தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, August 4, 2014

சின்னக்கள்ளிப்பட்டி ஸ்ரீ நாச்சியார் அம்மன் கோவில் மண்டலபூஜை நிறைவு விழா.ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.



புஞ்சைபுளியம்பட்டி;ஆகஸ்ட்;5;

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள,சின்னக்கள்ளிப்பட்டி ஸ்ரீ நாச்சியார் அம்மன் கோவில் மண்டலபூஜை நிறைவு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.இதில்,ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கோவை மாவட்டம்,மேட்டுப்பாளையம்வட்டம்,,சின்னக்கள்ளிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது விஸ்வகர்ம மக்களின் குல தெய்வமாக விளங்குகின்ற  ஸ்ரீ நாச்சியார் அம்மன் கோவில்.இங்கு,சித்தி புத்தி விநாயகர்,அய்யனார்,கன்னிமார் தெய்வங்களுக்கு கோவில் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த 3 1/2 வருடங்களாக கோவில் திருப்பணிகள் நடந்தது.ராஜகோபுரம் உள்பட அனைத்து கோபுரங்களும் புதிய வண்ணங்கள் தீட்டப்பட்டன. பல்வேறு புதிய பணிகள் செய்யப்பட்டு ஸ்ரீ நாச்சியார் அம்மன் கோவில், கும்பாபிஷேகம்,கடந்த ஜூன் 12ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து,48 நாட்கள் ஸ்ரீ நாச்சியார் அம்மன்,சித்தி புத்தி விநாயகர்,அய்யனார்,கன்னிமார் தெய்வங்களுக்கு,நந்தா தீபம் ஏற்றப்பட்டு,தினசரி மூன்று கால சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. 48 ஆம் நாள் நிறைவு விழாவாக மண்டலபூஜை கொண்டாடப்பட்டது.
 
விழாவையொட்டி, மங்கள இசையுடன்,விக்னேஷ்வர பூஜையுடன்,முதற்கால யாகபூஜை துவங்கியது.தொடர்ந்து,பரிகார தெய்வங்களுக்கு வேதபாராயணம், தீபாராதனை   நிகழ்ச்சியும் நடைபெற்றது.தொடர்ந்து,ருத்ர ஜப ஹோமத்துடன்,இரண்டாம் கால யாக பூஜை,மஹா பூர்ணாஹுதி,மஹா அபிஷேகம்,தீபாராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.ஸ்ரீ நாச்சியார் அம்மன்,சித்தி புத்தி விநாயகர்,அய்யனார்,கன்னிமார் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்ட்டன.தொடர்ந்து,,ஸ்ரீ நாச்சியார் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு,மஹா தீபாராதனை காட்டப்பட்டது. 

பின்னர்,விழாவின்,முக்கிய நிகழ்வான,நந்தா தீபம்,மண்டலாபிஷேக நிறைவு விழா சதுர்த்தி கொண்டாடப்பட்டது.தொடர்ந்து,பக்தர்கள் அனைவருக்கும்,பிரசாதம்,அன்னதானம் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை, ஸ்ரீ நாச்சியார் அறக்கட்டளை அறங்காவலர்கள்,யோக துரைசாமி,ஒ.பி.சண்முகம்,பி.ஏ.சண்முகம்.ஆர்.சுந்தரமூர்த்தி,மற்றும்,ஸ்ரீ நாச்சியார்கோவில் மகளிர் அணியினர்,அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
முன்னதாக,ரோட்ராக்ட் கிளப் கோவை கிளை சார்பாக,கோவில் வளாகப்பகுதிகளில் மரகன்றுகள் நடப்பட்டன.

விழாவில்,பி-டெல்எக்ஸ்போர்ட்ஸ் பாலசுப்ரமணியம்,ரெக்சான்ஆட்டோமோடிவ்ஸ் பாலசுப்ரமணியம்,செல்வநாயகி டெக்ஸ் ஈஸ்வரன்,கோப்மா சங்கத்தலைவர் மணிராஜ்,பொருளாளர் வடிவேல்,ரோசன் டிஎம்டி உரிமையாளர் ரவிச்சந்திரன்,ஆடிட்டர் ராமநாதன்,செந்தூர் பிரிண்டர்ஸ் பிரபாகரன்,ஸ்தபதி எஸ்.சக்திவேல்,சிலை வடிவமைப்பாளர் எஸ்.கண்ணன்,மற்றும்,கோவை மாவட்டம் மட்டுமல்லாமல் ஈரோடு,திருப்பூர்,சேலம்,நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து,விஸ்வகர்ம குல மக்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

0 comments:

Post a Comment