டம் இருக்கு. இப்படி 5, 5% சேர்ந்தாலே 30% வந்துரும். 3 நாட்களுக்கு இவ்வளவு தான் வருவாங்கனு எனக்கு தெரியும்.

இதைவிட கொடுமை ஐநாக்ஸ், சத்யம் உள்ளிட்ட திரையரங்குகளில் எனக்கு ஒரு ஷோ தான் கொடுத்தாங்க. ஏ.வி.எம் ராஜேஸ்வரி திரையரங்கில் கேட்டேன். "எப்படி.. நீங்க தியேட்டர நிரப்புவீங்க"னு அதோட முதலாளி சொன்னார். அதை எப்படி முன்கூட்டியே சொல்ல முடியும்? எனக்கு இந்தப்படம் நிரப்பும் அப்படிங்கிற நம்பிக்கை இருந்தது. முதல்ல கமலா தியேட்டர்ல எனக்கு ஒரு ஷோ கொடுங்கனு கேட்டேன். அப்போ கொடுக்கல. இப்போ தியேட்டரே கொடுத்திருக்காங்க. மாயாஜால் தியேட்டர்ல முதல்ல 4 ஷோ இருந்தது, இப்போ 27 ஷோ ஓடுது.

படத்துல விஷயம் இருக்குதா இல்லயா.. அது தான் முக்கியம். என்னுடைய கதையில் எனக்கு யாருமே செய்யாத முயற்சினு ஒரு நம்பிக்கை இருந்தது. என்கிட்ட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் "100% ரிஸ்க்கான கதை. ரசிகர்கள்கிட்ட கொடுத்து ஜெயிச்சுருக்கீங்க"னு சொன்னார். எனக்கு 25 வருஷமா என் மீதான நம்பிக்கை அப்படியே தான் இருக்கு. 'அபூர்வ சகோதரர்கள்' வரும்போது தான் என்னுடைய 'புதிய பாதை' படத்தை ரிலீஸ் பண்ணினேன். தைரியமா ரிலீஸ் பண்ணினேன். மக்கள் எனக்கு வெற்றியை கொடுத்திருக்கிறார்கள்.

இந்தளவிற்கு வரவேற்பு 'புதிய பாதை' படத்திற்கு கிடைத்ததா?

'புதிய பாதை' ரிலீஸ் பண்ணும் போது எல்லாம் இந்தளவிற்கு டாக் இல்லை. ஏன்னா, இப்போ என் மீது உள்ள ப்ளஸ்ஸை விட மைனஸ் ஜாஸ்தி. இதுக்கு முன்னாடி 'குடைக்குள் மழை'னு ஒரு சொன்னாருப்பா, புரியல அப்படினு ஒரு கூட்டம் இருக்கும். அவருக்கு என்னங்க, யாருக்குமே புரியாத மாதிரி ஒரு படம் எடுத்துட்டு இருப்பார்னு சொல்லுவாங்க. இந்த படம் ரிலீஸூக்கு முன்னாடி கூட பேசுனவங்க இருக்காங்க. இப்பக்கூட ஏ, பி, சி சென்டர்களைப் பொறுத்தவரை, சி சென்டர்களில் இந்தப் படம் புரியல. க்ளைமேக்ஸ்ல ஒண்ணுமே சொல்லாம விட்டுட்டார்னு சொல்றாங்க.

ரசிகர்களும் அடுத்த கட்டத்திற்கு போயிருக்காங்க. இன்றைக்கு இருக்குற இளைஞர்கள் என்னை தலைல தூக்கி வைச்சுட்டு கொண்டாடுகிறார்கள்.

எப்போதுமே தனிமையில் இருக்கீங்க. எப்படி இந்தளவிற்கு ஒரு கதை பண்ணி பெரிசா திரும்பவும் வரணும் முடிவு பண்ணீங்க?

தனிமைக்குள் தள்ளப்பட்ட உடனே, என்னை நேசிப்பது நான் மட்டும் தான் அப்படினு தெரிஞ்சுக்கிட்டேன். எனக்கு யாருமே இல்ல. நான் மட்டும் தான். நான் சொல்றது சினிமா உலகத்தில் கூட. இப்போ கூட, சினிமா உலகில் என்னை எல்லாரும் இப்போ பாராட்டுறாங்கன்னா அதற்கு பின்னாடி ஒரு பெரிய ஆச்சர்யம் இருக்கிறது. செத்துப் போயிட்டான்னு நினைச்சோம். என்னடா எந்திருச்சு வந்துட்டான்னு நினைக்கிறாங்க. நான் மட்டும் தான், நான் உயிரோட இருக்கேன்னு நினைச்சேன். மற்றவங்க எல்லாரும், இவன் அவ்வளவு தான் இவன் காலினு நினைச்சுட்டாங்க. இப்போ நான் உயிரோடு வந்த உடனே, அவங்களுக்கு பெரிய ஷாக்காக இருக்கிறது. இவங்க ஷாக்காகிறதை பார்த்தால், எனக்கு பயமா இருக்கு.

'குறும்படம் எடுக்குற குரங்கு பசங்களா..'னு வசனம் வைத்து குறும்பட இயக்குநர்களை சாடியிருப்பதற்கு என்ன காரணம்?

58 வயசு கிழவனுக்கு, இப்போ உள்ள இயக்குநர்கள் மீது பொறாமை, அதனால் தான் 'குறும்படம் எடுக்குற குரங்கு பசங்களா'னு அவரோட பார்வையில் இருந்து தான் அந்த வசனத்தை வைத்தேன். என்னுடைய பார்வையில் கிடையாது. கார்த்திக் சுப்புராஜ் படத்தை பாராட்டிவிட்டு, அவரோட வருத்தத்தை கூட சொன்னார். 'பீட்சா'வுக்கு முன்னால கார்த்தி சுப்புராஜை பாராட்டிய முதல் நாள் நான் தான். இந்த 'ஜிகர்தண்டா' கதை நான் நடிக்க வேண்டியது. சிம்ஹா ரோல் நான் நடிக்க வேண்டியது, வேறு வேறு காரணங்களால் அவர் 'பீட்சா' படம் பண்ணினார். குறும்படம் பண்ணிட்டு, படம் இயக்குற இளம் இயக்குநர்கள் மேலே எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை உண்டு.

இந்தப் படத்திற்கு திரையுலகில் இருந்து கிடைத்த வரவேற்பு என்ன? விஜய் வாழ்த்து தெரிவித்ததாக செய்திகள் வலம் வருதே..

அது தெரியல. விஜய் வாழ்த்து சொல்லுவார்னு நம்புறேன். இயக்குநர் மணிரத்னம் "பெரிசா சாதிச்சுட்டீங்க. இந்த இளைஞர்களை கையில பிடிக்கிறது பெரிய விஷயம். அதை நீங்க பண்ணிட்டீங்க"ன்னார். இயக்குநர் பாரதிராஜா "25 வருஷத்தை ஒரே படத்துல தாண்டியிருக்க. அடுத்த 25 வருஷத்துக்கு இந்த ஒரு படம் போதுமானது", இயக்குநர் பாக்யராஜ் "படம் பாத்துட்டு பேசுவேன். ஆனால் என்னால் முடியவில்லை. அதனால் எழுதிக் கொடுக்கிறேன்", இயக்குநர் நலன் குமாரசாமி "உங்களைத் தொட இன்னும் 10 வருஷம் ஆகும் போலயே. இப்படியே போயிட்டு இருந்தீங்கன்னா நான் எப்போ உங்களைத் தொடுவேன்", இயக்குநர் சாந்தகுமார், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இப்படி பலர் அவங்களோட வாழ்த்தை தெரிவிச்சாங்க.

தினமும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை அதிகரிச்சுக்கிட்டே இருக்கு. ஒரு பெண்ணிற்கு அப்பாவாக உங்களுடைய பார்வை என்பது என்ன?

அழுகை தான் வருது. 3 வயசு குழந்தையை ஒருத்தன் ரேப் பண்றான். அவனுக்கு அந்த எண்ணம் எப்படி தோணும்? ஒரு குழந்தையைப் பார்த்தால் குழந்தையாக தான் தோணனும். பெண்ணைப் பெற்றிருக்கிறேன் என்பதால் மட்டுமே இதை நான் சொல்லவில்லை. என்னோட பெண் ரொம்ப தைரியமானவர். அவங்களுக்கு நான் ரொம்ப சுதந்திரம் கொடுத்திருக்கிறேன். இரவு 7 மணி ஆச்சுன்னாலே "எங்கம்மா இருக்கே?"னு போன் பண்ணுவேன். அதுவும் பேப்பரைப் பார்க்க பார்க்க பயம் இன்னும் அதிகமாகிட்டே போகுது.




தமிழில் வெளிவரும் 'ஐ' படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில், ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாசனேகர் கலந்துகொள்கிறார்.

அதேபோல், தெலுங்குப் பதிப்புக்கான 'ஐ' இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் ஜாக்கி சான் பங்கேற்கிறார். இதை, படத் தயாரிப்பு தரப்பு 'தி இந்து' தமிழ் நாளிதழிடம் உறுதி செய்தது.

தீபாவளிக்கு திரைக்கு வரும் 'ஐ' திரைப்படத்தின் படத்தின் இசை வெளியீட்டை செப்டம்பர் 15-ஆம் தேதி சென்னையில் நடத்த உள்ளனர்.

விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவானது 'ஐ'. ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

இரண்டு வருடங்களாக தயாரிப்பில் இருக்கும் 'ஐ' திரைப்படத்திற்காக, இயக்குநர் ஷங்கர் கடினமாக உழைத்துள்ளார். விக்ரம் இப்படத்திற்காக தன் உடலமைப்பை மாற்றி, எடையை 50 கிலோ வரை குறைத்தும், 130 கிலோ வரை கூட்டியும் மெனக்கெட்டுள்ளார். படத்தின் பெரும்பகுதி சீனாவில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தை 15 மொழிகளில், 15,000 திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டிருக்கின்றனர்.

ரசிகர்கள் இப்படத்தின் வெளியீடு குறித்து மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இருக்க, இதுவரை வெளியீட்டு தேதியை அறிவிக்காமல் இருந்தனர்.

இப்போது இப்படத்தின் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளார். தீபாவளிக்கு திரைவிருந்தாக வருகிறது 'ஐ'. படத்தின் இசை வெளியீட்டை செப்டம்பர் 15ம் தேதி அன்று பிரம்மாண்டமான விழாவாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். விழா, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கலாம்.

சென்னையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாசனேகர் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரூ 10 லட்சம் செலுத்திவிட்டு கமலின் பாபநாசம் படப்பிடிப்பைத் தொடங்கினார் இயக்குநர்!

 


நெல்லை: எர்ணாகுளம் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ரூ 10 லட்சம் காப்புத் தொகை செலுத்திவிட்டு கமலின் பாபநாசம் படப்பிடிப்பை ஆரம்பித்தார் இயக்குநர் ஜீத்து ஜோசப். மோகன் லால் - மீனா நடித்து மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் த்ரிஷ்யம். இந்தப் படம் தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டது. இப்போது தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் நாயகனாக கமல் ஹாஸன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக, பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நடிக்கிறார் கவுதமி.

இந்த நிலையில் படத்தின் கதை தன்னுடையது என்றும், மற்ற மொழிகளில் ரீமேக் செய்த போது தனக்கு விவரம் தெரியவில்லை. எனவே தமிழ் ரீமேக்குக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டு எர்ணாகுளம் நீதிமன்றத்தில் எழுத்தாளர் சதீஷ் பால் மனுத்தாக்கல் செய்தார். சதீஷ் பால் நாவலைப் படித்துவிட்டு த்ரிஷ்யம் படத்தைப் பார்த்த நீதிபதி, இரண்டும் ஒரே மாதிரி இருப்பதால், காப்புரிமை சட்டப்படி குற்றமாகும் என்கு கூறி தமிழ் ரீமேக்குக்கு தடை விதித்தார். படத்தை எடுத்தே ஆக வேண்டும் என்றால் ரூ 10 லட்சத்தை காப்புத் தொகையாகக் கட்டிவிட்டு தொடங்கலாம் என்று படத்தின் இயக்குநர் ஜீத்து ஜோசப்புக்கு உத்தரவிட்டார். இதனை ஏற்று ரூ 10 லட்சத்தை நீதிமன்றத்தில் கட்டிவிட்டு படப்பிடிப்புக்குக் கிளம்பிவிட்டனர் கமல் மற்றும் படக்குழுவினர். திருநெல்வேலியின் எழில் மிகுந்த பகுதிகளில் பாபநாசம் படப்பிடிப்பு நடக்கிறது.

Tuesday, August 26, 2014

தோல்வி அடைந்தாலும் தொகுதி மக்களை சந்திப்பது திமுக பண்பு: முன்னாள் அமைச்சர் ஆ.ராசா

 
 
சத்தியமங்கலம்,ஆக 26:
மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்தாலும் தொகுதி மக்களை சந்திக்க வருவேன் என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

நீலகிரி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்விஅடைந்த முன்னாள் அமைச்சர் ஆ.ராசா சத்தியமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். முன்னதாக,சத்தியமங்கலம் பழைய தினசரி மார்க்கெட் வளாகத்தில் திமுக கொடி ஏற்றிவைத்து ஆ.ராசா பேசியது:
திமுக வேட்பாளர்கள் தோற்றாலும் வெற்றி பெற்றாலும் மக்களைச் சந்திப்பது தான் திமுகவின் அடையாளம். நீலகிரி அதிமுக மக்களவை உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன் இதுவரை மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க வரவில்லை என அனைத்து தரப்பு மக்களும் குற்றஞ்சாட்டுகின்றனர். டெல்லி நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தபோதிலும், இடைப்பட்ட காலங்களில் நீலகிரி மக்களை சந்திப்பேன். மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை, புன்செய் புளியம்பட்டி, சத்தியமங்கலம் மக்களை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளேன். நாங்கள் தோல்வி அடைந்தாலும் வீட்டு நாயை போன்று  நன்றியுடன் மக்களை சந்திப்போம் என்றார். இதில் முன்னாள் எம்எல்ஏ, எல்.பி.தர்மலிங்கம்,திமுக நகர செயலாளர் எஸ்.ஆர்.வேலுச்சாமி, சத்தி ஒன்றிய திமுக செயலாளர் என்.சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவனையின் 130 வது ஆண்டு நிறைவு விழா.எம்.பி.க்கள்,எம்.எல்.ஏ பங்கேற்பு.


மேட்டுப்பாளையம்.ஆகஸ்ட்.26.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை துவங்கப்பட்டு 130 ஆண்டுகள் நிறைவடைந்து 131 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.கோவை மாவட்டத்தில் சுதந்திரத்திற்கு முன்பு துவங்கப்பட்ட மருத்துவமனைகளில் இதுவும் ஒன்று.மிகவும் பழமை வாய்ந்த இந்த மருத்துவமனையின் ஆண்டு விழா மற்றும் மருத்துவமனை தின நடந்தது..விழாவிற்கு மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ.ஓ.கே.சின்னராஜ் தலைமை தாங்கினார்..கோவை சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் எம்.தாவூத் பாத்திமா முன்னிலை வகித்தார். .இரத்த வங்கி மருத்துவர் டி.,கே.செல்வராஜ் வரவேற்று பேசினார்..இளநிலை நிர்வாக அலுவலர் எம்.ராஜு அறிமுக உரை ஆற்றினார்..தலைமை மருத்துவர் எஸ்.சேரலாதன் ஆண்டறிக்கை வாசித்தார்.
 
விழாவில் நீலகிரி தொகுதி எம்.பி.சி.கோபாலகிருஷ்ணன்,மாநிலங்களை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ்,ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு விழா பேருரை ஆற்றினார்கள்.
 
விழாவில் 130 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மருத்துவமனைக்கு இலவசமாக இடம் வழங்கிய ராமே கவுடர்,மற்றும் கணபதி கவுடர் குடும்ப வாரிசுகளான ஆர்.பழனிசாமி,ராமலிங்கம்,துளசி நிர்மலா ராமமூர்த்தி,ஜெயா நந்தகுமார்,சுலோச்சனா தினகரன் உட்பட பலருக்கு மருத்துவமனை சார்பில் பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ,காரமடை லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் கே.பொன்னுசாமி,மேட்டுப்பாளையம் அனைத்து இந்து சமுதாய சங்க நந்தவன தலைவர்அருந்தகை அண்ணல், சி.பொன்னுசாமிகவுண்டர்,,ரோட்டரி சங்க தலைவர் டாக்டர் மு.இஸ்மாயில்,அரிமா சங்க தலைவர் எஸ்.ஜெயக்குமார்,நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் என்,வெங்கட்ராமன்,டாக்டர்கள் எஸ்.ரவிச்சந்திரன்,குருசாமி,கே.வம்சி,முன்னாள் அரிமா சங்க மாவட்ட ஆளுநர் பி.நவ்ரத்தன் மல்,நோயாளிகள் நலசங்க உறுப்பினர் வக்கீல் சாந்தமூர்தி,உட்பட பலர் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார்கள்..தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டம் குறித்து டாக்டர் பி.கார்த்திகேயன் விளக்கி பேசினார்.விழாவில்  மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்கம் சார்பில் தலைவர் டாக்டர் மு.இஸ்மாயில்,செயலாளர் மதன்குமார் ஆகியோர் அரசு மருத்துவமனை இரத்தவங்கிக்கு  உபகரணம் வாங்க ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை தலைமை மருத்துவர் எஸ்.சேரலாதனிடம்  வழங்கினார்கள்..நிகழ்ச்சியில்மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் கணேசன்,நகரமன்ற துணைத்தலைவர் ரமா செல்வி, மேட்டுப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் ஏ.வான்மதி சேட்,வக்கீல் ஆர்.சீனிவாசன்,அன்னபூர்ணா ஆர்.கிருஷ்ணன்,அரிமா சங்க தலைவர் எஸ்.ஜெயக்குமார்,கே.பி.எஸ்.மருத்துவமனை நிர்வாக இயக்குனர் ரவிக்குமார்,மகேஸ்வரி,சூரியா மருத்துவமனை டாக்டர் பி. சுதாகர்,சாரதா டெர்ரி நிறுவன  காசாளர் ராமானுஜம், தீப்பொறி சாகுல் அமீது,ராஜா முகமது,,உட்பட நகரமன்ற உறுப்பினர்கள்,மருத்துவர்கள்,செவிலியர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆய்வக நுட்புனர் கே.ராஜேந்திரன் நன்றி கூறினார்.



புஞ்சைபுளியம்பட்டி,ஊத்துக்குளி அம்மன் கோவிலில்,ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு,சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.மீனாட்சி அம்மன் அலங்காரத்தில்,பட்டு உடுத்தி,பச்சை கிளியுடன்,ஊத்துக்குளி அம்மன் அருள் பாலித்தார்.  



பவானிசாகர் அருகே தொட்டம்பாளையத்தில் இன்று நடைபெறும் இடம்புரி விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று பவானி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடம் எடுத்து வந்த பக்தர்கள்.

Saturday, August 23, 2014

புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழா முதல் கட்ட ஆலோசனை கூட்டம்


புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் சார்பில் 3 ஆம் ஆண்டு புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழா வருகின்ற அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இந்த ஆண்டும் புத்தக திருவிழாவை இன்னும் சிறப்பாக நடத்துவது குறித்து முதல் கட்ட ஆலோசனை கூட்டம் நாளை (24-08-2014) காலை 10 மணியளவில் மாதம்பாளையம் ரோட்டில் உள்ள விடியல் கம்ப்யூட்டர் எஜுகேசன் சென்டரில் நடைபெற உள்ளது. அது சமயம் புத்தக திருவிழாவை சிறப்பாக நடத்த தங்கள் மேலான கருத்துகளை வழங்க  புத்தக ஆர்வலர்களையும், சமூக ஆர்வலர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.  தங்கள் கருத்துகளை விடியல் செயலாளர்  எஸ்.ஜெயகாந்தன் - 98427 80240 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம். நன்றி.

பவானிசாகர் வனபகுதியில் அமைந்துள்ள சித்தன்குட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு இலவச வாகன வசதி








பவானிசாகர் வனபகுதியில் அமைந்துள்ள சித்தன்குட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.

புன்செய் புளியம்பட்டியை அடுத்துள்ள பவானிசாகர் அடர்ந்த வனத்தின் உள்ளே  பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதியில் அமைந்துள்ளது. சித்தன்குட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இங்கு மொத்தம் 90 மாணவ மாணவியர்கள் பயின்று வருகிறார்கள். இவர்களில் 40 இக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் அடர்ந்த வனத்தின் உள்ளே அமைந்துள்ள வால்கரடு மற்றும் பவானிசாகர் நீர்பிடிப்பு பகுதியான கண்ராயண் மொக்கை ஆகிய இடங்களில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் நடந்தும், பரிசல் மூலமாகவும் சித்தன்குட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் பயின்று வருகிறார்கள். சரியான வாகன வசதி இல்லாத காரணத்தால் மாணவ மாணவியர்களின் வருகை வெகுவாக குறைந்து வருகிறது. மேலும் நீண்ட தூரம் நடந்து வருவதால் மாணவர்கள் மிகவும் சோர்வுடன் காணப்பட்டனர். மழை காலங்களில் பரிசல்களை இயக்க முடியாததால் மாணவர்கள் பள்ளிக்கு வர முடியவில்லை. மேலும் அடிக்கடி யானை உள்ளிட்ட காட்டு விலங்குகளின் நடமாட்டம் காரணமாக மாணவர்கள் அச்சத்துடனே பள்ளிக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது.

இதை கருத்தில் கொண்டு பள்ளி நிர்வாகம் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் இலவச வாகன வசதி ஏற்படுத்தி தந்துள்ளது. இதற்கான தொடக்க விழாவில் ஈரோடு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம் கலந்து கொண்டு இலவச போக்குவரத்து வசதியை துவக்கி வைத்தார். பவானிசாகர் ஒன்றிய குழு தலைவர் வி.ஏ.பழனிசாமி, ஒன்றிய குழு உறுப்பினர் சோமசுந்தரம், உதவி தொடக்க கல்வி அலுவலர் விஜயராணி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் பிளாரன்ஸ் செல்வகனி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் நந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து தலைமை ஆசிரியர் ரமாதேவி கூறியதாவது, அடர்ந்த வனம், காட்டு விலங்குகள், போதிய வாகன வசதி இல்லாத காரணத்தால் இதுவரை மாணவ மாணவியர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். தற்போது இலவச வாகன வசதி மூலம் மாணவ மாணவியர்கள் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வருகின்றனர். அவர்களின் கற்றல் திறனும், வருகை பதிவும் நிச்சியம் உயரும். அடுத்த கல்வி ஆண்டில் மேலும் புதிய மாணவ மாணவியர்கள் சேர்கை அதிகரிக்கும். இந்த இலவச வாகன வசதி பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது என்றார்.

லிங்கா படப்பிடிப்புத் தளத்தில் தனது 40வது ஆண்டைக் கொண்டாடிய ரஜினி!




ஷிமோகா: நடிகர் ரஜினிகாந்த் திரையுலகுக்கு வந்து 40 ஆண்டுகளானதை, லிங்கா படப்பிடிப்புத் தளத்தில் கேக் வெட்டிக் கொண்டாடினார். கடந்த 1975-ம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் மூலம் நடிகராக அறிமுகமானார் ரஜினி.

தொடர்ந்து அவர் முதல் நிலை நடிகராகவே தமிழ் சினிமாவில் திகழ்கிறார். இந்திய அளவில் அவரை அனைத்து மொழி திரைத்துறையினரும் கொண்டாடுகிறார்கள். அவரது படங்களுக்கு உலக அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. திரையுலக வாழ்க்கையில் 40-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ரஜினிக்கு லிங்கா படக்குழுவினர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இதைக் கொண்டாடும் வகையில் லிங்கா படப்பிடிப்புத் தளத்துக்கு பெரிய கேக் வரவழைக்கப்பட்டது.

அதை ரஜினி வெட்டி, படக்குழுவினருக்கு ஊட்டினார். ரஜினிக்கு வாழ்த்துச் சொல்லி, இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் கேக் ஊட்டினார். நடிகர்கள் விஜயகுமார், நடிகை சோனாக்ஷி சின்ஹா, தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், நடிகரும் இயக்குநருமான ஆர் சுந்தரராஜன் ஆகியோர் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழில் பட தலைப்பு வைக்க கேட்பவர்கள் 'ஐ லவ் யூ' சொல்லி காதலை வெளிப்படுத்துவது ஏன்? கமல் காட்டம்



சென்னை: சினிமா கூற வரும் கருத்தை கேட்காமல் அதன் வாயை மூடுவது பாசிசம் என்றும், தமிழிலில் பட தலைப்பு வைக்க கேட்போர் நிஜத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் உலக நாயகன் கமல்ஹாசன் தெரிவித்தார். கமல்ஹாசன் உலகதரம் வாய்ந்த தமிழ் படைப்பாளி, கலைஞர். ஆனால் இவரது திரைப்படங்கள் வெளியாகும்போதெல்லாம், தமிழகத்தில் எத்தனையோ தடைகளை அவர் எதிர்கொள்ள வேண்டிவந்தது. தங்கள் மண்ணின் சிறந்த கலைஞர்களை தலைக்கு மேல் தூக்கி வைத்து கொண்டாடுவது உலக வழக்கம். ஆனால் தமிழ்நாட்டிலோ தலைக்குமேல் தூக்காவிட்டாலும் பரவாயில்லை, காலுக்கு கீழ் போட்டு மிதிப்பதில்தான் அதிகம் பேருக்கு ஆர்வம் அதிகம்.

மும்பை எக்ஸ்பிரஸ் என்று நான் தலைப்பு வைத்ததற்கு, சிலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதில் ஆங்கில வார்த்தை உள்ளதாம். எனக்கு தெரிந்து, மும்பை எக்ஸ்பிரஸ் என்பதற்கு தமிழில் வார்த்தையே கிடையாது. ஆங்கில கலப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள், தங்களது காதலிகளிடம் 'ஐ லவ் யூ' என்பதை தமிழில் கூறியிருக்கமாட்டார்கள். நன்றியை பலரும் தமிழிலில் கூறுவது கிடையாதே. ஒரு வண்டி கிடைத்துவிட்டது என்பதற்காக அதன்மீது இலவச சவாரி செய்வது மடத்தனமானது.

ஹேராம் திரைப்படத்தின் போஸ்டரை பார்த்துவிட்டு, படம் ரிலீஸ் ஆகும் முன்பே, ஒரு மூத்த அரசியல் தலைவர் அந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். படம் மகாத்மா காந்திக்கு எதிரானதாக இருப்பதாக போஸ்டரை வைத்தே முடிவு செய்தார் அவர். சண்டியர் என்ற பெயரில் ஒரு படத்தை வெளியிட முயன்றபோது, கலாசாரம், அரசியல் ரீதியாக எதிர்ப்பு வந்து படத்தின் பெயரை மாற்ற வேண்டியதாயிற்று. ஆனால், சமீபத்தில் சண்டியர் என்ற பெயரில் ஒரு தமிழ் படம் வெளியாகியுள்ளது.

விஸ்வரூபம் திரைப்படத்தை எதிர்த்தவர்களுக்கு, முன்கூட்டியே திரையிட்டு காட்டியபோது, அவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்றுதான் கருதினேன். ஆனால் படத்தை மறுக்கும் உந்தப்பட்ட எண்ணத்திலேயே அவர்கள் இருந்தனர். நான் இப்போதும் விஸ்வரூபம் திரைப்படத்தில் எந்த தவறும் இல்லை என்றுதான் கூறுவேன். அதில் இந்திய முஸ்லிம்கள் குறித்து எந்த குற்றச்சாட்டையும் நான் கூறவில்லை. நான் தவறு செய்திருந்தால் அதை திருத்திக்கொள்வேன், சரி என்றுபட்டால் அதிலே உறுதியாக இருப்பேன்.

எல்லா மதத்திலுமே, சிலர் விவரம் குறைந்தவர்களாக இருப்பார்கள், சிலர் விவரமானவர்களாகும், நடுநிலையோடும் இருப்பார்கள். சினிமா என்பது ஒரு குரல். அந்த குரலை ஒலிக்கவிடாமல் தடுப்பதும் ஒரு வகையில் பாசிசம்தான். கலையை மலர விடாத அனைவரையும்தான் நான் குற்றம்சாட்டுவேன்.

மக்கள் சினிமாவை மிகவும் சீரியசான ஊடகமாக பார்ப்பதால்தான், படங்களுக்கு எதிராக சர்ச்சைகள் வெடிப்பதாக கருதிவிட முடியாது. சில அரசியல்வாதிகள்தான் சினிமாவுக்கு இப்படி முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் சினிமாவை மட்டுமல்ல, அரசியல்வாதிகளையுமே மக்கள் மிகவும் சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை. இவ்வாறு கமல் ஹாசன் கூறியுள்ளார்.







புன்செய் புளியம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகள் வருகின்ற செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி ஏலம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நகராட்சி ஆணையாளர் கே.சரவணகுமார்(பொ) தலைமையில் நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் சந்தேகங்களை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Thursday, August 21, 2014

பவானி சங்கமேஸ்வரர் கோவில் காணிக்கை ரூ. 5 லட்சம்

 



பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 5 லட்சம் பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.

இரண்டு மாதங்களுக்குப் பின், கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த 19 உண்டியல்கள் துணை ஆணையர் பழனிகுமார், உதவி ஆணையர் சபர்மதி முன்னிலையில் திறக்கப்பட்டு பவானி அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள், மனவளக்கலை மன்றத்தினர், கோவில் ஊழியர்களைக் கொண்டு எண்ணப்பட்டது.

இதில், சங்கமேஸ்வரர் கோவில் உண்டியல்களில் ரூ. 4 லட்சத்து 54 ஆயிரத்து 50-ம், யானை பராமரிப்புக்கு ரூ. 16 ஆயிரத்து 111-ம், பசு பராமரிப்புக்கு ரூ. 16 ஆயிரத்து 761-ம், பழனியாண்டவர் கோவில் உண்டியலில் ரூ. 12 ஆயிரத்து 525-ம், காசி விஸ்வநாதர் கோவில் உண்டியலில் ரூ. 3 ஆயிரத்து 446-ம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

மேலும், தங்கம் 25.50 மில்லி கிராம், வெள்ளி 90.10 மில்லி கிராம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

மொத்தம் ரூ. 5 லட்சத்து 2 ஆயிரத்து 893 காணிக்கை இருந்தது. கண்காணிப்பாளர் பாலசுந்தரி, என்எஸ்எஸ் மாவட்டத் தொடர்பு அலுவலர் பி.கார்த்திகேயன், பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சந்திரன், ஆசிரியர்கள் சீனிவாசன், சிவகுமார் மேற்பார்வையில் காணிக்கைகள் எண்ணப்பட்டன.
திரைப்படப் பாடல்கள் எழுதுவது கடினம் - திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான அறிவுமதி


திரைப்படப் பாடல்கள் எழுதுவது கடினம் என்று திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான அறிவுமதி பேசினார்.

ஈரோடு, செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ் மன்றம், நுண்கலை மன்றம் ஆகியவற்றின் 2014-15-ஆம் கல்வி ஆண்டுக்கான நடவடிக்கைகள் துவக்க விழாவில் அவர் பேசியதாவது:

கவிதை எழுதுவது எளிது. ஆனால் திரைப்படப் பாடல்கள் எழுதுவதுதான் கடினம். திரைப்படப் பாடல் எழுதவேண்டும் என்றால் பல்வேறு ஊர்களுக்குப் பயணம் செய்து பல்வேறு மக்களின் வாழ்க்கை முறையை உள்வாங்கிக் கொண்டு எழுதவேண்டும். அப்போதுதான் பாடல் சிறப்பானதாக இருக்கும் என்றார்.

தொடர்ந்து, மரபுக் கவிதைகளுக்கும் ஹைக்கூ கவிதைகளுக்கும் உள்ள வேறுபாடுகள் மற்றும் ஹைக்கூ கவிதைகள் எழுதுவது குறித்தும் அவர் பயிற்சி அளித்தார்.

விழாவுக்கு, கல்லூரிச் செயலாளர் எஸ்.சிவானந்தன் தலைமை வகித்தார்.

தாளாளர் இரா.மோகன்ராஜ், முதல்வர் (பொ) எல்.பூபதி, தமிழ் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் மு.தங்கவேல், ப.அகிலமுதன், நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் ப.கருணாகரன், இரா.சித்ரா உள்பட பலர் பங்கேற்றனர்.