தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, April 30, 2014

தாளவாடி கோடைமழை: குட்டையில் நீர் அருந்தும் காட்டுயானைகள்  



 
தாளவாடி மலைப்பகுதியில் கோடை மழை பெய்ததால் அங்குள்ள குட்டைகளில் ஓரளவு நீர் நிரம்பியுள்ளன.வனவிலங்குகளுக்கு தாக்கம தீர்க்க இந்த கோடைமழைநீர்  பெரிதும் உதவியுள்ளது. தற்போது அந்த குட்டையில் காட்டுயானைகள் நீர் அருந்தி வருகின்றன.

தாளவாடி மலைப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 3 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளதால் நீலகிரி போல இங்கு குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுகிறது. இதனால் மலைப்பகுதி விவசாயிகள் அனைத்து ரக மலைக்காய்கறி பயிர்களை சாகுபடி செய்கின்றனர்.  தாளவாடி, ஆசனூர், தலமலை, கேர்மாளம் ஆகிய  வனச்சரகங்களில் மழை பொய்த்ததால் அங்கு வறட்சி நிலவுகிறது. வனக்குட்டைகளில் வறண்டுவிட்டன.  மரம், செடி,கொடிகள் காய்ந்து இலைகள் உதிர்ந்து வெறும் மரமாக காணப்படுகின்றன. 

வறட்சி காரணமாக வனவிலங்குகள் குடிக்க நீரின்றி தவிக்கின்றன. தண்ணீர் தேடி பக்கத்து கிராமத்துக்குள் அவை புகுந்து விவசாயப்பயிர்களை சேதப்படுத்தும் வாடிக்கையாகிவிட்டது.  கடந்த 10 நாள்களாக வனப்பகுதிகளில் கோடை மழை பெயது வருவதால் வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் மீண்டும் துளிர்விட்டன. இதனால் யானைகளுக்கு தீவனப்பிரச்னை சற்று குறைந்துள்ளது. 

கோடை மழை காரணமாக சிறு குட்டைகளில் நீர் தேங்கியுள்ளதால் யானை, புலி, சிறுத்தை,  காட்டெருமை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு தாக்கம் தீர்க்கும் இடமாக மாறிவிட்டன.  விவசாயிகளும் கோடைமழையை பயன்படுத்தி மானாவாரி சாகுபடி செய்ய துவக்கி விட்டனர். வெயிலில் காய்ந்து போன மலைப்பகுதி சில நாள்களாக ஜில்லென குளிர்ந்த காற்று வீசுவதால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

0 comments:

Post a Comment