தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, April 23, 2014

ஓட்டு போடுவது எப்படி?

 
சென்னை : ஓட்டு போடுவது எப்படி என, மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம், செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.அதன் விவரம்:

*தேர்தல் அலுவலகத்தில் இருந்து வழங்கப்படும், 'பூத் சிலிப்'பில், வேட்பாளரின் ஓட்டுச் சாவடி எண், ஓட்டு போடும் மையம் குறிப்பிடப்பட்டிருக்கும். இதை, தேர்தல் கமிஷன், இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.

*ஓட்டு போடும் மையத்திற்கு செல்லும் போது, ஏதாவது ஒரு அடையாள அட்டையையும், பூத் சிலிப்பையும் கொண்டு செல்ல மறக்கக் கூடாது.
*ஓட்டுச் சாவடிகளுக்கு, மொபைல் போன் எடுத்து செல்வதை தவிர்க்க வேண்டும்.

*தனியார் வாகனங்கள், ஓட்டுச்சாவடிக்கு, 200 மீட்டர் தூரத்தில் நிறுத்த வேண்டும்.

*முதல் தேர்தல் அலுவலர், வாக்காளரின் அடையாள அட்டையை சரி பார்த்து, உரத்த குரலில் படிப்பார். அதை ஓட்டுச் சாவடிக்குள் உள்ள அனைத்து கட்சி ஏஜன்ட்களும் உறுதி செய்வர்.

*இரண்டாவது அலுவலர், வாக்காளரின் இடது ஆள் காட்டி விரலில், அடையாள மையிட்டு, ஓட்டளிக்கும் சிலிப் வழங்கி, வாக்காளர் எண்ணைப் பதிவு செய்வார். இதில் வாக்காளரும் கையெழுத்திட வேண்டும்.

*அடுத்ததாக, வாக்காளர் மூன்றாம் அலுவலரிடம், ஓட்டு பதிவிற்கான சிலிப்பை காண்பிக்க வேண்டும். அவர் ஓட்டளிக்கும் இயந்திரத்தின் கண்ட்ரோல் யூனிட்டில் உள்ள, 'பேலட் பட்டனை' அழுத்துவார். பின் வாக்காளர், ஓட்டு போடும் மறைவிடத்திற்கு சென்று, ஓட்டை இயந்திரத்தில் பதிவு செய்ய வேண்டும்.

*ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஒவ்வொரு வேட்பாளருக்கும் சின்னம் மற்றும் பெயருக்கு எதிரே நீல நிறத்தில் பொத்தான் கொடுக்கப்பட்டிருக்கும். யாருக்கும் ஓட்டுப்போட விருப்பம் இல்லாவிட்டால், நோட்டா' என்ற பட்டனை அழுத்தலாம்.

*வாக்காளர் ஏதாவது ஒரு பொத்தான் மட்டும் பயன்படுத்தி, ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும்.

*நீல பட்டன் பயன்படுத்தும்போது, நீங்கள் ஓட்டளித்த வேட்பாளரின் பெயருக்கு எதிரே, சிகப்பு விளக்கு எரியும்; ஓட்டுப்பதிவு செய்யப்பட்ட பிறகு, 'பீப்' ஒலி கேட்கும். இயந்திரத்தின் கண்ட்ரோல் யூனிட்டில் உள்ள விளக்கு, அணைந்து விடும். ஓட்டளிக்கும் முறை, இத்துடன் முடிவடையும்.
இவ்வாறு, செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment