தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, April 15, 2014

தமிழ்ப்புத்தாண்டு: பண்ணாரி அம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள் 





தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு பண்ணாரிஅம்மன் கோவில், தண்டுமாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

விழாவையொட்டி, அருள்மிகு பண்ணாரிஅம்மன் கோயிலுக்கு அதிகாலை முதலே பக்தர்கள் வரத்துவங்கினர். கோவிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டது. அம்மனுக்கு கனிகள் படைக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. அதனைத் தொடர்ந்து, அம்மன் வீணை அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர். வணிகர்கள் கோவிலில் வரவு செலவு நோட்டுகளை வைத்து புதிய கணக்கு துவக்கினர். 

கோடை விடுமுறை என்பதால் பக்தர்கள் குடும்பம் சகிதமாக கோவிலுக்கு வந்தனர். பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்தால் அம்மனை தரிசிக்க நீண்ட நேரம் காத்திருந்தனர். சத்தியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. 


சத்தியமங்கலம் அருள்மிகு தண்டுமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு கனிகளை படைத்து அலங்கார பூஜைகள் நடைபெற்றது.அதேபோல, சத்தியமங்கலம் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் பழங்களை மாலையாக அணிவித்து விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். 

பவானிசாகர் அணையில் சுற்றுலா பயணிகள்

தமிழ்ப்புத்தாண்டு மற்றும் சித்திரையை வரவேற்று  பவானிசாகர் அணைக்கு வந்த சுற்றுலாபயணிகள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டும் என தெரிகிறது.புதுமணத்தம்பதி, இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுடன் பெற்றோர் என அனைத்துதரப்பு மக்களும் பவானிசாகர் அணைப்பூங்காவில் குவிந்தனர்.        

0 comments:

Post a Comment