தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, April 10, 2014

அதிமுகவில் இணைந்தார் திமுக எம்.பி. ஜே.கே.ரித்தீஷ்


திமுக ராமநாதபுரம் எம்.பி.யும், அழகிரியின் ஆதரவாளருமான ஜே.கே.ரித்தீஷ் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். 

அவருடன், ராமநாதபுரம் மாவட்டம் திமுக மாணவர் அணி துணை அமைப்பாளர் கே.நாகநாதசேதுபதியும் அதிமுகவில் இணைந்தார். 

சென்னை போயஸ் கார்டனில் உள்ள முதல்வர் இல்லத்தில் நடந்த சந்திப்பின்போது, ரித்தீஷ், நாகநாத சேதுபதி இருவருக்கும் முதல்வர் ஜெயலலிதா அதிமுக அடிப்படை உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார். 

திமுகவில் இருந்து மு.க.அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்ட பின்னர், அழகிரியை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்திருந்தார் ரித்தீஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment