தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, April 8, 2014

பாசனத்திற்கு தண்ணீர் திறக்கக்கோரி தடப்பள்ளி அரக்கன்கோட்டை விவசாயிகள் மனு




சத்தியமங்கலம், ஏப்.8. தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, பெருமுகை&அத்தாணி பாசனசபை மற்றும் காளிங்கராயன் பாசன விவசாயிகள் இரண்டாம்போக பாசனத்திற்கு நீர்விடக்கோரி பவானிசாகர் அணை செயற்பொறியாளரிடம் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கருர் மாவட்டங்களில் 240000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து  அணைக்கு போதிய நீர்வரத்து இல்லாததால் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் கீழ்பவானி பாசனங்களுக்கு இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படுவதில்லை. கடும் வறட்சி காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயரவும், கால்நடைகள் பயன்பாட்டிற்கும் தற்போது எல்பீபி வாய்க்காலில் கடந்த 2ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வரும் 17ம் தேதி வரை நீர்விடப்படும் என பொதுப்பணித்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே இரண்டாம்போக பாசனத்திற்கு நீர்விடக்கோரி தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, பெருமுகை&அத்தாணி பாசனசபை மற்றும் காளிங்கராயன் பாசன விவசாயிகள் சபை நிர்வாகிகள் சுபிதளபதி, சுகுமார், நாச்சிமுத்து, முலகிருஷ்ணன், சென்னிமலை, சக்திவேல் ஆகியோர் தலைமையில் 300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பவானிசாகர் பொதப்பணித்துறை அலுவலகத்திற்கு வந்து அணை செயற்பொறியாளர் நடராஜனிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட செயற்பொறியாளர் கோரிக்கை மனுவினை உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பின்னர் இதுகுறித்து பாசனசபை பிரதிநிதிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது. பவானிசாகர் அணை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 9 நீர்மின் அணைகள் கட்டப்படுவதற்கு முன்பு கொடிவேரி அணை பாசனம் உள்ளது. சுமார் 520 ஆண்டுகால பழமை வாய்ந்த இப்பாசனத்திற்கு ஏப்ரல் 15ம் தேதி முதல் பிப்ரவரி 15 ம் தேதி வரை 10 மாதங்களுக்கு இருபோ கபாசனத்திற்கு காலம்காலமாக தண்ணீர் விடப்பட்டு பயிர்செய்து வருகிறோம். பருவமழை தவறிய காலத்தில்கூட அணையின் நீர்மட்டம் 27 அடியாக இருந்தபோதும் பாசனத்திற்கு நீர்விடப்பட்டு வந்தது. இப்பாசனபரப்பில் கிணறுகளோ மும்முனை மின்சாரமோ கிடையாது. முழுக்கமுழுக்க ஆற்றுப்பாசனத்தையே நம்பி விவசாயம் நடைபெற்று வந்தது. அணையில் நீர்குறைவாக உள்ள காலங்களில் ஆற்றுப்படுகையில் உள்ள மிகக்குறைந்த பாசனப்பரப்பிற்கு பாசனத்திற்கு முன்னுரிமை அளித்து தண்ணீர் திறக்கப்படவேண்டுமென தேசிய அளவிலான விதிமுறை உள்ளது. ஆனால் தமிழகத்தில் இவ்விதிமுறை கடைப்பிடிக்கப்படுவதில்லை. மற்ற பாசனங்களுக்கு தண்ணீர் விடக்கூடாது என நாங்கள் கூறுவதில்லை. பழைய பாசனதாரர்களுக்கு வழங்கப்படவேண்டிய நீரை நியயாமாக வழங்கவேண்டுமென்பதே எங்களது கோரிக்கை. அரசு உடனடியாக நடவடிக்கை இரண்டாம்போக பாசனத்திற்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். 

0 comments:

Post a Comment