தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, April 8, 2014

 புன்செய் புளியம்பட்டி கரிவரதராஜா பெருமாள் கோவிலில் ராமநவமி விழா


புன்செய் புளியம்பட்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ராமநவமி விழா சிறப்பாக நடைபெற்றது. இதனையொட்டி ஏரளாமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.
புன்செய் புளியம்பட்டி  ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள், வேணுகோபால சுவாமி திருக்கோவில் அவினாசி ரோட்டில் அமைந்துள்ளது. ஸ்ரீ கரிவரதராஜ பெருமாளின் ராமநவமி விழா அதிகாலை சுப்ரபாரததுடன்  துவங்கியது. அதனை தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனமும், திருவாதனமும் நடைபெற்றது.  பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜையும், வேணுகோபால ஸ்வாமிகள், பாமா, ருக்குமணியுடன் வெள்ளிகாப்பு அலங்காரமும் செய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து உற்சவருக்கு பலவித வண்ண மலர்களால் ஆன சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது. முன்னதாக உற்சவருக்கு திருவாதாரண சிறப்பு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் அனுமன் வாகனத்தில் ராமன், லட்சுமணன், சீதை உள்ளிட்ட உத்சவ வாகனம் திருவீதி உலா நடைபெற்றது. அப்போது அங்கு கூடியுருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோசங்கள் எழுப்பினர்.

இந்நிகழ்ச்சியில் திரளாக கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ராமநவமி உற்சவ நிகழ்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் விஜயதசமி அறகட்டளையினர் செய்து இருந்தனர்.

0 comments:

Post a Comment