தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, April 21, 2014

சுட்டெரிக்கும் வெயிலில் பிரசாரம்:

நீலகிரி மக்களவைத் தொகுதியில் அதிமுக 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறும்: அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் நம்பிக்கை

புதிய வாக்காகளர்கள்,நடுநிலையாளர்கள் அதிமுகவுக்கு ஆதரவு: அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் பெருமிதம்






சத்தியமங்கலம், ஏப் 21: நீலகிரி மக்களவைத் தொகுதியில் அதிமுக 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறும் என தொட்டம்பாளையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரசாரத்தின்போது அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் நம்பிக்கை தெரிவித்தார்.
                                                                        
நீலகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணனை ஆதரித்து பவானிசாகர் தொட்டம்பாளையத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் நடைபயணமாக  வீடு வீடாக சென்று நெசவாளர்களிடம்  தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் திங்கள்கிழமை வாக்குசேகரி்த்தார். செளடேஸ்வரி அம்மன் கோவில் முன் நடைபெற்ற பிரசாரத்தில் அமைச்சர் பேசியது:

நெசவாளர்களுக்கு பசுமை வீடு திட்டம், பள்ளி மாணவ,மாணவியர்களுக்கு விலையில்லா சைக்கிள், மடிக்கணினி,தரமான கல்வி போன்றவை நெசவாளர்கள் மத்தியல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு நன்றி செலுத்தும் வகையில் நெசவாளர்கள் அதிமுகவை ஆதரியுங்கள். பவானிசாகர் பகுதியில் பெரும்பாலன மக்களுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கப்பட்டு விட்டன. தேர்தலுக்கு பின் விடுபட்ட மக்களுக்கு குறைவின்றி வழங்கப்படும்.

 கடுமையான வறட்சியிலும் பவானிசாகர் பாசன விவசாயிகளுக்கு உயர்த்தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. ஆசனூர்,சத்தி, தாளவாடியில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக ரூ.6 கோடி வழங்கப்பட்டுள்ளது.இதனால் விவசாயிகளும் அதிமுகவை ஆதரிக்கின்றனர். 2ஜி அலைகற்றை விவகாரத்தில் ராசா மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். இது திமுவிக்கு பின்னடைவு. இதன் காரணமாக புதிய வாக்காளர்கள், நடுநிலையாளர்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க உள்ளனர்.

பவானிசாகர் சட்டப்பேரவை தொகுதியில் கோவை-சத்தி அகலப்பாதை திட்டம், பு.புளியம்பட்டியில் சார் பதிவாளர் அலுவலகம், புதிய பேருந்து நிலையம் அமைத்தல்,சத்தியில் புதிய நகராட்சி அலுவலகம், ஆசனூர், கடம்பூரில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மறறும் ரூ.150 கோடியில் தார்சாலை.குடிநீர் அடிப்படை வசதிகள் ஆகியவை கடந்த 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன. 50 ஆண்டுகளாக ஜாதி சான்றிதழ் கேட்டு போராடி வந்த கடம்பூர் மாணவ,மாணவிகளுக்கு எஸ்.டி.சான்றிதழ் மற்றும் முதியோர் உதவித்தொகை வழங்கல் ஆகியவை அதிமுக அரசின் மெகா சாதனையாகும். நலத்திட்ட உதவிகள் அனைத்தும் மக்களிடம் சென்றடைந்துள்ளதால்  அவை அனைத்து வாக்குகளாக மாறும் என்றார்.  பிரசாரத்தில் ஈரோடு மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம், பவானிசாகர் ஒன்றியக்குழுத் தலைவர் வி.ஏ.பழனிச்சாமி,  அதிமுக ஓட்டுநர் அணி மாவட்டத் தலைவர் கே.ஆர்.தேவராஜ், பவானிசாகர் பேரூராட்சித்துணைத் தலைவர் கே.செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

0 comments:

Post a Comment