தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, April 15, 2014

ஆசனூர் மலைப்பகுதியில் பீட்ரூட் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம்




சத்தியமங்கலம் ஆசனூர் மலைப்பகுதியில் கேரட், பீட்ரூட் போன்ற காய்கறி பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உதகை, கோத்தகிரி, குன்னூர் போன்ற குளிர் பிரதேசப் பகுதியில் விளையும் கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகள் தாளவாடி, ஆசனூர்,தலமலை பகுதியிலும் சாகுபடி செய்யப்படுகின்றன.கேரட்,பீட்ரூட், காலிஃபிளவர் போன்ற மலைக்காய்கறி பயிர்கள் மிகவும் குளிர்ந்த சூழலும் அதிகம் வெப்பமில்லாத இடங்களில் வளரும் தன்மையுடையது. 

மூன்று மாத பயிரான பீட்ரூட் ஏக்கர் ஒன்றுக்கு 20 டன் முதல் 25 டன் வரை மகசூல் கிடைக்கிறது. உள்ளூர் சந்தையில் விற்பனை செயவதால் விவசாயிக்கு உடனடியாக பலன் கிடைக்கிறது. இதனால் மக்காச்சோளம்,முட்டைகோஸ் சாகுபடி  விவசாயிகள் பீட்ரூட் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆசனூர், தலமலைப்பகுதியில்  சில நாள்களாக பெய்த கோடை மழையை பயன்படுத்தி விவசாயிகள் நிலத்தை உழுது நிலத்தை சமப்படுத்தி வருகின்றனர்.  சில இடங்களில் கிணற்று பாசனம் மற்றும் ஆழ்குழாய் கிணறு வசதி உள்ள விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி ஸ்பிரிங்லர் முறையில் நீர் பாய்ச்சி பீட்ரூட் சாகுபடி செய்து வருகின்றனர். பீட்ரூட் செடிகள் ஓரளவு வளர்ந்த நிலையில் களையெடுப்பு பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

 பீட்ரூட் விவசாயம் மூலம் நல்ல வருவாய்கிடைப்பதால் விவசாயிகள் காய்கறி பயிராகன கேரட், பீட்ரூட் பயிர் செய்ய தயாராகி வருகின்றனர்.

0 comments:

Post a Comment