தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, April 9, 2014

ஜெயலலிதா பிரதமராவது இறைவனின் கட்டளை: மதுரை ஆதீனம் ஆரூடம் 

 

தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமராவது உறுதி. ஏனென்றால் அவரது ஜாதக நிலை அப்படி என்றார் மதுரை ஆதீனம். 

மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். 

திருப்பூர் அரிசிகடை விதியில் செவ்வாய்க்கிழமை இரவு நடை பெற்ற அதிமுக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
நாட்டை காப்பாற்ற மேடையேறி பிரச்சாரம் செய்கிறேன். யாரை பிரதமராக கொண்டுவர வேண்டும் என்கிற பொறுப்பும் கடமையும் நமக்கு இருக்கிறது. தமிழகத்தை சேர்ந்த பெண் ஒருவர்தான் பிரதமராக வர வேண்டும் என்பது இறைவனின் கட்டளையாக உள்ளது. இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆற்றல் மிக்க, எழுச்சிமிக்க தலைவியாகத் திகழ்கிறார் ஜெயலலிதா. உலகில் துணிச்சல் மிக்க பெண்மணிகளில் ஒருவர் இவர். தமிழகத்தை மின்வெட்டு இல் லாத மாநிலமாக மாற்றியுள்ளார். தமிழகத்தில் நிரந்தரமாக மின் வெட்டே இல்லாமல் இருக்க ஜெய லலிதா பிரதமராக வேண்டும். ஜெயலலிதாவுக்கு சாதிமத வேறு பாடுகிடையாது. மாற்று மதத் தினரையும் மதிக்கக்கூடியவர். 

சன்னிதானத்துக்கு அம்மா
அவர், உங்களுக்கு மட்டும் அம்மா அல்ல; மதுரை சன்னிதானத் துக்கும் அம்மாதான். தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சி. அவர், யாருக்கும் பாரபட்சமின்றி தீர்ப்பு வழங்குபவர். ஜெயலலிதா பிரதமர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது. அவரது ஜாதக நிலை அப்படி. சன்னிதானம் (மதுரை ஆதினத்தை) சொல்றேன். சிம்ம ராசி, மக நட்சத்திரத்தில் பிறந்தவர். மகத்தில் பிறந்தவர் இகத்தை (உலகத்தை) ஆள்வார். நீங்கள் செய்வீர்களான்னு, செய்வீர்களான்னு எல்லாப் பக்கமும் கேட்கிறார். நாம்தான் அவரது பேரன் பேத்தி. அவருக்கு வாரிசு கிடையாது. நமக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் வாழ்பவர் ஜெயலலிதா. 

பிரதமர் நாற்காலியில்...
மம்தா, பட்நாயக், மாயாவதி, சந்திரபாபு நாயுடுன்னு எல்லாரும் நீங்க பிரதமர் நாற்காலியில் உட்காருங்கன்னு சொல்லப் போறாங்க. ஜெயலலிதா பிரதமரா னதும் நதிகள் தேசியமயமாக்கப் படும், விலைவாசி குறையும், பெட்ரோல் விலை குறையும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும். மீண்டும் அதிமுக வெற்றி விழாவில் சந்திப் போம் என்றார் மதுரை ஆதீனம்.
திருப்பூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களான வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், சுற்றுச்சுழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் குணசேகரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 

0 comments:

Post a Comment