தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, April 9, 2014

பவானிசாகர் வனபகுதியில் இருந்து யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க 8 கிலோமீட்டர் தூரத்துக்கு அகழி வெட்டும் பணி




பவானிசாகர் வனபகுதியில் இருந்து யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க 8 கிலோமீட்டர் தூரத்துக்கு அகழி வெட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பவானிசாகர், சத்தியமங்கலம், மேட்டுபாளையம் செல்லும் சாலைகளை சுற்றிலும் விளாமுண்டி வனபகுதி அமைந்துள்ளது. இங்கு 20 இகும் மேற்பட்ட யானைகள் உள்ளன. வனபகுதியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக இவை அடிக்கடி தண்ணீர் மற்றும் தீவனம் தேடி வனபகுதியினை தாண்டி அருகிலுள்ள கிராமங்களுக்கு படைஎடுகின்றன. கிராமங்களில் நுழையும் யானைகள் விவசாய நிலங்களில் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, சோள பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இதனை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்ததை அடுத்து மாவட்ட வன அதிகாரி ராஜ்குமார் ஆணையின்படி பவானிசாகர் வனசரகர் சிவசுப்ரமணியம் தலைமையில் வனபகுதியினை சுற்றிலும் அகழி அமைக்கும் பணியில் பவானிசாகர் வனசரக ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த அகழி நால் ரோடு, கருப்பராயன் காடு, எரங்கட்டூர் வரை சுமார் 8 கிலோமீட்டர் வரை தோண்டப்பட்டு உள்ளது. இந்த அகழி காரணமாக யானைகள் ஊருக்குள் நுழைவது பெருமளவு கட்டுபடுத்தபடும் என வனசரக ஊழியர்கள் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment