தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, April 8, 2014

அதிமுக ஆட்சியில் 6 மணி நேர மின்வெட்டு: ஆ.ராசா







திமுக ஆட்சிகாலத்தில் 2 மணி நேரமாக இருந்த மின்வெட்டு அதிமுக ஆட்சியில் 6 மணிநேரமாக உயர்ந்துள்ளது என்றார் நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா

சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகர் ஒன்றியத்துக்குட்பட்ட பவானிசாகர், முடுக்கன்துறை, கொத்தமங்கலம், இக்கரைத்தத்தப்பள்ளி, எரங்காட்டூர் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட இடங்களில் நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா தனக்கு ஆதரவாக வாக்குக்கேட்டு திறந்தவேனில் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, தொட்டம்பாளையம் செளடேஸ்வரிஅம்மன் கோவில் அருகே அவர் பேசியது: திமுக ஆட்சியின்போது ஏற்பட்ட 2 மணி நேரம் மின்வெட்டு காரணமாக கூறி கடந்த சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் தண்டனை அளித்தனர்.தற்போது, 6 மணிநேரம் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது இதற்கு அதிமுகவினர் என்ன பதில் கூறுவார்கள். மக்கள் இதற்கு  வாக்குகள் மூலம் பதில் அளிக்க வேண்டும். 58 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு பஸ் வழங்குவதாக வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை.தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. விலைவாசி உயர்ந்துவிட்டது. பவானிசாகர் அரசு கலைக்கல்லூரி கட்டுவதற்காக முயற்சிகளை மேற்கொண்டேன். அதிக நெசவாளர்கள் வசிக்கும் இப்பகுதியில் நெசவாளர்களின் பிரச்னையை தீர்க்கப்பாடுபடுவேன் .மீண்டும் வாக்களித்து வெற்றி பெற செய்தால் பவானிசாகரில் நல்ல பலத்திட்டங்களை நிறைவேற்றுவேன் எனறார். பிரசாரத்தின்போது தொப்பம்பாளையம் ஊராட்சித் தலைவர் கேஎல்எஸ் நாகராஜ், நீலகிரி மக்களவை திமுக தேர்தல் பொறுப்பாளர் அருண்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

0 comments:

Post a Comment