தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, April 30, 2014

மரவள்ளி சாகுபடிக்கு மாறிய கரும்பு விவசாயிகள்




 
கரும்பு மாற்றுப்பயிராக மரவள்ளி சாகுபடி செய்ய சத்தியமங்கலம் வட்டார பகுதி விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 

சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில்  சமவெளிப் பகுதிகளான ஆலத்துக்கோம்பை, சிவியார்பாளையம், கே.என்.பாளையம், செண்பகபுதூர், சிக்கரசம்பாளையம், பெரியகுளம், ராமபைலூர், பவானிசாகர், எரங்காட்டூர், மாரனூர், நஞ்சப்பகவுண்டர் புதூர், ஜல்லியூர், பெரியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளிக்கிழங்கு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்குள்ள கரும்பு விவசாயிகள் கிணற்று மற்றும் ஆற்று நீர் மூலம் பாசனம் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்ய துவங்கி விட்டனர் . 

 10 மாதகால பயிரான மரவள்ளிக்கிழங்கு நடவு செய்யப்பட்டு 3 மாதங்கள் வரை 10 நாட்களுக்கு ஒரு முறையும், அதன்பிறகு 15 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சப்படுகிறது. உழவுக்கூலி, களைவெட்டுதல், உரமிடுதல் உள்ளிட்ட செலவினங்கள் உட்பட ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம்  வரை செலவாகிறது. இங்கு பயிடப்படும் முள்வாடி ரக மரவள்ளிக்கிழங்கு தின்பண்டம்(சிப்ஸ்) தயாரிக்க பயன்படுத்துக்கின்றனர். இந்த ரகம் தடிமனமாக இருப்பதால்  ஏக்கர் ஒன்றுக்கு 11 டன் வரை மகசூல் கிடைக்கும். தற்போது, மரவள்ளி ஒரு டன் ரூ.10 ஆயிரம் 500 வரை விற்கப்படுகிறது. 


நெகமம் புதூரைச் சேர்ந்த விவசாயி பழனிச்சாமி திங்கள்கிழமை கூறியது: கடம்பூர்  மலைப்பகுதியில் சாகுபடி செய்யப்படும் ரோஸ் ரக மரவள்ளியைக் கொண்டு  ஜவ்வரிசி, மைதா போன்ற உணவு பொருள்களை தயாரிக்கின்றனர். . மானாவாரி சாகுபடியை விட 2 டன் கூடுதல் மகசூல் கிடைப்பதால்  மரவள்ளிக்கிழங்கு தற்போது சத்தி பகுதியிலும் பயிரிடப்பட்டுள்ளது. கரும்பை விட உற்பத்தி செலவு குறைவு மட்டுமின்றி  50 சதம் கூடுதல் வருவாயும் கிடைக்கிறது.  .  கரும்புக்கு மாற்றுப்பயிராக மரவள்ளிக்கிழங்கு சாகுபடி இருப்பதால் கரும்பு விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்றார்.

0 comments:

Post a Comment