தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, April 8, 2014

கடும் வறட்சி தண்ணீர் தேடி அலையும் யானைகள்:
குடிநீர் பைப்பில் கசிந்து வெளியேறும் தண்ணீரை குடிக்கும் அவலம்
 
வனச்சாலை வழியாக செல்லும் குடிநீர் குழாயில் கசியும் நீரை அருந்தும் காட்டுயானை



பவானிசாகர்-பனையம்பள்ளி சாலையில் வாகன ஓட்டிகளை துரத்தம் காட்டுயானைகள்

ஆபத்தை உணராமல்  நீர் அருந்தும் யானையை எரிச்சல்யூட்டும் வாகனஓட்டிகள்



சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனச்சரகம் விளாமுண்டி வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் வனத்தின் வழியாக செல்லும் குடிநீர் பைப்பில் கசிந்து வெளியேறும் தண்ணீரை குடிக்க யானைகள் காத்திருக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

பவானிசாகர் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. வனத்தில் மரத்தில் இலைகள் முழுவதுமாக காயந்து சருகாகி கிடக்கின்றன. பசுந்தழைகள் இன்றி மொட்டை மரங்களாக காட்சியளிக்கின்றன. குளம், குட்டைகள் வறண்ட நிலையில் உள்ளன. வெயிலை சமாளிக்க முடியாத யானைகள் குளிர்ச்சியை தேடி வனத்தையொட்டியுள்ள பகுதிக்கு செல்கின்றன.

இவ்வாறு வெளியேறும் யானைகள் அருகாமையில் உள்ள தோட்டத்துக்குள் புகுந்து விவசாயப் பயிர்களை தின்றும் மிதித்தும் நாசப்படுத்துகின்றன. யானைகள் பகல் நேரத்திலேயே தண்ணீர் தேடி அலைகின்றன. இந்நிலையில், நால்ரோடு அருகே பவானிசாகர்-புஞ்சைபுளியம்பட்டி சாலையோரத்தில் குடிநீர்க்குழாய் உடைந்து நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது. அங்கு வந்த 3 ஆண்யானைகள் அந்த கசிவுநீரை தும்பிக்கை மூலம் ஊறிஞ்சி அருந்தும் பரிதாப நிலையை மாலை நேரங்களில் பார்க்கலாம். ஒவ்வொரு சொட்டு நீரையும் வீணாக்காமல் அருந்துவது நெஞ்சை நெகிழ வைக்கிறது.

யானைகள் சாலையோரத்தில் நின்றுகொண்டு நீர் அருத்தும் காட்சியை அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பார்த்தபடி செல்கின்றனர். சில வாகனஓட்டிகள் யானைகள் அருகே நின்று தொந்தரவு செய்வதால் அவை பயந்தபடி காட்டுக்குள் செல்கின்றன.
மனிதர்களின் இந்த செய்கை யானைகளுக்கு எரிச்சல்யூட்டுவதால் சில நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகளை துரத்துகிறது. இதனால் அப்பகுதியில் வாகனப்போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனஓட்டிகள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வறட்சிக்காலங்களில் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு தாற்காலிக தொட்டிகள் அமைத்து குடிநீர் விநியோகம் செய்தால் யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறுவதை தடுக்க முடியும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

0 comments:

Post a Comment