தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, April 10, 2014

மக்கள் சொத்தை குடும் சொத்தாக பாவித்த கருணாநிதிக்கும், ராசாவுக்கும் சம்மட்டி அடி கொடுக்க வேண்டும் - நீலகிரி தொகுதி பிரசார பொதுகூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு





மேட்டுப்பாளையம் : மத்திய முன்னாள் அமைச்சர் போட்டியிடும் ராசா தொகுதியான நீலகிரியில் அ.தி.மு.க., வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை ஆதரித்து அ.தி.மு.,க பொதுசெயலர் ஜெ., பிரசாரம் செய்தார். அப்போது, ஸ்பெக்ட்ரம் ஊழலை முக்கிய பிரச்னையாக எடுத்து கருணாநிதி, ஸ்டாலின், ராசா ஆகியோரை கடுமையாக தாக்கினார்.

காரமடை கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக போடப்பட்ட வழக்கில ஆதாரம் இல்லை என ஸ்டாலில் சொல்கிறார். கருணாநிதி வழக்குகள் ஆடிக்கொண்டிருக்கின்றன என்கிறார். காங்கிரஸ் அரசு தங்களை பழிவாங்கியது என்று சொன்னால், அவர் 2010ல் இருந்து கூட்டணியில் இருந்து விலகியிருக்க வேண்டியதுதானே, ஏன் தொடர்ந்து ஒட்டிக்கொண்டார் ? இந்த ஊழலில் கருணாநிதி குடும்பத்தினருக்கும் பங்கு உண்டு. மத்திய நிதி அமைச்சகம், தொலை தொடர்பு அமைச்சகமும் இணைந்து முடிவு எடுக்கலாம் என 31.10 2003 ல், தெரிவித்தது. இது பின்பற்றப்பட்டதா ? ஒழுங்கு முறை ஆணையம் பரிந்துரையை ராசா மதித்தாரா ? சட்ட அமைச்சகம் அளித்த ஆலோசனை செயல்படுத்தப்படவில்லை. வெளிப்படையாக முடிவுகள் வேண்டும் என்று பிரதமர் கூறினாரே இதனை ராசா ஏற்று கொண்டாரா ? இதற்கு ராசா மதிப்பளித்தாரா ? ஒரு குறிப்பிட்ட ஆண்டில் விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும் ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கப்பட்டது ஏன் ? கடந்த 2007 வரை பெற்ற விண்ணப்பங்கள் மட்டும் ஏன் பரிசீலனை செய்யப்பட்டன ?

மேஜையில் பல பேனாக்கள் இருக்கும் : கடைசியில் தேதியை மாற்றி அறிவித்தது ஏன் ? பத்திரிகைக்கு தவறான தேதியை கொடுத்ததன் மர்மம் என்ன ? ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ஏலம் விடுவது ஒரு தலைப்பட்சம் என்று ராசா தெரிவித்தது ஏன் ? தனியார் நிறுவனங்கள் மீது ராசாவுக்கு ஏன் இப்படி அக்கறை ? ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 13 நிறுவனங்களுக்கு 122 உரிமங்களில் 85 உரிமங்கள் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது . ஸ்பெக்டரம் தொடர்பான ஆவணத்தில் ராசாவே தனது பேனாவினால் திருத்தியுள்ளார். மாற்று பேனா பயன்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கேட்ட போது அமைச்சர் மேஜையில் பல பேனாக்கள் இருக்கும் என்று பதில் அளித்துள்ளார். பேனா பயன்படுத்துவது என்றால் ஒரு வார்த்தைக்கு ஒன்றாக ஒவ்வொரு பேனாவை தான் ராசா பயன்படுத்துவாரா ?

ஸ்பெக்ட்ரம் உரிமம் குறித்து 10.01.2008ல் மாலை வழங்கப்படும் என தொலை தொடர்பு துறை இணையதளத்தில் மதியம் 2.40க்கு வெளியிடப்பட்டது. இதில் மாலை 4 மணி என்று தெரிவித்தது எப்படி அனைத்து நிறுவனங்களுக்கும் உரிய நேரத்தில் தெரிய வந்தது எப்படி ? ஏழை மக்களுக்கு புரட்சி ஏற்படுத்த முயற்சித்தேன் என்றார். ஆனால் எந்த நிறுவனமும் தனது சேவையை துவக்கவில்லையே ? 50 பைசா செலவில் தொலைபேசி பேச ஏற்படுத்தி கொடுத்ததாக தி.மு.க., தம்பட்டம் அடித்தது. இந்த திட்டம் எங்கே நடைமுறையில் இருக்கிறது ?

நீரா ராடியாவுடன் ஏன் பேசினீர்கள் ? 2001 ல் நிர்ணயித்த விலையை 2007ல் எப்படி விற்பனை செய்ய முடியும். கருணாநிதி தனது சொந்த தொழிலில் இப்படி செய்வாரா ? கருணாநிதியின் தொலைக்காட்சிக்கு ரூ. 213 கோடி ஏன் வந்தது ? உண்மையிலே பணம் பெறப்பட்டிருந்தால் அவசர, அவசரமாக ஏன் திருப்பி கொடுக்க வேண்டும் ? அரசியல் தரகர் நீரா ராடியாவுடன் ஏன் பேசினீர்கள் ? என்ன பேசினீர்கள் ? இதற்கு ராசா என்ன பதில் சொல்ல போகிறார்? இது உண்மைக்கு மாறானது என்றால் வெளியிட்டவர்கள் மீது ஏன் மான நஷ்ட வழக்கு தொடரவில்லை? பிரதமருக்கும், நிதி அமைச்சருக்கும் தெரியும் என்றால், இவர்களுக்கு என்னவெல்லாம் தெரியும் ?

சம்மட்டி அடி கொடுப்பீர்களா ? ஸ்பெக்ட்ரம் சட்ட விரோதமானது என்று சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது. ராசா, கனிமொழி சிறையில் இருந்தனர். ஆனால் கருணாநிதியும், ஸ்டாலினும் எதுவுமே நடக்காதது போல் நாடகமாடுகின்றனர். நஷ்டமடைந்தது இந்தியா, பலன் அடைந்தது கருணாநிதி குடும்பம். பிரதமரின் கடிதத்திற்கு மதிப்பு அளிக்காதவர் ராசா. கட்டுமான நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கியது ஏன் ? ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் கருணாநிதி குடும்பத்தினருக்கு சென்றதற்கு ஆதாரம் உள்ளது.மக்கள் சொத்தை குடும் சொத்தாக பாவித்த கருணாநிதிக்கும், ராசாவுக்கும் சம்மட்டி அடி கொடுப்பீர்களா ? செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா ? சிதம்பரம் சில வழக்குகளை காங்., போடவில்லை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது போலீஸ் வேலை. இதனை ஏற்பதும், ஏற்காததும் கோர்ட் வேலை என்கிறார். கலைஞர் தொலைக்காட்சி வருமான வரி ரூ. 113 கோடி செலுத்த வேண்டும் என சில நாட்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனையடுத்து சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மதச்சார்பின்மைக்கு யார் வந்தாலும் அவர்களுடன் கை கொடுக்க தி.மு.க., தயாராக இருக்கிறது என்று பேசியிருக்கிறார். எங்கு அடித்தால் கருணாநிதிக்கு வலிக்கும் என்பதை காங்கிரஸ் கட்சி நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறது ! கருணாநிதியின் சுய நலத்தை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டை சூறையாடிய காங்கிரஸ் ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்ற மனநிலையில் நீங்கள் உள்ளீர்கள். மக்களாட்சியை நிலை நாட்டும் தேர்தல், ஊழல் ஆட்சிக்கு, குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதனை உங்களால்தான் செய்ய முடியும். செய்வீர்களா ? நீங்கள் செய்வீர்களா ? இவ்வாறு ஜெ., பேசினார்.

0 comments:

Post a Comment